Chapter 17

0Shares

என்னவளே! என்னவளே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

மின்னலைப் போல என்மனம் கிழித்து

இதயத்தில் நுழைந்து விட்டாய்..

ஸ்ரீதேவியின் கையிலிருந்த பஞ்சுத்துண்டை எடுத்துப் பார்த்தான்.. அதிலிருந்து ஓர்விதமான நெடி வந்து கொண்டிருந்தது.. 

“என்னடி இது..?”

“பார்த்தாத் தெரியலை.. பஞ்சுத்துண்டு..”

ஸ்ரீதேவி இடக்காகப் பதில் சொல்ல.. ராமன் அவளை முறைத்தான்..

“அது தெரியுது.. இதை எதுக்காகடி என்கிட்டக் காட்டற..?”

“ஊம்.. செய்வினையைப் பத்தி நீங்கதானே பேசினீங்க..”

“ஆமாம்.. அதுக்கென்ன..?”

“இதுதான் அந்த செய்வினை..”

“என்னடி சொல்ற..?”

“மயக்கம் போட்டுக்கிடந்த அஞ்சனாவோட உள்ளங்கையில இது இருந்துச்சு..”

“இது எப்படிடீ அது கைக்குள்ள போச்சு..?”

“ஊம்..? ரெக்கை முளைச்சு பறந்து போச்சு. ஆளைப் பாரு..”

“பார்த்துதானேடி கல்யாணம் பண்ணின..?”

“கொஞ்சினது போதும்.. விஷயத்துக்கு வாங்க.. அஞ்சனா இருந்த ரூமுக்குள்ள யாருமேயில்ல.. இவ கைக்குள்ள மயக்க மருந்து தடவின பஞ்சு இருக்கு.. இவளோ மயங்கிக் கிடக்கா.. இதிலயிருந்து உங்களுக்கு என்ன தெரியுது..”

“நீ பேசாம ஹிட்ச்சாக்கைப் போலக் கதை எழுதலாம்ன்னு தெரியுது..”

“உங்க தலை.. அவளா மயக்க மருந்தை முகர்ந்து பார்த்துட்டு மயக்கம் போட்டுட்டான்னு தெரியலையா..?”

இப்படிக் கேட்ட ஸ்ரீதேவியை ஆச்சரியத்துடன் பார்த்தான் ராமன்..

“எப்படிடீ இவ்வளவு புத்திசாலியா இருந்து வைக்கிற..?”

“உங்களுக்கு கழுத்தை நீட்டியிருக்கேனில்ல.. அதான் அருவியாய் அறிவு வந்து கொட்டுது..”

நொடித்துக் கொண்ட மனைவியை காதலுடன் பார்த்தான் ராமன்.. எவர் கண்ணுக்கும் தட்டுப்படாத விவரம் ஸ்ரீதேவியின் கண்ணுக்கு மட்டும் எப்படித் தட்டுப்பட்டது என்ற ஆச்சரியம் அவனுக்குள் பொங்கியது..

‘இவள் நுட்பமான அறிவு படைத்தவள்’ 

ஸ்ரீதேவியின் இயல்பு அப்படிப்பட்டது.. எதையும் அவளிடம் மறைத்துப் பேசிவிட முடியாது. ஆழ்ந்த ஒரு பார்வையில் மனதிலிப்பதை தோண்டி எடுத்துவிடும் வல்லமை படைத்தவள் அவள்..

“அது சரிடி ஸ்ரீதேவி.. இதையேன் அப்பவே டாக்டர் கிட்டக் காட்டல..?”

சந்தேகம் கேட்ட கணவனை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள் ஸ்ரீதேவி..

“புத்தியோடதான் பேசறீங்களா..?”

“ஏண்டி..?”

“இது பெண்பிள்ளை சம்பந்தப்பட்ட விசயம்.. மத்தவங்க முன்னால பட்டுன்னு போட்டு உடைச்சிரக் கூடாது..”

அதனால்தான் ஸ்ரீதேவி அமைதியாக இருந்திருக்-கிறாள் என்ற விவரம் புத்தியில் உறைக்க.. இன்னும் ஆச்சரியமானான் ராமன்..

மனைவியைப் பார்த்த அவன் பார்வையில் மதிப்புத் தெரிந்தது.. 

“என்ன..?” விழிகளாலேயே அதட்டினாள் ஸ்ரீதேவி..

“எப்படிடீ..” என்று ராமன் ஆரம்பிக்க..

“உஸ்ஸ்..” என்று வாயில் விரலை வைத்து எச்சரித்தாள் ஸ்ரீதேவி..

