Chapter 26

0Shares

தான்யா.. தந்தையுடன் யுத்தம் செய்ய தயாராகி விட்டாள்.. முதலில் போலீஸ் பாதுகாவலில் இருந்த சாமிநாதனை சந்தித்தாள்…

“சொல்லுங்க மாமா.. எனக்கு இப்ப உங்க அனுமதி தான் தேவை.. இதையெல்லாம் என் டாடிதான் செய்கிறார்..  இப்ப நான் என்ன செய்யனும்..? எதிர்த்து நிக்கனுமா..? இல்லை விலகிப் போகனுமா..?”

சாமிநாதன் தான்யாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.. அவளின் விழிகளில் தெரிந்த கழிவிரக்கத்தில் அவர் மனம் உருகியது..

“நீ என் வீட்டு மகாலட்சுமிம்மா.. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.. உன்னை விட்டுக் கொடுத்துத்தான் நாங்க நிம்மதியாய் வாழனும்னா.. அந்த நிம்மதியே எங்களுக்கு வேண்டாம்.. எங்களுக்கு நீ மட்டும் போதும்..”

“மாமா..”

அதுவரை அடக்கி வைத்திருந்த துயரம் கண்ணீராய்.. பெருகி வழிய தான்யா குமுறி அழுதுவிட்டாள்..

“நான் உங்க வீட்டுக்கு வந்தா.. துன்பங்களும் சேர்ந்து வரும் மாமா.. அதை யோசிச்சு பதில் சொல்லுங்க.. உங்க பதிலைக் கேட்ட பின்புதான் நான் எந்த முடிவையும் எடுக்கனும்.. என்னால என் கண்ணனின் குடும்பம் வாழ்ந்ததாத்தான் இருக்கனும்.. அழிஞ்சதா இருக்கக் கூடாது..”

“நீ தான்ய லட்சுமிம்மா.. பொன்மகள்.. நீ வந்தா துன்பம் எப்படி வரும்..? தைரியமாய் நீ உன் வலது காலை எடுத்து வெச்சு.. எங்க வீட்டுக்கு வாம்மா.. பொன் மகள் வந்தால்.. அங்கே சுபிட்சம்தான் வரும்..”

“மாமா..” தான்ய லட்சுமி நெகிழ்ந்தாள்..

“எது வந்தாலும்.. சேர்ந்து நின்னு சந்திப்போம்..”

சாமிநாதனின் வார்த்தைகளால் உரம் பெற்றவளாக தான்யலட்சுமி வெளியில் வந்தாள்..

செல்போனை எடுத்தாள்..

“லேகா.. எனக்கு உன் ஹெல்ப் வேணும்…”

அந்த லேகா.. போலீஸ் உயர் அதிகாரியின் மகள்.. அவள் மூலம் அவருடைய தந்தையைச் சந்தித்தாள் தான்யா.. விவரம் சொன்னாள்..

“உன் அப்பா சொல்றதைச் செய்து விட்டால் பிராப்ளம் சால்வாய்டும்தானேம்மா..?”

தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பன் என்பதை நிரூபித்தார் அந்த அதிகாரி.. தான்யா கெஞ்சுதலோடு பேசினாள்..

“நான்கு வருசமா லவ் பண்றோம் அங்கிள்.. அவருக்கு நான்.. எனக்கு அவர்ன்னு மனதில பதிவாகிருச்சு.. அதை மாற்ற முடியுமா..?”

“பட்.. அந்த அரவிந்தன் ஹை ஸ்டேட்டஸில் இருக்கிறவராச்சேம்மா.. உன் அப்பா சொல்வதிலேயும் ஒரு நியாயம் இருக்கே..”

“ஸ்டேட்டஸிற்காக காதலித்தவரைத் தூக்கி எறிந்தால் அதற்கு என்ன பெயர் அங்கிள்..? காதல் ஸ்டேட்டஸ் பார்த்து வருமா..?”

பேசிப்பேசி அவரை கரைத்து முடிப்பதற்குள் ஒரு வழியாகிப் போனாள் தான்யா… கடைசியில் அரைமனது.. கால் மனதாக.. அவளுக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டார் லேகாவின் தந்தை…

சோசுந்தரம் கொஞ்சம் கூட அதை எதிர்பார்த்திருக்க வில்லை.. போலீஸிம் அவருக்கு வேண்டிய நண்பரொருவர் செல் போனில் தொடர்பு கொண்டு செய்தியைக் கூறிய போது.. அவரால் அதை நம்பக் கூட முடியவில்லை..

“தான்யாவா.. இதைச் செய்தாள்..?”

புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்திருந்தாள் தான்யா.

“அவளோட காதலுக்கு நீங்க எதிர்ப்பு தெரிவிச்சதாலே தான்யா வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக போலீஸில் புகார் கொடுத்திருக்கா சோமு.. உங்களாலே அவளோட காதலனின் குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்திருமோன்னு பயப்படறதாகவும்.. அதுக்கு பாதுகாப்புக் கொடுக்கனுமுன்னும் கேட்டிருக்கா.. போலீஸ் அவளோட புகாரை அக்செப்ட் பண்ணிருச்சு சோமு..”

சோமசுந்தரத்திற்கு தான் சளைத்தவள் இல்லை என்று தான்யா காட்டிவிட்டாள்…

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link