Chapter 21
ஒன்றுக்குப் பத்தாய்த் திருப்பித் தருவது என்பதை வாசவி கேள்விப் பட்டிருக்கிறாள். ஆனால்.. இந்த மாதிரியான ஒரு நிகழ்வை.. ஒன்றுக்கு நூறாய்த் திருப்பித் தருவதை இப்போதுதான் கேள்விப்படுகிறாள்..
“ஏன் சார்.. நீங்கள் என்னவோ பெரிய சாதனையாளர்.. அது.. இதுன்னு.. சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உங்க தங்கை பில்ட் அப் கொடுத்தாங்களே.. அதெல்லாம் பொய்யா..?”
“அதற்கும்.. இதற்கும் என்ன சம்பந்தம்..?”
“சூப்பர் ஸ்டார் ஒரு படத்தில்.. நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதாக அர்த்தம்ன்னு சொல்லுவாரே..”
சந்தோஷ் சிரிக்காமல் அவள் முகத்தையே பார்த்தான்.. எங்கே அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தால்.. இன்னொரு முறை கண் சிமிட்டி வைத்து விடுவானோ.. என்ற பயத்தில்.. வாசவி அவனைப் பார்க்காமல் வேறு திக்கில் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“நான் சினிமா பார்ப்பதில்லை..”
“அதனால் என்ன.. இந்த வசனத்தை நீங்களும் பாலோ பண்ணுங்களேன்..”
“எப்படி..?”
“நீங்கள் ஒருமுறை செய்ததை.. நூறு முறை செய்ததாகக் கணக்கு வைத்துக் கொள்ளுங்களேன்..”
“அதாவது.. நான் ஒருமுறை உன்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதை.. நூறுமுறை நான் உன்னைப் பார்த்துக் கண் சிமிட்டியதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமாக்கும்..”
“அதற்கு இத்தனை விளக்கம் சொல்ல வேண்டு மாக்கும்..”
“உனக்குப் புரிய வேண்டாமா..?”
“எனக்குப் புரிய வைப்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு அக்கறை..? ச்ச்ச்..”
“ஏன்..? எனக்கு உன் மேல் அக்கறை இருக்கக் கூடாதா.. இருந்தால் ஆகாதா..?”
“ஆஹாஹா.. உங்களின் அக்கறையைத்தான் நான் இப்போது பார்த்தேனே..”
“எப்போது..”
அவன் மீண்டும் அறியாப் பிள்ளை போல் வினவினான்.. அவன் கண்களில் சிரிப்பு இருந்தது..
அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. அவன் கண் சிமிட்டியதை.. அவள் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்று பார்க்கிறானா..?
“சார்.. இப்போது நீங்க ஒரு முடிவுக்கு வாங்க..”
“எதைப் பற்றி..”
“சும்மா.. விளையாடாதீங்க சார்..”
“விளையாடுகிறேனா..? உன்னுடனா..? குட் ஜோக்.. நீதான் என்னை எவனோ ஒருவன் போல நினைத்துக் கொண்டு.. ‘சார்.. சார்’ ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கிற..”
“உங்களை “சார்”ன்னு கூப்பிடாமல் வேறு எப்படிக் கூப்பிடுவது..? ச..ந்..தோ..ஷ்..ன்னா கூப்பிட முடியும்..?”
அவள் ராகம் போட்டுக் கூப்பிட்டுக் காட்ட…
“ஏன்.. பெயர் சொல்லிக் கூப்பிட்டால்தான் என்ன..?” என்று வினவினான் அவன்..
“இப்போது அதுவா சார் பிரச்னை..?”
“எனக்கு எதுவுமே பிரச்னை இல்லை..”
“உங்களுக்கு இருக்காது.. அதுதான்.. எனக்குத் தெரியுமே..”
“உனக்குத் தெரியாதது.. இன்னும் நிறைய இருக்கிறது..”
“தாராளமாய் இருக்கட்டும்.. உங்கள் பெர்சனல் மேட்டர் உங்களோடு.. எனக்கு அதில் அக்கறையில்லை..”
“அப்படியா..?”
“அப்படித்தான்.. அங்கே அப்பா.. அம்மா.. சாப்பிட்டு முடித்து விட்டாங்க.. எழுந்து கை கழுவ வந்து விடு வாங்க..”
“வரட்டுமே..”
“உங்களுக்கு ஒன்றுமில்லை.. எனக்குத்தான் கஷ்டம்..”
“என்ன கஷ்டம்..?”
வாசவி எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்.. அவன் புரியாதவன் போல்.. பார்த்துக் கொண்டு நின்றான்..
‘இவன் என்ன சின்னப் பாப்பாவா..!’
“உங்களுடன் நான் தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்.. தவறாக நினைக்க மாட்டாங்களா..?”
“இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது..?”
‘ஊஹூம்.. இவனுடன் பேசினால் வேலைக்கு ஆகாது..’ என்ற முடிவுடன் அவள் நகரப் போனாள்..
“இப்படிப் பாதியிலேயே பேச்சை நிறுத்தி விட்டுப் போனால் எப்படி..?”
“நீங்கள் இன்றைக்குப் பூராவும் பேச்சை இழுத்துக் கொண்டு போவீர்கள்.. எனக்கு அது தாங்காது..”
“அப்படியா.. உனக்குப் பேசப் பிடிக்காதா..? சுகந்தி அப்படிச் சொல்ல வில்லையே.. உனக்குப் பேசப் பிடிக்கும்னு சொன்னாளே.. ஒருவேளை.. உனக்கு நீ மட்டுமே பேசிக் கொண்டிருந்தால்தான் பிடிக்கும்போல.. மற்றவங்க பேசி நீ கேட்பதாக இருந்தால் பிடிக்காது போல..”
அவன் இப்போதைக்குப் பேச்சை நிறுத்த மாட்டான் என்பது புரிந்து போக.. வாசவி அவசரமாக நகர்ந்து விட்டாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.