“அதான்.. இந்த அறிவுத் திருக்கடலுக்கு கழுத்தை நீட்டின தாலே புத்திசாலியா இருந்து வைக்கிறேன்னு சொல்லிட்டேனா இல்லையா.. திரும்பவும் எதுக்காக எப்படிடீன்னு ஆரம்பிக்கிறீங்க..?”

“அதில்லடி…”

“விடுங்க.. அவமயக்கம் போட்டுக் கிடக்கிறதைப் பார்த்ததுமே பதறிப்போய் அவளைத் தூக்கினேன்.. அவ உள்ளங்கையில வெள்ளையாய் ஏதோ தெரிஞ்சுச்சு.. மத்தவங்களைக் கூப்பிடாம கையைத் திறந்து பார்த்தேன்.. எனக்கு வேறொரு எண்ணம்…”

“என்னவாம்..?”

“ஏதாச்சும்.. லெட்டர் கிட்டரை எழுதி வைச்சுட்டு நீட்டி.. நிமிர்ந்திட்டாளோன்னு மனசுக்குள் ஒரு பயம்..”

“ஸ்ரீதேவி” ராமனின் கண்கள் மின்னின..

“என்ன..?” முகம் சுளித்தாள் ஸ்ரீதேவி..

“எப்படிடீ..” என்று ராமன் கேட்டானோ இல்லையோ

“உள்ளூரிலதான் எங்க அம்மா வீடு இருக்கு.. பேசாம இந்த சாளரம் வழியாகக் குதிச்சு.. சாரத்திலே இருக்கிற அம்மா வீட்டுக்கு ஓடியே போயிடுவேன்.. எப்படி வசதி..?” என்று ஒரு அரட்டலை போட்டு வைத்தாள் ஸ்ரீதேவி..

“வாயைத் திறக்கவே மாட்டேன்..”

“அஃது.. பேசாம சொல்கிறதை மட்டும் கேளுங்க.. மத்தவங்க பார்க்கிறதுக்கு முன்னால அந்தக் கடிதத்தை கைப்பத்திக்கலாம்.. பின்னால அதை அஞ்சனாவோட அப்பாகிட்ட காண்பிச்சுக்கலாம்.. முதல்ல வந்திருக்கிற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாலே அவமானம் ஏற்படாம அவரைக் காப்பாத்தணும்கிற நினைவில்தான் அவ கையைப் பிரிச்சுப் பார்த்தேன்…”

“பார்த்தா.. அது காகிதமில்ல.. பஞ்சுத்துண்டு! எப்படி கண்டுபிடிச்சிட்டேன் பாத்தியா..?” பெருமையாகக் கேட்ட கணவனைப் பார்த்த ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“அறிவுக் கொழுந்துதான்” என்று சிலாகித்துக் கொண்டாள்…

“இப்ப என்னடி பண்ணலாம்..? அஞ்சனாவோட அப்பாகிட்ட சொல்லிரலாமா..?”

“வேண்டாம்..”

“ஏண்டி..”

“அவ தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருந்தா அவரிடம் சொல்லலாம்… இவ அதைச்செய்யல..”

“எனக்குப் புரியல ஸ்ரீதேவி..”

“இவ மயக்கம் போட்டு விழுந்திருந்தா அதுக்கான மருந்தைத் தடவி முகர்ந்து பார்த்திருக்கா.. இதிலிருந்து என்ன தெரியுது..?”

“இந்த மப்பிள்ளையை அவளுக்குப் பிடிக்கலைன்னு தெரியுது..”

இப்போது “எப்படிங்க…?” என்று கேட்பது ஸ்ரீதேவியின் முறையானது..

“பூவோட சேர்ந்த நாரும் மணம் பெறும்.. உனக்குத் தாலி கட்டினதாலே நானும் புத்திசாலியாயிட்டேன்..”

“அப்படிங்கறீங்க..?”

“அப்படித்தான் இதைப் பற்றி அஞ்சனாகிட்ட பேசப் போறியா..?”

“அதுக்கு முன்னால நிஷா, உமா, லலிதா கிட்டப் பேசிரணும்..”

“பரிமளம் அக்காவை விட்டுவைச்சிட்டியே..”

“அவங்ககிட்ட சொல்ல வேணாம்..”

“ஏண்டி..?”

“அவங்க பிரதாப்போட அம்மா…”

“ஸ்ரீதேவி..!” ஆச்சரியக்குரல் எழுப்பினான் ராமன். அடுத்து அவன் எப்படிடீ என்று கேட்பதற்குள் அவன் வாயைப் பொத்திவிட்டாள் ஸ்ரீதேவி..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link