Chapter 17

0Shares

“அவன் பெயர் நந்தகுமார்..”

கடினமான முகத்துடன் சொன்னான் கரண்.. முகம் சுளித்த தீப்தி.. 

“என்ஜினியரிங் காலேஜில் ஃபைனல் இயர் படிக்கிறான்னு சொல்கிற கரண்.. நீ யார்.. உன் லெவல் என்னங்கிறதை மறந்துட்டியா..? உனக்கு அவன் ஈக்குவல் ஆவானா..?” என்றாள்..

“எனக்குக் கிடைத்த ஆப்பர்ச்சூனிட்டிஸ் அவனுக்கும் கிடைத்தா நிச்சயமா அவன் ‘பிக் மேன்’ ஆகி விடுவான் அக்கா..”

“எதிரியைப் புகழாதே..”

“தட் ஸேம் டைம்.. எதிரியின் பலத்தைக் குறைவாகவும் எடை போட்டு விடக் கூடாது.. தட் இஸ் இம்பார்ட்டண்ட்..”

“லுக் கரண்.. நீ அந்த அனுராதாவை மேரேஜ் பண்ணியே ஆகனும்.. மேடைக்கு ராணி போல வேசம் போட்டுக் கொண்டு இருக்கிறேண்டா.. அவள் உனக்கு மனைவியானால் மட்டுமே நிஜத்தில் நான் அரியாசனத்தில் உட்கார முடியும்.. எனக்காக இதை நீ செய்ய வேண்டும்..”

கரண் தமக்கையின் குமுறலில் மனம் கரைந்தான்.. மூத்தவள்.. குடும்பத்தைச் சுமந்தவள்.. கரணும் அவனைப் பெற்றவர்களும் இப்போது வாழும் இந்த கோடிஸ்வர வாழ்க்கை தீப்தி கொடுத்தது.. பதிலுக்கு அவள் என்ன கேட்கிறாள்..? மதிப்பும் மரியாதையும் மிக்க உயர்மட்ட வாழ்க்கை அவளுக்கு நிலைக்க வேண்டும் என்று கேட்கிறாள்.. செய்தால்தான் என்ன..?

“டோன்ட் வொர்ரி.. நான் பார்த்துக்கிறேன்..” கரண் தமக்கைக்கு வாக்குக் கொடுத்தான்..

“அந்த நந்தகுமாரை என்ன செய்யப் போகிற..?”

“அவனை எதுவும் செய்யப் போவதில்லை.. பிகாஸ்.. அவன்மீது தூசி பட்டாலும்.. அனுவுக்கு அவன்மீது இருக்கும் காதல் அதிகமாகி விடும்.. அந்தத் தப்பை மட்டும் செய்யவே கூடாது..”

“அனுராதாவின் விசயத்தில் நான் இண்ட்ரெஸ்ட் காட்டாததைப் போலக் காண்பித்துக் கொண்டிருக்கிறேன்..”

“அதை அப்படியே மெயின்டெயின் பண்ணு.. இதில் நீ இன்வால்வ் ஆக வேண்டாம்..”

“பீம்சிங்கிடம் சொல்லி விடலாமா..?”

“இப்போது வேண்டாம்.. எப்போது சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்.. என்னிடம் இந்த மேட்டரை விட்டு விடு..”

கரண் தனது கம்பெனியின் புதிய கிளையொன்றை சென்னையில் திறந்தான்.. பெற்றோருடன் அனுராதாவைப் பார்க்கப் போனான்.. இனியாவின் பெற்றோரான சத்தியமூர்த்தியும், ராதிகாவும் வேண்டா வெறுப்பாக அவங்களை வரவேற்று உபசரித்தார்கள்..

“ஊட்டிக் கான்வெண்டில் படித்துக்கிட்டு இருந்தப்பதான் பார்க்க முடியலை.. தீப்தியின் கல்யாணத்தப்ப சின்னக் குழந்தையா இருந்தது.. இப்ப காலேஜ் படிப்பு சென்னையிலன்னு ஆன பின்னால அடிக்கடி வந்து பார்த்துக்கலைன்னா தீப்தியும், மாப்பிள்ளையும் கோபப் படுவாங்க..” தீப்தியின் அம்மா தங்களின் வருகைக்குக் காரணம் சொன்னாள்..

சத்தியமூர்த்தியும், ராதிகாவும் எதுவும் பேசவில்லை.. ஓரிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு ஒட்டாத பார்வையுடன் இருந்தார்கள்.. கரண் அதைக் கண்டு கொள்ளவில்லை.. அடிக்கடி வந்து 

போக ஆரம்பித்தான்.. கண்ணியமான அவனது தோற்றமும், நடவடிக்கைகளும் நாளடைவில் சத்தியமூர்த்தியையும் ராதிகாவையும் மாற்றி விட்டன.. அவர்கள் தங்களது உறவுக்காரனாக கரணை ஏற்றுக் கொண்டு பேசிப் பழக ஆரம்பித்தார்கள்..

