Chapter 23

0Shares

மழைச்சாரல் கௌசல்யாவின் உடல் மீது பட்டுத் தெறித்து விழுந்தது.. கொட்டும் மழை நீர் சாலையில் வழிந்தோட.. யாரோ வேலை மெனக்கெட்டு கழுவி விட்டதைப் போல சாலை சுத்தமாக இருந்தது..

‘அந்தி மழைதான் எவ்வளவு அழகானதாக இருக்கிறது..’

இது போன்ற ஒரு மழை நாளில்தான் சக்திவேல் அவளிடம் காதல் சொன்னான்.. அன்று இரவு கௌசல்யா தன் டைரியில் அந்த நிகழ்வை பதிவு செய்தாள்..

    ‘மழைச்சாரல் உடல் நனைக்க – உன்

வார்த்தைச் சாரல் மனம் நனைக்க..

   காதல் சொல்லிச் சென்றுவிட்டாய் – என்

தூக்கத்தையே தின்று விட்டாய்..’

இப்போதெல்;லாம் தான் டைரியே எழுதுவதில்லை என்பதை நினைவு கூர்ந்தாள் கௌசல்யா..

எதை எழுதுவது..? பேசக் காரணமின்றி பேச முடியுமா? எழுத நிகழ்வுகளின்றி எழுத முடியுமா..?

சக்திவேலைப் பார்த்த பின்னால் கை பரபரத்தது.. ஆனால் தன்னையுமறியாமல் எழுத்திலே புலம்பி விட்டால்.. அந்த தாக்கம் சக்திவேலின் வாழ்க்கையை பாதித்து விடக் கூடுமோ என்ற அச்சத்தில் அவள் பரபரத்த கையை அடக்கி.. டைரி எழுதுவதை விட்டு.. பேட்டிக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தாள்..

‘என் சக்தி நன்றாக இருக்க வேண்டும்..’

இது ஒன்று தான் அவளது ஜெபமாக இருந்தது.. இரவும் பகலும் இதையே அவள் ஜெபித்தாள்..

‘உன் ‘ஸ்பெண்டின் போட்டாவைக் காட்டேன்..” அவளது வீட்டியிருந்த நாள்களில் விடாப்பிடியாய் அவன் குடைந்தான்.. அவள் பேச்சை மாற்றி விடுவாள்..

‘ஏன் கௌசி.. ?” அவன் ஊடுறுவும் பார்வையோடு கேட்டான்..

‘வேண்டாம்..”

‘அதுதான் ஏன்..?”

‘என்னால் அவர் போட்டோவை உங்களுக்கு காட்ட முடியாது..”

அவள் குரல் நடுங்க முகம் திருப்பிக் கொண்டாள்.. சக்திவேலின் முகம் ஆயிரமாயிரம் உணர்வுகளை பிரதிபலித்தது..

‘ஆனால் .. உன் குழந்தையை மட்டும் என்னிடம் காட்ட முடியும்..” அவன் அழுத்தமாக கூறினான்..

‘நீங்களும் தான் உங்க குழந்தையை என்னிடம் காட்டியிருக்கிறீங்க..” அவள் மனம் வெதும்பப் பதில் கொடுத்தாள்..

‘அப்படியா..? என் குழந்தையை நீ பார்த்தாயா..? எப்போது பார்த்தாய்..?” அவன் குரலில் எதுவோ 

இருந்தது..

‘பார்த்தால்தானா..? நீங்கள்தான் சொல்லிட்டீங்களே..”

‘ஓN’h.. உன் ‘ஸ்பெண்ட் எங்கேயிருக்கிறார்..?”

‘வெளிநாட்டில்..”

வாய்க்கு வந்ததை சொல்லி வைத்தாள் கௌசல்யா.. சக்திவேலின் புருவங்கள் முடிச்சிட்டன..

‘எந்த நாட்டில்..?” அவன் விடவில்லை..

‘கனடா..”

‘இவன் கேள்வி கேட்பதை நிறுத்தினால் தேவலை..’

பொய் சொல்லி அலுத்துப் போனாவளாய் நினைத்துக் கொண்டாள் கௌசல்யா..

‘அங்கே எதற்குப் போனார்..?”

‘ஊர் சுற்றப் போகவில்லை..”

‘அது எனக்கும் தெரியும்.. என்ன வேலைன்னு கேட்டேன்..”

‘சாப்ட்வேர் இன்ஜினியர்..”

‘இப்பத்தான் சென்னையிலேயே ஐ.டி. பீல்டு கொடிகட்டிப் பறக்கிறதே.. இங்கேயே வேலை பார்த்திருக்கலாமே..”

