Chapter 07

0Shares

அவளது அந்த கெட்டிகாரத்தனம் அவனை வசீகரித்தது.. அவன்.. அவளை.. ஏக வசனத்தில் அழைக்க வேண்டுமாம்.. அதற்காக அவள் காட்டிய பொய் கோபம் அவன் மனதை மயிலிறகாய் வருடியது..

‘உங்களை போய் கிழவின்னு எந்த மடையனும் சொல்ல மாட்டான்…. நான் மடையனில்லை..”

‘நீங்க என்ன பப்பாவா..?”

‘ஏன்..? நீங்க என்னை.. உங்க இடுப்பில் தூக்கிக்கிட்டிங்களா..?”

‘இல்லை..”

‘அப்படின்னா இதுக்குப் பதிலும் இல்லை..”

‘அப்புறம் எதுக்கு “வாங்க.. போங்க’ன்னு  அளக்கறீங்க..? ஒழுங்காய்..அழகாய் “வா.. போ’ ன்னு பேசலாமே..”

‘பேசிட்டா போச்சு..”

அவளை “வாங்க.. போங்க’ என்று அழைப்பதில் அவளுக்கு இருந்த ஆட்சேபனையில் கார்ததிகேயனின் மனம் குளிர்ந்தது..

கார்த்திகேயனின் கையில் இருந்த செல்போன் ஒலித்தது..

‘ஒரு நிமிசம்..” அவன் எழுந்து வாசலுக்கு சென்று விட்டான்..

அசுவராஸ்;யமாக பார்வையை ஓட்;டியவளின் பார்வையில் சிதம்பரநாதனின் தாய்தந்தையரின் புகைப்படம் தென்பட்டது..

யுhÈ‹ ஒரு பக்க சுவரில் நடுநாயகமாக… பெரிய அளவில் அந்த இரு புகைப்படங்களும் மாட்டப்பட்டிருந்தன..

சந்தன மாலைகளின் நடுவே.. அந்த வயோதிக தம்பதிகள் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..

நிவேதா எழுந்து அந்தப் படங்களின் அருகே சென்று நின்று உற்றுப் பார்;த்தாள்..

‘எங்க தாத்தா.. பாட்;டி..”

குரல் மட்டும் ஒலிக்க.. சுற்று முற்றும் பார்த்தாள்.. யுhÈ‹ ஓரமாக இருந்த வாசலில் நின்று கொண்டிருந்தாள் கல்யாணி..

‘அப்படியா..?”

‘இறந்துட்டாங்க..”

‘ம்ம்ம்..”

அலட்சியத்தை முகத்திலும்.. பார்வையிலும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு அருகே வந்த கல்யாணியின் கண்கள் இடுங்கின..

‘அழுகறியா..?”

‘இல்லையே..”

‘அதானே.. எங்க தாத்தாவும் பாட்டியும் போய் சேர்ந்துட்டா நீயேன் அழுகனும்..? ஆனா.. உன் கண் கலங்கியிருந்துச்சே.. நான் பார்த்தேனே..”

‘அதெல்லாம் இல்லை.. நைட் டிராவல்.. கண் எரிச்சலா இருக்கு..”

‘ஓஹ்ஹோ..”

கல்யாணி நம்பாத குரலில் கேட்டு விட்டு.. நிவேதாவை ஏற இறங்க பார்த்தாள்.. அவளது பார்வையில் பொறாமை தெரிந்தது..

‘நீ எப்பவுமே இப்படித்தான் உடுத்திக்குவியா..?”

‘ம்ம்ம்..”

அவள் ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று புரியாதவளாய் பதில் சொன்னாள் நிவேதா..

‘உங்க வீட்டிலே ஒன்னும் சொல்ல மாட்டாங்களா..?”

‘என்ன சொல்லுவாங்க..?”

‘பொம்பளைப் புள்ளயாய் லட்சணமாய் பாவாடை தாவணிதான் போட்டுக்கனும்.. தழைய..தழைய.. சேலைதான் கட்டிக்கனும்.. முடியை வெட்டக்கூடாது.. விரித்துப் போடாம.. பின்னல்தான் போட்டுக்கனும்.. அப்படி.. இப்படின்னு..”

கல்யாணி தன் மனக்குறைகளை கொட்டிய விதத்தில் நிவேதாவிற்கு சிரிப்பும்..அவள் மேல் பரிதாபமும் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு வந்தன..

