Chapter 40

0Shares

“வாசவி..! உன்னுடன் நான் பேச வேண்டும்..”

சந்தோஷின் குரல் ஏன் இத்தனை இறுக்கத்துடன் ஒலிக்கிறது என்ற யோசனையுடன் வாசவி பதிலுக்கு வினவினாள்..

“எங்கே பார்ப்பது..?”

“உன் காலேஜ் வாசலில் நான் உன்னை பிக் அப் பண்ணிக் கொள்கிறேன்..”

“சரி..”

சந்தோஷின் கார் வந்ததும.. வாசவி.. தோழிகளிட மிருந்து பிரிந்து வந்து காரில் ஏறிக் கொண்டாள்..

“அந்த ரோஸிக்கு உங்கள் காரைப் பார்த்து.. என் மேல் பொறாமை..” என்று வாசவி கூற.. சந்தோஷ் அவளைத் திரும்பிக் கூர்மையாகப் பார்த்தான்..

“அதில் உனக்குச் சந்தோசமா..?”

“பின்னே.. சந்தோசம் வராதா..? அந்த ரோஸி என்னிடம் எவ்வளவு அலட்டிக் கொள்வாள் தெரியுமா..?”

“ஸோ.. அவள் முன்னால் அலட்டுவதில் உனக்கு ஒரு மகிழ்சி.. அப்படித்தானே..”

“அப்படியேதான்..”

“ஸோ.. என் பணத்துக்காகத்தான் நீ என்னை விரும்பி யிருக்கிறாய்.. இல்லையா..”

வாசவி சட்டென்று சந்தோஷின் முகம் பார்த்தாள்..

“புரியவில்லை..”

“நீ என்னைக் காதலித்ததற்கு என்ன காரணம்.. வாசவி..? நான் ஒரு கோடீஸ்வரன் என்பதுதானே காரணம்..”

“காரை நிறுத்துங்கள்..”

“எனக்குப் பதில் வேணும் வாசவி..”

“எனக்குப் பதில் சொல்லப் பிடிக்கவில்லை.. ஏன்.. உங்களிடம் பேசக் கூட எனக்குப் பிடிக்கவில்லை..”

ஆளரவமற்ற சாலையில் சென்று கொண்டிருந்த காரைச் சரக்கென்று பிரேக் அடித்து.. சாலையோரமாக நிறுத்தினான் சந்தோஷ்.. வாசவி கதவைத் திறக்க முயன்றாள்.. முடியவில்லை..

“அதைத் திறக்க முடியாது.. உன் பிரண்ட்ஸ் பொறாமைப்படும்படி இருக்கும் இந்தக் கார் வெளிநாட்டுக் கார்.. நான் மனது வைத்தால்தான் நீ வெளியே இறங்க முடியும்..”

“உங்களுக்கு என்ன வேண்டும்..”

“முதலில் உனக்கு என்ன வேண்டும்..? என் பணம் தானே..?”

“என் மேல் இப்படியொரு உயர்ந்த அபிப்ராயத்தை வைத்துக் கொண்டு எப்படி என்னிடம் காதல் சொன்னீர்கள்..?”

“நீயும் அந்த ஆஷாவைப் போல் இருப்பன்னு நான் கனவா கண்டேன்..? நீ என்னை ஏமாற்றிவிட்டாய் வாசவி..”

“யார் அந்த ஆஷா..?”

“என்னுடன் படித்தவள்… என்னிடம் காதல் சொன்னவள்..”

சந்தோஷ்.. தன் மனதில் பட்ட காயத்தை மறைக் காமல் கூறினான்.. முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் பிரதிபலிக்க அதைக் கேட்டுக் கொண்டாள் வாசவி..

“ஏன்.. என்னிடமிருந்து இதை மறைத்தீர்கள்..?”

“எதை..?”

“நீங்கள் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்தவர் என்பதை..”

“ஏய்ய்.. நான் ஒன்றும் அவளைக் காதலிக்க வில்லை..”

“ஆனால்.. அவளுடைய காதலை ஏற்றுக் கொண்டிங்க..”

“அதுதான் முடிந்து போன கதையாச்சே..”

“இல்லை.. ஒருவேளை அந்த ஆஷா பணத்தின் மேல் ஆர்வம் காட்டாதவளாக இருந்திருந்தால்.. நீங்கள் அவளைத்தானே இப்போது நினைத்துக் கொண்டிருந் திருப்பீர்கள்..? அவளைத்தானே கல்யாணமும் பண்ணிக் கொள்வீர்கள்..?”

“வாசவி..”

“நீங்கள் என்னைப் பற்றி என்ன அபிப்ராயம் வைத்திருந்தாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை யில்லை.. உங்களிடம் எனக்குப் பிடித்த விசயம்.. நீங்கள் என் மேல் காட்டிய காதல்..” 

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link