கரண் அனுராதாவிடம் நட்பாகப் பேசுவான்.. குறுகுறுக்கும் பார்வையோ.. பொடி வைத்த பேச்சுக்களோ இல்லாமல்.. படிப்பு, கல்லூரி, நட்பு என்று பொதுப்படையாக அவன் பேசியதில் அனுராதாவின் தயக்கம் விலகியது.. அவன் கேட்பதற்குப் பதில் சொல்லுவாள்.. அப்படிப் பேசிப் பேசியே ஒட்டுதலை வளர்த்துக் கொண்ட கரண், ஒருநாள்..

“நேற்று மெரினா பீச்சில்.. உன்னை ஒரு யங்மேனுடன் பார்த்தேன் அனு..? அவர் யார்..? உன் பிரண்டா..?” என்று கேட்டான்..

அனுராதாவின் விழிகளில் கலக்கமும், பயமும் வந்தன.. உடனே இவன் முகத்தை மென்மையாக்கிக் கொண்டு மிருதுவான குரலில் சமாதானப் படுத்தினான்..

“டோன்ட் வொர்ரி.. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.. திங் மி அஸ் எ பிரண்ட.. அவர் உன் லவ்வரா..?”

“ம்ம்ம்..” வெட்கத்துடன் தலையசைத்தாள் அனுராதா..

“ஓ.. ஹி இஸ் வெரி ஸ்மார்ட்.. யு ஆர் வெரி லக்கி..” மனம் விட்டுப் பாராட்டுவதைப் போலப் பற்களைக் கடித்தபடி சொல்லி விட்டுப் போனவன்.. அந்த வார இறுதியில்..

“அனு.. ஆர் யு ஷ்யூர்..? அவர் உண்மையிலேயே உன்னை லவ் பண்ணுகிறாரா…?” என்று கேட்டு வைத்தான்..

“இது என்ன கேள்வி..?” அனுராதாவிற்குக் கோபம் எழுந்தது..

“டோன்ட் கெட் ஆங்கிரி வித் மி அனு.. இன்றைக்கு பிஸினெஸ்  லன்ச்சுக்காக ஸ்டார் ஹோட்டல் போயிருந்தேனா.. அங்கே இந்த நந்தகுமார் ‘கோபிகா’ என்கிற பெண்ணுடன் ரொம்பக் குளோசா பேசிக்கிட்டே லன்ச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்.. ஹோட்டல் என்கிறதையும் மறந்து விட்டு அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் சாய்ந்து கொஞ்சினதையும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டபடி சாப்பிட்டதையும் பார்த்த எனக்கு டவுட் வந்து விட்டது..”

“கோபிகாவா..?” அனுராதாவின் நாக்கு உலர்ந்து விட்டது..

“யெஸ் அனு.. கோபிகான்னுதான் நந்தகுமார் கூப்பிட்டார்.. உனக்குக் காட்டலாம்ன்னு செல்போனில் படம் பிடித்தேன்.. பாரேன்..”

கரண் நீட்டிய செல்போனில் திரையில்.. நந்தகுமார் மீது கோபிகா சரிந்திருந்தாள்.. அனுராதாவின் முகம் இருண்டது.. மறுநாள் நந்தகுமாரை சந்தித்தபோது..

“நேற்று லன்ச் டயத்தில உங்களைத் தேடி வந்தேன்.. காணோமே.. எங்கே போயிருந்தீங்க..?” என்று இயல்பாகக் கேட்பதைப் போலக் கேட்டாள்..

‘இல்லையே.. நான் இங்கேதான் இருந்தேன்..’ என்று அவன் சொல்லி விட மாட்டானா என்று அவளது மனம் தவித்தது.. அந்தத் தவிப்பு அவன் மனதை எட்டவில்லை போல..

“நேற்று ஐயா ஸ்டார் ஹோட்டலில லன்ச் சாப்பிடப் போயிருந்தேனாக்கும்..” அவன் காலரைத் தூக்கி விட்டபடி அறிவித்து அவளது நம்பிக்கையைச் சிதைத்து விட்டான்..

“ப்ரண்ட்ஸீடன் போனிங்களா..?” அனுராதாவின் குரல் உடைந்தது.. இதயம் தடதடத்தது..

“இல்லை ராதா.. கோபிகாவுடன் போயிருந்தேன்..”

அடுத்த நொடி அனுராதா அங்கேயில்லை.. மின்னல் வேகத்தில் விரைந்து விட்டாள்.. மறுநாள், அதற்கு அடுத்த நாள்.. அடுத்த நாளுக்கும் அடுத்த நாள் என்று நாள்கள் பறக்க.. அந்த வாரம் முழுவதும் நந்தகுமாரின் கண்களில் அகப்படாமல் அவள் கண்ணாமூச்சி விளையாடி விட்டாள்.. வார இறுதியில் ‘கண்ணி’ வைத்து அவளைப் பிடித்து நிறுத்தியவன்..

“யாரிடம்டி போக்குக் காண்பிக்கிற..?” என்று கண்சிவந்தான்..

“வேறு யாரிடம் போக்குக் காண்பிக்கப் போகிறேன்..? கோபிகாவின் லவ்வரிடம்தான் போக்குக் காண்பிக்கிறேன்..” அனுராதாவும் கண்சிவந்தாள்..

