Chapter 25

0Shares

சந்தியா.. உடல் நடுங்க காத்திருந்தாள்.. இனித் தப்பிக்க முடியாது.. இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் ரகுநந்தன் அந்த முதலிரவு அறைக்குள் வந்து விடுவான்.. அவளை உரிமையோடு தொட்டு விடுவான்…

அறைக்கு வெளியே காலடியோசை கேட்டதில் சந்தியாவின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.. அவள் அவசரமாக ஜன்னலோரமாக ஓடி நின்றாள்.. ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து வெளியே பார்த்தவளின் மனதில்.. தப்பிக்க முடியாத துயரம் சூழ்ந்தது..

அறைக்கதவு தாழிடப்படும் ஓசை கேட்டது.. அவள் உடல் தூக்கிப் போட்டது.. இனித் தப்பிக்கும் மார்க்க மில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.. அழுத்தமான காலடியோசை அவளை நெருங்கியது. அவள் மனம் அதிர்ந்தது..

ரகுநந்தன் அவளது உடல்மீது உடல்படிய.. அவன் பின்னால் நின்று தோளைத் தொட்டுத் தழுவியபடி.. ஜன்னல் கம்பியிலிருந்து அவளைப் பிரித்து இழுத்து 

தன் வசப்படுத்தினான்.. ஜன்னல் கதவுகளை மூடி… திரைச் சீலையை இழுத்து விட்டான்.. திரும்பாமல் நின்றிருந்தவளை முதுகோடு சேர்த்துத் தழுவிக் கொண்டு அவள் காதோரமாக கிசுகிசுத்தான்..

“ஏஸி ரூமில் யாராவது ஜன்னலை திறந்து வைப்பாங்களா..?”

இதைக் கட்டிப் பிடித்து காதோரமாகத்தான் சொல்ல வேண்டுமா என்ற எரிச்சல் அவளுக்குள் கிளர்ந்தது.. அவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டு.. அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிகையை முகர்ந்தான்.. அவன் கை வழவழப்பான அவளது இடுப்புப் பகுதியில் அழுந்தியது…

சந்தியாவின் உலுக்குள் தகிப்பு ஏற்பட்டது.. அவள் விலக முயன்றாள்.. அவளால் விலக முடியவில்லை.. அவன் பிடி இரும்புப் பிடியாக இருந்தது.. இடுப்பின் வழவழப்பை ரசித்துப் படிந்த அவன் கை முன்னேறியதில் அவள் சொல்ல முடியாத அவஸ்தைக்கு ஆளானாள்…

“சந்தியா..” அவன் கிறக்கத்துடன் அழைத்தான்..

அவள் பதில் பேசாமல் அவன் கரம்பற்றித் தடுக்க முனைந்தாள்.. அவன் பலமாகச் சிரித்தபடி அவளைத் தன்புறமாகத் திருப்பி அவள் முகத்தை ஆசையுடன் பார்த்தான்.. அவன் விழிகளைச் சந்திக்க முடியாமல் நிலம் பார்த்த சந்தியாவின் செயலில் அவள் மீதான அவனது இச்சை அதிகரித்தது…

“மயக்கறடி…”

போதையுடன் முணுமுணுத்தபடி அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.. என்ன நடக்கிறது என்று சந்தியா உணர்வதற்குள் அவளது உதடுகளை அவன் உதடுகள் ஆக்ரமித்து விட்டன.. அழுந்தப் பதிந்த அந்த ஆண்மகனது முத்தத்தில் சந்தியாவின் உடலுக்குள் ரசாயன மாற்றம் நிகழ்ந்தது.. அவள் உடலில் மின்சாரம் பாய்வதைப் 

போன்ற உணர்வு உற்பத்தியாவதை அவள் அதிர்ச்சியுடன் உணர்ந்தாள்…

அவனை விட்டு விலக வேண்டும் என்ற எதிர்ப்புணர்வு அவள் மனதில் எழுந்தது.. அதை செயல்படுத்த முடியாமல் அவளது உடல் தொய்ந்து அவன் மீதே சரிந்தது..

ரகுநந்தன் வெற்றிக் களிப்புடன் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.. கட்டிலை அடைந்தான்.. அவளைக் கிடத்தினான்.. அவள்மீது படர்ந்து பரவினான்..

