Chapter 03

0Shares

அவன் ஏற..இறங்க அவளைப் பார்த்ததும்.. அவள் முகம் சிவந்து போனாள்.. அவளின் நவநாகரிகமான் தோற்றத்திற்குப் பொருந்தாத முகச் சிவப்பை அவன் வியப்புடன் பார்த்தான்…

அவனது பார்வை அவளை மிகவும் பாதித்தது..

“இவன் போனால் தேவலையே..’ என்று நினைத்தாள் அவள்..

‘அதுதான் நான் பெரிய பண்ணையார் வீட்டுக்குப் போகனும்ன்னு சொல்லட்டேனில்லையா..? இன்னும் எதுக்காக இங்கயே நின்றுக்கிட்டு லுக் விடறீங்க..? கிளம்புங்களேன்.. ” அவள் படபடத்தாள்..

தான் ஏதோ ஒரு வகையில் அவளைப் பாதிக்கிறோம் என்பதை முதல் பார்வையிலேயே அவன் புரிந்து கொண்டிருந்ததால்.. விசமத்துடன் அவளைப் பார்த்தான்..

‘அப்படிச் சொன்னால் எப்படி..?”

‘வேறு எப்படிச் சொல்லனும்..?”

‘இந்த விவரம் போதாதே..”

பேசாமல் “இந்த விவரம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..’ என்று பாடிவிட அவளுக்குத் தோன்றி வைத்தது..

‘சென்ஸஸ் எடுக்கிறவங்க கூட உங்களைப் போல விவரம் கேட்க மாட்டாங்க.. உங்க கடமையுணர்ச்சியை நான் பாராட்டுகிறேன்..”

‘தேங்க்;யு..”

‘என்ன சொன்னீங்க..?”

“இந்தப் பட்டிக்காட்டில்.. இங்கிலீஷா.. ‘ என்ற ஆச்சரியத்துடன் அவனை இன்னும் நன்றாகப் பார்த்து வைத்தாள் அவள்..

டாடா சுமோ வண்டியில் சாய்ந்து நின்றிருந்தவன்.. பேன்ட் .. சட்டை அணிந்திருந்தான்.. முகத்தில் அறிவுக் களை தெரிந்தது..

அவளது பார்வையைக் கண்டு அவனது புருவங்கள ஏறி இறங்கின..

‘எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்..? நன்றின்னுதானே சொன்னேன்..? அதை இங்கிலிஷில் சொல்லிவிட்டேன்னு இப்படி ஒரு பார்வையைப் பார்க்கனுமா..? “தேங்யு’ங்கிறது ரொம்பப் பெரிய இங்கிலிஷ் வார்த்ததை பாருங்க.. எனக்கு அது தெரிஞ்சதில் நீங்க ஆச்சரியம்தான் படுவீங்க.. அதில பாருங்க.. எங்க ஊரில் ஆடு மேய்க்கிறவன் கூட கையில் செல்போனை வச்சுக்கிட்டு.. தேங்க்யுன்னு சொல்லுவான்.. அதனால.. இப்படி “ஆ’ ன்னு பார்க்கிறதை விட்டுவிடுங்க.. உங்க நல்லதுக்குத்தான் சொல்கிறேன்..”

அவள் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது.. இப்படி அவன் மட்டம் தட்டிப் பேசிவிடுவான் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை..

“நானும் தான் அப்படிப் பேசியிருக்க கூடாது’

‘ஐ ஆம் ஸாரி..” அவள் உடனடியாக மன்னிப்புக் கேட்டாள்.. அவன் கண்களில் இருந்த கேலியும்.. கோபமும் மறைந்து.. கனிவு திரும்பியது..

‘பரவாயில்லை..”

அதற்கு மேல் அவன் கூட நின்று கொண்டு வார்த்தைகளை வளர்க்க அவள் விரும்பவில்லை..

அவன் நகர்கின்ற உத்தேசம் இல்லாதவனாக அங்கேயே ஆணியடித்ததைப் போல நின்று விட..

“நீ வேணும்ன்னா நில்லு.. நான் போகிறேன்..’ என்ற முடிவுடன் அவள் குனிந்து பைகளை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்..

‘இப்ப எதுக்காக பெட்டிகளைத் தூக்கறீங்க..?”

‘இதென்னங்க கேள்வி.. நான்.. என் வழியைப் பார்த்துக்கிட்டுப் போகிறேன்..”

‘வாங்க.. நான் உங்களை டிராப் பண்ணுகிறேன்..”

‘நோ.. தேங்ஸ்.. நான் போய்க்குவேன்..”