கட்டுப்படுத்தாத பெற்றோர் கிடைப்பது வரம்.. பெண்களுக்கு அந்த வரம் வாய்ப்பதில்லை.. விதிவிலக்காக சில பெற்றோர்கள் இருக்கலாம்.. பொதுவாக பெண்ணைப் பெற்றவர்கள்.. பெண் குழந்தைகளிடம் அதிகமான கண்டிப்பையும்.. நிபந்தனைகளையும் காட்டுகின்றனர்..

இதற்குப் பல காரணங்கள் உண்டு.. பெண் என்பவளை போகப் பொருளாக நினைப்பது முதல் காரணம்.. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன் முறைகள் பயங்கரமானவை என்பது இரண்டாவது காரணம்.. அந்தக் காலத்திலிருந்து.. இந்தக் காலம் வரை.. ஒரு குடும்பத்தின் கௌரவம் பெண்ணிடம்தான் அடங்கியிருப்பதாக நம்மவர்கள் நம்புவது மூன்றாவது காரணம்..

பெண் என்பவள்.. பாதுகாக்கப்பட வேண்டிய உடமைப் பொருளாகி வெகு காலமாகிறது..

நிவேதாவிற்கு உடைகளிலும்.. அலங்காரத்திலும்  சுதந்திரம் கிடைத்திருக்கலாம்.. ஆனால்.. அவளும் சில வகையான சங்கிலிகளால் பிணைக்கப் பட்டவளே.. அவளது சுதந்திரம் வரையறுக்கப்பட்டது..

பாவம்.. கல்யாணிக்கு இது பற்றிய எண்ணங்களெல்லாம் கிடையாது.. அவளது வட்டம் சிறியது.. அதனால் அப்பாவித்தனமாக நிவேதாவின் மேல் பொறாமைப் படுகிறாள்..

‘கல்யாணி.. உனக்கு என்னைப் போல டிரெஸ் பண்ணிக்கனும்னு ஆசையாய் இருக்கா..?” நேரடியாகவே கேட்டாள் நிவேதா.. 

‘இல்.. இல்லையே..” கல்யாணி மறுத்தாள்…

‘அப்படியிருந்தா என்னிடம் சொல்லு..”

‘ஏன்.. நீ என்ன பண்ணுவ..?”

‘என் ரூமூக்கு வந்து.. யாருக்கும் தெரியாம.. என் டிரெஸ்ஸை போட்டுப் பாருன்னு சொல்வேன்..”

‘நிஜமாகவா..”

‘ஷ்யூர்..”

கல்யாணியின் விழிகளில் மின்னிய சந்தோசத்தைப் பார்த்த நிவேதாவிற்கு.. இந்த மாதிரியான உடைகளையணிய அவள் மிகவும் ஏக்கப்பட்டிருப்பது புரிந்தது..

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் சிநேகிதிகளாகி விட்டனர்.. ஊர் கதைகளை கல்யாணி அளந்து கொண்டிருக்கையில்.. மதிய உணவுக்கு அழைப்பு வந்தது.. சாப்பிட்டு முடித்த நிவேதா தூங்கி விட்டாள்..

மாலையில்.. மாடிக்கே.. காபி பலகாரத்துடன் வந்து மீனாட்சி அவளை எழுப்பினாள்..

‘என்ன ஆண்ட்டி.. எனக்காக நீங்க மாடியேறனுமா.. கூப்பிட்டிருந்தா.. நானே வந்திருக்க மாட்டேனா..” நிவேதா பதறி எழுந்தாள்..

‘இருக்கட்டும்மா.. நீயே பாவம்.. அசந்து தூங்கின..” மீனாட்சி சமாதானப் படுத்தி அவளை சாப்பிட வைத்தாள்..

இரவு உணவுக்கு பின்னர்.. கொஞ்ச நேரம் மாடி பால்கனியில் அமர்ந்து கல்யாணியுடன் கதை பேசிக் கொண்டிருந்தாள் நிவேதா..

காலையில் கார்த்திகேயன் செல்போன் அழைப்புக்கு பதில் கொடுக்க எழுந்து சென்றவன்தான்.. அதற்குப் பிறகு நிவேதாவின் கண்ணில் தென்படவே இல்லை..

மதிய உணவுக்கும்.. இரவு உணவுக்கும்.. கல்யாணிதான் நிவேதாவின் கூட அமர்ந்து சாப்பிட்டாள்.. அந்த வீட்டின் ஆண்கள் வரவே இல்லை..

“எங்கே போயிருப்பான்..’ நிவேதாவின் மனம் குறுகுறுத்தது..

‘என்ன யோசிக்கிறே..” கல்யாணி.. கேட்டாள்..