விடிந்தது.. கண்விழித்த சந்தியாவிற்கு நடந்த தெல்லாம் கனவு என்றே தோன்றியது.. இல்லையென்பதை அவள்மீது கடந்த அவனது இரும்புக் கரத்தின் இறுக்கம் உணர்த்தியதில் அவள் வேதனையுடன் இமை மூடிக் கொண்டாள்.. அவ்வளவு எளிதாக அவளை அவன் வெற்றி கொண்டு விட்டான் என்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை..

இவ்வளவுதானா சந்தியாவின் மனோபலம்..? அவ்வளவு எளிதாக அவனிடம் அவள் தோற்று விட்டாளா..?

கசப்புடன் அவன் கைகளை விலக்க முயன்றாள் அவள்.. அந்த முயற்சியில் அவன் விழித்துக் கொண்டான்.. வெகு அருகாமையில் தெரிந்த அவள் முகத்திலிருந்த கசப்புணர்வில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன..

“என்னடி…?” புருவங்களை உயர்த்தினான்..

‘என்னடீயா..?’ என்ற கோபம் நெஞ்சுக்குள் எழுந்த போதே.. முதல் நாள் இரவின் நிகழ்வுகள் நினைவுக்குவர.. ஆண்டு முடித்தவன் வெற்றியைக் கொண்டாடமல் என்ன செய்வான் என்ற கசப்புணர்வு அவளுக்கு அதிகரித்தது…

அவள் பதில் சொல்லாமல் அவன் கையை விலக்குவதிலேயே குறியாக இருந்ததில் அவனுக்கு கோபம் வந்து விட்டது.. அவளை முரட்டுத்தனமாக இழுத்து தனக்குள் அடக்கிக் கொண்டு அவள் முகம் பார்த்துக் கேட்டான்…

“என்னன்னு கேக்கறேனில்ல..?”

அதட்டலான அவன் கேள்வியில் அவளது முகம் சிவந்தது….

“விடிஞ்சுருச்சு…”

“ஸோ..?”

“வெளியே போகனும்…”

“இப்பவேவா..? இப்பத்தான் விடிந்திருக்கு.. மெதுவாப் போகலாம்..”

அவன் கண்களில் தெரிந்த ஆசைத்தீயில் அவன் இரவுக் கதையைத் தொடரப் போகிறான் என்ற உண்மை புலப்பட.. அவள் அவசரமாக முகத்தை விலக்கி அவன் முகத்தை மறுத்தாள்…

“ஏன்..?” அவன் உறுமினான்…

“எனக்கு விடிந்தவுடன்.. எழுந்துக்கனும்.. அதுதான் பழக்கம்…”

“பழக்கத்தை மாத்திக்க.. இங்கே நான் சொல்கிறதைத் தான் நீ செய்யனும்.. அதுதான் இனி உன் பழக்கமா இருக்கனும்…”

அவள் காதோரமாக அவன் கிசுகிசுத்ததில் அவள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.. அவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவளைக் கலைப் பதிலேயே குறியாக இருந்தான்.. அவன் தேடியது கிடைத்ததும் விலகியவனின் முகத்தில் திருப்தி நிலவியது.. அவசரமாக அவனை விட்டு அகன்று குளியலறைக்குள் புகுந்தவளுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது.. குளித்து.. உடை மாற்றி.. ஈரத்தலையை துவாலையால் சுற்றிக் கொண்டு அவள் உடை மாற்றும் அறையை விட்டு வெளியே வந்தபோது.. அவன் படுக்கையறையை ஒட்டிய முன்னறையின் சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்தபடி காபி அருந்திக் கொண்டிருந்தான்.. அவன் திரும்புவதற்குள் அறையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முனைப்புடன் அவள் கதவை நெருங்கினாள்.. திறக்க முனைந்தாள்.. முடியவில்லை…

“டோர் லாக் ஆகியிருக்கு…” 

பேப்பரிலிருந்து பார்வையை விலக்காமல் அவன் சொன்னான்.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு அப்படியே நின்றாள்.. அப்போது கூட அந்த அறையை விட்டுத் தப்பிக்க முடியாததில் துக்கம் அவளது தொண்டையை அடைத்தது.. சாவாதானமாக பேப்பரை மடித்து எதிரேயிருந்த டீப்பாயின் மீது போட்டவன்.. அவளுக்கு டீப்பாயின் மீதிருந்த காபிக் கப்பைக் காட்டினான்.. அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்…

“உனக்காக காபி காத்திருக்கு…”

அந்தக் காபியை அவள் அறைக்கு வெளியே போய் குடித்துக் கொள்ளக்கூடாதா..? அப்படிக் குடித்தால்தான் அது ஆகாதா..?

