Chapter 34

0Shares

சமைத்தவைகளை டைனிங் டேபிளில் பரத்தி வைத்தான் ரமணன்.. மாளவிகாவின் வயிற்றை பசி கிள்ளியது.. மூன்று தினங்களாக திரவ உணவை உட்கொண்டதின் விளைவு என்று நினைத்துக் கொண்டவள்.. கையைக் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தாள்.. திடிரென்று மின்சாரம் நின்றுவிட.. வீட்டுக்குள் இருள் சூழ்ந்தது.. மாளவிகா பயந்து போய்… 

“ரமணன்..” என்று குரல் கொடுத்தாள்..

“டோன்ட்.. வொர்ரி..”

மெழுகுவர்த்தியின் வெளிச்சம் முகத்தில் படிய கையில் அழகான வேலைப்பாடு மிகுந்த மிகப் பெரிய மெழுகுவர்த்தியைக் கொண்ட பித்தளையிலான ஸ்டாண்டோடு அங்கே வந்தான் ரமணன்.. அந்தப் பொன்னிற வெளிச்சத்தில் அவன் முகம் அழகான கந்தர்வனின் முகம் போல தோன்றியது..

‘இவன் கந்தர்வன்தான்..’ உதட்டைக் கடித்துக் கொண்டாள் மாளவிகா..

மெழுகுவர்த்தி ஸ்டாண்டை டைனிங் டேபிளின் மத்தியில் வைத்த ரமணன்.. அவளை ஊடுறிவிப் பார்த்தான்.. அவன் பார்வை மடித்துக் கடித்த அவளின் உதடுகளின் மீது படிய.. காருக்குள் நடந்த நிகழ்வின் ஞாபகத்தில் மாளவிகாவின் முகம் சிவந்தது..

“மயக்கமா..?” புருவங்களை உயர்த்தினான் ரமணன்..

“என்.. என்.. என்னது..?” வார்த்தைகளால் தந்தியடித்தாள் மாளவிகா..

“இல்ல.. இன்னும் உனக்கு மயக்க மருந்தின் மயக்கம் தெளியலையான்னு கேட்டேன்..”, கேலியாகச் சொன்னான் ரமணன்..

அவன் அந்த மயக்கத்தைக் குறிப்பிடவில்லை யென்று மாளவிகாவிற்கு மிக நன்றாகவே தெரியும்.. அவன் குறிப்பிட்ட மயக்கமே வேறு.. அதை மாளவிகாவினால் சொல்ல முடியுமா..? அதனால் அவள் மெல்லிய குரலில்..

“ம்ம்ம்..” என்று முணுமுணுத்து வைத்தாள்…

அவளின் தடுமாற்றத்தைக் கண்டு கொண்டவனாக ரமணன் மெல்லச் சிரித்தபடி.. அவள் முன்னால் தட்டை நகர்த்தினான்…

“நான் எடுத்து வைச்சுக்க மாட்டேனா..? உங்களுக்கு எதுக்கு சிரமம்..”, சங்கடத்துடன் கூறினாள் மாளவிகா..

“அது சரி.. இந்த பூரியையும்.. உருளைக்கிழங்கு கூட்டையும் செய்யறதில எனக்குச் சிரமமில்ல.. அதை உன் தட்டில் எடுத்து வைக்கிறதுதான் சிரமமா..? சாப்பிடு..” ரமணன் சாப்பிட ஆரம்பித்தான்…

“ஸாரி..” மாளவிகா வருத்தத்துடன் சொன்னாள்..

“எதுக்கு ஸாரி சொல்ற..?” சாப்பிட்டபடியே கேட்டான் ரமணன்…

“உங்களைச் சமைக்க வைச்சிட்டேன்..” குற்ற உணர்வுடன் அவள் சொன்னாள்…

ரமணன் அவளை ஒரு ஊடுறுவும் பார்வையைப் பார்த்து விட்டு தட்டில் கவனமானான்…

“நீ அதைச் சொல்றியா.. நான் வேற என்னவோ.. ஏதோன்னு நினைச்சிட்டேன்…”

“என்னன்னு நினைச்சீங்க..?”

