Chapter 16

0Shares

‘அவளுக்கு என்னடி.. என் குழந்தை ராணி போல வாழ்வா..”

ராமாமிர்தத்தின் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.. மனோஜின் பின்னால் வாயைத் திறக்காமல் காரில் ஏறிக் கொண்ட  வைதேகி பிறந்த வீட்டைத் திரும்பிக் கூடப் பார்க்கவேயில்லை..

குற்ற உணர்வுடன் ஆண்டாள் புலம்பிய போதெல்லாம் அவர் இப்படிச் சொல்லிN ய வாயை அடைத்து விடுவார்..

 வைதேகியிடமிருந்து கௌசல்யாவிற்கு கடிதங்கள் வந்து கொண்டுதான் இருந்தன.. ஒவ்வொரு கடிதத்திலும் அவள் தன் அந்தரங்கத்தை பெற்றவர்களும் மற்றவர்களும் அறியக் கூடாது என்ற வேண்டுகோளை வைக்கத் தவறவில்லை..

‘அன்பு கௌசி…’

எல்லோருக்கும் இருப்பதைப் போலத்தான் எனக்கும் இரண்டு கால்;கள் இருக்கின்றன.. இருந்தும் என்ன பயன்..? தனித்தியங்க காலிருந்தும் நான் நடக்கவில்லை.. என் தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்ளவும் வழி பிறக்கவில்லை..

யானையை முதலில் இரும்புச் சங்கிலியால்தான் கட்டிப் போட்டிருப்பார்களாம்.. அதை இழுத்து அறுக்க முயன்று தோற்றுப் போன பின்.. அது அடங்கி ஒரே இடத்தில் நிற்குமாம்.. அப்போது  அதன் காலில் வெறும் நூல் கயிறை கட்டி விடுவார்களாம் தன் காலில் கட்டப் பட்டிருப்பது நூல் கயிறு என்பதை அறியாமல் யானையும் அதற்குள் கட்டுப்பட்டு நிற்குமாம்..

என கதையும் இதைப் போலதான் ஆகி விட்டது.. ரண வலிகளுக்கு பழக்கப் பட்டுவிட்ட எனக்கு.. சாதாரணமாக இந்த வீட்டு ஆள்கள் பேச வந்தால் கூட பயமாய் இருக்கிறது.. என்னையறியாமல் ஓர் அடி பின்னே நகர்ந்து தான் பேசுகிறேன்..

என் நிலைமையை பார்த்தாயா.. இந்த நிலைமையில் நான் உண்டாகியிருக்கிறேனாம்.. டாக்டர் சொல்லி விட்டார்.. இந்தக் குழந்தை எதற்கு அடையாளம்  கௌசி? ‘ஒரு அரக்கனால் நான் பலவந்தப் படுத்தப்பட்டதற்கு அடையாளாமா..?’

தமக்கையின் வயிற்றில் குழந்தை வளர்கிறது.. அவளுக்கென்று ஒரு புது உறவு வரப் போகிறது..

இதையும் வீட்டில் மறைக்க கூடாது என்று தோன்ற.. ஆண்டாளிடம் விவரத்தைக் கூறினாள் கௌசல்யா..

‘என்னது.. வைதேகி பிள்ளையாண்டிருக்கிறாளா? நோக்கு எப்படித் தெரியும்..?”

‘எப்படியோ தெரியும்.. இப்ப அதுவா முக்கியம்..?”

‘ஆமாண்டி.. அதை விட முக்கியமா ஆயிரம் சோலிகள் இருக்கு.. ஏன்னா.. விசயத்தைக் கேள்விப்பட்டேளா..?”

ஆண்டாள் ஆனந்தப் பரபரப்புடன் ராமாமிர்தத்தை தேடிப் போக.. சற்று நேரத்தில் ராமாமிர்தம் மனோஜிற்கு போன் பண்ணினார்..

‘யாருக்கு போன் போடறேள்..?”

‘வேற யாருக்கு போடுவேன்…? எல்லாம் நம்மாத்து மாப்பிளைக்குத்தாண்டி..”

‘நேரடியா வைதேகிக்கு போன் போட வேண்டியதுதானே..”

