Chapter 16

0Shares

முதல் நாள் திருமணம் முடிந்து விட்டாலும்.. அதன் தொடர்பான மற்றைய சடங்குகள் அணி வகுத்து வர.. திருமண வீட்டிற்கான சூழல் கலையாமல் வீடு கல்யாணக் களையோடு இருந்தது..

நெருங்கிய உறவினர்கள் மட்டும் வீட்டிலிருக்க.. கல்யாணி விழாநாளின் அயர்வோடு இருந்தாள்…

“என்ன கல்யாணி.. மருமகப் பொண்ணு எப்படி நடந்துக்கிறா..? குடும்பத்துக்கேத்த பெண்தானா..?”

வந்திருந்த உறவினர் பெண்மணிகளில் ஒருத்தி வினவ, கல்யாணி எரிச்சல்பட்டாள்..

“ஏன்க்கா.. நேத்து இந்நேரம்தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. முழுசா ஒரு ராத்திரி தாண்டறதுக்குள்ள மருமக எப்படிப்பட்டவள்ன்னு தெரிஞ்சுருமா..?”

“உனக்கு இனிமே தெரிஞ்சு என்ன செய்ய..?”

“ஏன் அப்படிச் சொல்றே..?”

“அதான் முழுசா ஒரு ராத்திரி தாண்டிருச்சே…”

“இதென்னக்கா உன்கூட வம்பாய் போயிருச்சு.. பொழுது போனா.. ராத்திரி வரத்தானே செய்யும்..? இதை ஒரு பேச்சாப் பேசறியே…”

“அடி கூறு கெட்டவள.. அது வெறும் ராத்திரி இல்லைடி.. முதல் ராத்திரி..!”

இப்படிச் சொன்னவளை எரிச்சல் மண்டப் பார்த்தாள் கல்யாணி…

“எனக்கு நல்லா வந்திரும் வாயிலே.. பெரிய மனுஷியாய் இருந்துக்கிட்டு விவஸ்தை கெட்டத்தனமாய் எப்படித்தான் பேசறியோ…”

“நீ விவரம் கெட்டத்தனமாய் இருந்துக்கிட்டு என்னைக் குறை சொல்றியா..?”

“நீ ரொம்ப விவரம்தான் போ…”

“என்னவோ.. கல்யாணின்னா கெட்டிக்காரி.. அது.. இதுன்னு ஆயிரம் சொல்றாங்களே.. கடைசியில் நீ இவ்வளவுதானா..?”

“என்னக்கா உளர்றே..?”

“உளறலேடி.. எல்லா வீட்டிலயும் நடக்கிற கதையைத்தான் சொல்றேன்.. ஒரு ராத்திரி… அதுவும் முதல் ராத்திரி போதுண்டி.. ஒரு பெண்டாட்டி புருசனை முந்தானையில் முடிஞ்சுக்க…”

கல்யாணிக்கு ‘கெதுக்’கென்றது.. அவளது பிள்ளை பெண்டாட்டியின் சொல்லைக் கேட்டுக் கொண்டு அவள் பின்னால் போய் விடுவானோ…?

அவள் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்வதைப் போல சொன்னாள்…

“இல்லைக்கா… என்பிள்ளை ஒருநாளும் பெத்தவ பேச்சை மீறிப் போகமாட்டான்…”

“யாருடி.. இவ.. நீ எந்தக்காலத்தில் இருக்கிற..?”

“அம்மா.. அம்மான்னு என்னையே சுற்றிச் சுற்றி வந்த பிள்ளைக்கா…”

“இப்படி அம்மா முந்தானையைப் பிடிக்கிற பிள்ளைகள்தான் ஈஸியா பெண்டாட்டி முந்தானைக்குள் போய் ஒளிஞ்சுக்குவாங்க…”

“போக்கா.. உனக்கு வேற வேலையில்லை.. சும்மா தேவையில்லாம பயமுறுத்திக்கிட்டு…”