‘இல்லை.. உங்க அப்பாவையும்.. அண்ணனையும் காணோமே.. அதைப் பற்றி யோசித்தேன்..”

‘இன்னைக்கா.. புதுசா காணாமப்  போகிறாங்க..? தினசரி இதே கதைதான்.. நினைச்ச நேரத்துக்குத்தான் அவங்க வருவாங்க..”

‘ஏன்… ?….”

‘ஏன்னா அவங்க.. ஆம்பளைகளாம்..”

கல்யாணி சொல்லிய விதத்தில் நிவேதா சிரித்து விட்டாள்.. அன்று இரவு தூக்கத்திற்கு முன்னால்.. காலையிலிருந்து இரவு வரை நடந்தவை அனைத்தையும் மனதிற்குள் அசை போட்டாள் நிவேதா..

அந்த நினைவுகளுடன் தூங்கி விட்டாள்.. தூக்கத்தில் கனவு வந்தது.. கனவில்.. கார்ததிகேயனின் பூர்வீக வீடு தெரிந்தது.. அந்த வீட்டின் முன்புறமிருந்த தோட்டத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது… அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தாள்..

நீண்ட பின்னலுடன்.. அகலக் கரையிட்ட ஜரிகைப் புடவையுடன் நிறைய நகைகளை அணிந்திருந்த அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள்..

‘கல்யாணி..” நிவேதாவின் உதடுகள் தூக்கத்தில் முணுமுணுத்தன..

மறுநாள் பொழுது விடிந்த போது.. நிவேதா.. மாடியறையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தாள்..

‘குட்மார்னிங்..”

அவள்  பின்னால குரல் கேட்டது.. திரும்பிப் பார்க்காமலே அது கார்த்திகேயனின் குரல் என்பதை உணர்ந்தவளாக.. நிவேதா பதில் சொல்லாமல் கீழே இறங்கினாள்..

அதற்குள் அவளுக்கு இணையாக வந்து விட்டிருந்த கார்த்திகேயன்..

‘குட்மார்னிங்;ன்னு சொன்னா.. பதிலுக்கு குட்மார்னிங் சொல்லனும்..” என்றான்..

‘உங்ககிட்ட நான் பேசறதா இல்லை..” என்றாள் நிவேதா முறைப்பாக..

‘ஏன்..?” அவன் ஆச்சரியப்பட்டான்..

‘காலையிலே வீட்டில் கொண்டு வந்து விட்ட பெண் என்ன ஆனாளோ.. ஏது ஆனாளோன்னு கவலைப்படாத மனுசர்கிட்ட எனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு..?”

‘இதைப் பாருடா..இதுதான் கோபமா..? ஒரு அவசர வேலை வந்துருச்சு.. போக வேண்டியதாப் போயிருச்சு..”

அவளது உரிமையான கோபம் அவனை ஏதோ ஒரு வகையில் தாலாட்டியது..

அவளது கோபத்தை மதித்து அவன் விளக்கம் சொன்னது.. வேறு ஒரு வகையில் அவளைத் தாலாட்டியது..

காலை உணவின் போது.. சிதம்பரநாதனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.. நிவேதாவிடம் அந்த வீட்டில் ஏதும் சௌகரியக் குறைச்சல் இருக்கிறதா என்று வினவியபடி சாப்பிட ஆரம்பித்தார்..

அவரது தட்டில் இரண்டு தோசைகளை வைத்து.. சட்னி.. சாம்பார் கிண்ணங்களை அருகில் வைத்தாள் மீனாட்சி..

பேசியபடி திரும்பிய சிதம்பரநாதனின் மீது யதேச்சையாக அவள் மோதிவிட..

‘கண்ணு தெரியலையா.. எருமைமாடே..” என்று கர்ஜித்தார் சிதம்பரநாதன்..

அதுவரை இன்முகமாக இருந்தவரின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.. மீனாட்சி நடுநடுங்கி விட்டாள்..

‘தெரியாம மோதிட்டேங்க..”

பிள்ளைகளின் முன்னால் விளக்கம் சொல்ல நேர்கிறதே என்று அவள் குன்றிப் போனதை.. கன்றிப் போன அவளது முகமே தெரிவித்தது..

‘தெரியாம எப்படி போகும்கிறேன்..? கண்ணை என்ன பிடறியிலயா வைத்திருக்க..?”

மீனாட்சி உதட்டைக் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர முற்பட்டாள்.. அதற்கும் விடாமல் சிதம்பரநாதனின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது..

‘சாம்பாரை ஊத்து..”