“இங்கே இப்படித்தான் வழக்கம்..”

அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவதானித்தபடி நிதானமாக அவன் சொன்னான்.. சந்தியா.. நிமிராமல் அப்படியே நின்றாள்..

“காபியும்.. டிபனும்.. ரூம் தேடி வந்துரும்.. பிரேக் பாஸ்ட்.. லன்ச்.. டின்னருக்கு.. விருப்பமிருந்தா கீழே போய் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடலாம்.. இல்லேண்ணா.. ரூமுக்கே அதைக் கொண்டு வரச் சொல்லிரலாம்.. அதுக்காக வேலை மெனக்கெட்டு.. நாம கீழே இறங்கிப் போகனும்ங்கிற அவசியமில்லை..”

‘அப்படிக்கூட  வெளியுலகத்தைப் பார்க்க நீ விட மாட்டாயா..?’ சந்தியாவிற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது…

“உட்கார்…” அவன் எதிர் சோபாவைக் காட்டினான்..

“அத்தை கீழேதானே இருக்காங்க.. நான் அவங்க கிட்டப் போகனும்…”

அவள் அடம்பிடித்தாள்.. அவன் முகம் மென்மையானது.. அவனுடைய அம்மாவிடம் அவள் காட்டிய உரிமையை அவன் ரசித்தான்…

“போகலாம்.. உன் அத்தையை எந்தக் குருவியும் தூக்கிக்கிட்டுப் போய் விடாது.. அவங்க இங்கேதான் இருப்பாங்க.. நீ காபியைக்குடி.. நான் குளிச்சுட்டு வர்றேன்.. சேர்ந்தே போகலாம்…”

இப்போது என்ன அவர்கள் ஊர்விட்டு ஊரா போய் போகிறார்கள்..? சந்தியாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.. ஒரு வீடான வீட்டில் மாடியிலிருந்து கீழே இறங்குவதற்கு இவ்வளவு அளப்பறையா..?

“ஏன் இப்பப் போனா ஆகாதா..?”

“ஆகாது..”

“யாருக்கு..”

“எனக்குத்தான்.. வேற யாருக்குன்னு நினைச்ச..? உன் வாழ்க்கையில இனி நான் மட்டும்தான்.. ஸோ.. யாருக்குங்கிற கேள்வியை அவாய்ட் பண்ணு.. இப்பச் சீக்கிரமா காபியைக் குடித்து முடி.. நான் குளிக்கனும்..”

இவன் குளிக்கப் போவதற்கும் அவள் காபியைக் குடிப்பதற்கும் என்ன சம்பந்தம்..?

“இருக்கு..” என்றான் அவன்…

“டவலை யார் எடுத்துக் கொடுக்கிறது.. என் ஈரத்தலையை யார் துவட்டி விடுகிறது..? இன்னைக்கு எந்த டிரஸ்ஸை நான் போட்டுக்கனும்னு யார் டிசைட் பண்ணி என் டிரெஸ்களை எடுத்துக் கொடுக்கிறது..? இத்தனைக்கும் மேலாக.. என் சட்டையின் பட்டனை யார் எனக்குப் போட்டு விடுகிறது..? டையை யார் கட்டிவிடறது..?”

கேட்டும்போதே சந்தியாவுக்கு கண்களைக் கட்டிக் கொண்டு வந்தது.. அவை அத்தனையையும் அவள் தான் செய்தாக வேண்டும் என்ற நினைவில் காபி அவளுக்கு கசந்தது…

0Shares

Reviews – Puthithaga Oru Bubalam / புதிதாக ஒரு பூபாளம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link