Chapter 23

0Shares

“தான்யா.. மாணிக்கத்துக்கு வொர்க் இருக்கு.. நீ அரவிந்தனோட ஜாயின் பண்ணிக்க…”

சோமசுந்தரத்தின் இந்த வார்த்தைகளில் மனம் குன்றிப் போவாள் தான்யா.. “இப்படி பேசாதே..” என்று எப்படி அவரிடம் சொல்வது..?

“டாட்.. காரை நானே டிரைவ் பண்ணிக்கிறேன்..”

“நோ.. நோ.. செல்ஃப் டிரைவ் கூடாது..”

அந்த வீட்டில் வரிசையாக கார்கள் அணிவகுத்து நின்றன.. அவற்றில் ஒரு காரை தான்யா தனக்கே.. தனக்கென்று பிரத்தியேகமாக எடுத்துக் கொள்ள அவளுக்கு உரிமை மறுக்கப்பட்டது..

“இத்தனை டிரைவர்களுக்கு சேலரி கொடுத்து வெச்சி இருக்கிறது எதுக்காக..? நாமே காரை ஓட்டிக்கிறதுக்காகவா..?”

சோமசுந்தரம் இப்படிக் கூறினாலும்.. அவளுக்கென்று தனியாக ஒரு காரைக் கொடுக்க அவர் மறுப்பதற்கான காரணமே வேறு என்று தான்யாவுக்கு தெளிவாகத் தெரியும்..

அது.. அவள் சோமசுந்தரத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டமாகும்..

மாணிக்கம் தான்யலட்சுமிக்கு துணை போவதை அவர் அறிந்துதான் இருந்தார்.. இருந்தும் அவனை வேலையை விட்டு தூக்காமல் அவர் வேலையில் நீடிக்க விட்டதற்கும் ஒரு அழுத்தமான காரணம் இருந்தது..

“இவனாவது நம்ம பெண்ணுக்கு துணையாய் போகிறதோடு நிறுத்திக்கிறான்.. வேறு ஒருத்தனை தான்யாவுக்கு துணையா அனுப்புறது தப்பு அகிலா..”

“ஏங்க..?”

“காலம் கெட்டுக்கிடக்குடி.. யங்மேனா இருந்தா பெண்ணை கரெக்ட் பண்ண முடியுமான்னு பாக்கிறான்.. ஓல்டு மேனா இருந்தா இவ போட்டிருக்கிற ஜூவல்ஸை கரெக்ட் பண்ண முடியுமான்னு பார்த்து வைப்பான்.. இப்பத்தான் தங்கத்தையே மியூஸியத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய நிலமை வந்துருச்சே.. மாணிக்கம் தான்யாவுக்கு துணை போனாலும்.. இந்த இரண்டு காரியத்தையும் பண்ணவே மாட்டான்.. அவனுக்கு தான்யா மேல் தங்கை போல பாசம்.. பண விசயத்திலே நேர்மையானவன்..”

எல்லாவற்றையும் யோசித்து திட்டமிட்டுத்தான் காய் நகர்த்தினார் சோமசுந்தரம்.. மறந்தும்.. கண்ணனுடனான மகளின் காதல் விவகாரத்தை குறித்த எந்த விசாரணையையும் அவர் மேற்கொள்ளவில்லை..

“அதை எதுக்காக தேவையில்லாம தோண்டனும் அகிலா.. நாம கேட்கப்போக.. அவ ஆமாம்ன்னு சொல்லி வைத்தா என்ன செய்கிறது..? அதுக்குப் பின்னாலே நாம பிராப்ளத்தை ஃபேஸ் பண்ணாம இருக்க முடியுமா..? என்னைக்கிருந்தாலும் பிராப்ளம் வெடிக்கத்தான் செய்யும்.. அப்ப பார்த்துக்கிட்டா போகுது.. இப்போதே அதில் தலையைக் கொடுக்கனுமா..?”

அவர் கில்லாடி.. கண்ணன் வெளிநாட்டிலிருக்கும் இந்த சமயத்தில் அரவிந்தனை மகளிடம் நெருங்க விடுவதுதான் உசிதம் என்று அவருக்குத் தெரியும்..

“இவ பக்கத்திலே அவன் இல்லை.. இந்த சமயத்திலே நாம மேரேஜை பிக்ஸ் பண்ணினா.. அவளாலே ஒன்னும் பண்ண முடியாது..”

சோமசுந்தரம் தந்திரமாக செயல்பட்டார்.. அரவிந்தனுடன் காரில் போக வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டதில் தான்யாவுக்கு மனதிற்குள் பதட்டம் வந்தது..

“அது யார் அண்ணி..?” என்ற சுவாதியின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை..

“பிடிக்கலைன்னா அவாய்ட் பண்ணிட வேண்டியது தானேடி..” என்ற யாமினிக்கு விளக்கம் சொல்ல முடிய வில்லை..

கண்ணனை இந்த விவரம் எட்டுவதற்கு முன்னால்.. அவனிடம் தானாகவே இதைச் சொல்லி விட வேண்டு மென்றுதான் அவள் நினைத்தாள்..

ஒவ்வொரு முறை அவள் வாய்திறக்கும் போதும்.. அதைச் சொல்ல முடியாமல் எதுவோ அவளைத் தடுத்தது..

நாள்கள் அவளுக்கு பாதகமாகவும்.. சோமசுந்தரத்திற்கு சாதகமாகவும் ஓடிக் கொண்டு இருந்தன..

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link