Chapter 21
மேகங்களின் உராய்வை
இடி என்றழைக்கிறோம்
உன் நினைவுகளின் உராய்வை
என்னவென்று அழைப்பது..?
“முதலில் மயக்கம். இப்ப வாந்தியா..?” ஸ்ரீதர் பரிதாபப்பட்டான்..
“இந்தப் பொண்ணு என்னத்தைச் சாப்பிட்டு வைச்சதோ.. புட்பாய்சன்னு டாக்டர் சொல்லிட்டாரே..” பிரம்மநாயகம் கவலைப்பட்டார்..
மற்றவர்கள் அதற்குப் பதில் சொல்லவில்லை..
அஞ்சனா வாந்தியெடுத்த களேபரத்தில் முந்தைய பெண் பார்க்கும் படலத்தில் நிகழ்ந்ததைப் போலவே அப்போதும் அச்சு அசல் மறுபதிவினைப் போல நிகழ்வு நடந்து வைத்தது..
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பேசின டயலாக் கூட மாறலை உமா..?” என்றான் சதிஷ்..
“ம்ப்ச்.. இதுக்கு என்ன முடிவு வரப்போகுதின்னே தெரியலை.. இந்தப் பொண்ணாவது அவ அப்பாகிட்ட விசயத்தை உடைத்துச் சொல்லிரலாமில்ல..?” உமா ஆதங்கப்பட்டாள்..
“எங்கே சொல்லுவா..? அவளுக்கு கிரீன் சிக்னல் விழுந்திருக்காது..” ஸ்ரீதேவி யோசனையுடன் சொன்னாள்..
“ஸ்ரீதேவி” பரவசப்பட்டுப்போன ராமன்..
“எப்படிடீ..?” என்று ஆரம்பிக்க.. ஸ்ரீதேவி நெற்றிக் கண்ணைத் திறந்தாள்.. அவன் அவசரமாக வாயை மூடிக் கொண்டான்…
“எனக்கு அப்பவே மனசுக்குள்ள ஒரு பட்ஷிவந்து சொல்லுச்சி லல்லி..” ஸ்ரீதர் விவரித்தான்..
“என்னன்னு..?” லலிதா புருவம் உயர்த்தினாள்…
“சம்திங் டெல்ஸ் மி.. இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு நான் நினைச்சேன்..”
“ஏனாம்..?”
“எனக்கென்னவோ அந்தப் பொண்ணுக்கு வந்த மயக்கமும் வாந்தியும் நேச்சரா வந்ததாத் தெரியலை..”
“பின்னே..?”
“அந்தப் பொண்ணு தானாய் வரவழைச்சுக்கிட்டு இருக்குமோன்னு ஒரு டவுட்..”
ஸ்ரீதர் மர்மக்கதை மன்னனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு பேசியபடி இருக்க அவன் கன்னம் தொட்டு திருஷ்டி கழித்தாள் லலிதா…
“என்னடி..?” அவன் புருவம் உயர்த்தினான்..
“ஐயோ.. என் அறிவுக் களஞ்சியமே இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாளா..?”
“லல்லி..”
“நீங்க ரொம்ப லேட்.. எங்களுக்கெல்லாம் இது எப்பவோ தெரியும்..”
“அடிப்பாவி.. பொம்பளைகள்ளாம் இவ்வளவு விவரமாகிட்டா ஆம்பளைக என்னதாண்டி செய்கிறது..?”
“அடங்கி இருக்கிறது..?”
“என்ன நிஷா இப்படியாயிருச்சு..” வருத்தப்பட்டான் சபியுல்லா..
“விட்டுத்தள்ளுங்க.. அவ தலைவிதி அப்படி..” நிஷா இலகுவாகச் சொன்னாள்..
“அந்தக் கோதண்டம் பாவம்பா..”
“பாவம்தான்..”
“அப்பாவி மனுசன்ப்பா..”
“அப்பாவிதான்..”
“என்னப்பா எல்லாத்துக்கும் கூட்டுச் சேர்ந்துக்கறே..”
