Chapter 06

0Shares

“இந்தப் பெண் கெட்டிக்காரி..’

இந்த நினைவுடன் அவளைப் பார்த்தான் கார்த்திகேயன்.. வேலையாளை அழைத்து பெட்டிகளை எடுத்துப போகச் சொல்லி விட்டு.. அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போகும்படி மகனிடம் சொன்னார் சிதம்பரநாதன்..

‘ம்ஹீம்.. உங்களுக்கு என்னைப் பார்த்தால்..”ஸாரி’ சொல்லத் தோணுது என் அப்பாவைப் பார்த்தால் “தேங்க்ஸ்’ சொல்லத் தோணுதா..?”

வீட்டுக்குள் நுழைந்தபடி கேலியாக அவளிடம் கேட்டான் கார்த்திகேயன்.. பதிலுக்கு வரிசைப் பற்கள் தெரிய சிரித்தாள் நிவேதா..

“இவள் சிரிக்கும்போது அழகாயிருக்கா..’

அவன் மனதில் ஓடிய எண்ணங்களை அவன் கண்ணில் படித்தவளாக அவனைப் போலவே புருவம் உயர்த்தி.. பார்வையிலேயே

“என்ன..?’ என்று வினவினாள் நிவேதா..

ஓன்றுமில்லை என்பதைப் போல.. தலையை இடமும்.. வலமுமாக அசைத்தான் கார்த்திகேயன்..

‘அம்மா..”

பு+ஜையறையில் கடவுள் படங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டிக் கொண்டிருந்த மீனாட்சி திரும்பிப் பார்த்தாள்..

அவளது மங்களகரமான அழகில் அயர்ந்து போய் விட்டாள் நிவேதா.. கோவிலில் அமர்ந்திருக்கும் அம்மனே.. நேரில் எழுந்து வந்து நிற்பதைப் போன்ற உணர்வுடன் தன்னையறியாமல் கை குவித்தாள் அவள்..

‘யாருப்பா இந்தப் பொண்ணு..?”

‘நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளிம்மா.. மேடம்.. நாட்டுப் புற பாடல்களை ஆராய்ச்சி பண்ணுகிறேன் பேர்வழின்னு அதை ஒரு கை பார்த்து.. உண்டு இல்லைன்னு பண்ணி விடனும்கிற முடிவோட நம்ம ஊருக்கு வந்து இறங்கியிருக்காங்க.. நம்ம அப்பாவோட பிரண்டுக்கு.. பிரண்டோட பெண்ணாம்..”

‘அப்படியா.. அப்பா இதைச் சொல்லவே இல்லையே..”

“மற்றதை மட்டும் உன்னிடம் தினமும் சொல்கிறாராக்கும்..’ என்ற நினைவோடு..தாயைப் பார்த்தான் கார்த்திகேயன்..

மகனின் பார்வையின் கேள்வியைக் கண்டவளின் முகம் வாடிவிட்டது.. பார்வையை நிவேதாவின் பக்கம் திருப்பியவள் சிநேகிதமாகச் சிரித்தாள்..

‘கற்பூர ஆரத்தியை ஒற்றிக்கோம்மா..” என்று அவளிடம் கற்பூர ஜோதியைக் காட்ட வேறு செய்தாள்..

“இன்னும் பல்லைக் கூடத் தேய்க்கலையே..’

அவசரமாக பின்னால் நகர்ந்துக் கொண்ட நிவேதா.. கார்த்திகேயனிடம்  பார்வையால் இறைஞ்சினாள்..

‘அவர்கள் பஸ்ஸிலிருக்கிற அழுக்கையெல்லாம் உடம்பு பூராவும அப்பிக்கிட்டு.. குளிக்காம.. கொள்ளாம நிற்கிறாங்க.. நீ அவங்களையெதுக்கு தொந்தரவு பண்ற.. என்கிட்ட காட்டு.. இவங்களுக்கும் சேர்த்து.. நான் சாமி கும்பிட்டுக்கிறேன்..”

அவன் இயல்பாகப் பேசியபடி கற்பூர ஜோதியின் மேல் கைகளைக் காட்டி. கண்களில் ஒற்றிக் கொண்டான்..

‘போடா.. அரட்டை..”

மகனைச் செல்லமாக கடிந்தபடி.. பூஜையறையை விட்டு வெளியே வந்தாள் மீனாட்சி..

‘எந்த ஊரும்மா..?”

‘சென்னை ஆன்ட்;டி..”

‘அப்பா என்ன செய்கிறாரு..?”

‘சொந்தமா.. எக்ஸ்போர்ட் கம்பெனி வச்சிருக்காரு..”

‘அம்மா..?”

‘உங்களைப் போல.. வீட்டைப் பார்த்துக்கிறாங்க..”

