Chapter 35

0Shares

சுமதிக்கு கழுகு விழிகள்… சந்தோஷின் முகத்திலிருந்த காதலையும்.. வாசவியின் முகத்திலிருந்த வெட்கத்தையும் கணித்து விட்டன.. அவளால் அவை கூறிய செய்தியை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை..

அவர்களது உறவு வட்டாரத்திலேயே பொருளாதார வசதியில் உயர்ந்த மிகப் பெரிய செல்வந்தன் என்று சந்தோஷ் பெயர் வாங்கியிருந்தான்..

சுமதியே தன் புகுந்த வீட்டில் எடுத்ததற்கெல்லாம் தான் மயில் வாகனத்தின் மகள் என்பதைக் கூறாமல்.. ராமகிருஷ்ணனின் ஒன்றுவிட்ட தம்பியின் மகள்… சந்தோஷின் தங்கை.. என்றுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்வாள்..

அப்படிப்பட்ட சந்தோஷின் மனதில் போயும்.. போயும்.. இந்த வாயாடி வாசவி.. இடம் பிடிப்பதா..?

நினைக்கும்போதே நெஞ்சம் எரிவதைப் போல் இருந்தது சுமதிக்கு..

அவள் அவசரமாய் அவர்களின் அருகே சென்றாள்..

“என்ன அண்ணா.. இங்கேயே நின்றுவிட்டாய்..?”

“சும்மா.. காற்று வாங்க வந்தேன்..”

“பார்த்து அண்ணா.. நான் காற்று வாங்கப் போனேன்.. ஒரு கழுதை வாங்கி வந்தேன்னு.. எந்தக் கழுதையை யாவது பிடித்துக் கொண்டு வந்து விடப் போகிற பத்திரம்..”

வாசவியைப் பார்த்துக் கொண்டே சுமதி இடக்காகக் கூற, வாசவிக்குச் ‘சுரீர்’ என்றது.. அவள் உடனே..

“சூ.. சூ..” என்றாள்..

“என்ன..” என்று விசாரித்தான் சந்தோஷ்..

“மண்டபத்துக்குள்ளேயிருந்து.. மனிதர்கள் வந்தால் பரவாயில்லை.. இவர்கள் சொல்வதைப் போல் நாலுகால் இனம் வந்துவிட்டால் என்ன செய்வது..? அதுதான் விரட்டினேன்..”

இப்போது வாசவி தன்னைத்தான் மறைமுகமாய்ப் பற்றுவது போல்.. ‘சூ.. சூ..’ என்றாள் என்பதைப் புரிந்து கொண்ட சுமதிக்கு ஆங்காரம் அதிகமானது..

“மண்டபத்துக்குள்.. நாலு கால் இனம் எது இருக்கிறது..? ஒருவேளை மேடையில் உட்கார்ந்திருப் பவங்களைச் சொல்கிறாயா.. என்ன..?” என்று வக்கணையாகக் கேட்டாள்..

சுமதி வரும்போது.. மேடையில் பிரசன்னா மட்டுமே அமர்ந்திருந்தான்.. ஆனால் வாசவி மேடையைப் பார்த்த போது சுகந்தி வந்து அமர்ந்து கொண்டிருந்தாள்..

“மேடையில் இருக்கும் உங்கள் தங்கையைச் சொல் கிறீங்களா.. சேச்சே.. உங்களோடு பிறந்ததினால்.. அவங்களும் நாலு கால் இனமாய் ஆகிவிடுவாங்களா என்ன..?” என்று வாசவி சொல்லவும் சந்தோஷ் சிரித்து விட்டான்..

‘எவ்வளவு தைரியம் இருந்தால்.. இவள் என்னையே கழுதையென்று சொல்வாள்..? அதைக் கேட்டு இவனும் சிரிக்கிறானே..? இவர்களது இந்தத் திமிரை அழிக்கா விட்டால் நான் சுமதி இல்லை..’

சுமதி வெஞ்சினம் கொண்டாள்.. எல்லாப் பெண் களையும் போல் சுமதியும்.. இளம் வயதுவரை நல்ல குணமுள்ள பெண்ணாகத்தான் இருந்தாள்..

என்று அவளுக்குத் திருமணம் ஆனதோ.. அன்றி லிருந்து அவள் மனதிலிருந்த மென்மையான உணர்வுகள் மறைந்து.. வன்மை தலை தூக்கிவிட்டது..

புதிதாய்த் திருமணம் ஆன பெண்ணுக்குரிய அவளுடைய எதிர்பார்ப்புகள் பொசுங்கிப் போயின.. காதலை எதிர் பார்த்துக் கழுத்தை நீட்டியவளுக்கு.. அது கானலாகிப் போனது.. தனக்குக் கிடைக்காத காதலும்.. அன்பும்.. பாசமும்.. மற்றப் பெண்களுக்குக் கிடைக்கும் போது.. அதைத் தாங்கிக் கொள்ளச் சுமதியினால் முடிய வில்லை..

வாசவி.. வரவேற்பை விட்டு நகர்ந்து திருமண மேடையை நோக்கிச் செல்ல.. சந்தோஷ்.. சுமதி அங்கே நிற்பதை மறந்து.. அவசரமாய் அவளைத் தடுத்தான்..

“எங்கே போகிறாய்..?”

“கல்யாண மேடைக்கு..”

“ஏன்.. இங்கிருந்து பார்த்தால், கல்யாணம் தெரியாதா..?”

“ஊம்.. நாத்தனார் முடிச்சை யார் போடுவாங்களாம்..?”

அவர்களது பேச்சில் தொனித்த நெருக்கத்தைக் கவனித்துக் கொண்டுதான் சுமதி இருந்தாள்.. வாசவியின் பின்னாலேயே சந்தோஷ்.. சுமதி அங்கே நிற்பதையும் மறந்து சென்று விட, சுமதி.. இந்த உறவை எப்படித் துண்டிப்பது என்ற யோசனையுடன்.. ஜானகியின் அருகே போய் அமர்ந்தாள்..

“பெரியம்மா..”

“என்ன சுமதி..”

“நம்ம சந்தோஷ் அண்ணனிற்குக் கோயம்புத்தூர்மில் ஓனரின் மகளைக் கொடுக்க நினைத்து.. ஆள் மேல் ஆள் அனுப்பினாங்களே.. என்ன ஆச்சு..?”

“அந்த இடம் வேண்டாம்ன்னு சொல்லிவிட்டான் சந்தோஷ்..”

“இப்படியே அண்ணன் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தால் எப்படி பெரியம்மா..”

சுமதி.. ஜானகியைக் கிளப்பி விடும் நோக்கத்துடன் பேசினாள்.. அதற்கு ஜானகி கூறிய பதிலைக் கேட்டு அவளுடைய முகம் அசிங்கமாகக் கோணியது..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link