Chapter 20
எதிரில் நின்று கொண்டிருந்த நிவேதா அன்றுதான் பூத்த புதிய பூவைப் போல இருந்தாள்..
“இத்துனூன்டு பொண்ணு இது.. எதுக்காக இந்தப் பொண்ணுகிட்ட அம்மா இந்த அளவுக்கு பாசத்தையும்.. மரியாதையையும் காட்டுது..?’
கேசவமூர்த்திக்கு புரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெளிவாகப் புரிந்தது..
வந்திருக்கும் பெண்.. சாதாரணமான வெளியூர் பெண் அல்ல..
‘எங்கேடா கிளம்பிட்ட..? ” கோசலை மகனை முறைத்தாள்..
‘டவுனு வரைக்கும் போகனும்மா..”
‘அங்கே உனக்கென்ன வேலை..?”
‘முக்கியமான வேலை இருக்கும்மா..”
‘அத அப்புறமா பார்க்கலாம்… முதல்ல வந்திருக்கிற பொண்ணப் பாரு…”
தாயின் சொல்லைத் தட்ட முடியாத தனயனாக அவளுக்கு எதிரில் அமர்ந்தார் கேசவமூhத்தி..
பகையாளியான மைத்துனனின் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை அவர் வீட்டில அமர வைத்து உபசரிப்பதில் எள்ளளவும் அவருக்கு விருப்பமில்லைதான்..
ஆனால்.. என்னவோ தெரியவில்லை.. யாரிடமும் எடைபோட்டு பழகும் கோசலை.. நிவேதாவை வீட்டுக்குள் அனுமதித்து விருந்து உபசாரம் செய்து கொண்டிருந்தாள்..
‘உனக்கு என்னம்மா பிடிக்கும்..?”
குடிப்பதற்காக எதைக் கொடுப்பது என்ற யோசனையுடன் மரகதம் வினவ..
‘உங்களைத்தான் பிடிக்கும்..” என்று பதில் சொல்லி வைத்தாள் நிவேதா..
“என்னமா ஐஸ் வைக்குது இந்தப் பொண்ணு.. இந்த கேசவமூர்த்திகிட்ட அந்தப் பாச்சாவெல்லாம் பலிக்காது.. யாருகிட்ட..?’
கேசவமூர்த்தி பல்லைக் கடித்துக் கொண்டு கோசலையை பார்த்தவர் திகைத்து விழித்தார்..
கோசலையின் முகம் கனிந்திருந்தது.. அவள் விழிகளில் எல்லையில்லாத கருணையும்.. பரிவும் பொங்கி வழிந்தன..
“இது என்ன.. அம்மா இந்த முழி முழிக்குது..’
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.. வழக்கமாக.. மருமகளின் பிறந்தவீட்டைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும்.. கோசலை அவர்களை எதிரிகளைப் பார்ப்பதைப் போல்தான் பார்த்து வைப்பாள்..
பெற்ற மகளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்தும்.. பேச்சு வார்த்தை இல்லாமல் தள்ளி வைத்து விட்டார்களே என்ற வன்மம் கோசலையின் மனதில இருந்தது..
‘ஆண் ஒன்னு.. பெண் ஒன்னுன்னு பெத்தேன்.. ஒத்தை மகளை.. அசலூரில் கட்டிக் கொடுத்தா அடிக்கடி பார்க்க முடியாது.. உள்ளூரில் கட்டிக்கொடுத்தால் உறுத்தாப் பார்த்துக்கலாமுன்னு.. உள்ளூரில கட்டிக் கொடுத்தேன்.. உறுத்தாக்கூட இல்லை.. வெறுமனே
கூட பார்க்க முடியாத அளவுக்கு பாவி பயல்கள் பண்ணிட்டாங்களே.. ” என்று அவள் சொல்லிப் புலம்பாத நாளே இல்லை..
அவள் “பாவிப் பயல்கள்’ என்று விளித்தது.. மரகதத்தின் கூடப் பிறந்த தம்பிகளை..
எத்தனை நாள்தான் மரகதமும் பொறுப்பாள்..?
பொறுக்க முடியாமல் அவள் ஒரு நாள் பொங்கியெழுந்தாள்..
