Chapter 18

0Shares

“கண்ணன் முகம் பார்த்த கண்கள்..

மன்னன் முகம் பார்ப்பதில்லை..

கண்ணனுக்கு தந்த உள்ளம்

இன்னொருவர் கொள்வதில்லை..

கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ..

காற்றில் மறைவேனோ…”

பால்கனியின் கைப்பிடியில் சாய்ந்து கொண்டு உணர்ச்சி ததும்பப் பாடிக் கொண்டிருந்தாள் தான்ய லட்சுமி.. அவள் குரலில் தெரிந்த உருக்கத்தில் திகைத்துப் போன தோட்டக்காரன் அண்ணாந்து பால்கணியைப் பார்த்தான்..

“என்னாய்யா.. அங்ஙன பாக்கிற..?”

தோட்டத்துக்கு பூ கொய்ய வந்த மல்லிகா கேட்டாள்..

“நம்ம சின்னம்மா.. எப்ப பார்த்தாலும் இந்த பாட்டையே பாடிக்கிட்டே இருக்காங்க புள்ள..”

“நல்ல பாட்டுத்தானய்யா.. அதுக்குப் போயா.. இப்படி ஆ..ன்னு பார்த்து வெச்ச..?” அவள் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தாள்..

அவளுக்கு என்ன தெரியும்..? அந்தப் பாட்டில் தான்ய லட்சுமியின் ஜீவ நாடியே கலந்திருக்கிறது என்பது..

மதிய உணவு நேரத்தில் யாமினியைக் காணவில்லை.. அவளுக்காக காத்திருந்து ஓய்ந்து போன தான்யலட்சுமி.. சோர்வுடன் டிபன் டப்பாவைத் திறந்தாள்..

“கொட்டிக்க..” எரிச்சலுடன் வந்து அமர்ந்தாள் யாமினி..

“ஏண்டி..?” தான்யலட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை..

“கோகுலக்கண்ணனுக்கு இது ஃபைனல் இயர்.. நினைவிருக்கில்ல..”

“அதுக்கு என்ன பண்ணச் சொல்ற..?”

“எதையாவது பண்ணித் தொலைன்னுதான் சொல்றேன்.. மாடல் எக்ஸாமில் உன் ஆள் ஒவ்வொரு பேப்பரிலும் ஊத்தியிருக்காண்டி..”

“நிஜமாவா..? அவன் நல்லாப் படிப்பானே..”

“படிப்பான்.. இப்ப என்ன ஆச்சுன்னுதான் தெரியலையே..” தான்யலட்சுமி சிந்தனையுடன் எழுந்து கொண்டாள்..

“சாப்பிடலையாடி..” என்ற யாமினியிடம்..

“நீயே கொட்டிக்க..” என்றாள்..

“நீ எங்கே போற..?”

“விட்டால் எங்கே போகும் இந்தப் பாதை..” என்று பாட்டு பாடி விடுவாள் போலத் தோன்ற.. தான்ய லட்சுமியை அதற்கு மேல் கேள்வி கேட்டு வதைக்காமல் யாமினி விட்டு விட்டாள்..

மரத்தடியை நோக்கி தான்யா போனபோது கோகுல கண்ணன் ஆச்சரியப்படும் வகையில் அங்கேதான் இருந்தான்.. அவன்கூட அமர்ந்திருந்த நண்பர்கள் தான்யாவைக் கண்டதும்.. வெத்தலை பாக்கு போட மனமின்றி.. கோகுலக்கண்ணன் முறைப்பதற்குள் அங்கிருந்து அகன்று விட்டார்கள்.. அவன் முன்னாலிருந்த புத்தகங்களை பார்வையிட்டபடி அவள் எதிரே அமர்ந்தாள்..

“இதெல்லாம் எதுக்கு..? புத்தகங்களைக் காட்டிக் கேட்டாள்..”

வெகுநாள் கழித்துப் பேசுபவளைப் போல இல்லாமல்.. தினம் தினம் பேசி உறவாடுகிறவளைப் போல.. சரளமாக அவள் பேசிய விதத்தில் அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது..

“இங்கே எதுக்குடி வந்த..?” என்று முறைத்தான்..

“ம்ம்.. பசித்தது.. நீங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்தா.. பிடுங்கிச் சாப்பிடலாமேன்னு வந்தேன்.. ஆளைப்பாரு.. தினமும் காலேஜ் கேண்டினில் மொக்கிக்கிட்டு.. கேள்வி யென்ன வேண்டிக்கிடக்கு..?”

“உனக்கு அது தேவையில்லாத விஷயம்..”

“அதை நீங்க முடிவு பண்ணக் கூடாது..”

“கொலைவெறியைக் கிளப்பாம போயிடு..”

“எனக்கு உங்கக்கூட பேசியாகனும்..”

“என்ன பேசப் போற..? அதான் பேச வேண்டிய பேச்சையெல்லாம் நேத்து எவன் கூடவோ பேசி முடிச்சிட்டயே..”

“வேண்டாம் கண்ணன்.. அபாண்டமா பேசாதீங்க..”

“எதுடி அபாண்டம்..? நான் கண்ணால் கண்டது பொய்யா..?”

“என்ன பேசினோம்ன்னு காதால் கேட்டீங்களா..?”

“அந்த கருமத்தையும் கேட்டுத் தொலைக்கனுமா..?”

“கேட்டுத் தொலைச்சிருக்கனும் கண்ணன்.. வேறு எதுக்காக இல்லைன்னாலும்.. என்னைத் தொலைக்காம இருக்கிறதுக்காகவாவது நீங்க அதைக் கேட்டுத் தொலைச்சிருக்கனும்..” 

அவளின் கண்ணீர் முகத்தையே தன் சிவந்த விழிகளால் உறுத்துப் பார்த்தான் கோகுலக்கண்ணன்.. தீயாகச் சுட்ட அந்தப் பார்வை நிலவின் குளுமையாக அவளுக்குத் தோன்றியது.. காதல் தந்த விசித்திரம்…

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link