‘பெயர் என்னம்மா..?”

‘நிவேதா ஆண்ட்டி..”

‘கூடப் பிறந்தவங்க..?”

‘நான் ஒருத்திதான் ஆண்ட்டி..”

மீனாட்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல.. நிவேதாவுக்கு பிடித்திருந்தது.. சிதம்பர நாதனின் விசாரணையை.. புலன் விசாரணை என்று மனதிற்குள் நினைத்துப் புழுங்கியவள்.. மீனாட்சியின் விசாரணையை.. ஆவலுடன் விரும்பினாள்..

‘வாம்மா.. உனக்கு தங்குவதற்கு ரூமைக் காட்டறேன்.. கார்த்தி..”

‘அம்மா..”

‘நிவேதாவோட சாமான்களை அனுப்பிவைப்பா..”

‘எங்கேம்மா..?”

‘மாடியில இருக்கிற.. கோடி ரூமூக்கு..”

‘சரிம்மா..”

ஒரு விசயத்தை ஊன்றிக் கவனித்தாள் நிவேதா.. அவளை.. முதன் முதலில் பார்த்த கார்த்திகேயனாகட்டும்.. அடுத்து அவளைப் பார்த்த சிதம்பரநாதனாகட்டும்.. கருணையே வடிவான மீனாட்சியாகட்டும் ஒரு வார்த்தை கூட.. நிவேதா.. அந்த வீட்டில் எத்தனை நாள்கள் தங்கப் போகிறாள் என்று கேட்கவில்லை..

இயல்பாக அந்த வீடு.. அவளை உள்வாங்கிக் கொண்டது.. அதைவிட இயல்பாக.. அந்த வீட்டு மனிதர்கள் அவளை.. வீட்டில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டார்கள்..

“இதுதான் இவர்களா…’ நிவேதா மனம் நெகிழ்ந்து போனாள்..

பெரிய மனிதர்கள் எனப்படுபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்pறயது..

அவர்கள் மாடியேறிக் கொண்டிருந்த போது.. எதிரே.. பாவாடை தாவணியில் நீண்ட பின்னலுடன்.. புள்ளி மானைப் போல.. துள்ளிக் குதித்து இறங்கி வந்தாள் ஒரு சின்னப் பெண்.. அவளைப் பார்த்த நிவேதாவின் விழிகளில் ஓர் அதிர்வு வந்தது.. அந்தப் பெண்ணைப் பார்த்தபடி அசையாமல்  அவள்நின்று விட்டாள்..

‘பார்த்துடி.. கால் தடுக்கி விடப் போகிறது..” என்று எச்சரித்த மீனாட்சி.. புன்னகையுடன் நிவேதாவின் பக்கம் திரும்பினாள்..

‘என் பொண்ணு.. கல்யாணின்னு பேரு..”

அந்தக் கல்யாணி.. அவள் அணிய முடியாமல் தடை செய்யப்பட்டிருந்த சுடிதாரை இயல்பாக அணிந்து.. முடியை ஸ்டைலாக வெட்டி.. விரிய விட்டு.. ஒரு விளம்பர மாடலைப் போல நின்று கொண்டிருந்த நிவேதாவை முறைத்துப் பார்த்தாள்..

“எவ… இவ..?’

அவளது மனம் கேட்ட கேள்விக்கு உடனடியாக விடை சொன்னாள் மீனாட்சி..

‘கல்யாணி.. இந்தப் பொண்ணு பேரு நிவேதா.. நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி.. படிக்க வந்திருக்கிறா..”

‘படிக்கவா..? நம்ம வீட்டிலயா..? இங்கே படிக்க என்ன இருக்கு..?”

‘இங்கே தங்கி.. நம்ம ஊரு நாட்டுப் பாடல்களைப் பத்தி படிக்க வந்திருக்கிறாளாம்..”

‘இதைப பாருடா.. பட்டணத்தில இருக்கிறவங்க பட்டிக்காட்டில ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க..”

அவள் தன் தலைப் பின்னலை அலட்சியமாக சுழற்றியடித்துவிட்டு வேகமாக படியில் இறங்கிவிட்டாள்..

அவளது பின்னலையே பார்த்துக் கொண்டிருந்த நிவேதா..

‘வாவ்.. ” என்றாள்..

‘என்னம்மா.. ? ” மீனாட்சிக்கு புரியவில்லை..

‘உங்க பெண்ணுக்கு நீளமான தலைமுடி ஆன்ட்டி..”

‘இங்க எல்லோருக்கும் நீளமான முடியிருக்கும்மா.. இவளுக்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான்.. வா.. இதுதான் உன் ரூம்..”