‘தெரிஞ்சுண்டே பேசறியேடி மண்டு .. அவகிட்டதான் இப்ப செல் போனில்லையே.. மாப்பிளைக்கு பிடிக்காம பறிமுதல் பண்ணிட்டாராமே..”

ராமாமிர்தம் மனம் கனக்க இதை கூறினார்.. ஆண்டாளின் முகம் கூம்பியது..

‘அதனால் என்ன நஷ்டக் கழுதை வந்து விடப் போகுது..? ஆம்படையானுக்கு பிடிக்காட்டி அதை விட்டு விட வேண்டியதுதானே.. இதைப போய் பெரிசா பேசறேளே..”

‘நானாடி பேசினேன்.. நீதானே தினமும் வைதேகி கிட்ட போனில் கொஞ்சிப் குழாவுவதைப் போலப் பேசி வைத்தே.. “;

‘விடுங்கோண்ணா.. அவ கிட்ட போன் இல்லாட்டி என்ன..  நாம தான் மாப்பிள்ளை போனுக்கு பேசினோமே.. அழும்புக்காரி.. போனில் பேச மாட்டேன்னு சொல்லிட்டாளே..”

‘அவளுக்கு கோபம்..”

‘அதெல்லாம் அறியாத்தனத்தில் வருகிற கோபம்.. இப்பப் பாருங்கோ .. உண்டாகியிருக்கிறா.. இதுவே வாழாவெட்டியாய் பிறந்தாத்துல கிடந்தா இந்தப் பாக்கியம் கிடைச்சிருக்குமா..?”

‘த்சு.. என்னவோ போடி.. என் குழந்தைக்கு அநியாயம் பண்ணிட்டோம்ன்னு மனசு கிடந்து  அடிச்சுக்குது..”

‘நல்லா இருக்குண்ணா நீங்க புலம்பறது.. ஏதோ ஒரு வேகத்தில பெண் குழந்தை பிறந்தாத்துக்கு கோவிச்சுக்கிட்டு வந்துட்டா பெரியவா நாம அப்படியே விட்டு விடறதா..? நாளைக்கு  அவளே நம்மைப் பார்த்து.. ஏம்மா.. நான்தான் சின்னவ.. உலகம் தெரியாம ஓடி வந்துட்டேன்.. நீயும் அப்பாவும் எனக்கு எடுத்துச் சொல்லி அவர் கூட சேர்த்து வைச்சிருக்கனுமா.. வேணாமா.. அதை விட்டுட்டு இப்படி வாழாவெட்டியாய் ஆக்கிட்டீங்களேன்னு கேட்க மாட்டான்னு என்ன நிச்சயம்..?”

ஆண்டாள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதாக மனதிற்கு தோன்ற.. புலம்புவதை நிறுத்திய ராமாமிர்தம்.. மீண்டும் மனோஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்..

‘என்னண்ணா ஆச்சு..”

‘ரிங் போய்கிட்டே இருக்கு ஆண்டாள்..”

 ‘திரும்பவும் டிரை பண்ணுங்கோ..”

விடா முயற்சியுடன் ராமாமிர்தம் தொடர்ந்து போன் செய்ய ஒரு வழியாய் போனை எடுத்தான் மனோஜ்..

‘மாப்பிள்ளை.. நான் ராமாமிர்தம் பேசறேன்..”

‘என்ன விசயம்..?”

‘வைதேகி உண்டாகியிருக்கிறாளாமே..”

‘அதுக்கென்ன இப்ப..?”

ராமாமிர்தத்திற்கு என்னவோ போல் ஆகிவிட்டது..

‘அவகிட்ட பேசனுமே..”

‘என்ன பேசப் போகிறீங்க..?”

‘இங்கேயிருந்து மனத்தாங்கலோட போன குழந்தை.. ஒரு வார்த்தை கூட பேசாம போயிட்டா..பெத்தவனுக்கு பொண்ணுக்கிட்ட பேச காரணம் வேணுமா மாப்பிள்ளை..?”

‘நான் ஆபிஸில் இம்பார்டன்ட் மீட்டிங்கில் இருக்கிறேன் வீட்டுக்கு போக மிட் நைட்டாகிவடும்..”