“என்னை தூக்கியெறிஞ்சிட்டயே.. அதுக்காக வருத்தப் படறியோன்னு ஒரு செகண்ட் பேராசைப் பட்டுட்டேன்..”

வார்த்தைகளை கூர்மையான கத்திகளாக எறிவதில் இவனுக்கு நிகர் இவன்தான் என்று நினைத்துக் கொண்டாள் மாளவிகா.. அவளுக்கு மனம் வலித்தது.. ஏதும் பேசாமல் மௌனத்தில்குடி புகுந்தாள்.. அவனுக்கு அதுவும் பொறுக்கவில்லை…

“என்ன.. பேச்சையே காணோம்..?” என்றான்..

“பேசினாத்தான்.. ஒவ்வொரு வார்த்தையிலயும் குற்றம் கண்டு பிடிக்கறிங்களே..” மனத்தாங்கலுடன் சொன்னாள் மாளவிகா…

“அப்ப நீ குற்றமாவே எதையும் பேசலைங்கறியா..?” நிதானமாகக் கேட்டான் ரமணன்…

மாளவிகா மௌத்தை மீண்டும் துணைக்கழைத்-தாள்.. அந்த மெல்லிய வெளிச்சத்தின் மத்தியில்.. நிசப்தம் சூழ்ந்த இரவில்.. காட்டுக்கு மத்தியிலிருக்கும் வீட்டில்.. அவனோடு பேசிக் கொண்டே சாப்பிடுவது அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது.. அவனும் அதை உணர்ந்தானோ என்னவோ.. 

“நாம ஃபைவ் ஸ்டார் கேஹாட்டலிலே முதன் முதலா சேர்ந்து லன்ச் சாப்பிட்டோமே.. அது நினைவுக்கு வருதில்ல..” என்று கேட்டான்..

அவன் இயல்பாக பேசியதில் மாளவிகாவிற்கு சந்தோசமாகி விட்டது..

“யெஸ்.. நீங்கதான் எனக்கு ட்ரீட் கொடுத்தீங்க..” உற்சாகத்துடன் தலையை ஆட்டினாள்…

அவளின் அந்த உற்சாகத்தில் அவன் முகம் மென்மையானது…

“சாப்பாடு நல்லாயிருக்கா..?” என்று மிருதுவான குரலில் கேட்டான்…

“சூப்பர்.. உங்களுக்கு நல்லா சமைக்கத் தெரியும்ன்னு தெரியுது..” விரலைச் சுவைத்தபடியே சொன்னாள் மாளவிகா…

“உனக்கு நல்லாச் சாப்பிடத் தெரியும்ன்னும் தெரியுது…” கேலியாகச் சொன்னான் ரமணன்…

“நானும் நல்லாச் சமைப்பேனாக்கும்..” ரோசப்பட்டாள் மாளவிகா..

“அப்படின்னு யார் சொன்னது..?” கேலி மாறாமல் கேட்டான் அவன்…

“என் பேரண்ட்ஸ் சொல்லுவாங்க…”

“பெற்ற பாசம்..! உன் தம்பி சொல்லுவானா..?” ரமணன் மடக்கி விட்டான்..

“அது.. அது.. அதுவந்து..” மாளவிகா பதில் சொல்ல முடியாமல் திணறினாள்..

அஸ்வின் அவள் சமையலை வாசனையிலேயே கண்டு பிடித்து விடுவான்.. முகம் அஷ்ட கோணலாக…

“ச்சீ.. த்தூ.. இதை மனுசன் சாப்பிடுவானா..?” என்று கேட்பான்.. 

மாளவிகாவிற்கு கோபம் வந்து விடும்.. அவளை மாட்டி விடவேண்டும் என்பதற்காகவே.. ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரத்தைச் சுட்டிக் காட்டி..

