Chapter 36

0Shares

அறைக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும்.. பேயைக் கண்டதைப் போல அரண்டு போனாள் மாளவிகா..

‘அவன் வர்றானே.. அவன் முகத்தை எப்படிப் பார்ப்பேன்…’

சட்டென்று கட்டிலில் இருந்து குதித்து இறங்கியவள் ஜன்னலுக்கு அருகே போய் அவனுக்கு முதுகு காட்டி நின்று விட்டாள்..

“காபி சாப்பிட வா மாளவிகா…”

எதுவுமே நடக்காததைப் போல இயல்பான குரலில் அவளை அழைத்தான் ரமணன்.. அவள் திரும்பவில்லை.. ஜன்னலோடு ஜன்னலாக பொருதி.. அதில் முகம் புதைத்து நின்றாள்.. அவனைத் திரும்பிப் பார்க்க முடியாமல் அவள் மனம் குன்றியிருந்தது..

“மாலு…”

அவனின் அந்த அழைப்பில் அவள் மனம் பொங்கியது…

‘எல்லாம் இவனால் வந்தது…’ அவளுக்கு கண்ணீர் வந்தது…

‘ஏன் அந்தப் பாட்டைப் பாடித் தொலைச்சான்..? அப்படிப் பாடினா என் மனசு தாங்குமா..? நானே இந்த ரௌடியைக் காதலிச்சு தொலைச்சிருக்கேன்.. இவன் வேணும்னு கேட்கிற மனசை கட்டிப் போட்டு வைச்சிருக்கேன்.. அது புரியாம இவன் பாடிவைச்சா என் மனசு கட்டறுக்காதா..?’

அவனின் அழைப்புக்களுக்கு அவள் திரும்பாததில் அவனின் புருவங்கள் மேலேறின.. அழுத்தமான காலடியோசை அவளை நெருங்கியதில் அவள் உடல் விதிர்த்தாள்…

‘இங்கே வர்றானே…’

அப்படியே பூமிக்குள் புதையுண்டு விட்டால் என்ன என்று அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது…

முகம் திருப்பாமல் அசைவற்று நின்றிருந்தவளின் முதுகை வெறித்தவன் அவள் மனதை கண்டு கொண்டவனாய் அவள் தோள் தொட்டுத் திருப்பினான்..

அவன் பக்கமாக திரும்பிய மாளவிகா தலையை குனிந்து விட்டாள்.. அவன் தலை நிமிர்த்தி அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தபோது கண்களை மூடிக் கொண்டாள்..

“மாலு..” அவன் திகைத்தான்…

“என்னடி ஆச்சு..?” அவனின் கேள்வியில் அவள் விசும்பி அழுது விட்டாள்…

“என்னை என்னன்னு நினைச்சீங்க..?”

அவனுக்கு அவளின் கேள்வி புரிந்தது.. செல்ல கோபத்துடன் அவளின் கன்னம் தட்டி…

“முட்டாள்…” என்று அணைத்துக் கொண்டான்…

“மோசமா நினைச்சிட்டிங்களா..?” அவள் விசும்பிக் கொண்டிருந்தாள்..

“அடிதான் வாங்கப் போறடி.. யார் யாரை அப்படி நினைக்கிறது..? உன்னை நான் அப்படி நினைப்பேனா..? அப்படின்னா.. உன்னைக் கடத்திட்டு வந்து சிறை வைச்சிருக்கேனே.. என்னை நீ என்னன்னு நினைப்பே..? வில்லன்னுதானே…?”

‘இவன் வில்லனா..?’ மாளவிகாவிற்கு துக்கமாக இருந்தது…

“இருந்தாலும்.. நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு நினைக்கிறப்ப.. எனக்கே நம்ப முடியல.. நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்…?”

“நான் சொல்லவா..?” அவன் மெல்லச் சிரித்தபடி அவள் கண்ணிமைகளில் முத்தமிட்டான்..

“வேணாம்..” அவள் விலகி நின்றாள்…

“இப்ப வேணாம்கிற.. நேத்து ராத்திரி அப்படிச் சொல்லலையே…” அவன் சீண்டினான்…

“சொல்லிக் காட்டறிங்களா..?” அவள் கண்களில் கண்ணீர் ததும்பி விட்டது…

“அடச்சீ.. நீயென்ன தொட்டாச் சிணுங்கியா..? முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு மாளவிகா.. உன்னைக் கடத்திட்டு வந்தது நானா இல்லாம வேற ஒருத்தனா இருந்திருந்தா நீ என்ன பண்ணியிருப்ப..?” அவன் கேள்வியில் அர்த்தம் இருந்தது…

எதுவும் செய்திருப்பாள்.. கையில் கிடைத்ததை எடுத்து அவனைக் குத்திக் கொன்றிருப்பாள்.. தப்பி யோடியிருப்பாள்.. கிடைத்த பொருள்களை அடித்து நொறுக்கியிருப்பாள்.. எதுவும் முடியவில்லையென்றால்.. நிச்சயமாக உயிரை விட்டிருப்பாள்…

அவற்றையெல்லாம் செய்யாமல் சுற்றியிருக்கும் இயற்கையின் அழகை ரசித்திருக்க மாட்டாள்.. இயல்பாக வீட்டுக்குள் நடமாடியிருக்க மாட்டாள்.. பசிக்கு 

உணவை உட்கொண்டிருக்க மாட்டாள்.. அவன் பாடும் பாடலில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்க மாட்டாள்…

இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளின் தலையில் செல்லமாக குட்டை வைத்து…

“என் முட்டாள் காதலியே.. உன்னைக் கடத்திக்கிட்டு வந்திருக்கது நான்.. எனக்கெதிரா நீ சுட்டு விரலைக்கூட அசைக்க மாட்ட.. புரிந்ததா..?” என்று சொன்னான் ரமணன்..