“முட்டாள் தங்கச்சி.. அதான் முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு சுத்தறதுக்கு நீ ஏற்கெனவே டிரெயினிங் கொடுத்து வச்சிருக்கியே.. அப்புறம்.. அவன்தான் என்ன செய்வான்..? அப்பா பின்னாடி அலைஞ்சிருந்தா பொம்பளைககிட்ட முறுக்கிட்டு இருப்பான்.. நாமதான் தாய்குலத்தை மதிக்க அவங்களுக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறோமே…”

கல்யாணி காபி குடிக்கக் கூட மறந்துபோனவளாக திக்பிரமையடித்து உட்கார்ந்து விட்டாள்…

தலைக்கு குளித்து ஈரத்தலையை துண்டில் சுற்றிக்கட்டி மங்கலகரமாக.. மாடியிலிருந்து இறங்கி வந்த மாதங்கி.. கல்யாணியைக் கண்டதும் வெட்கப் புன் முறுவல் பூத்தாள்…

“பார்த்தியா…”

போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த புண்ணியவதி கல்யாணியின் காதோரமாக கிசுகிசுக்க.. அவளின் முன்னால் தனது ஸ்தானம் பறிபோய் விடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முனைந்தாள் கல்யாணி…

“நித்தியா எங்கேம்மா..?”

“இன்னும் விழிக்கலை அத்தை..”

“இன்னுமா தூங்கறான்..? இந்நேரம் எழுந்து ஜாகிங் போயிருப்பானே..”

“இதோ.. காபியோட போய் அவரை எழுப்பி விடறேன்..”

“அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ கிச்சனில் வேற வேலை இருந்தால் கவனி..”

“அத்தை.. அவருக்கு காபி…”

“நான் கொடுத்துக்கறேன்னு சொன்னேனா இல்லையா..? அவனுக்கு ஸ்ட்ராங்காய் – என் கையால் கலந்த காபியைக் குடித்துத்தான் பழக்கம்.. அதுதான் அவனுக்குப் பிடிக்கும்…”

இப்படிச் சொல்கிறவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்து நின்றாள் மாதங்கி…

கணவன் வீட்டில் அவளது முதல்நாள் ஆரம்பமாகியிருக்கிறது..

அவனுடன் வாழப் போகும் வாழ்க்கையைப் பற்றி எண்ணற்ற கனவுகள் அவளுக்குள் இருக்கிறது…

அவனுக்கான வேலைகளை அவளே செய்ய வேண்டும் என்ற ஆசை அவளுள் மிதக்கிறது..

முதல் நாளைய இரவின் இன்பமான நினைவுகள் மனதிலிருக்க.. கையில் காபியோடு கணவனை எழுப்பும் போது.. கண் விழிப்பவனின் கண்களில் அந்த நினைவுகளை படித்துப் பார்க்கும் எதிர்பார்ப்பு அவளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது…

இப்படிப்பட்ட மனநிலையில் அவளது கையிலிருக்கிற காபிக் கோப்பை பிடுங்கப்பட்டால் அவளுக்கு எப்படியிருக்கும்..?

தூண்டி விட்ட உறவுக்காரி.. சுவாரஸ்யமாக மாதங்கியை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க.. தன் உணர்வுகள் பகிரங்கப் படுத்தப் படுவதை வேதனையுடன் உணர்ந்தாள் மாதங்கி.. 

செய்வதறியாதவளாய் அவள் காபிக் கோப்பையை கல்யாணியிடம் நீட்டியபோது.. ஊடே புகுந்து – நிவேதாவின் கரம் அதை வாங்கிக் கொண்டது…

“இந்தக் காபியை யாருக்காக கலந்தாய் அண்ணி..?”

“உன் அண்ணனுக்காக…”

“அப்புறமெதுக்கு அம்மாவிடம் கொடுக்கிற.. போ.. போய் அண்ணனைக் கவனி..”

“நிவேதா…”

“போ.. அண்ணி.. நான் சொல்கிறேன்.. நீ போ…”

மாதங்கியின் முகத்தில் வெளிச்சம் மீண்டது.. அவள் ஒரு விடுதலை உணர்வுடன் மாடியேறிவிட.. கல்யாணி சீற்றத்துடன் மகள் பக்கம் திரும்பினாள்…

அதைவிட அதிகமான சீற்றத்துடன் தாயை எதிர்கொண்டாள் மகள்..

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link