“கோபிகாவின் லவ்வரா..? என்னடி..? உன் ஆளை, அவ ஆள்ன்னு கோர்த்து விடப் பார்க்குற..? அவ சொன்னாடி.. அனுராதா கோடிஸ்வரி.. டைம் பாஸீக்கு உன்னுடன் பழகறா.. கல்யாணம் வரைக்கும் வரமாட்டா.. பாதியிலேயே கழட்டி விட்டிருவான்னு.. அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்னு அவமேல கோபப்பட்டேன்டி.. நீ அதை உண்மையாக்கப் பார்க்கறியா..?”

“ஹலோ.. உங்க தப்பை மறைக்க என்மேல பழி போடறிங்களா..?”

“நான் என்னடி தப்பு செஞ்சேன்..?”

“கோபிகாவோடு ஸ்டார் ஹோட்டலில் லன்ச் சாப்பிடப் போகலை..?”

“ச்சை..! லன்ச் சாப்பிடத்தானேடி போனேன்..? ரூம் போட்டு அவகூட என்ஜாய் பண்ணவா போனேன்..?”

வெட்கம் கெட்ட அவன் கேள்வியில் “ச்சை..” என்று முகத்தைச் சுளிப்பது.. அவள் முறையானது..

“அவகூட சாப்பிடப் போனதை நான் மறைக்கலையேடி.. அப்படி மறைத்திருந்தாத்தான் என்மீது தப்பிருக்கிறதா அர்த்தம்..”

“நான் கேட்டதினால் சொன்னீங்க..”

“நான் சொல்கிறதுக்குள்ள நீ கேட்டுட்ட.. உன்னிடமிருந்து நான் எதையும் மறைத்ததில்லை ராதா.. இனி மறைக்கவும் மாட்டேன்.. இந்த நந்தகுமார் உன்னுடையவன்..”

ஊடுறுவும் அவனது பார்வையில் இருந்த உண்மையில் அவள் தடுமாறினாள்.. அவன் அவளது நந்தகுமாரன்.. அவளுக்கு மட்டும் சொந்தமானவன்.. நினைக்கும் போதே மனம் இனித்தது..

‘பட்.. கோபிகா இவன்மீது சரிந்திருந்தாளே..’

இனித்த மனம் கசந்தது.. முகம் கடுத்தது.. அடுத்தது காட்டும் பளிங்கு போல நெஞ்சம் கடத்ததைக் காட்டிய அவளது முகத்தை அவன் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்..

“இப்ப என்ன..?” அதட்டினான்..

“அவ கூட லன்ச் சாப்பிட வேண்டிய அவசியம் என்ன..?”

“பர்த்தேடன்னு ட்ரீட் கொடுக்கக் கூப்பிட்டா..?”

“உங்களை மட்டும் ஸ்பெசலா ஏன் கூப்பிட்டா..?”

“ஒட்டு மொத்த ஃபிரண்ட்ஸையும் கூப்பிட்டிருக்கிறதாத்தான் என்னிடம் சொல்லியிருந்தா.. நீயும் வருவேன்னு சொன்னதினால நம்பிப் போயிட்டேன்டி..”

“நான் வருவேன்னு சொன்னாளா..?”

“ஆமாண்டி.. உன் வீட்டில் ஏதோ பங்சன்.. அதனால காலேஜீக்கு வராம நேரா லன்ச்சுக்கு ஹோட்டலுக்கு வந்து விடுவன்னு சொன்னாடி.. அங்கே போனா யாருமே இல்லை.. ஏன்னு கேட்டா பொய் சொன்னதாச் சொல்லிச் சிரிக்கிறா.. பர்த்டேயும் அதுவுமா திட்ட வேண்டாம்ன்னு சாப்பிட்டு வந்தேன்.. இதுதான் நான் செய்த தப்பு..”

“இது தப்பில்லையா..?”

அனுராதா கரணின் செல்போனிலிருந்து தன் போனுக்கு அனுப்பியிருந்த போட்டோவைக் காட்டினாள்.. வாங்கிப் பார்த்த நந்தகுமார் ரௌத்ரமானான்..

“அறிவு இருக்காடி உனக்கு..? இதைப் பார்த்தா அவ என்மேல சரிந்திருக்கிறதைப் போலதான் இருக்கும்.. நல்லாப் பாரு ராதா.. அவ டேபிள் மேல் சரிஞ்சிருக்கா..”

நந்தகுமார் சுட்டிக் காட்டிய கோணத்தில் பார்த்த அனுராதாவுக்கு இருக்குமோ என்று தோன்றியது.. அதே சமயம் இருக்காது என்றும் தோன்றியது.. ‘நந்தகுமாரை நான் காதலிக்கிறேன்..’ என்று அனுராதாவிடமே வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் கோபிகாவின் அழைப்பை ஏற்று.. நந்தகுமார் அவளுடன் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடச் சென்றிருக்கிறான்..

‘அங்கே லன்ச்சை மட்டும்தான் முடித்தானா..?’

அனுராதாவின் மனதில் சந்தேக விதை விழுந்து விட்டது.. கரண் தனது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்து விட்டான்..

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link