‘என்னையும் கூடத்தான் உள்ளூரிலேயே கட்டிக் கொடுத்தாங்க.. உறுத்தாப் பார்த்துக்கலாமுன்னு கட்டிக் கொடுத்தாங்க.. அது நடந்துச்சா..?” என்று கேட்டு விட்டாள்..
‘அது யாரால மருமகளே..?” கோசலையும் விட்டுக் கொடுக்கவில்லை..
‘அது அவங்கவங்க மனச்சாட்சிக்குத் தெரியும்..” மரகதமும் பின் வாங்கவில்லை..
வார்த்தைகள் தடிக்க.. அதன் பின் விளைவாக..
‘எப்படி என் அம்மாவிடம் நீ அப்படிப் பேசப் போச்சு..?” என்று கேசவமூர்த்தி சண்டைக்கு வந்து விட்டார்..
சாதாரணமாக ஆரம்பித்த சண்டை.. விடிய விடிய நீண்டு.. மரகதம் கணவனுடன் ஒருவருட காலம் பேசாமல் மௌனித்து விட்டாள்..
அதனாலெல்லாம் கோசலை மௌனமாகி விடவில்லை.. அவள் பேசுவதை பேசிக் கொண்டுதான் இருந்தாள்..
“எதற்கு வம்பு..?’ என்று மரகதம் காதிருந்தும் செவிடாக.. வாயிருந்தும் ஊமையாக இருக்கப் பழகிக் கொண்டு விட்டாள்..
அப்பேர்பட்ட கோசலை..மருமகளின் தம்பி வீட்டிற்கு வந்திருக்கும் நிவேதாவை வரவேற்;று உபசரித்தது.. அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது..
“இந்தம்மாவுக்கு என்ன ஆச்சு..? ஏதும் காத்து.. கருப்பு பிடிச்சுருச்சா..?’ என்ற பலத்த சந்தேகத்திற்கு ஆளானார் கேசவமூர்த்தி..
காருண்ய குணம் கொண்டவர்கள் மாறி நடந்தால்தான் காற்று.. கருப்பின் மேல் பழியை தூக்கிப் போடுவார்கள் என்று இல்லை..
கடுமையான மம் கொண்டவர்கள்.. காருண்யமாக மாறினால் கூட காற்று கருப்பின் மேல்தான் பழிவந்து சேரும் என்று அறியாதவளாக கோசலை.. நிவேதாவை கருணைப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்..
‘போ.. மரகதம்.. உன் கையில் பச்சைத் தண்ணியைக் கூட கொண்டு வந்துகொடு.. இந்தப் பெண்ணுக்கு அதுதான் தோவாமிர்தம்..”
கோசலை கூறியதைக் கேட்டதும் வந்திருக்கும் பெண்ணுக்கு.. பச்சைத் தண்ணியைத் தவிர வேறு எதையும் கொடுக்காதே என்று மறைமுமாக மாமியார் சொல்கிறாளோ.. என்ற சந்தேகம் மரகதத்துக்குள் எழுந்தது..
ஆனால்.. நிவேதாவை பாசமான பார்வையால் வருடிக் கொண்டிருந்த கோசலை அந்த எண்ணத்தில சொல்லியதாகவும் அவளுக்குத் தோன்றவில்லை..
மாமியாரைப் பற்றிய குழப்பமான மனநிலையுடன் மரகதம் சமையலறையில் சென்றாள்..
‘இந்த ஊர் உனக்குப் பிடிச்சிருக்காம்மா..?”
‘பிடிச்சிருக்கு பாட்டி..”
‘இந்த ஊரை உனக்குப் பிடிக்காம இருக்குமா..?”
‘யெஸ் பாட்டி.. ஆறும்.. ஆருவியும்.. மலைக் கோவிலுமா.. இந்த ஊர் அசத்துதே..”
‘அதனால்தான் உனக்கு இந்த ஊர் பிடிச்சுருக்குன்னு சொல்கிறயா..?”
கோசலையின் குரலில் ஓர்வித நம்பாத தன்மை தெரிந்தது.. அதைக் கவனித்தபடி காபிக் கோப்பையுடன் சமையலறையிலிருந்து வெளிப்பட்ட மரகதம்..
