Chapter 22

0Shares

சாலையின் குறுக்கே வழி மறித்து நின்றிருந்தவர்கள் சக்திவேலின் வேகம் கண்டு மிரண்டு விலகினார்கள்.. சக்திவேலின் பைக் அவர்களைக் கடக்க.. கூச்சலுடன் அவர்களின் பைக்குகளில் ஏறிப் பின் தொடர்ந்தார்கள்..

சக்திவேல் வேகத்தைக் குறைக்கவில்லை.. அவர்களில் ஒருவனுடைய பைக்.. சக்திவேலுக்கு இணையாக வந்து சேர..

‘இறுக்கிப்பிடிச்சுங்கோ கௌசி..” என்றபடி வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான் சக்திவேல்.. 

அதற்குள் அந்த பைக்கின் பின் சீட்டில் அமர்ந்திருந்தவன் வீசிய தடி.. சக்திவேலின் நெற்றியை குறிபார்த்து தாக்கிவிட்டது..

‘அம்மா ..” கௌசல்யா அலறிhள்’.

சக்திவேலின் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பிக்க.. அவன் பைக்கை நிறுத்தாமல் பறந்தான்..

துரத்தி வந்தவர்கள் மெல்ல ;பின் தங்கி.. புள்ளியாய் மாறி.. காணடமல் போனார்க்ள..

‘உன் வீடு எங்கேயிருக்கு..?”

‘முதலில் ‘hஸ்பிடலுக்கு போகலாம்..”

‘உன் வீடு எங்கேன்னு கேட்டேன்..”

‘உங்க நெற்றியில பலமா அடிபட்டிருக்கு..”

‘செத்து விட மாட்டேன்..”

‘ரத்தம் கொட்டுமே..”

‘நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லப் போறாயா.. இல்லையா..?”

அவன் கத்திய கத்தலில் அவள் அரண்டு போய்.. வழியைச் சொன்னாள்..

அவள் வீட்டுக்கு முன்னால் பைக்கை நிறுத்தியவன் சோர்ந்து தெரிந்தான்..

‘இறங்கு..”

அவள் இறங்க மனமில்லாமல் அமர்ந்திருக்க.. அவன் அதட்டினான்..

‘இறங்குன்னு சொல்கிறேனில்ல..”

அவன் போட்ட சத்தத்தில் ராமாமிர்தம் வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டார்..

‘என்னம்மா கௌசி..” என்று வினவியபடி வந்தவர்.. சக்திவேலைக் கணட்தும் விழி விரிய  நின்றார்..

‘நீங்க.. நீங்க.. என்று தடுமாறியவரிடம்..

‘அப்பா.. அவர் நெற்றியில் ரத்தம் கொட்டுது..” என்று நினைவுபடுத்தினாள் கௌசல்யா..

‘எப்படிம்மா.. இப்படி பலமா காயம் பட்டுச்சு..?”

‘பேசநேரமில்லைப்பா.. முதலில் அவர் நெற்றியில் துண்டைக் கட்டுங்க..”

கௌசல்யா துரிதப்டு;த்த.. ராமாமிர்தம் தோளில் கிடந்த துண்டை எடுத்து.. அவன் நெற்றியில் இறுக்கிக் கட்டினார்..

உலகத்தின் எட்டாவது அதிசயத்தை கண்டு விட்ட தினுசில் அவன் ‘ஆ’ வென்று அவலரைப் பார்க்க..

‘உள்ளே வாங்கோ.. அடுத்த தெருவில்தான் என் டாக்டர் பிரண்ட இருக்கிறார்.. ஒரு போன் போட்டேன்னா ஓடி வந்துடுவார்.. ” என்று கரிசனத்துடன் கூறினார் ராமாமிர்தம்.

அவர் சொன்னதைப் போல.. ராமாமிர்தம் போன் போட்டதும் அந்த டாக்டர் ஓடோடித்தான் வந்தார்..

‘மெல்ல.. பார்த்து.. ஆண்டாள்.. தம்பிக்கு தலையணையை சரியாய் போட்டு விடு..”

ராமாமிர்தம் உபசரிக்க.. ஆண்டாள் அவனுடைய தலைக்கு அணைவாக தலையணையை உயரம் கொடுத்து வைத்தாள்..

‘சார்.. யாரு ராமாமிர்தம்..?” டாக்டர் வந்துவிட்டார்..

‘என் சொந்தக்காரர்தான்..” ராமாமிர்தம் சொன்னதைக் கேட்டு .. சக்திவேலுக்கு மயக்கமே வந்துவிட்டது..