‘அவருக்கு பாரின்தான் பிடிக்குமாம்..”

‘உனக்குப் பிடிக்காதா..”

‘யாரை..”

‘உன் ‘ஸ்பெண்டை பிடிக்காதான்னு கேட்கலை.. அவரைப் பிடிக்காமலா.. மூன்று வயதுப் பெண் குழந்தையை கையில் வைத்திருப்பாய்?  பாரின் பிடிக்காதான்னு கேட்டேன்.. “

அவன் குத்தலாகப் பேசினான்.. அவதைத் தாங்க முடியாமல் மனம் துடித்தாள் கௌசல்யா..

அவளுக்கு அவனைத்தானே பிடிக்கும்..?

அவன பேச்சு பிடிக்கும்.. அவன் கிண்டல் பிடிக்கும்.. அவன் பார்வை பிடிக்கும்.. அவனின் வேகம் பிடிக்கும்.. அவனது ரௌத்ரம் பிடிக்கும்..

இப்படி அனைத்து இயல்புகளிலும் அவளுக்கு பிடித்தமானவனாக இருந்து கொண்டு.. அவளுக்கு இன்னொருவனைப் பிடிக்குமென்று அநியாயமாகக் கூறுகிறானே என்றிருந்தது.. அவளுக்கு..

‘பிடிக்காது..”

‘பாரினைத்தானே..”

‘வேறு எதைச் சொல்வேன்னு நினைத்தீங்க..?”

‘நிச்சயமாய் உன் ‘ஸ்பெண்டை சொல்வாய்ன்னு நினைக்கவில்லை.. பூஜாவைப் பார்த்த பின்னாலும் அப்படி நினைக்க நானென்ன மாங்காய் மடையனா..?”

‘நீ அதிபுத்திசாலிதான்..’

விரக்திப் புன் முறுவல் ஒன்று அவளது இதழ்களில் உதித்தது.. 

‘என்ன சிரிக்கிற..?”

‘இல்லை..கௌசிற்கு நான்கு வயதுன்னு நினைத்தேன்.. சிரிப்பு வந்தது..”

அவன் பார்வையில் எதுவோ வந்திருந்தது..

‘இவன் ஏன் அடிக்கடி புரியாத விதமாக பார்த்துத் தொலைக்கிறான்..?’  அவளுக்குப் புரியவில்லை..

‘அவனுக்கு நான்கு வயதுங்கிறது.. சிரிப்பை வரவழைக்கக் கூடிய விசயமா..?”

‘பின்ன இல்லையா..? பூஜாவுக்கு மூன்று வயதுதான் ஆகிறது..”

‘இதுக்கும்.. அதுக்கும்.. என்ன சம்மந்தம்..?”

‘சம்மந்தமிருக்கே.. நானாவது மூன்று வயதுக் பெண்ணுக்குத்தான் அம்மா.. நீங்க அதற்கு ஒரு வருசத்துக்கு முன்னாலேயே கௌசிக்கிற்கு அப்பாவாகிட்டீங்க.. அதை நினைச்சேன்.. சிரித்தேன்..

எனக்கு முன்னாலேயே.. இன்னொருத்தியுடன் குடும்பம்.. நடத்தி.. குழந்தையும் பெற்றுக் கொண்ட உனக்கு.. என்னைக் குற்றம் சொல்ல.. என்ன தகுதியிருக்கிறது என்று கௌசல்யா கேட்காமல் கேட்பதை புரிந்து கொண்டான் சக்திவேல்..

‘நீ கெட்;டிக்காரி..” என்றான் மெச்சுதலாக..

‘இது நீங்க கற்றுக் கொடுத்த கெட்டிக்காரத்தனம்தான்..”

‘ஸோ.. நீ செய்த எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்கிறாய்.. ?” மீண்டும் அவன் குரலில் குத்தல் வந்திருந்தது..

இவன் எங்கே சுற்றினாலும் இங்கேதான் வருவான் என்று நினைத்துக் கொண்டாள் கௌசல்யா..

செக்கு  மாடு சுற்றிச் சுற்றி வருவதைப் போல.. அவளது நினைவு.. அவனை மட்டுமே சுற்றி வருவதைப் போல.. அவனின் நினைவும அவளையே சுற்றி வருகிறது போல..

அவள் ஆற்றாமையுடன் பெருமூச்சு விட்டாள்..

‘இப்போது இணக்கமாக பேசுகிற உன்னோட அப்பாம்மா.. அப்போது இணக்கமாக பேசியிருந்தா.. நீ இப்படி பெருமூச்சு விட வேண்டிய நிலைமை வந்திருக்குமா..?”