கைகள் நடுங்க அவள் சாம்பாரை ஊற்ற ஆரம்பித்தாள்.. கொட்டி விடுமோ என்று அவள் பதட்டப் படுவது முகத்தில் தெரிய.. அதற்குமேல் தாள முடியாதவளாக நிவேதா எழுந்து விட்டாள்..

‘இங்கே கொடுங்க ஆண்ட்டி.. நான் சாம்பாரை ஊற்றுகிறேன்.. நீங்க போய் தோசைகளை கொண்டு வாங்க..”

தாய் படும் பாட்டை முகம் இறுக பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயனின் கை முஷ்டி மடங்கி இறுகுவதைக் கவனித்தபடி.. சிதம்பரநாதனின் தட்டில் சாம்பாரை ஊற்றினாள் நிவேதா..

கல்யாணியோ குனிந்த தலையை நிமிரவேயில்லை.. பக்கவாட்டில் தெரிந்த தோற்றத்தில் அவளது கண்கள் கலங்கி.. உதடுகள் துடிப்பதை நிவேதாவினால் பார்க்க முடிந்தது..

இப்படிக் கூட ஆண்கள் இருப்பார்களா என்றிருந்தது  நிவேதாவிற்கு.. கட்டின மனைவியாக இருந்தாலும் பெற்ற பிள்ளைகளின் முன்னாடி கூட அவளை அதட்டக் கூடாது.. அதுதான் நல்ல கணவனுக்கு அழகு.. இங்கேயானால் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியின் முன்னிலையில் மனைவியை அவமானப்படுத்துகிறார் சிதம்பரநாதன்..

இப்படித்தான் இங்கேயிருக்கும் கணவன்மார்கள் இருப்பார்களா.. என்ற சந்தேகம் நிவேதாவின் மனதில் எழுந்தது..

‘அப்படியெல்லாமில்லை..” என்றான் கார்த்திகேயன்..

அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.. ஆற்றோரமாக நடந்தபடி எரிச்சலுடன் அவன் பேச்சைத் தொடர்ந்தான்..

‘சென்னையில் இருக்கும் கணவர்கள்தான் மனைவியை கொஞ்சுவார்கள்.. கிராமத்தில் இருப்பவர்கள் மிதிப்பார்கள்ன்னு ஒன்னும் கிடையாது.. அங்கேயும் அராஜகமான கணவர்கள் இருக்கிறாங்க.. இங்கேயும் கட்டினவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கிற புருசன்கள் இருக்கிறார்கள்.. வேறு எங்கேயும் ஏன் போகனும்..? என் சித்தப்பா.. சித்தி கிழித்த கோட்டைத் தாண்டவே மாட்டார்.. இவ்வளவு ஏன்..? என் அப்பாவையும்.. சித்தப்பாவையும்.. ஊருக்குள் ராமர்.. லட்சுமணர்ன்னு சொல்லுவாங்க.. அப்படி நகமும்.. சதையுமாக இருந்த அண்ணன்.. தம்பிகள் அவங்க..”

இதைக் கேட்ட நிவேதாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின..

‘ஈஸிட்..”

‘ஆமாம்..”

‘அப்புறம் எப்படி.. இவ்வளவு ஸ்ட்ராங்கான பகையாளிகளா அவங்க மாறினாங்க..?”

‘சித்தியின் மேல் சித்தப்பாவிற்கு இருக்கிற காதல்..”

‘காதல்..?”

‘காதல்தான்.. ஏன் புருசன்.. பெண்டாட்டிக்குள்ள காதல் இருக்கக் கூடாதா..?”

கார்த்திகேயன்  புருவம் உயர்த்தி வினவ.. நிவேதாவின் முகத்தில் வெட்கம் வந்தது..

‘ஐ டோன்ட நோ..”

‘புரியலை..”

‘இதைப் பற்றி எனக்கென்ன தெரியும்..? நான் காதலித்ததுமில்லை.. கல்யாணமும் இன்னும் ஆகவில்லை.. என்கிட்ட இதைப்பத்தி கேட்டா நான் என்ன சொல்ல முடியும்..?”

‘ஹா… ஹா….”

கார்த்திகேயன் வாய் விட்டுச் சிரித்ததில் நிவேதாவின் முகச் சிவப்பு இன்னும் அதிகரித்தது.. சிதம்பரநாதனின் செயலில் எரிச்சல் கொண்டிருந்த கார்த்திகேயனின் மனதில் அந்த எரிச்சல் மெல்ல மறைந்து .. ஓர் வித உல்லாசம் குடி கொண்டது..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link