Chapter 21
அவர்கள் வீடு திரும்பும் போது இருள் கவிய ஆரம்பித்திருந்தது.. வாசலிலேயே பூஜாவிற்கு வேடிக்கை காட்டியபடி ஆண்டாள் காத்திருந்தாள்.. அவளைக் கடந்து கௌசல்யா உள்ளே செல்ல பூஜா அவளிடம் தாவினாள்..
‘மம்மீ..”
‘மெல்ல .. கீழே விழுந்துடப் போற பூஜா..”
கௌசல்யா குழந்தையை வாங்கிக்கொண்டாள்.. அவள் யுலுக்குள் நுழைந்த போது வாசலில்..
‘என்னண்ணா ஆச்சு..?” என்று ஆண்டாள் வினவிக் கொண்டிருந்தது கேட்டது..
‘காலம் கடந்த அக்கறை..’ கௌசல்யாவின் கண்கள் கலங்கின..
இந்த அக்கறையை வைதேகி உயிரோடு இருந்து நன் முறையில் வாழ்ந்திருந்தால் இவர்கள் காண்பித்திருப்பார்களா என்ற நினைவு அவளுக்குள் எழுந்தது..
பு+ஜாவை உட்கார வைத்து விட்டு.. உடைமாற்றி.. முகம் கழுவி விட்டு வந்தாள்..
காபியுடன் வந்த ஆண்டாளின் கண்கள் சிவந்திருந்தன..
‘அப்பா சொன்னார்..” என்றாள்..
மௌனமாக காபியை வாங்கிப் பருக ஆரம்பித்த கௌசல்யா..” காபி நன்னாயிருக்கு.. ” என்றாள்..
‘நான் என்ன சொல்றேன்..? நீயென்ன பதில் சொல்ற..?”
‘ஏம்மா அளும்பு பிடிக்கிற..? இத்தனை நாளா இல்லாத புதுக் கரிசனம் இப்ப எதுக்கு உனக்கு?”
‘அதுக்காக காலமெல்லாம் நீ கல்யாணமாகாம நிற்ப.. நாங்க அதைப் பார்த்துக்கிட்டு பேசாம இருக்கனுமா..?”
‘எனக்கெதுக்கும்மா கலயாணம்..? என்னை அம்மான்னு கூப்பிட பூஜா இருக்கா.. அவளுக்காக வாழ்ந்துட்டுப் போறேன்..
‘சொன்னாக் கேளுடி கௌசி..”
‘நான் சொல்கிறதை நீ கேளும்மா.. இனி இதப்பத்தி நீ மூச்சு விடக் கூடாது.. எந்த உண்மை பூஜாவுக்கு தெரியக் கூடாதுன்னு கோயம்புத்தூரை விட்டு நான் வந்தேனோ.. அந்த உண்மையை நீ தெரியப்படுத்திருவ போல இருக்கே..”
ஆண்டாளை அடக்கி விட்டாள் கௌசல்லய..
மனதிற்குள் சக்திவேலின் நினைவு கனன்று கொண்டிருக்க.. வாழ்க்கையை வாழ.. பூஜாவை பற்றுக் கோடாக பிடித்துக் கொண்டு அவள் வாழந்து கொண்டிருக்கும் போதுதான்.. எதிர்பாராத புதிய திருப்பமாக சக்திவேலை மீண்டும் அவள் சந்தித்தாள்..
அதே காதல் வேகம் கொண்ட பார்வையோடுதான் அவன் இருந்தான்.. ஆனால் கூடவே நான்கு வயதுப் பையனின் தந்தை என்ற பெயரோடும் இருந்து வைத்தான்..
எடிட்டரின் கட்டளைப்படி கௌசலயா அவனுடன் இணைந்து பேட்டியெடுக்க சென்றாள்..
நாத்திகத்தில் ஊறிய அந்த அரசியல்வாதியிடம் அவளின் பேட்டி ஆரம்பமானது..
‘கடவுள் இல்லைன்னு நீங்க பிரச்சாரம் பண்ணுகிறீங்களே அதை உணர்ந்து செய்கிறீங்களா..? இல்லை.. உணராமல் செய்கிறீங்களா..?”