அவன்  ஆழ்ந்த குரலில் கேட்டபோதுதான்.. அவன் கவனித்துக் கொண்டிருந்ததை அறியாமல் தன் ஏக்கத்தை வெளிப்டுத்தி விட்ட தவறு அவளுக்குப் புரிந்தது..

அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்..

‘அது சரி.. அவங்க மனசுப்பிரகாரம்.. அவங்க சொன்ன மாப்பிள்ளைக்கே நீ கழுத்தை நீட்டி.. ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிட்ட.. இப்ப என் மேல் இணக்கம் வரத்தானே செய்யும்..? இது புரியாம நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன் பாரு..”

மீண்டும் வார்த்தைகளால் அடித்தான்.. அவளுக்கு மனம் வலித்தது..

அவன்தான் அவளை விட்டு இன்னொருத்தியை தொட்டு விட்டான் என்றால்.. அவளையும்.. அவனைப் போல நினைத்து பேசி வைக்கிறானே.. என்று இருந்தது அவளுக்கு..

‘இப்ப வலி எப்படியிருக்கு..?”

‘நாளைக்கு கிளம்பிடுவேன்..”

‘நான் என்ன கேட்கிறேன்.. நீங்க என்ன பதில் சொல்கிறீங்க?” 

‘எப்ப கிளம்பப் போகிறன்னு நீ கேட்காமல் கேட்கிற.. அதைப் புரிஞ்சுக்காம இருக்க. நானென்ன மாங்கா மடையனா..?”

‘ஆமாம்டா.. நீ மாங்காய் மடையனேதான்..’

அவளுக்குள் எரிச்சல் மண்டியது.. அவன் கூட இருப்பதை வரமாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருப்பவளிடம் இப்படிப் பேசி வைக்கிறவனை.. மாங்காய் மடையனென்று சொல்லாமல் வேறு எப்படித்தான் சொல்வாள்..?

‘என்ன..மழையில் நனைந்துக்கிட்டு நிற்கிற..?”

சக்திவேலின் குரல் கேட்டு அவசரமாக நிமிர்ந்தாள்.. கௌசல்யா.. அன்று அவளின் வீட்டை விட்டுப் போனவன்தான்.. மறுபடி இன்றுதான் அவனைப் பார்க்கிறாள்..

‘எங்கே போயிருந்தீங்க..?” அவளது குரலில் பிரிவின் தாபம் அப்பட்டமாகத் தெரிந்தது..

அவன் அதை உணர்ந்தவனாய் அவளையே சிலிர்ப்புடன் பார்த்தான்..

ஊசி மழைச் சாரல்.. அவர்களின் உடலின் மீது துளைப்பதை உணராதவர்களாய் அவர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க.. அசைவற்று நின்று விட்டனர்..

‘மழையில் நனையாதீங்க..”

‘நீ மட்டும் நனையலாமா..?”

‘இப்பத்தான் உங்க காயம் ஆறியிருக்கு..”

‘மனசில் பட்ட காயம் ஆறவேயில்லயே..”

அவள் அடிப்பட்டவளாய் அவனையே பார்த்தாள்.. ‘அப்புறம் எப்படி.. நான்கு வயதில் உனக்கு மகன் இருக்கிறான் ..?’

வாய் வரை வந்து விட்ட கேள்வியை தொண்டைக்குள் புதைத்துக் கொண்டாள்..

‘உங்க வொய்வை பார்க்கப் போயிருந்தீங்களா..?”

அவன் பதில் சொல்லவில்லை.. மழை நீரில் நனைந்து.. உடல் பூராவும்.. மழைத் துளிகளோடு.. ஈரப் புடைவயுடன் அவள் நின்றிருந்த கோலம் அவனை மயக்கியது..

‘பனியில் குளித்த பூவை நீ பார்த்திருக்கிறயா..?”

‘இங்கே நானே காணாமல் போய் விட்டேன்.. நீ பதிலைப் பற்றிக் கவலைப் படுகிறாய்..’

‘அது நீ தான்..”

சட்டென்று  முகம் சிவந்து போனாள் அவள்.. சக்திவேலின் மனம் கடந்த காலத்திற்குப் போய் விட்டது.. மனம் தாளாமல் அவன் கேட்டான்.. 

‘ஏண்டி.. என்னை மறந்துட்டு.. இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்ட..? உன்னால் எப்படி அது முடிந்தது..?’

கௌசல்யா உயிர் துடிக்க.. கொட்டும் மழையில் நனைந்து கொண்டே.. அவன் கூப்பிடக் கூப்பிட நடந்து விட்டாள்..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link