Chapter 16

0Shares

‘எனக்கு நீ இணையா..’ என்ற விதத்தில் பார்த்தவனின் விழிகளில் தெரிந்த கர்வத்தை வீழ்த்தாமல் கல்லூரிக்குள் செல்ல முடியாது என்று தான்ய லட்சுமிக்கு தோன்றிவிட்டது..

அத்தோடு “மிஸ்டர் அரவிந்தன்.. நீங்க சொன்ன இதே ஐ லவ் யூவை நான் வேறு ஒருத்தரிடம் சொல்லி ரொம்ப நாளாகி விட்டது.. ஸோ நீங்க வேற ஆளைப் பிடிங்க..”

அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல்.. விர்ரென்று கோபத்துடன் போனவள்.. வழியில் மரத்தடியில் மாநாடு போட்டிருந்த கோகுல கண்ணனையும் அவனது நண்பர்களையும் கவனிக்கவில்லை..

கவனித்திருந்தால் வெகு நாள்களாக.. அவள் பார்க்கத் துடித்த கோகுலக் கண்ணனைப் பார்த்திருப்பாள்.. அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தைப் பார்த்திருப்பாள்.. அவள் காரை விட்டு இறங்கும் போது இறங்கி.. அவளருகே நெருங்கி நின்று பேசிக் கொண்டிருந்த அரவிந்தனைப் பார்த்தால் அவன் கண்களில் தெரிந்த கொலை வெறியைப் பார்த்திருப்பாள்..

இவை எதையும் கவனிக்காமல் தன் போக்கில் அவள் போய்விட.. சம்பத்தின் முகத்தில் கேலி படர்ந்தது..

“என்ன மச்சி.. உன் பட்சி உன்னைக் கண்டுக்காம பறந்து போகுது..? அவளைக் கொண்டு வந்து விட்ட.. கோட்சூட்காரனின் நினைப்பில் உன்னை மறந்து போகுதா..?”

விட்டால் சம்பத் இன்னும் கொஞ்சம் பேசியிருப்பான்.. ஆனால் கோகுல கண்ணன் அந்த அளவுக்கு அவனைப் பேச விடவில்லை.. ஓங்கி ஒரு அறை விட்டான்.. சம்பத் கண்ணத்தை பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டான்.. அவன் உதட்டோரம் கிழிபட்டு ரத்தம் கொட்டியது..

“அடிச்சா.. வாய் வெத்தலைபாக்கு போட்டுக்-கிரும்ங்கிறது இதுதானா..?”

சதானந்தன் சம்பத்தின் முகத்தைத் திருப்பி வாயைப் பார்த்தபடி சந்தேகம் தீர்த்துக் கொண்டான்…

“விடுடா டேய்.. அவனே அடிவாங்கி ரத்தம் கொட்டிக்கிட்டு இருக்கான்.. நீ வேற அதை அதிகப் படுத்தி வைக்காதே..” சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னான் பிரகாஷ்..

“என்னவோ போடா.. இவன் வாயை வெச்சிக்கிட்டு சும்மாயிருக்காம வம்பைக் கட்டி இழுக்கிறான்.. அது என்னடா கோகுல்.. ராமாயணத்தில் எடுத்தைக் கண்டார்.. இற்றதைக் கேட்டார்ன்னு வர்றதைப் போல.. இவன் வாயைத் திறந்து ஒரு வார்த்தைதான் பேசி வெச்சான்.. அடுத்த செகண்டில்.. வெத்தலை பாக்கை போட்டுக்கிட்டு நிக்கிறான்.. எப்படிடா..?”

சதானந்தன் பாராட்ட.. அவனையும் கோகுலக் கண்ணன் அன்பாக ஓர் பார்வை பார்த்தான் அந்த பார்வையில் அரண்டு போன சதானந்தன்.. எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டான்..

“வேணாம்டா மச்சான்.. எனக்கு வெத்தலை பாக்குன்னாலே அலர்ஜி.. நீ கொடுக்கனும்னு நினைச்சா.. எவ்வளவு வேணும்னாலும் இவனுக்கு கொடு.. இவன் உடம்பு எதையும் தாங்கும் உடம்பு.. ரொம்ப நல்லவன் வேற.. எனக்கு பூஞ்சை உடம்புடா.. தாட்டியா தெரியற தெல்லாம் ஊளைச்சதை.. அதனால.. உன் ஹிட் லிஸ்டில என்னை கொண்டு வராதேடா மச்சி..”

“அது..” என்ற பார்வையுடன்.. மைதானத்தில் கிடந்த மணலை… கோபத்துடன் காலால் ஒரு உதை உதைத்துவிட்டு கோகுலக்கண்ணன் போய் விட்டான்..