கௌசல்யாவின் முதல் கேள்வியைக் கேட்ட சக்திவேல் ஆச்சரியத்திற்கு ஆளானான்..
அவனறிந்த கௌசல்யா உலகம் அறியாத பேதை.. அவனின் கட்டாயத்தினால் பத்திரிக்கைத் துறையில் நுழைந்தவள்.. அதுவும் அவனைத் தடையில்லாமல் சந்திக்க.. அவன் வேலை பார்தத அதே துறையிலேயே.. அவளும் வேலை பார்ப்பதுதான் வசதி என்பதற்காக அந்தத் துறையில் சேர்ந்தாள்..
அவளா இப்படி அறிவார்ந்த கேள்வியைக் கேட்கிறாள்?
அவளின் கேள்வியின் பொருளை உணாரதவராய் அந்த அரசியல்வாதி ஏளனமாக நகைத்தார்..
‘ஏம்மா.. இந்த கேள்வியை புரிஞ்சு கேட்கறீங்களா? இல்லை புரியாமல் கேட்கறீங்களா..?”
‘புரிந்துதான் கேட்கிறேன் சார்.. கடவுள் இல்லைன்னு சொல்கிற நீங்க .. கடவுளை நம்பாதவராய் இருக்கனும்.. ஆனால் நீங்க ஒன்றும் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே..”
‘நெத்தியடி அடிக்கிறாளே..’ சக்திவேல் புகைப்படம் எடுக்கும் சாக்கில் காமெராவிற்கு பின்னால் புன்னகையை மறைத்துக் கொண்டான்..
அரசியல்வாதியின் முகத்தில் கோபம் துளிர்த்தது..
‘என்னம்மா.. கேள்வி எக்குத்தப்பா இருக்கு..?”
‘சரியாத்தான் இருக்கு சார்.. நீங்க கடவுளை நம்பாதவர்ன்னா.. ஏன் போன பௌர்ணமியப்போ உங்க பண்ணை வீட்டில யாகம் பண்ணினீங்க..?”
‘அடேங்கப்பா..’ சக்திவேல் கௌசல்யாவின் தைரியத்தை மெச்சியபடி.. அந்தக் கேள்வியைக் கேட்டதும் முகம் மாறிய அரசியல்வாதியின் முகபாவனையை படம் பிடித்து தள்ள ஆரம்பித்தான்..
‘பார்த்தீங்களா? இல்லை நீங்க பார்த்தீங்களான்னு கேட்கிறேன்.. என் கொள்கையில் தீவிரமாகவும்.. உண்மையாகவும் இருக்கிறவன் நான்.. என் புகழைக் கெடுக்கிறதுக்காக இப்படிக் கேள்வி கேட்கச் சொல்லி என் வளர்ச்சியைப் பொறுக்காத எதிர்கட்சி ஆளுக உங்களை அனுப்பினாங்களா?”
‘என்னை அனுப்பியது எதிர்க்கட்சி ஆள்களில்லை.. தின ஒலி பத்திரிக்கை..”
‘உங்க பத்திரிக்கைக்கு எவ்வளவு பணம் கொடுத்தாங்க..?”
‘தின ஒலியை விலைக்கு வாங்க முடியாது..”
‘அதையும் பார்த்துரலாம்..”
‘நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலைக் சொல்லவே இல்லையே..”
‘கேள்வியே அபாண்டம்ங்கிறேன்..இதுக்கு பதில் ஒரு கேடா?”
‘அப்படியா.. அப்போ. இந்த போட்டோவில் யாகம் பண்ணிக்கிட்டு இருக்கிறது யாரு..? உங்க டூப்பா..?”
கௌசல்யா நீட்டிய புகைப் படத்தில்.. காவி உடையணிந்து.. யாகக் குண்டத்தின் முன்னால்.. கை கூப்பி.. பக்திப் பழமாக அமர்ந்திருந்தார் அந்த அரசியல்வாதி..
அந்தப் புகைப்படத்தை பார்ததவரின் முகம் வெளுத்து.. “இது யார் செய்த சதிவேலை..? இந்த போட்டோவில் இருக்கிறது நானில்லை..”