‘நான் காண்பது கனவா.. .இல்லை நனவா..?’

அவனுடைய சந்தேகத்தை போக்குவதைப் போல டாக்டர் போட்ட ஊசியின் வலி.. அது நனவுலம்தானென்று அவனுக்கு உணர்த்தியத..

‘கொஞ்சம் வெந்நீர் கொடுங்கோ.. ” டாக்டர் குரல் கொடுத்த போதே..

‘இதோ..” என்று ஆவி பறக்கும் வெந்நீருடன் வந்து நின்றாள் ஆண்டாள்..

‘எப்படிம்மா..” டாக்டர் வியந்து போனார்..”

‘அவருக்கு அடிபட்டிருக்கு.. காயத்தை சுத்தம் பண்ண சுடு தண்ணி வேனும்.. அதனால இவரு உங்களுக்கு போனைப் போடறப்பவே நான் சுடுதண்ணிய போட்டுட்டேன்..” ஆண்டாள் பரிவுடன் சக்திவேலைப் பார்த்தாள்..’

‘நல்ல வேளையாய் காயம் பலமா படலை.. மேலாகத்தான் பட்டிருக்கு.. தையல் போட்டிருக்கேன்.. நல்லாத் தூங்கட்டும்.. இந்த டேப்லட்டை மட்டும் சாப்பாட்டுக்கு அப்புறமாய் கொடுங்க..” டாக்டர் கிளம்பி விட்டார்..

சக்திவேல் கட்டிலை விட்டு எழுந்து கொள்ள முயன்றான்.. மயக்க மருந்தின் வேகத்தில் அவனால் அது முடியாமல் போனது.. தள்ளாடினான்..

‘பேசாமல் படுங்கோ..” ராமாமிர்தம் அவனைப் படுக்க வைத்தார்..

ஆண்டாள் அவனுக்காக அவசரமாக இரவு உணவை சமைக்க ஆரம்பிக்க.. கௌசல்யா மெதுவான குரலில் அவளை எச்சரித்தாள்..

‘வீணாய் கனவு காணாதேம்மா..”

‘என்னடி சொல்கிற..?”

‘அவருக்கு கல்யாணமாகி விட்டது..”

‘கௌசி..”

‘நான்கு வயதில் மகன் இருக்கிறான்.. பெண்டாட்டி.. குழந்தைன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கிற குடும்பஸ்தன் அவர்.. வேற எதையும் பேசி வைக்காதே..”

‘இத்தனை நாளைக்கப்புறம் கடவுள் கண் திறந்திருக்கிறார்ன்னு நினைச்சேன்.. அது பொய்யாய் போயிட்டதே..”

‘புலம்பாதே..”

‘நீ தனிமரமாய் நிற்கிறயேடி..”

‘அது அவருக்குத் தெரியாது.. தெரியவும் கூடாது..”

‘புரியலைடி..”

‘பூஜா என் குழந்தைன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறார்.. எனக்குக் கல்யாணமாகியருச்சுன்னு முடிவே பண்ணிட்டார்.. அது அப்படியே இருக்கட்டும்..”

‘எத்தனை நாளைக்கு பொய்யால நீ கோட்டை கட்ட முடியும்..?”

‘இந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிட்டு நாம ;போகிற வரைக்கும்..”

‘எதுக்கு இப்படி.. ஊரு விட்டு ஊரு பொட்டியைத் தூக்கனும்..?”

‘வேறு வழியில்லைம்மா.. என் சக்திக்கு என் நிலைமை தெரியக் கூடாது.. தெரிஞ்சா அவரோட நிம்மதியான குடும்ப வாழ்க்கை பாதிக்கும்.. அது நடக்க நான் விட மாட்டேன்..”

‘நீ  குடும்பம்ன்னு வாழலையேடி..”

‘அவராவது குடும்பம்ன்னு வாழட்டுமேம்மா..”

ஆண்டாள் பேசவில்லை.. கௌசல்யா சக்திவேலின் அருகே நாற்காலியில் அமர.. ராமாமிர்தம் ஆண்டாளிடம் சென்றார்.. சன்னக் குரலில் ஆண்டாள் ராமாமிர்தத்திடம் பேசுவதைக் கேட்டுக் கொண்டே.. சக்திவேலின் முகத்தைப் பார்த்தாள் கௌசல்யா..

‘உன் ‘ஸ்பெண்ட் எங்கே..?” என்று கேட்டான் அவன்.. அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.. கணவனென்று யாரை அவள் காட்டுவாள்..

‘உங்க வொய்புக்கு போன் பண்ணிட்டீங்களா..?” அவள் பேச்சை மாற்றினாள்..

