Chapter 23

0Shares

மருமகனின் கோபத்தையும்.. மகளின் துயரத்தையும் காணச் சகிக்காத சாரங்கபாணி.. மகனின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டு.. உலுக்கி எழுப்பினார்..

“டேய்.. கடன்காரா.. உன்னால் உதவிதான் இல்லை.. உபத்திரவம் பண்ணாம இருந்து தொலைக்கக் கூடாதா..” அவரின் காட்டுக் கத்தலில் கண் விழித்த முகுந்தன்..

“என்னப்பா..” என்று கண்களை கசக்கினான்..

“என்ன.. நொன்னப்பா..? என்னடா இது..?”

“எது..?”

புரியாமல் பார்த்தான்.. தன்மேல் பூமாலையாய் படர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நிவேதாவை அப்போது தான் பார்த்தான்.. அதிர்ச்சியுடன் பதறி எழுந்தான்..

அவன் எழுந்த வேகத்தில் விலகி விழுந்த நிவேதா கண் விழித்தாள்.. சுற்றிலும் இருந்த கோப முகங்களைக் கண்டவளுக்கு.. திட்டமிட்டது நடந்துவிட்டது என்ற திருப்தி வந்தது..

“நிவேதா..” நித்தியானந்தனின் விழிகள் அவளைச் சுட்டன…

“என்னைக் குற்றம் சொல்லாதேண்ணா.. இவருக்கும் எனக்கும் மூன்று வருடங்களாகக் காதல் இருந்தது.. 

இவர் கோபித்துக்கிட்டுப் போயிட்டார்.. இப்பத் திரும்ப சந்தித்தோம்… ‘பேச வேண்டியிருக்கு.. பெரியவங்க எல்லாம் அந்த வீட்டில் இருப்பாங்க.. நீ இந்த வீட்டுக்கு வா.. பேசி ஒரு முடிவெடுக்லாம்’ன்னு இவர்தான் கூப்பிட்டார்..”

‘அடிப்பாவி..’ முகுந்தன் பல்லைக் கடித்தான்..

“அதுக்காக.. நைட் நேரத்தில் தனியாக இவரைச் சந்திக்க நீ வரலாமா..? என்னிடம் விவரம் சொல்லியிருந்தா.. நான் பேசி முடிச்சிருக்க மாட்டேனா..?”

“நானே ஒரு முடிவுக்கு வரவில்லையே அண்ணா.. முடிவெடுக்கத்தானே இங்கே வந்தேன்..”

“இதுதான் நீ முடிவெடுத்த லட்சணமா..?”

“நான் பேசத்தான் வந்தேன் அண்ணா..”

நித்தியானந்தனின் பார்வை.. முகுந்தனை..

‘அட.. பாதகா…’ என்று குற்றம் சாட்டியது..

“இது உங்களுக்கே நல்லாயிருக்கா மிஸ்டர் முகுந்தன்..?”

‘நல்லாத்தான் இல்லை.. என்னை என்ன செய்யச் சொல்கிறீங்க…?’

“அவள் பாவம்.. பச்சைக் குழந்தை..”

‘இதை நீதான சொல்லிக்கணும்…’

“அவளுக்கு ஒன்றும் தெரியாது..”

‘எனக்குத்தான் என்ன நடந்ததுன்னு தெரியாது.. இதை நான் சொன்னால்.. நீ நம்பவா போகிற..?’

“பேசத்தானே வரச் சொன்னீங்க..?”

‘நானெங்கேடா.. வரச்சொன்னேன்.. இவளா வந்திருக்கிறா.. புரிஞ்சுக்கடா…’

“பேச வரச் சொல்லிட்டு.. அவளின் தனிமையை யூஸ் பண்ணியிருக்கீங்களே… உங்களை என்ன செய்தால் தகும்..?”

‘இவளை என்ன செய்தால் தகும்ன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீ என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிற.. எல்லாம் என் நேரம்டா..’

“நிவேதாவின் வாழ்க்கையோட விளையாடிட்டிங்க.. இதை நான் சும்மா விட மாட்டேன்… என் தங்கையை என்ன.. கேட்பதற்கு ஆளில்லாத அநாதைன்னு நினைச்சிட்டிங்களா..?”

நித்தியானந்தனின் வார்த்தைகளில் மாதங்கி கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.. அதைக் கண்டும் நித்தியானந்தன் மனம் இரங்கவில்லை..

“வா.. நிவேதா..” என்று தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்..

சட்டென்று மாதங்கி நித்தியானந்தனின் கால்களைப் பிடித்துக் கொண்டாள்..

“நான் என்னங்க தப்பு பண்ணினேன்..?”