‘நான் அவனில்லைங்கறீங்களா..?”
கௌசல்யாவின் கிணடலான கேள்வியில் சக்திவேல் இமைக்க மறந்து அவளையே பார்த்தான்..
அவளோ.. கருமமே கண்ணாக இருந்தாள்..
‘யாருகிட்ட பேசிக்கிட்டு இருக்கே தெரியுமா..?” அரசியல்வாதி ஏக வசனத்தில் இறங்க..
‘ஓ.. தெரியும்.. நாத்திகரைப் போல வேசம் போட்டுக்கிட்டு இருக்கிற ஆத்திகரிடம் பேசிக்கிட்டு இருக்கிறேன்..” என்று நிதானம் குறையாமல் பதில் சொன்னாள் கௌசலயா..
‘இந்தப போட்டோவில் இருக்கிறது நானில்லைன்னு சொல்கிறேன்..”
‘இது நீங்கதான்னு நான் சொல்கிறேன்..”
‘இது பொய்யாய் நீங்க தயார் செய்த போட்டோ..”
‘இல்லை.. நீங்க யாகம் செய்ததை வீடியோவாய் எடுத்திருக்கிறோம்.. அதிலயிருந்து எடுத்த போட்டோ இது..”
அகப்பட்டுக் கொண்ட அரசியல்வாதி .. அதிரடியாய் வேச ஆரம்பித்தார்..
‘ஆமாம்.. இது நான்தான்.. அதுக்கென்ன இப்ப..? மூட நம்பிக்கைகளை ஒழிச்சுக் கட்டனும்னா..அவங்க பாதையிலேயே போய்த்தான் அதைச் செய்யனும்.. அதைத்தான் நானும் செய்தேன்..”
‘இப்போ இல்லைன்னு மறுத்தீங்களே..”
‘இப்போ ஆமாம்ன்னு ஒப்புக் கொண்டேனே.. வேற கேள்வி இருக்கா..”
‘இருக்கு..”
‘விட மாட்டாளே..’ அரசியல்வாதி பல்லைக் கடிக்க ஆரம்பிக்க.. அதைத் தன் காமெராவில் பதிவு செய்தான் சக்திவேல்..
கௌசல்யா அடுத்த கேள்விக்கு தாவினாள்..
‘இந்துக்களோட மூடநம்பிக்கையைப் பற்றி பிரச்சாரம் செய்கிற நீங்க.. ஏன்.. மத்தவங்க மூட நம்பிக்கையைப் பற்றியும் பேசறதில்ல?”
‘ஏம்மா .. இது ஒரு கேள்வியா..?
‘இதுவும் கேள்விதான்.. பதில் சொலலுங்க..”
‘சொந்த வீட்டைத் துப்புரவு பண்ணாம.. அடுத்த வீட்டுக் குப்பையைப் பற்றிக் கலலைப் பட முடியுமா..?’
‘இதுதான் காரணமா..?”
‘வேறேன்ன இருக்கும்..? நீங்களே சொல்லுங்க..”
‘அடுத்த வீட்டுப் பக்கம் போனா.. தடியைத் தூக்கிட்டு வந்திருவாங்க.. அதுவே சொந்த வீடானா.. நாம என்ன வேனும்னாலும் பேசலாம்.. அது தான காரணம்..”
பேட்டியின் முடிவு வரை கௌசல்யாவின் கேள்விகள் அரசிலய்வாதியை கிடுக்கிப் பிடியாய் பிடித்தன..
எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க.. பதிலகளை சொல்லி முடித்தார் அரசியல்வாதி..
ஒருவழியாய் பேட்டி முடிந்து.. சக்திவேலும்.. கௌசலயாவும் எழுந்த நின்ற போது..
‘ஆமா உன் பெயர் என்னன்னு சொன்ன..?” என்று ஒரு மாதிரியான பார்வையோடு கேட்டார் அவர்..
‘நான் சொல்லவே இல்லையே..” கௌசல்யா புன்னகையோடு நகரப் போனாள்..
‘அப்பச் சொல்லைன்னா என்னம்மா.. இப்பச் சொல்லு..” அவா விடாக்கண்டனாய் கேட்க..