மறந்தும் கூட மீனாட்சி ..”நீ தங்கப் போகிற ரூம்..’ என்று சொல்லவில்லை.. அதைக் கவனித்த நிவேதாவின் மனம்.. இன்னும் அதிகமாக நெகிழ்ந்தது..

வேலையாள்கள் அவளது பெட்டிகளையும் .. பைகளையும் அந்த அறையில் வைத்து விட்டு நகர.. மீனாட்சியும் கிளம்பினாள்..

‘குளிச்சுட்டு  வாம்மா.. காலைப் பலகாரம் சாப்பிடலாம்..”

அறைக் கதவை அடைத்து விட்டு.. அறையைச் சுற்றி பார்வையை ஓட்டினாள்.. நிவேதா..

மார்பிள்ஸ் பதித்து.. சுவரில் மர அலமாரி பதித்து.. மற்றொரு பக்கத்தில் சுவரோடு ஒட்டிய மரத்தினால் செய்யப்பட்ட கண்ணாடியைப் பதித்திருந்த அந்த அறை.. ஐந்து நட்சத்திர Nயுhட்டலின் அறை போலவே இருந்தது..

அது ஒரு கிராமத்து வீட்டிலிருக்கும் அறை என்றே நிவேதாவிற்குத் தோன்றவில்லை..

அறையை ஒட்டிய பால்கனிக் கதவை திறந்து பார்த்தாள்.. சின்னஞ்சிறு பால்கனி.. நான்கு நபர் நிற்கலாம்.. இரண்டு நபர்.. நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்து பேசலாம்..

பால்கனியில் நின்று பார்த்தாள்.. தூரத்தில் ஓடிய ஆறு தெரிந்தது.. அழகான பசுமையான.. அருவிக்காடு.. அவளை “வா” வென்று அழைத்தது.. மலையின் மீது இருந்த பெருமாள் கோபுரத்தின் சங்கும் சக்கரமும்.. நடுவிலிருந்த நாமமும் அவளை கன்னத்தில் போட்டுக் கொள்ள வைத்தன..

இப்படிப்பட்ட ஊரில் வாழ்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

அறைக்குள் செல்லத் திரும்பிய போது.. பக்கவாட்டில் இருந்த அறைகளிலும் இதைப் போலவே பால்கனிகள் அமைக்கப் பெற்றிருப்பதைக் கவனித்தாள் நிவேதா..

“இந்த வீடு.. இந்த ஊரில் இருக்க வேண்டிய வீடே இல்லை…”

குளியலறையில் சகல வசதிகளும் இருந்தன.. ëட்டரைப் போட்டுக் கொண்டு குளித்துவிட்டு.. புத்துணர்வுடன் வேறு உடைக்கு மாறினாள் நிவேதா..

அறைக்கதவு தட்டப்பட்டது..  திறந்தாள்.. வேலை செய்கிற பெண் நின்று கொண்டிருந்தாள்.. நிவேதாவை ஆர்வமாக பார்த்து சிரித்து வைத்தாள்..

பதிலுக்கு நிவேதாவும் புன்னகைத்தாள்..

‘என் பேரு மல்லிகாங்க..”

‘ஹாய் மல்லிகா.. என்ன விசயம்..?”

‘உங்க அழுக்குத் துணிகளை என்கிட்டக் கொடுங்க..”

‘எதுக்கு..?”

‘துவைச்சு காயப் போடத்தான்..”

‘தேங்க்ஸ்..”

நிவேதா கொடுத்த துணிகளைப் பெற்றுக் கொண்டவள் போகாமல் நின்றாள்..

‘நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்கம்மா..” என்று சொன்னாள்..

‘அதுக்கு ஒரு தேங்ஸ்..” நிவேதா சிரித்தாள்..

‘உங்களை கீழே சாப்பிட வரச்சொல்லி அம்மா சொல்லி விட்டாங்க..”

‘இதோ வந்திட்டேன்.. போகலாம்..”

மல்லிகாவின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தபடி சாப்பாட்டு அறைக்குள் சென்றாள் நிவேதா..

‘அதுக்குள்ள இவகூட சிநேகிதமாகிட்டாயா..?” மீனாட்சி கேட்டாள்..

‘இவதான் என் பிரண்டாகிட்டா ஆண்ட்டி..”

‘எப்படி..?”

‘நான் அழகாயிருக்கேன்னு சொன்னா.. அதுக்கு மேல இவகூட பிரண்ட் ஆகாம இருக்க முடியுமா..?”

நிவேதா கண்சிமிட்ட.. மீனாட்சிக்கு சிரிப்பு வந்தது..

‘போக்கிரி..” என்று அவள் கன்னத்தில் தட்டினாள்..

‘வா.. சாப்பிடு..”

