Chapter 20

0Shares

ஹரிஹரன் புலனடக்கம் இழந்தான்.. வாய் திறந்து.. தன் அந்தஸ்தை.. தன் பொருளாதார உயர்நிலை தரத்தை மறந்து வார்த்தைகளைச் சிதறவிடப் போனான்.. அந்த நொடியில் ரூபிணியின் கோபக் குரல் எழுந்தது..

“ஷட் அப் காயத்ரி… திஸ் இஸ் டூ மச்.. யாருக்கும் யாருக்கும் முடிச்சுப் போகிறாய்..? உன் கண்ணுக்கு வேண்டுமானால் அவன் ஹீரோவாகத் தெரியலாம்.. எனக்குத் தெரியவில்லை..”

கொதித்து எழுந்த பால் குளிர் நீர் பட்டதும் அடங்கி விட்டது.. ஹரிஹரனின் நெஞ்சம் ரூபிணியின் வார்த்தைகளால் குளிர்ந்து விட்டது. அப்போது இன்னொரு பெண் சிரித்தாள்.

“அது தானே.. உன் கண்ணுக்கு ஹரிஹரனைத் தவிர வேறு யாருமே ஹீரோவாகத் தெரிய மாட்டார்களே…”

“வாசவி.. வேண்டாம்.. இந்தப் பேச்சை இத்தோடு விடு…”

“அவளை ஏன் அடக்குகிறாய்..? அந்த ஹரிஹரனிடம் அப்படி என்ன அழகு இருக்கிறது..? பணம்தான் இருக்கிறது…”

“ஸ்டாப் இட் காயத்ரி.. பணம்.. படை பலம்.. இரண்டுமே இல்லாத ஹரிஹரனாக மட்டும் அவர் இருந்திருந்தால்.. இந்நேரம் ஓடி அவர் காலடியில் விழுந்திருப்பேன்.. அவருக்கா அழகு இல்லை..? அவரின் ஆண்மை நிறைந்த நடை.. நேர் கொண்ட பார்வை.. வீரம் கொண்ட குணம்.. என்று எல்லாமே அழகுதானே.. அவர் ஹீரோ இல்லையென்றால் வேறு யாருமே ஹீரோ இல்லை..”

“ஏய் ரூபிணி.. விளையாட்டுப் பேச்சுக்கு ஏன் இப்படி அழுகிறாய்..? இவ்வளவு உணர்ச்சி வசப்படும் அளவிற்கு இப்போது என்ன நடந்துவிட்டது..? ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…”

மற்ற பெண்கள் சமாதானப்படுத்த கண்களைத் துடைத்துக் கொண்ட ரூபிணி தற்செயலாய் திரும்பிப் பார்த்தவள் திடுக்கிட்டாள்..

இருளில் நிழல் உருவமாய் நிற்பது ஹரிஹரன் அல்லவா..? அவளது உள்ளுணர்வு அவனை அடையாளம் கண்டு கொண்டது.

‘அவன் இவ்வளவு நேரமும் இங்கா நின்று கொண்டிருந்தான்..? இந்தப் பெண்கள் பேசுவதை கேட்டுக் கொண்டா இருந்தான்.. சும்மாவே கோபக்காரன்.. இவர்கள் பேச்சைக் கேட்ட பின்பு எப்படிக் கொதித்திருப்பானோ.. கடவுளே… அவனை என் கண்ணிலும் காட்டி.. அவனது கோபத்தையும் தூண்டிவிட்டிருக்கிறாயே.. பெருமாளே.. இது சரியா..?’

ரூபிணி அசைவற்று அங்கேயே நின்றுவிட மற்றவர்கள் அவள் உடன் வராததைக் கவனிக்காதவர்களாய் தங்களுக்குள் பேசிச் சிரித்தவாறு மண்டபத்தின் உள்ளே போய் விட்டார்கள். 

ரூபிணி அசைவற்று நின்றிருக்க அழுத்தமான காலடி களுடன் ஹரிஹரன் அவளை நெருங்கினான்.. இருள் அவர்களைச் சுற்றிப் போர்வையாய் கவிந்திருக்க.. யாரும் பார்த்து விடுவார்களே என்ற பதட்டமின்றி படபடத்த இதயத்துடன் ஹரிஹரனைப் பார்த்தாள் ரூபிணி..

இருளிலும் தன்னைத் துளைக்கும் அவனது பார்வையை உணர்ந்தவளாய் ‘ஏன் இப்படிப் பார்க்கிறான்..?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

‘நீ மட்டும் அவனைப் பார்ப்பதில்லையா..?’ அவள் மனம் பதிலுக்கு கேள்வி கேட்க உதட்டைக் கடித்துக் கொண்டாள்..

