Chapter 38
வாசவி.. சந்தோஷின் மார்புக்குள் ஏறக்குறைய முகத்தைப் புதைத்துக் கொண்டு.. சத்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டு இருந்தாள்.. அவளது மெலிதான தேம்பல் ஒலி அவளது காதலின் அளவீட்டை உணர்த்த.. சந்தோஷ் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்.. அவளது கூந்தலில் முகம் புதைத்தான்..
“ஏன் என் வாழ்வில் வந்தீங்க சந்தோஷ்..? நேற்று வரை நான்.. நானாக இருந்தேனே.. இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் போய் விடுவீர்கள்… எனக்கு என் உயிரே உடலை விட்டுப் போனது போல இருக்குமே.. உயிரில்லாத வெறும் கூடாகத்தானே.. நான் நடமாடுவேன்..?”
“நான் மட்டும் எப்படியிருப்பேன்..? அப்படித்தானே இருப்பேன்..”
“என்னால் உங்களை விட்டுவிட்டு இருக்க முடியாது..”
“என்னாலும் உன்னைப் பிரிந்து இனி வாழ முடியாது.. சொல்.. என்ன செய்யலாம்..? இப்போதே உள்ளே போய் உன் அப்பாவிடம் உன்னைப் பெண் கேட்டு விடவா..?”
“இப்போதா..?”
“இப்போதுதான்..”
“இன்றைக்குத்தான் அண்ணனுக்குக் கல்யாணம் முடிந்திருக்கிறது..?”
“நம் கல்யாணப் பேச்சும் இன்றைக்கே ஆரம்பிக் கட்டுமே..”
வாசவி பதில் சொல்லாமல்.. அவனது முதுகைச் சுற்றித் தன் கரத்தால் வளைத்துக் கொண்டாள்.. சற்று நேரம் இருவரும்.. பேசாமல்.. மௌனமாக.. ஒருவரின் அருகாமையில்.. மற்றொருவர் கரைந்து கொண்டிருந்தனர்..
மெல்ல.. வாசவி.. அவனிடமிருந்து விலகி நின்றாள்.
“போய் வாங்க சந்தோஷ்…”
“அத்தான்னு சொல்ல மாட்டாயா..?”
அவள் இதழ்களில் பிரிவுத் துயருடன் கூடிய வெட்கப் புன்னகை உதித்தது..
“போய் வாங்க அத்தான்..”
“அது..! கண்ணைத் துடைத்துக் கொள்.. நான் அடுத்த வாரமே.. அப்பா அம்மாவுடன் உன்னைப் பெண் கேட்டு வருகிறேன்..”
“ம்ம்ம்..”
“அதைச் சிரித்துக் கொண்டே சொல்லக் கூடாதா..?”
“ம்ம்ம்..”
“அழக்கூடாது வாசவி.. எங்கே.. என் முகத்தைப் பார்..”
“ம்ம்.. அழவில்லை..”
“நான் போய் உனக்கு போன் பண்ணுகிறேன்..”
“எப்படியாம்.. என் செல் நம்பர்தான் உங்களுக்குத் தெரியாதே..”
“சுகந்தி கொடுத்தாள்..”
“அதிலெல்லாம் ஆள் கில்லாடிதான்..”
“மற்றதிலும் கில்லாடிதான்.. நீ தெரிந்து கொள்ளத் தானே போகிறாய்..”
வாசவி துயரம் மறந்து.. வெட்கத்துடன் அவனைக் கிள்ளினாள்..
“வாசவி..” வீட்டுக்குள் இருந்து திலகம் அழைக்கும் குரல் கேட்டது.. சட்டென்று அவன் கன்னத்தில் மின்னல் வேகத்தில் முத்தமிட்டு விட்டு வீட்டுக்குள் ஓடி மறைந்தாள்..
‘இவளுக்குக் கால்கள் தரையில் பாவவே.. பாவாதா.. நடப்பதே கிடையாது.. ஒரே ஓட்டம் தான்..’
அவளது வேகத்தை ரசித்தபடி.. காரில் ஏறிக் கொண்டான் சந்தோஷ்..
அன்று இரவு.. பிரசன்னாவும்.. சுகந்தியும் இன்பத்தில் ஆழ்ந்திருந்த போது.. மூன்று ஜீவன்கள்.. தூக்கத்தைத் தொலைத்து விட்டு.. விடிய.. விடிய.. விழித்திருந்தன..
ஒன்று வாசவி.. மற்றொன்று சந்தோஷ்.. மூன்றாவது ஜீவன்.. சுமதி..
அவள் விடிய விடிய யோசித்துக் கொண்டிருந்தாள்.. முதல் நாள் இரவு.. அவள் கொய்யா மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த போது சந்தோஷ் வரவும்..
‘இவன் எதற்கு இந்நேரத்தில் இங்கே வருகிறான்..’ என்ற சந்தேகத்துடன் பின் வாங்கி.. மரத்தின மறைவில் ஒளிந்து கொண்டாள்..
சற்று நேரத்தில் வாசவி அங்கே வந்தாள்.. அதற்குப் பின் நிகழ்ந்தவைகளை.. சற்றும் லஜ்ஜையின்றி ஒட்டுக் கேட்டு விட்டு தூக்கத்தைத் தொலைத்திருந்தாள்..
‘ஒரு வாரத்திற்குள் பெண் கேட்டு வந்து விடு வானா..?’
சந்தோஷ் சொன்னதைச் செய்வான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்..
‘இதை எப்படித் தடுப்பது..’ என்ற யோசனையில் அவள் விடிய.. விடிய.. தூங்காமல் அந்த இரவைக் கழித்தாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.