அவன் போனை துண்டித்து விட்டான்.. ராமாமிர்தம் பிரமை பிடித்தவரைப் போல அமர்ந்து விட்டார்..

‘கிளியை வளர்த்து  பூனை கையில் கொடுத்து விட்டேனோ..’

‘என்னன்னா ஆச்சு..?”

‘மாப்பிள்ளை அர்ஜெண்ட் மீட்டிங்கில் இருக்கிறாராம்டி..”

‘அதுக்கா இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந்துட்டேள்..? நன்னா இருக்குண்ணா நீங்க பண்றது.. அவாத்துல வீட்டு போனுன்னு ஒன்னு உண்டோல்லியோ.. அதுக்கு போன் போடுங்கோ..”

ஆண்டாளுக்குத் தெரியும்.. மனோஜ் செய்வது தவறு என்று ஆனால் அதைச் சொல்லி ராமாமிர்தத்தை மேலும் கலங்கடிப்பதை விட.. அவரை அந்தக் கலக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டியது மிக அவசியம் என்று எண்ணினாள் அவள்..

 ராமாமிர்தம் மனோஜ் வீட்டிற்கு போன் போட்டார்.. மனோஜின் தாய் பேசினாள்..

 ‘நான் ராமாமிர்தம் பேசறேன்..”

‘எந்த ராமாமிர்தம்..? தெருக் கோடியில் பேப்பர் பொறுக்கிட்டு இருக்கிறானே அந்த ராமாமிர்தா..?”

ராமாமிர்தத்தின் உடல் பதறியது.. அவர் பல்லைக் கடித்து தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.. பெண்ணைப் பெற்றவராயிற்றே.. இதைப் போலஆயிரம் சொல்களை எதிர் கொண்டுதானே ஆக வேண்டும்?

இது நம் நாட்டைப் பிடித்திருக்கும் பெருத்த சாபமாயிற்றே..

‘இல்லை  சம்பந்தியம்மா.. நான் வைதேகியைப் பெற்ற தோப்பihர் ராமாமிர்தம்..”

‘அப்படிச் சொன்னாத்தானே தெரியும்? அதை விட்டு விட்டு என்னவோ பிரைம் மினிஸ்டiர்ப போல மொட்டையா நான் ராமாமிர்தம்ன்னு சொன்னா யாருக்கு என்ன தெரியும்..?”

‘இனிமே கவனமா பேசறேன்ம்மா..”

‘இத்தனை நாளாய் பேசக் கத்ததுக்காதவாதான் இனிமே கத்துக்கப் போறேளா? எனக்கு நம்பிக்கையில்லை..”

‘நீ நம்பினால் எனக்கென்ன.. நம்பாவிட்டால் எனக்கென்ன..’ தாடை இறுகியது ராமாமிர்தத்திற்கு..

 பெற்ற மகளிடம் பேச விடாமல் குறுக்கு விசாரணை பண்ணிக் கொண்டிருக்கும் தாயையும்.. மகனையும் என்ன செய்தால் தேவலாம் என்ற கோபம் தலைக்கேறினாலும்.. வைதேகியிடம் பேசியாக வேண்டுமே என்ற பாசம் முன்னால் நிற்க.. தழைந்து பேசினாள் ராமாமிர்தம்..

‘மன்னிச்சுடுங்கோம்மா..இப்ப வைதேகியை கொஞ்சம் கூப்பிடறேளா..?”

‘எதுக்கு..?”

‘பேசனும்..’

‘என்ன பேசப் போகிறேள்..?”

இது ஒன்றை தாயும்.. மகனும் ஒன்று போல கேட்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவில் மேலும் முகம் இறுகினார் ராமாமிர்தம்..

‘என் பொண்ணுக்கிட்ட நான் பேசி மாதக் கணக்காகுதும்மா..”

‘அவ கைக்காரியமா இருக்கிறா.. அப்புறம் பேசுங்க..”

 அன்று முழுவதும் ராமாமிர்தத்திற்கு அதே பதில்தான் கிடைத்தது.. மனோஜோ பகல் நேரத்தில் ஆபிஸில் இருப்பதாகச் சொன்னான்.. இரவுகளில் செல் போனை அணைத்து வைத்தான்..

‘நேக்கு பயமாயிருக்குடி..”

