Chapter 35

0Shares

மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தள்ளி அமர்ந்திருந்த அவனின் ஆண்மை ததும்பிய வடிவத்தின் அவள் ஆகர்ஷிக்கப்பட்டாள்.. குளிர் நிரம்பிய அந்த 

இரவின் நிசப்தத்தை அவனின் பாடல் அசைத்துக் கொண்டிருந்ததை துக்கத்துடன் அவள் உணர்ந்தாள்..

பாடிய படியே நிமிர்ந்த ரமணனின் துளைக்கும் பார்வையில் அவள் பார்வை சிக்கித் தவித்தது.. மீள முடியாத சுழலுக்குள் தான் அமிழ்வதைப் போல உணர்ந்தாள் மாளவிகா.. அவளாகப் போட்டுக் கொண்டிருந்த அத்தனை மனத்தடைகளையும் அவனின் ஊடுறுவும் பார்வை உடைத்தெறிந்தது.. அவனை மனம் தேடுவதை நடுக்கத்துடன் கட்டுப்படுத்த முயன்று தோல்வி கண்டாள் மாளவிகா.. நில்லென்ற அவளின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு நிற்க.. மனம் என்ன அவளுக்கு அடிமையா..? கட்டுக்கடங்காத கடலைப் போல.. விரைந்து செல்லும் காற்றைப் போல.. சக்திகொண்ட மனதை அடக்க அவளால் முடியுமா..?

அது கட்டுக்கடங்காமல் திமிறி.. கரைகளை உடைத்து ரமணனின் பக்கமே பாய்ந்தது.. அவளின் மனப் போராட்டத்தை அறிந்தும் அறியாதவனைப் போல ரமணன் பாடலைத் தொடர்ந்தான்…

“ஊரெல்லாம் தூங்கையிலே..

விழித்திருக்கும் என் இரவு…

உலகமெல்லாம் சிரிக்கையிலே..

அழுதிருக்கும் இந்த நிலவு…”

அதற்கு மேல் தாங்க முடியாதவளாக மாளவிகா விசும்பிக் கொண்டே எழுந்து.. ரமணனின் அருகே சென்று கால்களை மண்டியிட்டு அவன் முன் அமர்ந்து கை குவித்தாள்.. 

“வேணாம் ரமணன்.. இதுக்கு மேலே பாடாதீங்க.. அதைக் கேட்கிற சக்தி எனக்கில்லை..”

ரமணன் கிடாரை வைத்து விட்டு.. கண்ணீர் வழிந்த அவளின் முகத்தை கைகளில் ஏந்தி.. விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்…

“ஏன்..? ஏன் நான் பாடக்கூடாது..?”

“என் மனசுக்கு கஷ்டமாயிருக்கு ரமணன்..” மாளவிகா கதறினாள்…

“மனசு..!” கசப்புடன் சிரித்தான் ரமணன்…

“அது உனக்கு இருக்கா மாளவிகா..?”

அவனின் கேள்வியைத் தாங்க முடியாதவளாக அவன் மடியில் முகம் புதைத்து.. கால்களை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் மாளவிகா.. 

அவளின் அந்த சரணாகதியில் ரமணனின் வேகமும் தணிந்து விட்டது.. குனிந்து.. அவன் மடியில் முகம் புதைத்திருந்தவளின் கூந்தலில் அவன் முகம் புதைத்தான்..

“மாளவிகா..” அவள் காதோரமாக முணுமுணுத்தான்..

அவள் பேசவில்லை.. மாறாக அவனின் கால்களை பிடித்திருந்த பிடியை இறுக்கமாக்கினாள்.. ரமணன் அவளின் தோள் தடவி அணைத்துக் கொண்டான்…

பேச்சுக்களில்லாத மௌனத்தில் அவர்கள் புதைந்தார்கள்.. ரமணன் அவளின் தோள் தொட்டு எழுப்பினான்.. அவனின் கையை இறுக்கிப் பற்றுக் கோலைப் பிடிப்பதைப் போல பற்றிக் கொண்டு எழுந்த மாளவிகா நிற்க முடியாதவளாக கொடி போல அவன் மேல் படர்ந்தாள்…

தன்மீது படர்ந்தவளை இறுக்கிக் கொண்ட ரமணன் பூமாலையாய் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.. மாளவிகாவின் கைகள் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன.. அவன் மாடிப் படிகளில் ஏறினான்..

மாடியறையின் கட்டிலில் அவளைக் கிடத்த முயன்ற போது அவனை விட மறுத்தாள் மாளவிகா.. அவளின் பிடியில் சிக்கியவன் அவள் மேல் சரிந்தபோது.. அவனைத் தழுவிக் கொண்டாள் அவள்…

ரமணனின் முகமெங்கும் அவள் முத்தங்களைப் பதித்தபோது.. ரமணன் விலகவில்லை.. அவள் கைகளுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தவனாய்.. அவள் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்தான்..

“ரமணன்..” அவனை இறுக்கிக் கொண்டவளின் கைகள் அவன் முதுகின் மீது பரவிப் படர்ந்த போது.. அவளின் இதழ்களில் அழுத்தமான முத்தத்தைப் பதித்து விட்டு விலகி எழுந்தான்…

“ஏன் ரமணன்..?” மாளவிகாவின் குரலில் தவிப்பு இருந்தது.. அவளின் முடி கோதி நெற்றியில் முத்தமிட்டான்..