‘அடம்பிடிக்காதீங்க.. கரிச்சான்பட்டிக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகனுமுன்னு உங்களுக்குத் தெரியுமா..?”

‘அதுதான் பாதி தூரம்.. வந்து விட்டேனே..”

‘பாதி தூரமா..? கால் வாசித் தூரம் கூட வந்திருக்க மாட்டிங்க..”

“ஐயையோ..’ என்று மலைத்து நின்று விட்டாள் அவள்..

சும்மாவே.. அவளால் நடக்க முடியாது.. நடந்து பழக்கமில்லாத மேல்தட்டு வர்க்கம் அவள்.. காரிலேயே போய்.. காரிலேயே வந்தவள்.. முதல் முறையாக.. இவ்வளவு தூரம் நடந்திருக்கிறாள்.. இதில் பெட்டிகளின் சுமையும்.. பைகளின் சுமையும் கூடச் சேர்ந்து கொண்டு அவளைப் பாடாய் படுத்தின..

ஆனாலும் கூட.. அவனது டாடா சுமோவில் ஏறிக் கொள்ள அவளுக்கு மனமில்லை..

‘இன்னும் நிறையத் தூரம் போகனுங்க.. பைகளையும்.. பெட்டிகளையும் தூக்கிக்கிட்டு எப்படிப் போவீ ங்க..?”

‘அது என் கவலை..”

‘எங்க ஊருக்கு வந்திருக்கீங்க.. அதனால.. அது என் கவலையும் கூடத்தான்..”

‘என்ன மிஸ்டர் ..? வம்பு பண்றீங்களா..?”

அவள் பட்டென்று கேட்டு விட.. அவன் முகம் மாறிவிட்டது..

அதுவரை இருந்த இணக்கம் மறைந்து போய்.. ஓர்விதமான கடுமை அவன் முகத்தில் பரவியது..

‘என்ன சொன்னீங்க..? நான் உங்ககிட்ட வம்பு செய்கிறேனா..?”

அவன் உக்கிரமாகப் பேசிக் கொண்டிருந்த போது.. தலையில் புல்லுக்கட்டுடன் அவர்களைக் கடந்து போன நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி.. நின்று.. அவனைப் பார்த்தாள்..

‘என்னங்க ஐயா.. இங்கே நிக்கறீங்க..”

‘ஒன்னுமில்லக்கா.. இந்தப் பெண் ஊருக்கு புதுசு.. பெரிய பண்ணையாரு வீட்டுக்கு வந்திருக்கேன்னு.. என்கிட்டயே சொல்லுது.. அதான்.. யாரு.. எவருன்னு.. விசாரிச்சுக்கிட்டு இருக்கேன்..”

அந்தப் புல்லுக்கட்டுக்காரப் பெண் பார்த்த பார்வையில் ஆச்சரியம் இருந்தது..

‘ஏந்தாயி.. இவரு.. யாருன்னு நினைச்சே.. ?” என்று கேட்டாள்..

“இவன் யாராயிருந்தா எனக்கென்ன..? பெரிய இவனைப் போல.. முறைக்கிறானே..’

  சற்று முன்.. அவன் கடுமையாகப் பார்த்த நினைவில் மனம் கடுத்தாள் அவள்..

‘இவருதான் பெரிய பண்ணையாரோட மூத்த பிள்ளை.. இவருகிட்ட போயி.. இவரு வீட்டைப் பத்திச் சொன்னியா..? நல்ல புள்ள போ..”

புல்லுக் கட்டுடன் அவள் நகர்ந்து விட.. இப்போது அவன் முகத்தில் கேலியும்.. அவள் முகத்தில் அசடும் போட்டி போட்டுக் கொண்டு வழிந்தன..

‘ஐ ஆம் ஸாரி..”

திரும்பத் திரும்ப.. இவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கிறதே என்ற நினைவுடன் நொந்து போனவளாக அவள் சொன்னாள்..

‘எத்தனை தடவைதான் ஸாரி சொல்வீங்க..?”

‘எனக்கு நீங்க யாருன்னு தெரியாது..”

‘நீங்க யாருன்னு இன்னும் சொல்லலை..”

‘என் பெயர் நிவேதா..”

‘ஓஹோ..”

‘நாட்டுப் புறப் பாடல்களைப் பற்றி.. ஆராய்ச்சி பண்ணுகிறேன்..”

‘அப்படியா..?”

‘அதுக்காக உங்க ஊரில் தங்கியிருக்கலாமென்று வந்திருக்கிறேன்..”

‘என் அப்பாவை உங்களுக்கு எப்படித் தெரியும்..?”

‘எனக்குத் தெரியாது.. என் அங்கிளுக்குத் தெரியும்..”