முதன் முதலாக அச்சம் கொண்டார் ராமாமிர்தம்.. ஆண்டாளுக்கும் அதே நிலைமை தான்.. ஆனாலும் அவள் வழக்கப்படி “ஏன்னா வீணா பயப்படறேள்.. ஒரு எட்டு அவாத்துக்கு போயி நம்ம குழந்தைய நேரில பார்த்துட்டு வந்துடலாமே..” என்று வழி சொல்லிக் கொடுத்தாள்..

‘அதுவும் சரிதான்.. ஆனா என்ன காரணத்தை சொல்லிக்கிட்டு அவாத்து படியை மிதிக்கிறது..?”

திருமணம் ஆகும் வரை வெல்லக்கட்டியாய் பேசிய மனோஜின் குடும்பம்.. திருமணம் ஆனவுடன் காட்டிய சுயரூபத்தில் ராமாமிர்தம் அவர்களின் வீட்டுப் படியை மிதிப்பதேயில்லை என்ற வைராக்கியத்துடனிருந்தார்..

‘நம்ம பொண்ணு உண்டாகியிருக்கா.. அவளுக்கு வளைகாப்பு செய்து பிரசவத்துக்கு நம்மாத்துக்கு அழைச்சுட்டு வரனுமோல்லியோ.. அதுக்கு நல்ல நாள் பார்க்க வந்தோமுன்னு சொல்வோம்…”

கௌசல்யாவும் அதை ஆதரித்தாள்.. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வைதேகியை அந்த வீட்டின் ராட்சஸப் பிடியிலிருந்து கொஞ்ச நாளாவது அப்புறப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு..

‘நல்ல யோசனைம்மா.. இப்பவே அவளுக்கு மசக்கை ரொம்ப படுத்துதாம்.. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி யெடுக்கிறாளாம்..”

‘கடவுளே.. இந்தச் சமயத்தில என் பெண்ணுக்கு உப்பு.. உறைப்பா புளிப்பா சமைச்சுப் போட எனக்கு கொடுப்பினை இல்லையே..”

‘ஏன் இல்லை..? அவ மசக்கையைச் சொல்லி கூட அழைச்சுண்;டு வந்திருங்கோ..”

‘அனுப்புவாளாடி?”

‘ஏன் அனுப்பமாட்டா..? அவா வீட்டுப் பொண்ணு மட்டும்.. மசக்கையைக் கொண்டாட பிறந்தாத்தில வந்து சீராடலாம்.. நம்ம வைதேகி வரக்கூடாதா?  அவ என்ன பெத்தவாளும்.. கூடப் பிறந்தவாளும் இல்லாத அநாதையா..?”

இதைச் சொல்லும்போதே.. அப்படியொரு நிலையில்தானே வைதேகி இருக்கிறாள் என்ற நினைப்பில் கண் கலங்கி விட்டாள் கௌசல்யா..

இளைய மகள் கண்ணீர் கண்டு அடக்கி வைத்த வேகம் அணை உடைக்க..

‘வாடி போகலாம்..” என்று கிளம்பிவிட்டார் ராமாமிர்தம்..

ஆனால்.. அவர்களால் வைதேகியை பார்க்கக் கூட முடியவில்லை, “அவா வெளியூர் போயிருக்கா..” என்றார் மனோஜின் தாய். “இல்லேன்னா.. மாடி பால்கனியில் வைதேகி எட்டிப் பார்த்தாள் நான் பார்த்தேன்.. ” ஆண்டாள் தன் வழக்கத்தை கைவிட்டு வெளிப்படையாக பயந்தாள்..

‘அப்ப நான் பொய் சொல்கிறேனா..? நானென்ன பொய்க்காரியா? இதைச் சொல்லத்தான் டிரெயின் பிடிச்சு வந்தேளா.. எவ்வளவு தைரியமிருந்தா என் ஆத்துக்கே வந்து என்னை பொய்க்காரின்னு சொல்வேள்..? முதலில் வெளியில் போங்கோ.. இன்p இந்தாத்து படியை மிதிக்காதீங்கோ…”

மனோஜின் தாயாரின் சத்தத்தில் அவர்களின் திட்டம் வெளிப்பட்டது..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link