இப்போது அவனது முகம் மாறியது..

‘இல்லை..” அவன் விழிகளில் எதையோ சொல்லத் துடிக்கும் துடிப்பு தெரிந்தது..

‘ஏன்..?” அவள் புரியாமால் பர்த்தாhள்..

‘இருந்தால்தானே சொல்ல..?” அவன் கண்களை மூடிக் கொண்டான்..

‘இல்லாமல் எங்கே போயிட்டாங்க.. ஊருக்கு போய் விட்டாங்களா..? அவள் மெதுவாகக் கேட்டாள்..

‘ம்ம்..” அவன் விழிகளைத் திறந்தான்..

‘அப்ப வீட்டில் யாருமில்லையா..?” அவன் தனியாக இருக்கிறானே என்ற தவிப்பு அவள் குரலில் வெளிப்பட்டது..

‘ஆமாம்.. யாருமில்லைதான்..” சோர்வுடன் அவன் பேசினான்..

ஆண்டாள் சாப்பாட்டுத் தட்டோடு அறைக்குள் வந்தாள் அவளைப் பின் தொடந்து வந்த ராமாமிர்தத்தின் முகத்தில் தோல்வியின் சுவடு தெரிந்தது.. சக்திவேலை ஏக்கத்துடன் பார்த்தார்.. அவனை இழந்து விட்ட சோகத்தின் பரிணாமம் அவரது பார்வையில் முழுவதுமாக வெளிப்பட்டது..

‘அப்பா.. அவர் வீட்டில் யாருமில்லையாம்.. ஊருக்குப் போயிருக்கிறாங்களாம்..” கௌசல்யா அவர் முகம் பார்த்தாள்..

‘அதுக்கென்னம்மா.. காயம் ஆறுகிற வரைக்கும் தம்பி நம்ம ஆத்துலயே ரெஸ்ட் எடுக்கட்டும்.. நாம கவனிச்சுக்கலாம்..” ராமாமிர்தம் மகளின் மனமறிந்த பதிலைச் சொன்னார்..

‘என்னால் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்..?” சக்திவேல் அவசரமாக மறுத்தான்..

‘உங்களை அதிகமாய் சிரம்ப்படுத்திட்டோம்.. அதுக்கு பிராய்ச்சித்தம் செய்ய அனுமதிக்க மாட்டேளா..?” ராமாமிர்தத்தின் குரல் தழுதழுக்கவும் அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..

மறுப்பைக் கைவிட்டவனாய் ஆண்டாள் கொடுத்த உணவைச் சாப்பிட்டு முடித்தான்.. கௌசல்யா கொடுத்த மாத்திரையை விழுங்கி முடித்தான்.. கண்மூடி 

தூங்கி  விட்டான்..

பூஜாவைத் தூக்கிக் கொண்டு ஆண்டாள் நகர்ந்தாள்.. மகளின் முகத்தை பரிவுடன் பார்த்த ராமாமிர்தமும் நகர்ந்து விட்டார்.. வீடே உறங்கி விட.. கௌசல்யா மட்டும் உறங்காமல் .. நிச்சிநதையாய் உறங்கிக் கொண்டிருந்த சக்திவேலின் முகம் பார்த்தபடி விழித்திருந்தாள்.. அவளது நெஞ்சினில் நிறைந்திருந்த அவனது முகத்தின் அழகைப் பார்த்தவளுக்குள் பாடல் தோன்றியது..

‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே……

 அமைதி உன் நெஞ்சினில் 

 நிலவட்டுமே…..

 அந்த தூக்கமும்.. அமைதியும்

 நானானால்…..

 உன்னைத் தொடர்ந்திருப்பேன்.. 

 நெஞ்சில் தவழ்ந்திருப்பேன்.. “

அவன் படுத்திருந்த கட்டிலின் விளிம்பில் சாய்ந்து மெல்லிய குரலில் அவள் பாடினாள்.. அவன் மெதுவாக கண் விழித்தான். அவனது முகத்துக்கு வெகு அருகாமையில் தெரிந்த அவள் முகம் கண்டு கிளர்ச்சியுற்றான்..

‘கௌசி…..”

அவனது கரம் அவளுக்காக நீண்டது..அந்தக் கைகளுக்குள் புகுந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டால்.. அவள் தேடிக் கொண்டிருக்கும் மன அமைதியும்.. நிம்மதியும் அவளுக்கு கிடைத்து விடும்..

‘ஆனால்..?’

அவள் பெருமூச்சுடன் விலகி எழுந்து அறையை விட்டு வெளியேறினாள்..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link