‘அங்கிளா..?”

‘என் டாடியோட பிரண்ட்..”

‘ஓஹோ..”

‘அவர்தான் உங்க அப்பாவைப் பத்திச் சொன்னார்.. போனில் கூடப் பேசியிருப்பாரே.. உங்க அப்பா இதைப்பற்றி உங்ககிட்டச் சொல்லவில்லையா..?”

இந்தக் கேள்வியில் அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..

பொதுவாக சிதம்பரநாதன் எதையும் வீட்டில் கலந்து பேசுவதில்லை.. முக்கியமான விவரங்களைக் கூட வீட்டில் அவர் சொல்ல மாட்டார்.. அவரைப் பொறுத்த வரையில்.. அவரது மனைவி  மீனாட்சி ஒரு சம்பளமில்லாத வேலைக்காரி.. அவர் பெற்ற மகன்.. அவர் சொன்ன வேலைகளைச் செய்யும் காரியதரிசி..

‘வாங்க போகலாம்..”

அவன்  மேற் கொண்டு பேசாமல் கை நீட்டி அவளது பெட்டிகளை வாங்கி பின் சீட்டில் வைத்தான்.. தோளில் இருந்த பைகளையும் கழட்டி வைத்தவளுக்கு.. அவளை அழுத்திக் கொண்டிருந்த சுமையிலிருந்து  விடுதலை கிடைத்ததைப் போல் இருந்தது..

முன் பக்க சீட்டில் ஏறி.. அவனருகில் அமர்ந்தாள்.. அவன் வண்டியைக் கிளப்பினான்..

ஜன்னல் வழி வந்த இயற்கையான காற்றில் முகம் சிலிர்த்தவள்.. சாலையோர வயல்களின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள்..

‘ஹௌ நைஸ்.. உங்க ஊர் எவ்வளவு அழகாயிருக்கு தெரியுமா.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..”

அவள் பேசியதற்கு அவனிடமிருந்து பதில் வராமல் போகவும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்..

இறுக்கமான முகத்துடன் காரோட்டிக் கொண்டிருந்தான் அவன்.. சற்று முன் நடந்த பேச்சு வார்த்தைகளின் நினைவில்.. நாக்கைக் கடித்துக் கொண்டாள்  நிவேதா..

“இவன் கோபமாய் இருக்கிறான்..’

அன்றுதான்.. இன்னும் சொல்லப் போனால்.. சில நிமிடங்களுக்கு முன்புதான் அவளுக்கு அறிமுகமாகியிருந்தான் அவன்..

இருந்தும்.. அவனது அந்தக் கோப முகம் அவளை பாதித்தது.

‘உங்க பெயர் என்ன..?” என்று பேச்சை ஆரம்பித்தாள்..

அவன் திரும்பிப் பார்த்து விட்டு பதில் சொல்லாமல் காரை ஓட்டுவதில் கவனமானான்..

‘ஏங்க.. என் பெயரை மட்டும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டிங்களே.. உங்க பெயரைக் கேட்டால் மட்டும்.. மௌனியாகி விட்டிங்களே.. இது நியாயமா..?” அவள் விடாமல் பேச்சை வளர்த்தாள்..

‘கார்த்திகேயன்..”

ஓற்றைச் சொல் .. பதிலாக வந்தது..

‘கார்த்திகேயன்.. கார்த்திக்..” அவள் சொல்லிப் பார்த்த் விதத்தில் அவன் மீண்டும் ஓர் முறை அவளைப் பார்த்தான்..

சாலையோரமாக இருந்த வயல்களில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களின் பாடல் ஒலியைக் கேட்டதும்.. நிவேதா உற்சாகமாகி விட்டாள்..

அவசரமாக.. தன் கைப்பையிலிருந்த டேப் ரிக்கார்டரை தேடி எடுத்துக் கொண்டவள்..

‘காரை நிறுத்துங்களேன்.. ப்ளீஸ்..” என்றாள்..

அவன் புருவங்களை உயர்த்தினாலும்.. ஏனென்று கேட்காமல் காரை நிறுத்தி விட்டான்..

அவள் காரிலிருந்து குதித்து இறங்கிய போது.. அவனும் கூடவே இறங்கினான்..

வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்கள்.. அவர்களைக் கண்டதும் பாட்டை நிறுத்தி விட்டார்கள்…

அவர்கள்.. தங்களுக்குள் பேசிக் கொண்டு.. வேலையைத் தொடர.. நிவேதா.. திரும்பி.. பார்வையில் கார்த்திகேயனிடம்  உதவி  கேட்டாள்..

அவன் இதழ்களில் மெலிதான புன்னகை மலர்ந்தது..