“ஏன் மச்சான்..? உங்ககூட கூட்டுச் சேராம இருக்க என்னால முடியுமா..?”
“நீ எதையோ பொடி வைச்சுப் பேசறதைப்போல இருக்கே..”
“என்னத்தப் பொடி வைச்சு.. என்ன செய்ய..?”
“என்னப்பா..?”
“அவரா எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கறாரு..”
“யாரைச் சொல்ற..?”
“வேற யாரைச் சொல்வேன்..? எல்லாம் அஞ்சானவின் அப்பாவைத்தான் சொல்றேன்.. அவர் கொஞ்ச நாளைக்கு மகளோட கல்யாணத்தைப் பத்தி நினைக்காமல் இருந்தால் தேவலை.. அவர் மரியாதை மிஞ்சும் மச்சான்..”
“என்னப்பா சொல்ற..?”
“என்னத்தை சொல்றது மச்சான்.. அந்தப் பொண்ணு மனசில.. பிரதாப் மேல நோக்கமிருக்கறதைப் போல இருக்கு…”
“யா அல்லா இது எத்தனை நாளா நடக்குது..?”
“ரொம்ப நாளாவே நடக்குது..”
“ரெண்டு குடும்பமும் வேற வேற ஜாதியாச்சே.. அதிலயும் ரெண்டு பேரோட அப்பாகளும் ரொம்பவும் ஜாதி பார்க்கிறவங்களாச்சே…”
“பார்க்காம இருப்பாங்களா..”
“ம்ஹீம்.. இத்தனை நாளாய் தாயாய்.. பிள்ளையாய் பழகிக்கிட்டு இருந்தோம்.. இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ அந்த அல்லாதான் கருணை செய்யணும்..”
“நானும் இதைத்தான் துவா செய்யறேன் மச்சான்..”
“பரிமளம்..” பிரம்மநாயகம் அழைத்தார்..
“என்னங்க..” பரிமளம குழைந்தாள்..
என்றைக்கும் இல்லாத திருநாளாக கணவர் மகாகுணசாலியாய் பேச அழைத்ததில் அவளுக்கு கொள்ளை சந்தோசம்..
“அந்தப் பொண்ணு அஞ்சனாவுக்கு உடம்பில் ஏதும் கோளாறு இருக்குமோ..?”
“தெரியலையே..”
“பாவம்டி அந்த மனுசன்.. பெண்டாட்டி இல்லாம பெண்பிள்ளையை வளர்க்கிறது எத்தனை பெரிய பாடு..? அவர் அதைச் செய்து முடிச்சிருக்காரு.. காலாகாலத்தில ஒரு கல்யாணத்தையும் நடத்திவிட அந்த ஆண்டவன் வழி விடுகிறானான்னு பாரு..”
அவர் மகன்தான் வழிவிடவில்லை என்ற உண்மை தெரியாமல் ஆண்டவனின் மேல் பழியைப் போட்டுக் கொண்டிருந்தார் பிரம்மநாயகம்..
இது அத்ததனைக்கும் மூலகாரணமானவனை அணுகினாள் ப்ரீதி..
“உன்னால.. அவளுக்கு எவ்வளவு பிரச்னைகள்னு பாரு…”
“நான் எதையும் செய்யச் சொல்லலை.. அதோட காதல்ன்னா பிரச்னைகள் வரத்தான் செய்யும்..”
“அதை ஒருத்தி மட்டும் சுமக்கணும்னு நீ நினைக்கிற பாரு.. அதைத்தாண்டா என்னால தாங்கிக்க முடியலை..”
“எனக்கு நீயும் உன் கல்யாணமும் முக்கியம் ப்ரீதி..”
“அப்ப அவ உனக்கு முக்கயிமில்லையா..?”
நெற்றியடியாய் கேள்வி கேட்டாள் ப்ரீதி.. அவள் நியாயவாதி.. கையில் தராசு இல்லாதது ஒன்று மட்டும் தான் குறை.. மற்றபடி அந்த நியாய தேவதையின் மீது அவதாரம்தான் அவள்..
Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.