“தூங்கு..” என்று புன்னகை செய்தான்…

“நீங்க..?” பயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள் மாளவிகா…

“நானும் இங்கேதான் தூங்குவேன்.. பயப்படாதே..”

குழந்தையைச் சமாதானப் படுத்துவதைப் போல அவளின் கன்னத்தில் தட்டிச் சமாதானப் படுத்தி விட்டு விலக முனைந்தான் ரமணன்…

“ரமணன்..” மாளவிகா அவன் கைபற்றித்தடுத்தாள்…

“மாலு..” அவன் குரல் கரகரத்தது…

‘மாலுன்னு கூப்பிட்டுட்டான்..’ அவள் மனம் சிறகடித்தது…

“வேண்டாம்.. நீ தூங்கு..” அவள் கைகளை விலக்கினான்…

“அதுதான் ஏன்..?” மாளவிகா பிடிவாதமாக அவனைத் தடுத்தாள்..

“இல்லை.. எனக்கு வேண்டியது இது இல்லை…” அவள் கைகளை விலக்கி.. அவளை படுக்கவைத்தான் ரமணன்…

“என்மேல உங்களுக்கு பிரியமில்லையா..?” குழந்தையாகக் கேட்டாள் மாளவிகா…

எல்லையில்லாத பிரியம் விழிகளில் ததும்ப.. அவள் கன்னதில் செல்லமாகத் தட்டினான் ரமணன்…

“உன்மேல மட்டும்தாண்டி பிரியம் வைச்சிருக்கேன்.. உனக்கு இது தெரியாதா..?”

“அப்புறமும் ஏன் விலகிப் போறிங்க…”

“இப்ப வேணாம்.. காலையில் சொல்றேன்..”

பிடிவாதம் பிடித்தவளை சமாதானப் படுத்தி.. கம்பளிப் போர்வையால் போர்த்தி.. பக்கத்தில் அமர்ந்து.. தட்டிக் கொடுத்தான் ரமணன்… கண்மூடி தூங்க முயன்றாள் மாளவிகா.. அறையின் மூலையிலிருந்த கணப்பை சரிசெய்ய ரமணன் எழுந்து கொள்ள முனைந்த போது.. உடல் பதற தடுத்தாள்…

“உன்னை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேண்டி.. கணப்பை சரி செய்யனும்.. கதவை தாழ் போடனும்.. அதுக்கப்புறமா இங்கேதான் வருவேன்.. சரியா..?”

குழந்தையிடம் பேசுவதைப் போல பிரியத்துடன் பேசியபடி அவளின் கைகளுக்குள் இருந்த தன் கையை உறுவிக் கொண்ட ரமணன் எழுந்து கதவருகே சென்று கதவைத் தாழிட்டான்.. கணப்பில் விறகுகளைப் போட்டு எரிய விட்டவன்.. அறையின் மூலையில் கிடந்த மற்றொரு கட்டிலை இழுத்து மாளவிகாவின் கட்டிலை ஒட்டிப் போட்டான்.. படுத்து கம்பளியால் போர்த்துக் கொண்டவன் மாளவிகாவின் பக்கமாக திரும்பிப் படுத்தான்…

அதுநேரம் வரை அவன் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தவளின் விழிகள் பளபளத்ததைக் கண்டவன்..

“அதான் வந்துட்டேனில்ல..? இனியாவது தூங்கு..” என்று கனிவுடன் சொன்னான்..

மாளவிகா கை நீட்டி.. அவன் கையை இறுக்கிப் பற்றிக் கொண்டாள்.. அந்தக் கைகள் தந்த நிம்மதியான தெம்பில் மனதில் பாதுகாப்புணர்வை உணர்ந்தவளாக தூங்கிப் போனாள்..

வெகு நேரம்வரை உறங்காமல் கண் விழித்திருந்த ரமணன் அவன் கையை இறுக்கிக் கொண்டிருந்தவளின் முகத்தையே ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்…

மாளவிகா காலையில் கண் விழித்த போது.. அருகிலிருந்த கட்டிலில் ரமணன் இல்லை.. எழுந்து கண்களை கசக்கிக் கொண்டவளுக்கு முதல் நாளின் இரவு நினைவுக்கு வந்தது…

‘ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்..?’ அவளின் மனமும்.. உடலும் கூசிப் போயின..

‘அவன் என்னை என்னன்னு நினைத்திருப்பான்..? என் உடம்பில பேய் புகுந்திருச்சா..? அதுதான் என்னை அப்படி ஆட்டி வைச்சுச்சா..? உன்னை என் காதலன்னு எப்படி என்னால சொல்ல முடியும்ன்னு நானே கேட்டுட்டு.. அவன் கையைப் 

பிடிச்சு இழுத்து வைச்சிருக்கேனே.. என்னைப் பத்தி அவன் மோசமா நினைச்சிருக்க மாட்டானா..? காதலுக்கு நான் வேணாம்.. கட்டிலுக்கு மட்டும் நான் வேணுமான்னு அவன் ஒரு வார்த்தை கேட்டு விட்டால் என் உயிர் போய் விடாதா..? நானா அப்படிச் செய்தேன்..?’

அவனை முகத்துக்கு நேரே பார்க்க முடியாது என்று தோன்றிவிட கீழே போகாமல் அங்கேயே உட்கார்ந்து விட்டாள் மாளவிகா…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link