‘நல்லவேளை இருட்டில் நிற்கிறோம்.. இல்லை யென்றால் இவன் இந்நேரம் என் வாயை ரசனையாய் பார்த்திருப்பான்…’ என்று தோன்ற… அவள் மனம்..

‘இப்போது மட்டும் பார்க்கவில்லையென்றா நினைக்கிறாய்..?’ என்று நகைத்தது.

அவள் பேசாமல் அவன் பேசமாட்டான் என்பது புரிய ரூபிணி ‘பிடிவாதக்காரன்..’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.. அதே நேரம் ‘அந்தப் பிடிவாதமும் ஓர் அழகுதான்..’ என்று அதை ரசிக்க வேறு செய்தாள்.. வேறு வழியின்றி நிலவின் ஒளியில் தெரிந்த அந்த பிடிவாதக் காரனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “வந்து விட்டீர்களா… எப்போது வந்தீர்கள்…?” என்று வினவினாள்…

அவனது உடலில் ஓர் அதிர்வு ஓடியது.. எவ்வளவு உரிமையாக வினவுகிறாள்..? அவனது வரவிற்காக காத்திருந்தது போல.. அவனது வரவால் மனம் குளிர்ந்தது போல.. அவள் கேட்ட விதம் அவனது மனப்புண்ணை ஆற்றியது..

“இன்றைக்குத்தான் வந்தேன்…”

“போன வேலை முடிந்து விட்டதா…?”

“நானாக உருவாக்கிக் கொண்டு போன வேலை அது.. நானாக நினைக்காமல் அது முடியாது…”

“அப்படியென்றால் திரும்பிப் போய் விடுவீர்களா..?”

“வேண்டாமென்று ஓர் வார்த்தை சொல்லு… போக வில்லை..” அவன் குரலில் இறைஞ்சல் இருந்தது..

‘ஹரிஹரனின் குரலில் இறைஞ்சல் இருப்பதா..?’ ரூபிணியின் நெஞ்சம் தாளாமல் தவித்தது.

“ஏன்.. நான் வாய் திறந்து சொன்னால்தான் இருப்பீர்களா..?”

“உன் மனதில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரிய வேண்டாமா..?”

“அது நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா..?” ரூபிணியின் நாத்தழுதழுத்தது..

ஹரிஹரனின் நெஞ்சம் குலுங்கியது. அவளை நெருங்கி நின்றான்.. அவள் விலகி நகரவில்லை.. அதை உணர்ந்தவனின் மனம் பாரம் விலகி இறகைப் போல் லேசானது.. மனத்தில் உல்லாசம் பிறந்தது.

“ஏன்.. நீதான் அதைச் சொல்ல மாட்டாயா..?” அவன் கை நீட்டி அவள் கரம் பற்றி அவளை அருகே இழுத்தான்..

எதிர்பாராத இந்தக் தொடுகையால் ரூபிணி நடுங்கிப் போனாள்.. ஆனால் நீண்ட நாட்களாய் அவனைப் பிரிந்திருந்த தாபம்.. அவன் மேல் அவள் நெஞ்சத்தில் தோன்றியிருந்த காதல்.. விட்டால் அவன் மீண்டும் பிரிந்து போய் விடுவானோ என்ற பயம்.. எல்லாம் சேர அவள் மறுப்பே சொல்லாமல் அவனது மார்பில் முகம் புதைத்தாள்.

நம்ப மாட்டாதவனாய் கொடிபோல் தன்மேல் படர்ந்து நின்றவளைச் சுற்றி வளைத்தன ஹரிஹரனின் கரங்கள்.. அவளை இறுகத் தழுவி அவளது தோள் வளைவில் முகம் புதைத்தான் அவன்.. அவளது கூந்தலில் சூடியிருந்த மல்லிகை வாசம் அவனைக் கிறங்கச் செய்தது.. அவளது பின்னங்கழுத்தில் இதழ் பதித்தான்… அவள் சிலிர்த்தாள்.. ஆனால் அவன் பிடியிலிருந்து விலகாமல் இணைந்து நின்றாள்… ஹரிஹரனின் இதழ்கள் உயர்ந்து அவளது நெற்றியில் பதிந்தன.. அவள் கண் மூடிக் கிறங்கி நின்றாள்.. அவளது கன்னத்தில் முத்த மிட்டவன் விலகி அவளது இதழோடு இதழ் பதித்து அவளை இறுக்கித் தழுவிக் கொண்டான்.

விலக மனமில்லாமல் நின்றிருந்தவர்கள்.. ரூபிணியைத் தேடி அவளது தோழிகள் வரவும் விலகினர். ஹரிஹரன் நகர்ந்து மாடிப்படியின் அடியில் இருளில் மறைந்து நின்று கொண்டான்.. ரூபிணி தோட்டத்து இருளில் இருந்து வெளியேறி அவளது தோழிகளை நோக்கிப் போனாள்..