மாளவிகாவுக்கு புரிந்தது…

“உன் மனசில நானிருக்கேன்.. இதை நீ வாய் விட்டு சொல்லாட்டியும் அதுதாண்டி உண்மை.. நேத்து ராத்திரி நடந்தது இயல்பான ஒருவிசயம்.. அதுக்காக உன்னையே நீ வருத்திக்கிற.. என் இடத்தில வேற ஒருத்தன் இருந்து பாட்டுப் பாடியிருந்தா.. அவன் நிலைமைக்கு நீ இரக்கப் பட்டிருப்பியா..? அவன் நிழலைக் கூட உன் விரல் தொட்டிருக்குமா..?”

அவனின் வழக்கப்படி அவள் முகத்தை இறுக்கிப் பற்றி அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்து ரமணன் கேட்ட போது…

“ச்சீச்சி..” என்று அருவெறுத்தாள் மாளவிகா…

“என் மாலு..” அவளின் அந்தச் செய்கையில் மனம் நிறைந்தவனாய் அவளை அணைத்துக் கொண்டான் ரமணன்…

அவன் மார்பில் முகம் புதைத்து நின்றவளின் மனச்சங்கடம் விலகி ஓடியிருந்தது.. அவள் முடி கோதி விலகிய ரமணன்…

“வா.. காபி சாப்பிடலாம்..” என்று அன்புடன் அழைத்தான்…

காபியை உறிஞ்சியபடி ரமணனைப் பார்த்தாள் மாளவிகா.. அவனும் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.. வெட்கத்துடன் நிலம் பார்த்தவள்…

“ஆனா.. ஏன்னுதான் எனக்குப் புரியல…” என்றாள்…

அவள் கேட்பது எதை என்று ரமணனுக்குப் புரிந்தது.. லேசான குறுஞ்சிரிப்போடு அவளின் வெட்கத்தை ரசித்தான்…

“எனக்கு நீ வேனும்தான்.. ஆனா இப்படியில்ல..” என்று சொன்னான்…

“புரியல…”

“ஐ லவ் யு.. இது நிதரிசனமான உண்மை.. எனக்கு நீ வேணும்.. இதுவும் நிதரிசனமான உண்மை.. ஆனா.. இப்படி கள்ளத்தனமா உன்கூட குடும்பம் நடத்த வேணாம்…”

மாளவிகாவின் விழிகளில் கேள்வி வந்தது.. ரமணனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து தீவிரம் வந்தது…

“நான் கள்வன்தாண்டி.. இல்லைன்னு சொல்லலை.. ஆனா உன் ஒருத்தியை மட்டுமே நினைச்ச கள்வன்.. நான் ராமன்டி.. ராவணனில்ல.. என் பெண்டாட்டியத்தான் நான் தூக்கிக்கிட்டு வந்து சிறை வைச்சிருக்கேன்.. அடுத்தவன் பெண்டாட்டியத் தூக்கிட்டு வரலை.. எங்கேயாவது சீதையை ராமன் அசோக வனத்தில சிறை வைத்தான்கிற ராமாயணக் கதையை நீ கேட்டிருக்கியா..? நம்ம வீட்டு ராமாயணம் இப்படித்தான் ஆகிப் போயிருக்கு.. இதை எங்கே போய் சொல்றது…?”

ரமணன் அலுத்துக் கொண்டதில் மாளவிகாவிற்குச் சிரிப்பு வந்தது… ஜன்னல் வழியே தெரிந்த அடர்ந்த கானகத்தை பார்த்தவளுக்கு அது வனம்தான் என்பது புரிந்தது…

‘ஆனா இது அசோக வனமில்லை.. பிருந்தாவனம்…’

அவள் காதலுடன் அவள் கை தொட்ட அந்தக் கள்வனைப் பருகுவதைப் போல பார்த்து வைத்தாள்.. அவளின் பார்வையில் அவன் கண்கள் மின்னின…

“இந்தப் பார்வைக்கொன்னும் குறைச்சலில்லடி.. உன் மனசு பூரா என் மேல காதலிருக்கு.. அதை உன் வாயாலே சொல்ல மாட்ட…”

“அது.. அது வந்து..”

“தடுமாறாதே.. உனக்கு பொய் சொல்ல வராது.. நேத்து ராத்திரிக்குப் பின்னாலேயும் நீ பொய் சொன்னா.. அது நல்லாவும் இருக்காது…”

“ரமணன்..”

“சொல்லிக் காட்டனும்னு சொல்லலை.. உன் அடி மனசில நான் தான் இருக்கேன்னு உனக்கு நினைவு படுத்தறேன்.. அவ்வளவுதான்.. நீ தெம்பாயிருக்கப்ப உன் மனசை மறைச்சு வேசம் போட்டுடறே.. நேத்து ராத்திரி.. நீ தெம்பாயில்ல.. இது காடு.. கரண்ட் இல்லாம துளியூண்டு வெளிச்சத்தில இருக்க வேண்டிய நிர்பந்தம்.. கணப்பையும் தாண்டி.. உடம்பை விறைக்க வைக்கும் குளிர்.. என்னைத் தவிர வேறு மனுசனில்லாத தனிமை.. உன் அடிமனசு மேலே வந்திருச்சு.. உன் வேசத்தைக் கலைச்சு.. நீ என்னைத் தேடிட்ட..”

ரமணன் அவளின் மனநிலையை பிட்டுப் பிட்டு வைக்க.. ஆவென்று வாய் பிளந்தாள் மாளவிகா…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link