“இந்த அத்தை மனசில எதை நினைச்சுக்கிட்டு இந்தக் கேள்வியை கேட்குது..’ என்று நினைத்தபடி நிவேதாவிடம் காபிப் கோப்பையை நீட்டினாள்..
அவளுக்கு எதிரில அமர்ந்து கொண்ட மரகதம் நிவேதாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்..
படிப்பு.. ஊர்.. என்று அவள் கேட்கக் கேட்க சொல்லிக் கொண்டு வந்த நிவேதா..
‘உன் அப்பா பெயர் என்னம்மா..?” என்று மரகதம் கேட்கவும்..
‘அன்பழகன்..” என்றாள்..
அவர்களை பேச விட்டு.. கேட்டுக் கொண்டிருந்த கோசலை..
‘நினைச்சேன் ..” என்று சொன்னாள்..
‘எதை நினைச்சீங்க பாட்டி..? ” நிவேதாவுக்கு புரியவில்லை..
‘உன் அப்பா பொயர் “அ’ன்னு தான் ஆரம்பிக்கும்ன்னு நினைச்சேன்..” கோசலை நிதானமாக பதில் சொன்னாள்..
சட்டென்று நிவேதாவின் விழிகள் உயர்ந்து கோசலையின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தன..
கோசலையின் விழிகளில் ஓர் ரகசியப் புன்னகை இருந்தது.. நிவேதா உதட்டைக் கடித்தாள்..
அவள் யாரென்ற விவரம் கோசலைக்கு தெரியும் என்று அவளது உள் மனது கூறியது..
“ஆனால்.. அது எப்படி..?’
ஆனானப்பட்ட கார்த்திகேயனாலேயே.. அவளை கண்டு பிடிக்க முடியவில்லை எனும்போது.. இந்த முதியவளால் எப்படி அவளைக் கண்டு பிடித்திருக்க முடியும் என்று அவளுக்கு திகைப்பாக இருந்தது..
ஒருவேளை.. இப்படி புதிர் போடுவது போலப் பேசுவதுதான் கோசலையின் இயல்போ..
‘அது எமகாதகப் பாட்டி..”
கல்யாணியின் குரல் அவள் காதில் ஒலித்தது..
எதிரே அமர்ந்திருக்கும் கோசலைப் பாட்டி.. எப்படிப்பட்ட பாட்டி என்று நிவேதாவால் அனுமானிக்க முடியவில்லை..
‘இது என்ன அத்தை.. இந்த பெண்ணோட அப்பாவின் பெயரை “அ’ வில்தான் ஆரம்பிக்கும்ன்னு எதை வைச்சு நினைச்சீங்க..? ” மரகதம் புருவங்கள் ஏற.. வினவினாள்..
‘ஆமாம்மா.. எனக்கும் அது விளங்கவில்லை..” என்றார் கேசவமூர்த்தி..
‘அது ஒரு ஜோஸியம்டா மகனே.. இப்பப் பாரேன்.. இந்தப் பெண்னோட அம்மா பெயர்.. “வை’ யில்தான் ஆரம்பிக்கும்ன்னு நான் சொல்கிறேன் என்ன பந்தயம்..?” என்றாள் கோசலை..
இப்போது நிவேதாவிற்கு நிச்சயமாகி விட்டது..
“இந்த பாட்டிக்கு என் பின் புலம் தெரிந்திருக்கிறது..’
பிடிப்பட்டுவிட்ட உணர்வில்லாமல்.. ஏதோ ஒரு வகையில் அது அவள் மனதிற்கு ஆறுதலைத் தருவதையும் உணர்ந்தாள் நிவேதா..
எந்த வித அடையாளமுமில்லாமல்.. வேறு ஒரு அடையாளத்தில் வாழ நேர்வது கொடுமை.. அந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவளுக்கு.. கோசலையால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.. ஓர் விடுதலை உணர்வை மனதில் ஏற்படுத்தியது..
கோசலையின் பார்வையை சந்தித்த நிவேதாவின் விழிகளில் இப்போது பதட்டமில்லை.. சொந்தம் இருந்தது..