“இங்கே என்னடி பண்ணிக்கிட்டு இருக்கிறாய்..?” வாசவி அதட்டினாள்.

என்ன பண்ணிக் கொண்டிருந்தாள் என்ற நினைவில் முகம் சிவந்தாள் ரூபிணி..

“என்னடி.. இது இந்த விழி விழிக்கிறாய்.. உன் பார்வையே சரியில்லையே.. என்ன விசயம்..” வாசவி சந்தேகமாய் நோக்க..,

“ச்சு.. ஜமுனா கல்யாணம் பண்ணிக் கொண்டு போய்விட்டாள்.. அடுத்து என் ரூம் மேட் நல்லவளாய் அமைய வேண்டுமே என்று யோசித்துக் கொண்டே இங்கு நின்று விட்டேன்…” இருளில் ஹரிஹரன் இருந்த திசையைப் பார்த்துக் கொண்டே மெய்சிலிர்க்க பொய் யுரைத்தாள் ரூபிணி…

“இதுக்குப் போய் ஏன் வீணாய் யோசிக்கிறாய்..? என்னைக் கேட்டால் நான் சொல்ல மாட்டேனா? உன் ரூமில் முதலில் கலா இருந்தாள்.. ஜமுனா ரூம் மேட்டாய் வந்தாள்.. கலாவிற்கு கல்யாணம் ஆகி டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய் விட்டாள்… ஜமுனா இருந்தாள்.. நீ ரூம் மேட்டாய் வந்தாய்.. இப்போது ஜமுனாவிற்கு கல்யாணம் ஆகிப் போய்விட்டாள்… அடுத்து உனக்கு யாராவது ஒருத்தி ரூம் மேட்டாய் வருவாள்.. உனக்கு கல்யாணமாகி நீ ஹாஸ்டலை விட்டுப் போய் விடுவாய்… அவள் கவலைப் பட்டுக் கொண்டு நிற்பாள்…”

வாசவி கூறக் கூற ரூபிணி ‘தனக்குக் கல்யாணம்’ என்ற நினைவில் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. இருளில் நின்ற ஹரிஹரன் ஆசையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரூபிணி முகம் சிவக்க இருளில் ஹரிஹரன் நின்று கொண்டிருந்த திசையை திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.. வாசவி சொன்னது ஹரிஹரனின் காதில் விழுந்திருக்குமோ.. என்று வெட்கத்துடன் நினைத்தாள்.

ஹரிஹரனின் காதுகளில் வாசவி பேசியது மிக நன்றாகக் கேட்டது.. அவன் மனதில் மணப்பெண் கோலத்தில் ரூபிணி தெரிந்தாள்… மெல்லடியை எடுத்து வைத்து நடந்து வந்து ஹரிஹரனின் அருகில் அமர்ந்தாள்.. ஹரிஹரன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.. அவன் கரம் பற்றி அவனைப் பின் தொடர்ந்து அவனது வீட்டிற்குள் வந்தாள்.. அதன்பின்.. ஹரிஹரனின் உடல் சூடேறியது.. சற்று முன் அவனது கரங்களுக்குள் அடங்கினவள்.. அன்று அவனுடன் முழுதாய் கலந்து விடுவாள்..

ரூபிணியின் தாய் தந்தையரைப் பார்த்துப் பேச வேண்டும். இனியும் காலம் தாழ்த்தக் கூடாது.. ரூபிணியின் மனதில் என்ன இருக்கிறது என்பதுதான் தெளிவாய் தெரிந்து விட்டதே… இதுவரை அவளது பயத்தைக் கண்டு எங்கே அவள் விலகிச் சென்று விடுவாளோ.. என்ற விரக்தி அவனது நெஞ்சத்தில் இருந்தது..

இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே… அவள் தான் தன் தயக்கத்தையும் பயத்தையும் உதறிவிட்டு அவனிடம் தஞ்சம் அடைந்து விட்டாளே… நினைக்கும் போதே… இன்னும் அவளது பயம் முழுவதும் தெளிந்து விடவில்லையென்று அவனுக்கு இடித்தது.

அவன் மனதில் அவள் இருக்கலாம். அவளைத் தவிர வேறு ஒருத்தியின் நிழலை கூட அவன் திரும்பிப் பார்க்க மாட்டான்.. ஆனாலும் அவளது சந்தேகங்களுக்கு விடை அளிக்காமல் அவளது சஞ்சலத்தை போக்காமல் அவள் கரம் பிடிக்கக் கூடாது..

அவளுடன் பேச வேண்டும்.. தன் வாழ்க்கையைப் பற்றி முழுவதுமாய் அவளிடம் கூறிவிட வேண்டும். ஹரிஹரன் முடிவு செய்துவிட்டான்..

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link