Chapter 27
கண்ணனின் குடும்பத்தை நெருங்க விடாமல் தான்யா செய்து விட்டதை புரிந்து கொண்டார் சோமசுந்தரம்..
இனித் தவறுதலாக அந்தக் குடும்பத்தாருக்கு ஏதேனும் ஒரு சிறு அடிபட்டாலும்.. போலீஸ் அவரைத்தான் முதலில் விசாரிக்க வரும்.. அத்தோடு விட்டுவிடாமல்.. சாமிநாதனின் கைதுக்கு நியாயம் கேட்டு ஒரு தொலைக் காட்சி சேனலுக்கு பேட்டியும் கொடுத்துவிட்டாள் தான்யா..
“நாட்டில் லஞ்சம் வளர்வது எதனால்..?”
இந்த தலைப்பின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்க விண்ணப்பித்து.. அதில் கலந்து கொண்டு விட்டாள் தான்யா.. யாமினிதான் அதற்கான உதவியைச் செய்தாள்..
“அங்கே என் கஸின் வேலை செய்கிறா.. அவமூலம் உன்னைப் பேச வைக்க முடியுமான்னு பார்க்கிறேன்..”
யாமினியால் முடிந்து விட்டது.. விவாதத்தின் போது தான்யாவின் முறை வந்தது.. தான்யா கேமராவைப் பார்த்து தெளிவாக பேச ஆரம்பித்துவிட்டாள்..
“என் வருங்கால கணவர் கண்ணனின் அப்பா சாமிநாதன்.. இவர் முப்பது வருசம் சர்வீஸ் செய்திருக்கிறார்.. இதுவரைக்கும் இவர் மேல ஒரு குற்றச்சாட்டும் வந்த தில்லை.. நேர்மையான வர்ன்னு பெயர் எடுத்திருக்கிறார்.. திடீர்ன்னு.. அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. எதை வெச்சு அப்படிச் செஞ்சாங்கன்னு ஒரு விவரமும் தெரியலை.. இப்ப என் மாமாவுக்கு என்ன தோணும்..? நேர்மையா இருந்ததுக்கு இதுதான் பலனான்னு தோணுமா.. தோணாதா..? இதுக்குப் பதிலா லஞ்சமே வாங்கியிருக்கலாமேன்னு தோணுமா.. தோணாதா..? பெயர்பட்டது.. பட்டுவிட்டோம்.. இனி நேர்மையா இருந்தாலும்.. லஞ்சம் வாங்கின வன்னுதான் சொல்லு வாங்க.. பேசாம லஞ்சத்தை வாங்கி வசதியைப் பெருக்கிக்கலாம்ன்னு தோணுமா.. தோணாதா..? இங்கே ஒரு நேர்மையான மனிதரை.. வழி தவறச் செய்யும் காரணி எது..? சூழலா..? பழி வாங்கும் நடவடிக்கையா..? இல்லை.. விதியா..?”
தான்யாவின் கேள்வி.. அந்த விவாதத்தின் ஹை லைட்டாக மாறிவிட்டது.. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் அதைப் பாராட்டி பேசினார்கள்.. அரவிந்தனும் அதைப் பார்த்து வைத்தான்..
“என் வருங்கால கணவர் கண்ணனின் அப்பா..”
“என் மாமா..”
இந்த வார்த்தைகளைக் கேட்டவனின் முகத்தில் ஈயாடவில்லை..
“இனி தான்யாவை மேரேஜ் பண்ணிக்க முடியாது மிஸ்டர் சோமசுந்தரம்.. பப்ளிக்கா.. அவ டிவியிலே அவளோட வுட்பி கண்ணன்தான்னு பேட்டி கொடுத்திட்டா.. இதுக்கு மேலயும் அவளை நான் மேரேஜ் பண்ணிக்கனும்னு நினைச்சா என் இமேஜ் ஸ்பாயில் ஆயிடும.. எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு…”
அரவிந்தன் ஒதுங்கி விட்டான்.. எதற்காக.. சோமசுந்தரம் வில்லனாக அவதாரம் எடுத்தாரோ.. அவனே விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டதில் ஆடிப் போய்விட்டார்..
தான்யா.. வீட்டுக்கு வரவேயில்லை.. அவள் கண்ணனின் வீட்டிற்கே சென்று விட்டாள்.. உடல் தேறிய அம்பிகாவை கவனித்துக் கொண்டாள்.. பயந்த சுவாதிக்கு தைரியம் சொன்னாள்.. சாமிநாதனை வெளியில் எடுக்க.. வக்கீலை ஏற்பாடு செய்தாள்.. இத்தனைக்கும் மத்தியில் கர்ம சிரத்தையாக படிப்பைத் தொடர்ந்தாள்…
அவளது முயற்சிக்கு பலன் இருந்தது.. சாமிநாதன் குற்றமற்றவர் என்று நிரூபனமாகி வெளியில் வந்துவிட்டார்.. கணவரைக் கண்டதும் அம்பிகாவுக்கு ஆயிரம் யானை பலம் வந்து விட்டது..
“என்னங்க..” விம்மிய மனைவியை..
“ச்சீ.. பைத்தியம்.. நம்ம மருமகளைப் பாரு.. எவ்வளவு தைரியமா இருக்கிறா.. அவகிட்டயிருந்து கத்துக்க வேணாமா..” என்று கடிந்து கொண்டார்..
தான்யா.. காலேஜில் இறுதித் தேர்வை எழுதி முடித்த மறுநாளில் கண்ணன் இந்தியாவுக்கு திரும்பி வந்தான்..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.