Chapter 25

0Shares

சோமசுந்தரம் தான் யாரென்று காட்டிவிட்டார்..

குடும்பத் தலைவரான சாமிநாதன் போலீஸாரின் பாதுகாப்பில் இருக்க.. தகப்பனின் இடத்திலிருந்து குடும்பத்தை காக்க வேண்டிய மகன் அன்னிய தேசத்தில் இருக்க.. தாயும்.. மகளுமாக.. இரண்டு பெண்கள் நிராதரவான நிலையில் தனித்து விடப் பட்டார்கள்..

அம்பிகாவின் நிலையைக் காண முடியாமல் தவித்துப் போனாள் தான்யா… அரை மயக்க நிலையில் தன்னுணர் வில்லாமல் சரிந்து விட்டவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள்..

“அண்ணி..”

கிடுகிடுவென்று நடுங்கிய கையுடன் ஆதரவு தேடி தான்யாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்ட சுவாதியை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினாள் தான்யா..

“இப்ப என்ன ஆச்சு..? மாமா மேல ஒரு சந்தேகம்.. போலீஸ் விசாரிக்கிறாங்க.. உன்னோட அப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாதா..? அவரோடது கறை படியாத கை.. நிச்சயமாய் அவர் வெளியே வருவார்.. திரும்பவும் வேலை பார்ப்பார்.. அத்தைக்கு பூஞ்சை மனசு.. இந்த அதிர்ச்சியை தாங்கிக்க முடியலை.. ட்ரீட்மென்ட் கொடுத்தா சரியாகிடப் போறாங்க.. இதுக்குப் போயி பதட்டப்படலாமா..? நீ படிச்ச பெண்.. தைரியமாயிருக்க வேணாமா..?”

“பயமாயிருக்கு அண்ணி..”

“நானிருக்கிறேன் பயப்படாதே..”

சொன்னதைச் செய்து காட்டினாள் தான்யா.. அவளை அழைத்துப் போக வந்த அரவிந்தன் காலேஜில் அவளைக் காணாததால் மருத்துவமனைக்கு தேடி வந்தான்..

“நான் வரலைன்னு டாடியிடம் சொல்லிருங்க மிஸ்டர் அரவிந்தன்..”

“ஆர் யூ மேட்..?”

“யெஸ்.. பட்.. ஐ ஆம் நாட் எ கிரிமினல்..”

அவளுடைய கடினமான வார்த்தைகளால் யாமினி நிமிர்ந்து அரவிந்தனின் முகம் பார்த்தாள்.. அரவிந்தனின் கோபம்.. சோமசுந்தரத்திடம் வெடித்தது.. தான்யாவின் செல்போன் ஒலித்தது..

“நீ புத்திசாலின்னு நெனைக்கிறேன் தான்யா..”

“உங்க அளவுக்கு புத்திசாலியில்லை டாட்..”

“நீ இதோடு நிறுத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தா.. அந்த குடும்பத்திற்கான சேதாரம் இத்தோடு போகும்.. இல்லைன்னா.. மீதமிருக்கும் தாய்க்கும்.. மகளுக்கும் தேவையில்லாத தொந்தரவுகள் வந்து சேரும்…”

“டாட்..”

“யெஸ்.. என்னையென்ன கேணையன்னு நினைத்தியா.. நீ உன் விருப்பத்துக்கு காதல் நாடகம் ஆடுவ.. அதை பார்த்துக்கிட்டு நான் சும்மாயிருக்கனுமா..?”

“சம்மதம்மில்லைன்னா உங்க கோபத்தை என்னிடம் காட்டனும்.. சம்பந்தமேயில்லாம.. இவங்களிடம் காட்டக் கூடாது..”

“எங்கே அடித்தா.. எங்கே வலிக்கும்ன்னு.. எனக்குத் தெரியும்.. உன் ஸ்டேட்டஸைப் பார்த்து அவங்க விலகி நிக்கனும்.. அதுக்கும் சேர்த்துத்தான் அவங்க பனிஷ்மெண்டை அனுபவிக்கிறாங்க…”

“உங்களுக்கான பனிஷ்மெண்டை யார் கொடுக்கிறது..?”

“நான் தவறேதும் செய்யலையே…”

“இப்படி ஒரு குடும்பத்தை அலைகழிக்கறீங்களே.. இதைவிடப் பெரிய தவறு வேற எதுவும் இருக்குதா..?”

“இது தவறில்லை தான்யா.. உனக்கும்.. எனக்குமான டீல்..”

“டாட்..”

“யெஸ்.. உனக்கும் அரவிந்தனுக்கும் இந்த வீக் என்டில் மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்கேன்.. நீ அரவிந்தனை மேரேஜ் பண்ணிக்கிட்ட அடுத்த செகண்ட்டில்.. கண்ணனோட குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.. எல்லாத்தையும்.. ஸ்மூத்தா முடிக்க நானாச்சு..”

“இல்லைன்னா..?”

“இன்னும் அதிகமான விலையை அந்த குடும்பம் கொடுக்க வேண்டியிருக்கும்.. உன் மேரேஜ் அரவிந்தனோடு தான் நடக்கனும்.. அதுக்காக நான் எதையும் செய்வேன்..”

சூளுரைத்த சோமசுந்தரம் ஒன்றை மறந்து விட்டார்.. அது தான்யா அவர் பெற்ற மகள்… அவருடைய போர்த்தந்திரம்  அவளிடமும் இருக்கும் என்பது..

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link