‘தின ஒலி நிருபர்..” என்று நிமிர்வாக பதில் சொன்னாள்.. கௌசல்யா..
அவளை ஏற.. இறங்க பார்வையிட்ட அரசியல்வாதியின் முகத்தில வில்லங்கம் தெரிந்தது..
‘ம்’Pம்.. பௌரைச் சொல்லக் கூட பயப்படுகிற நீயெல்லாம் இந்த பேட்டியை எடுக்க வந்திருக்க கூடாது.. வந்ததுதான் வந்த ஒழுங்கா.. மரியாதையா.. கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு விட்டுப் போயிருக்கனும்.. அத விட்டுட்டு இடக்கு மடக்காக கேள்வியக் கேட்டு நீயா ஏம்மா வம்பை விலைக்கு வாங்கிக்கற..?”
கௌசல்யா பதில சொல்லாமல் அவரது கேள்வியை அலட்சியம் செய்து விட்டு நகர்ந்தாள்..
சக்திவேல் புருவங்கள முடிச்சிட.. வண்டியை கிளப்பினான்.. அவன் பின்னால் அவள் ஏறி அமர்ந்தாள்..
‘நீ ரொம்ப மாறிட்ட கௌசி..” என்றான் அவன்..
‘கௌசி’ என்ற அவனது அழைப்பில் அவள் மனதில் சாரல் அடித்தது..
‘இதைத்தானே நீங்க விரும்பினீங்க..” காற்றில் பறந்த சேலை முந்தானையை இழுத்து செறுகிக் கொண்டே பதில் சொன்னாள் கௌசலயா..
‘நான் விரும்பிய வகையில்தான் நீ இன்னமும் இருக்கிறாயா..?” சக்திவேலின் கேள்வியில் கசப்புத் தெரிந்தது..
‘நிச்சயமாய்..” கௌசல்யாவின் பதில்ல உண்மை இருந்தது..
வண்டியை ஓட்டிக் கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் குற்றச்சாட்டு இருந்தது..
‘நான் விரும்பித்தான் பூஜா வந்தாளா..?”
அந்தக் கேள்வியில் கௌசல்யாவின் மனம் அசைந்தது..
‘நான் விரும்பியும் அவள் வரவில்லை..’ என்று கூவ அவள் மனம் துடித்தது..
‘என் மகனின் பெயர் கௌசிக்..’ அவனது வார்த்தைகள் நினைவுக்கு வர அடங்கிப் போனாள்..
‘என்ன பேச்சையே காணோம்..”
‘உங்கள் மகன் எப்படியிருக்கிறான்..?”
‘இப்ப.. அவனைப் பற்றி ஏன் கேட்கிற..?
சக்திவேலின் குரலில் அப்பட்டமான கோபம் வழிந்தோடியது.. அதை அவளும் உணர்ந்தாள்..
‘பூஜாவைப் பற்றி நீங்க கேட்கும் போது.. நான் கௌசிக்கைப் பற்றிக் கேட்கக் கூடாதா..?”
அவளது மனம் பொறுமிய பொறுமலை அவளது கேள்வி வெளிப்படுத்தி விட.. அவன் அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்..
‘கௌசிக்கைப் பற்றி உனக்கு என்ன தெரியும்..?”
‘பூஜாவைப் பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்..?”
‘அதுதான் ஆபிஸே.. உன் மூணுவயசுப் பெண் குழந்தையைப் பற்றிச் சொல்லுதே…”
‘கௌசிக்கைப் பற்றி நீங்களும் சொன்னீங்களே..”
எதையோ சொல்ல வாயெடுத்த சக்திவேல்.. பேச்சை நிறுத்தினான் .. அவன் விழிகள் கூர்மையாகின.. தொலைவில் நான்கு பைக்குகளில் அவர்கள் காத்திருந்தனர்..
‘யார் அவங்க..?” கலவரமானாள் கௌசல்யா..
‘ஊம்.. என் மாமனுக.. ” சக்திவேல் பைக்கின் வேகத்தை அதிகப் படுத்தினான்..
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.