Chapter 20
அவன் சிரிக்கும்போது தெரிந்த பல் வரிசையை அவள் பிரமிப்புடன் பார்த்தாள்.. அவனது கரிய அடர்த்தியான மீசையின் கீழ்த் தெரிந்த பல் வரிசை அவளை அசத்தியது..
‘ஆள் அழகாகத்தான் இருந்து தொலைக்கிறான்..’ என்ற எண்ணம் அவளுள் எழ.. அவன் அவசரமாய் அதை மனதில் ஆழத்தில் அமிழ்த்தினான்..
“லாப.. நஷ்டக் கணக்கைப் பார்ப்பதற்கு இது ஒன்றும் உங்கள் ஹோட்டல் பிஸினெஸ் இல்லை சார்.. என் மரியாதை சம்பந்தப்பட்டது..”
“நீ என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதை.. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.. போதுமா..?”
“போதும்..”
“மறந்தும் கூட நீ என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதை நான் சொல்ல மாட்டேன்..”
“தேங்க்ஸ்..”
“சுகந்தியிடம் கூட.. நீ என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாய்ன்னு நான் சொல்ல மாட்டேன்..”
“ராமா..”
“அவரை ஏன் கூப்பிடுகிறாய்..? தூக்கத்தில் எழுப்பி என்னைக் கேட்டால் கூட.. நீ என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியதை நான் சொல்ல மாட்டேன்..”
“கடவுளே..”
“அவரிடம் கூட.. நீ என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதை நான் சொல்ல மாட்டேன்..”
வாசவிக்குச் செய்வதறியாத கோபம் கொப்புளித்துக் கொண்டு வந்தது.. அவள் நம்பியாரைப் போல் கையைப் பிசைந்து கொண்டு அவனைப் பார்த்தாள்..
“ஏன் சார்.. இப்படி என் மானத்தை வாங்குகிறீங்க..”
“ஏன்.. நான் என்ன செய்தேன்..?”
அவன் அறியாப் பிள்ளை போல்.. கண்களை விரித்தான்.. அப்படியே அவனது காதைப் பிடித்துத் திருகி.. முதுகில் நாலு போடு போடலாமா.. என்று வாசவிக்குத் தோன்றியது..
“என்ன செய்தேன்னா கேட்கறீங்க… நான்தான் உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டவில்லை.. என் அண்ணியைப் பார்த்துக் கண் சிமிட்டினேன்.. அதைத் தவறுதலாக நீங்கள் பார்த்துத் தொலைத்துட்டிங்கன்னு விலாவாரியாய் விளக்கம் சொன்னேனே.. அது உங்கள் மரமண்டையில் ஏறவேயில்லையா..?”
“நான்தான் நீ என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதை.. யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று தானே.. ஆ.. ஆ…”
அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே.. அவள் அவன் வாயை ஒரு கையால் பொத்தி.. மறு கையின் ஆள்காட்டி விரலை.. தன் இதழ்களில் வைத்து..
“மூச்.. வாயைத் திறக்கக் கூடாது.. திறந்தால் கொன்றே விடுவேன்.. நீங்கள் பெரிய மன்மதன்.. உங்களைப் பார்த்து நான் கண் சிமிட்டினேன்.. இதை நீங்கள் ஏலம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருக்கிறீங்க.. இன்னொரு முறை இந்தப் பேச்சு உங்கள் வாயில் வந்தது, உங்கள் குடலை உருவி மாலையாய்ப் போட்டு விடுவேன்.. ஜாக்கிரதை..” என்றாள்..
தன் வாயைப் பொத்தியிருந்த அவளது கையில் மென்மையாய் முத்தமிட்டான் சந்தோஷ்… அவள் அதிர்ச்சியுடன் கையை அவசரமாக விலக்கிக் கொள்ள.. அவன் உல்லாசமாய் அவளைப் பார்த்துச் சிரித்தான்..
“இதோ பார்.. நான் கணக்கு விஷயத்தில் கறாராய் இருப்பவன்.. கொடுக்கல் வாங்கலில் நூல் மேல் நடப்பவன்.. யாரிடமும்.. வாங்கிதைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதில்லை.. அதுவும்.. ஒன்றை வாங்கினால்.. அதை நூறாகத் திருப்பிக் கொடுப்பேன்..”
“எனக்குப் புரியவில்லை..”
“இப்போது புரியும்..”
சந்தோஷ் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.. வாசவிக்கு மயக்கமே வந்து விட்டது..
“என்ன.. என்ன செய்கிறீங்க..?”
“தெரியவில்லையா.. கண் சிமிட்டினேன்..”
“என்ன தைரியம்.. என்னைப் பார்த்து எப்படி நீங்கள் கண்ணடிக்கலாம்..?”
“நீ மட்டும் என்னைப் பார்த்துக் கண்ணடிக்கலாம்..?”
“அது தெரியாமல் நடந்த விசயம்..”
“ஆனால்.. எனக்குத் தெரிந்து.. எனக்கு நடந்து விட்டதே..”
“கடவுளே.. அதனால் நீங்கள் என்ன குறைந்து போய் விட்டீர்களாம்..”
“நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பையன்..”
“ராமா..”
“என் மனது கெட்டு விட்டதே..”
“பெருமாளே..”
“யாரை நீ கூப்பிட்டாலும் என் மனது சரியாகுமா..?”
“அதனால்..”
“நீ கொடுத்ததை நூறாய் உனக்குத் திருப்பிக் கொடுக்கப் போகிறேன்..”
வாசவிக்கு அழுகையே வந்து விட்டது.. கண்களில் நீர் மல்குவதை உணர்ந்ததும் அவசரமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.