மீனாட்சி தட்டை எடுத்து வைத்து இட்டிலிகளை பரிமாற ஆரம்பிக்க சுற்றிலும் பார்வையை ஓட்டினாள் நிவேதா..

‘நான் மட்டும் தனியாய் சாப்பிடனுமா..?”

‘ஆமாம்..”

‘ஏன் ஆன்ட்டி..? என் கூடச் சேர்ந்து யாரும் சாப்பிடமாட்டிங்களா..?”

‘உனக்கும் எங்களுக்கும் சண்டைபாரு.. அதான்.. உன்னோடு சேர்ந்து நாங்க சாப்பிட மாட்டோம்.. சிரிப்பைக் கிளப்பாம சாப்பிடும்மா.. இங்கே எல்லோருமே சீக்கிரமாய் சாப்பிட்டு விடுவாங்க.. இப்போ நேரம் என்ன தெரியுமா..? பதினொரு மணி.. உச்சிப் பொழுது வரப் போகுது  இன்னுமா காலைப் பலகாரத்தை சாப்பிடாம இருப்பாங்க..?”

‘ஓ..”

ஓர்வித நிம்மதியுடன் நிவேதா சாப்பிட ஆரம்பித்தாள்..

எதிரில் அமர்ந்து.. வாஞ்சையுடன் அவளைப் பார்த்தபடி.. நிவேதாவின் வீட்டைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள் மீனாட்சி..

‘அம்மா பெயர் என்னம்மா..?”

‘வை’ என்று ஆரம்பித்த நிவேதா திருதிருத்தாள்..

‘என்ன கேட்டிங்க ஆண்ட்டி..?” என்று கேட்டவளை விசித்திரமாகப் பார்த்தாள்  மீனாட்சி..

‘உன் அம்மா பெயர் என்னன்னு கேட்டேன்.. நீ கூட.. “வை’ ன்னு ஆரம்பிச்சயே.. என்னாச்சும்மா..?”

‘அது வந்து ஆன்ட்டி.. நைட் ஜர்னி.. தூக்கம் கெட்டுருச்சா.. அதான் தூக்கக் கலக்கத்தில் உளறிட்டேன்..”

‘போகுதுபோ..இப்பவாவது உன் அம்மாவின் பெயர் என்னன்னு சொல்லு..”

‘அதுவா.. ஆண்ட்டி..”

இட்லிகளை விழுங்கிறவளைப் போல.. பதிலைச் சொல்ல.. நேரமெடுத்துக் கொண்டாள் நிவேதா..

‘வைசாலி ஆண்ட்டி..”

‘அப்படியா.. அப்பா பெயர்..?”

நிவேதாவிற்கு பேச்சு வரவில்லை.. அம்மாவை அடுத்து..அப்பாதான் வருவார்.. என்று ஏன்..தனக்குத் தோன்றவில்லை.. என்று நொந்து கொண்டாள்..

‘அப்பா பெயரா ஆண்ட்டி.. அப்பா பெயர்..அ..”

இப்போது நிவேதாவிற்கு தண்ணீh ;தேவைப்பட்டது.. தண்ணீர் தம்பளரை எடுத்து தொண்டைக்குள் சரித்துக் கொண்டவள்..

“இப்படித் தலையாலே தண்ணி குடிக்க வைக்கிறாங்களே..’ என்று நொந்து போனாள்..

‘அப்பா பெயர் அன்பழகன் ஆண்ட்டி..”

‘ரொம்ப களைப்பா இருக்க போல இருக்கேம்மா..”

‘ஆமாம் ஆண்ட்டி..”

‘கண்ணிலேயே தூக்கம் தெரியுது.. போய் தூங்கு..”

‘இருக்கட்டும் ஆண்ட்டி.. லன்ச்சுக்குப் பின்னால் தூங்கிக்கறேன்..”

கை கழுவி விட்டு.. முன் பக்க யுhலுக்கு வந்தாள் நிவேதா.. “அம்மா பெயர் வைசாலி.. அப்பா பெயர் அன்பழகன்..’ என்று நெட்டுறு பண்ண ஆரம்பித்தாள்..

‘என்னத்தை மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?” கார்த்திகேயன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்..

‘நத்திங்..”

‘அப்படியா..? நம்ப முடியவில்லையே..”

‘அது உங்க பிரச்சனை..”

‘உங்களுக்கு வேற எதுவும் பிரச்னையிருக்கா..?”

‘இருக்கு..”

‘எது..?”

‘நீங்க என்னை வாங்க.. போங்கன்னு கூப்பிடறதுதான் பிரச்சனை உங்களுக்கு என்ன.. நான் கிழவின்னு நினைப்பா..?”

அவள் முறைப்பாய் கேட்க.. அவன் ரசித்துச் சிரித்தான்..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link