வகுப்பறையில் கவலையுடன் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்த தான்யலட்சுமியைத் தேடி வந்தாள் யாமினி..

“உன்னைக் காலையில் காரில் டிராப் பண்ணினது யாருடி..?”

“எதுக்குக் கேட்கிற..?”

“நான் கேட்கலை.. கண்ணன் கேட்கிறான்..”

தான்யலட்சுமியின் விழிகள் ஒளிர்ந்தன.. அந்த கேள்விக்கான அர்த்தம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும்…

அது பொறாமையில் விளைந்த சந்தேகம்.. அப்படியானால்.. அவளுடைய கண்ணன் அவளை விட்டுக் கொடுத்து விடவில்லை.. அவளுடைய நிழலின் அருகே யார் நின்றாலும்.. கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்..

“எதுக்காம்..?”

“இது என்னடி கேள்வி..? அவனுக்கும் உனக்கும் இடையில எதுவுமே இல்லையா..? எல்லாம் முடிஞ்சிருச்சா..?”

“அப்படின்னு அவன்தானே சொன்னான்..?”

“இதை அப்படியே அவனிடம் சொல்லி விடவா..”

“ஐயையோ.. உனக்குக் கோடி புண்ணியமா போய் விடும் யாமினி.. நீ வேற அவனைக் கிளப்பி விடாதே..”

“அந்த பயம் இருக்கில்ல.. அப்புறமும் எதுக்காக பிலிம் காட்ற..? எனக்கு உன்னைத் தெரியாதா..?”

“த்ச்சு.. காலையிலே வந்தவனுக்கு என்மேல் லவ்வாம்..”

“அட்ரா சக்கைன்னானாம்.. கண்ணனுக்கு போட்டியா ஆள் வந்தாச்சா..? யாருடி அவன்..?”

“பெயர் அரவிந்தன்.. மேக்னா குரூப் ஆப் கம்பெனியின் எம்.டி..”

“உனக்கு ஈக்குவல் ஸ்டேட்டஸ்ன்னு சொல்லு.. “

“அவன் அப்படி நினைக்கலை.. எனக்கும் மேலே அவனோட ஸ்டேட்டஸ் உயரத்தில இருக்கிறதா நினைக்கிறான்..”

“உன் பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்க..?”

“அவனுக்கு சப்போர்ட் பண்றாங்கடி..”

“அதானே நடக்கும்..”

மாலையில் கோகுலக் கண்ணனின் தலை தென்பட்டது.. அவளை சிவந்த விழிகளுடன் உறுத்துப் பார்த்தபடி யமஹாவை உதைத்துக் கொண்டு இருந்தான்..

“உன்னை உதைக்க வேண்டிய உதையை.. யமஹாவை உதைச்சு.. ஆறுதல் பட்டுக்கிறாண்டி..” என்றாள் யாமினி..

“அவன்கிட்ட சொல்லிட்டியா..?”

“அதெல்லாம் அப்பவே ஆச்சு..”

“என்ன சொன்னான்..”

“என்னத்தை சொன்னான்..? என்னை முறைச்சுப் பார்த்தான்.. அப்புறமாய் போயே.. யோயிட்டான்..”

தான்யலட்சுமி காத்திருந்த காரில் ஏறும் வரை அவன் யமஹாவை உதைத்துக் கொண்டுதான் இருந்தான்..

“சீக்கிரம் கிளம்பித் தொலையேண்டி.. நீ நின்னுகிட்டு இருந்தா.. அவனும் வண்டியை உதைச்சுக்கிட்டு நின்னுக் கிட்டுதான் இருப்பான்.. போகவே மாட்டான்.. பாவம்.. 

அந்த யமஹா.. அவன் உதையை எத்தனை நேரம்தான் தாங்கும்..? நீ அவனுக்காக பாவம் பார்க்க வேணாம்… அந்த வண்டிக்காகவாவது பாவம் பாரு..” யாமினி அவளைச் சீண்டி விட்டுக்கொண்டே இருந்தாள்..

காரில் போகும் போது..

“ஐயாவுக்கு உங்க மேல கோவமாம்மா..?” என்று மாணிக்கம் கேட்டான்..

அவன் சோமசுந்தரத்தைக் கேட்கவில்லை.. என்பது தான்ய லட்சுமிக்குத் தெரியும்.. கோகுலக் கண்ணனைத் தான் அவன் அப்படிக் கேட்டான்.. அவன் இப்படிக் கேட்டதை மட்டும் சோமசுந்தரம் அறிந்திருந்தால்.. அவன் நிலைமை என்னவாயிருக்கும் என்ற பயம் துளிக்கூட அவனிடம் இல்லை…

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link