“என் தங்கை மட்டும் என்ன தப்பு பண்ணினாள்..? உன் அண்ணனைக் காதலிச்சாள்.. அவர் ‘பேசலாம் வா’ன்னு கூப்பிட்டதால.. சந்தேகப்படாம பேச வந்தாளே.. அவளுக்கு இப்படியொரு நிலைமையை உன் அண்ணன் உண்டு பண்ணலாமா..?”

“அதுக்கு தண்டனையை எனக்கு ஏன் கொடுக்கறீங்க..?”

“உன் அண்ணன் கூடப் பிறந்தவதானே நீ… தண்டனையை அனுபவி.. வா.. நிவி.. நாம போகலாம்..”

“என்னை விட்டுட்டா போகப் போறிங்க..?”

“ஆமாம்.. ஒன்றை நல்லாப் புரிஞ்சுக்க மாதங்கி.. இனிமே.. என் தங்கையின் வாழ்க்கைக்கு நல்ல பதில் கிடைக்காம.. நான் உன்கூட வாழ மாட்டேன்..”

முகுந்தனுக்கு ரோசம் பீறிட்டது.. நித்தியானந்தனின் தங்கை பாசத்தைவிட.. அவனின் தங்கை பாசம் குறைந்தா போய் விட்டது..?

“ஹலோ.. என் தங்கையொன்றும் தெருவில் போகிற மூணாம் மனுஷியில்லை.. உங்க பொண்டாட்டி..”

“அதை நீங்க சொல்லாதீங்க.. உங்களை நம்பிப் பேச வந்த காதலியை தாலி கட்டாம பெண்டாட்டியாக்கிட்டவர் தானே நீங்க…?”

“என்ன நடந்ததுன்னு தெரியாமல் பேசாதீங்க..”

“இவளை உங்களுக்குத் தெரியுமா.. தெரியாதா..?”

“தெரியும்..”

“இவளும் நீங்களும்.. மூணு வருசமா காதலிக்கிறது உண்மையா.. பொய்யா..?”

“உண்மைதான்..”

“இதெல்லாத்தையும் ஒப்புக்கிறவர்.. இப்ப நடந்த தவறை மட்டும் ஏன் ஒப்புக்க மாட்டேங்கறிங்க..?”

முகுந்தன் பொறியில் மாட்டிய எலியானான்..

புலியை.. எலியாக்கி.. பொறியில் மாட்ட வைத்த நிவேதா.. அறியாக் குழந்தையைப் போல இமைகளைக் கொட்டிக் கொண்டு.. வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

முகுந்தன்.. கோபக்கனலாக நின்ற சாரங்கபாணியைப் பார்த்தான்..

யாசிப்பவளைப் போல.. விழிகளால் இறைஞ்சிக் கொண்டிருந்த வாசவியைப் பார்த்தான்.

கணவனின் கால்களைப் பிடித்து மன்றாடிக் கொண்டிருந்த தங்கையைப் பார்த்தான்.

எதற்கும் அசைந்து கொடுக்காமல் – தங்கையின் வாழ்க்கை மட்டுமே பெரிது என்று போர் முரசு கொட்டிக் கொண்டிருந்த நித்தியானந்தனைப் பார்த்தான்..

ஒரு முடிவுக்கு வந்தான்.

“சரி பண்ண முடியாத தவறுன்னு எதுவுமில்லை மாப்பிள்ளை. இப்ப என்ன ஆச்சுன்னு கோபப்படறிங்க..? என்னைக்கிருந்தாலும்.. நிவேதாவுக்கு நான் தான்.. எனக்கு அவள்தான்.. பேசத்தான் வரச்சொன்னேன்.. ஏதோ உரிமையில் அத்து மீறிட்டேன்.. அடுத்த முகூர்த்தத்தில் தாலியைக் கட்டச் சொன்னால் கட்டிவிட்டுப் போகிறேன்.. இதுக்கு எதுக்காக குடும்பம் உடையணும்..?”

“வெரிகுட்..” சங்கரன் மெச்சுதலாக நிவேதாவைப் பார்த்துவிட்டு மனைவியை பார்த்தார்…

“நான் சொல்லலை…? இவள் தண்டத்தை கையில் எடுத்துட்டா.. சாதிச்சே தீருவான்னு…” கோதாவரி பதிலுக்கு முணுமுணுத்தாள்.

கல்யாணியின் காதுகளுக்கு விவரம் போனால் ஆயுள் முழுவதும் மாதங்கிக்கு ஆயுள் தண்டனை கிடைத்து விடும் என்பதால் மேகநாதனின் காதுகளுக்கு விவரத்தைக் கொண்டு போனார்கள்..

அவர் பக்குவமாகப் பேசி மனைவியை சம்மதிக்க வைத்து விட, முகுந்தன்.. நிவேதாவின் திருமணம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

0Shares

Reviews – Oravizhiparvaiyel / ஓரவிழிப் பார்வையிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link