‘பெரியாத்தா.. இவங்க பட்டினத்தில் இருந்து… நம்ம நாட்டுப்புற பாட்டைப் பத்தி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க.. அதனால.. பாடிக்கிட்டு இருந்த பாட்டை நிப்பாட்ட வேணாம்.. பாடுங்க..”  என்று அந்தப் பெண்களில் வயதானவளாக இருந்தவளிடம் சொன்னான் அவன்..

‘அடியாத்தி.. நம்ம பாட்டை.. ஆராய்ச்சி  பண்ணி என்ன செய்யப் போறாகளாம்..” அவள் கன்னத்தில் கை வைத்து அதிசயித்தாள்..

‘பட்டம் வாங்கப் போறாங்களாம்..”

‘இந்தக் கூத்தைக் கேட்டிங்களாடி.. நாமளே.. சேத்திலே காலை வைச்சு.. இடுப்பொடிய வேலை செய்யற அலுப்புத் தெரியாம இருக்க பாட்டுப் பாடிக்கிட்டே வேலை செய்யறோம்.. அதையும் இந்தப் பட்டணத்துக்காரங்க விட்டு வைக்காம.. ஆராய்ச்சி பண்ணக் கிளம்பிட்டாங்களே.. இதை எங்க போய் சொல்றது..?”

‘அதானே..”

அவர்கள் கேலிபேசிச் சிரித்தாலும்.. பாட்டைத் தொடர்ந்தார்கள்..

‘காதுலதான் திருகாணி…

  கழுத்து மேல கருக மணி….

வாழுகிற வாழ்க்கையில..

பொன்னுரத்தினமே….

வரவுக்கு மேல செலவாச்சு..

தங்கரத்தினமே..”

நிவேதாவின் விழிகளில் ஆச்சரியம் வந்தது.. நான்கே வரிகளில் அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும்.. ஏழ்மையையும் பாட்டுக்குள் அவர்கள் கொண்டு வந்து விட்டதை அவள் உணர்ந்தாள்..

‘பொட்டு மேல.. பொட்டு வைச்சு..

கொண்டையிலே பூவை வைச்சு…..

எட்டு முழ கண்டாங்கியை…..

எட்டு முறை பிரிச்சுக் கட்டி…..

ஒத்தையடிப் பாதை வழியே….

வந்தேன் தன்னாலே….

உன் முகத்தை பார்க்கத்தானே…

வந்தேன் உன் பின்னாலே…”

பாடலைப் பாடிய இளம் பெண்ணின் விழிகளில் மையலிருந்தது.. இவளது பாட்டுடை நாயகன் யாராக இருப்பான் என்று யோசித்தாள் நிவேதா..

காரில் ஏறிய பின்னால்.. அதைப் பற்றி கார்த்திகேயனிடம் அவள் கேட்டாள்.. அவன் யோசனையாக சாலையைப் பார்த்தபடி தோளைக் குலுக்கினான்..

‘அதையெல்லாம் அவ்வளவு ஈஸியாக கண்டு பிடிச்சுட முடியாது..”

‘ஏன்..?”

‘இது கிராமம்.. உங்களோட பட்டணமில்லை.. இங்கே மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல மாட்டார்கள்..”

‘ஆனால் கிராமத்து மனிதர்களின் மனம்தான் வெள்ளையானது.. அவங்கதான் மனதிலிருப்பதை அப்படியே பேசுவாங்கன்னு என் அம்மா சொன்னாங்களே..”

‘உன் அம்மாவுக்கு எப்படித் தெரியுமாம்..?”

‘எப்படியோ தெரியும்.. அதைப் பற்றியா இப்ப பேசிக்கிட்டு இருக்கோம்..? டிராக் மாறாம பதிலைச் சொல்லுங்க..”

‘உன் அம்மா சொன்னது உண்மைதான்.. கிராமத்து மனிதர்கள் மனதிலிருப்பதை மறைக்காமல் பேசிவிடும் வெள்ளை மனம் கொண்டவர்கள்தான்.. ஆனால்.. காதல் அப்படிப்பட்டதல்ல.. அது தனிப்பட்ட விசயம்.. அதுவும் கிராமத்தில் கொலை செய்வதைக் கூட ஏத்துக்குவாங்க.. காதல் செய்வதை ஏத்துக்கவே மாட்டாங்க..”

இதைக் கேட்டதும் நிவேதா அமைதியாகி விட்டாள்.. ஏதோ சொல்வதற்காக அவள் முகத்தை பார்த்த கார்த்திகேயன் அவளுடைய திடீர் மௌனத்திற்கு காரணம் புரியாமல் தினகத்தான்..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link