“அப்பா சாப்பிடறாரேடா..” என்று கேட்டு வைப்பாள்..

‘மாட்டிக்கிட்டியா..?’ என்ற சந்தோசம் அவள் விழியில் தெரியும்.. அஸ்வின் அதற்கெல்லாம் அயர மாட்டான்…

“அப்பா மனுசனே இல்லைக்கா..” என்று ஒரு போடு போட்டு விடுவான்..

“என்னது..? கேட்டிங்களாப்பா..” மாளவிகா தூண்டிவிட…

“அப்பா தெய்வம்க்கா…” என்று சிதம்பரத்திற்கே சாம்பிரானி காட்டி விடுவான் அஸ்வின்…

“தெய்வமே இதைச் சாப்பிடறப்போ.. நீ நொட்டை சொல்லலாமா..? சாப்பிடுறா ராஜா..” மாளவிகா தாஜா செய்தால்..

“நான் தெய்வப் பிறவியில்லையேக்கா.. சாதாரண மனுசனாச்சே… நான் என்ன செய்வேன்.. நான் என்ன செய்வேன்.. லொக் லொக்..”, என்று நடிகர் திலகமாகி மாளவிகாவை கடுப்பாக்கி விடுவான்…

மாளவிகா அந்த நினைவில் சிரித்து வைத்தாள்.. ரமணன் காரணம் கேட்டான்.. மாளவிகா சொன்னதைக் கேட்டவனின் புன்னகை விரிந்தது…

“ஹௌ நைஸ்.. அழகான குடும்பச்சூழல்.. நீ கொடுத்து வைத்தவ…”

பொறாமையில்லாத அவனின் பேச்சில் மாளவிகாவின் மனம் வலித்தது.. அவன் டேபிளைச் சுத்தம் பண்ண முனைய…

“நான் பார்த்துக்கறேன்..” என்று தடுத்தாள் மாளவிகா..

சமையலறையை ஒழுங்கு பண்ணி விட்டு.. ஹாலுக்கு வந்தார்கள்.. மின்சாரம் இல்லாத இரவு.. ஹாலின் மூலையில் கணப்பிற்காக கட்டப்பட்டிருந்த இடத்தில் தீ எரிந்து குளிரை விரட்டிக் கொண்டிருந்தது.. அது மலை வாசஸ்தலமாக இருக்கக் கூடுமோ என்று யோசித்தாள் மாளவிகா.. அவனிடம் அது பற்றிக் கேட்க முடியாது.. பதில் சொல்ல மாட்டான்…

குளிருக்கு அடக்கமாக கம்பளியைப் போர்த்திக் கொண்டு.. கால் மடக்கி சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.. ரமணன் கிட்டாரை எடுத்து வாசித்தான்.. மெலிதான இசை அறையெங்கும் பரவியது.. இவனுக்கு வாசிக்கக் கூடத் தெரியுமா.. என்ற ஆச்சரியம் அவளுக்குள் வந்தது.. அவன் காட்டிய பல வேறுபட்ட பரிணாமங்களில் அவள் மனம் சிக்கி ஊசலாடிக் கொண்டிருந்தது..

“ஓடும் மேகங்களே..!

ஒரு சொல் கேளீரோ..

ஆடும் மனதினிலே..

ஆறுதல் தாரீரோ…”

அவனின் சோகக் குரல் அறையில் நிரம்ப.. மாளவிகாவின் இதயம் சுருண்டது.. அந்தப் பாடலின் தாக்கத்தில் அவள் தவித்துப் போனாள்…

“நாடாளும் வண்ண மயில்..

காவியத்தில் நான் தலைவன்..! 

நாட்டிலுள்ள அடிமைகளில்

ஆயிரத்தில் நான் ஒருவன்..!

மாளிகையில் அவள் வீடு…!

மரக்கிளையில் என் கூடு..!

வாடுவதே என் பாடு..!

இதில் நான்.. அந்த மான்..

நெஞ்சை நாடுவதெங்கே கூடும்..?”

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link