‘அப்படியாம்மா..” கேசவமூர்த்தி ஆச்சரியத்துடன் கேட்டார்..
‘ஆமாம்ப்பா.. என் அம்மா பெயர் வைதேஹிதான்..” என்றாள் நிவேதா..
பெண் குழந்தையில்லாத கேசவமூர்த்திக்கு.. அவள் “அப்பா..’ என்று அழைக்கவும்.. என்னவோ போல் ஆகிவிட்டது..
“அப்பா’ என்று அழைக்கும் பெண் குழந்தையிடம் அவரால் எப்படி பகையுணர்வு காட்ட முடியும்..?
‘அப்பாவா..?” மரகதம் வினவிவைக்க..
‘ஆமாம் அம்மா..” என்று அவளுக்கு மகளானாள் நிவேதா..
‘அம்மாவா..?” மீண்டும் மரகதம் புருவம் உயர்த்த..
‘அடடா..” என்று ஆட்சேபக் குரல் எழுப்பினாள் கோசலை..
‘இப்ப இந்தப் பொண்ணு என்னத்தை சொல்லிருச்சு.. அம்மா.. அப்பான்னுதானே சொல்லுச்சு.. அதுக்குப் போயி இத்தனை கேள்வியா? ஏம்மா மரகதம்.. நீ எத்தனை பொண்ணை பெத்து வச்சிருக்க..? இந்தப் பொண்ணு அதுகளுக்கு போட்டியா வந்து நின்னுடும்ன்னு நீ பயப்படறதுக்கு..?”
கோசலையின் கோபக்குரலில் ஆச்சரியப்பட்டு.. மரகதம் இமை மூடித் திறந்தாள் என்றைக்கும் மனைவிக்கு அனுசரணையாக பேசியறியாத கேசவ மூர்த்திகூட அன்றைக்கு மனைவிக்கு அனுசரனையாக பேச ஆரம்பித்து விட்டார்..
‘ஏம்மா.. இப்ப அவ என்னத்தை சொல்லிட்டான்னு.. நீ இந்த பேச்சு பேசற..? எங்கிருந்தோ வந்த பொண்ணு திடீர்ன்னு அப்பா.. அம்மான்னு உறவு கொண்டாடினா கேட்டுக்க முடியுமா..?”
‘அடேங்கப்பா.. இப்ப உன்னையும்.. உன் பெண்டாட்டியையும்.. அப்பா.. அம்மான்னு உறவு கொண்டாடி இந்தப் பொண்ணு என்ன செய்யப் போகுது..? உன் சொத்தில பங்கா கேட்கப் போகுது..? அதுக்கு இருக்குப்பா.. ஊரு பட்ட சொத்து..”
‘ஊருபட்ட சொத்தா… உனக்கெப்படி தெரியும்..?”
அவர் புருவங்களை உயர்த்த.. கோசலை அயராமல் பதில் சொன்னாள்..
‘ஆளைப் பார்த்தாலே தெரியலையா..? அதோட உன் மச்சினன்.. பணம் காசில்லாதவனை வீட்டில அண்ட விடுவானா..?”
இதைக் கேட்டதும் மரகதத்திற்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது..
‘நீங்க கண்டீங்களா..? ” என்று மாமியாரிடம் சண்டைக்கு கிளம்பி விட்டாள்..
சண்டையென்றால் கோசலைக்கு அல்வா சாப்பிடுவதைப் போல.. அதுவும் மரகதம் சண்டை போடுவதென்றால்.. நாள் பூராவும் சண்டை போட.. அவள் தயாராக இருப்பாள்..
அதையறிந்து வைத்திருந்த மரகதம் அவளிடம் அகப்படாமல் தப்பிப்பதில் குறியாக இருப்பாள்.. அன்று என்னவோ.. தம்பியின் மீதிருந்த பாசத்தில் அவள் வாயை விட்டுவிட்டு.. மாமியார் என்ன சொல்லி வைக்கப் போகிறாளோ என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த போது.. மகா தபஸ்வியைப் போல புன்னகை செய்தாள் கோசலை..
“என்னடா இது.. இந்தம்மாவுக்கு இப்படிக்கூட அமைதியாய் சிரிக்கத் தெரியுமா..?’ மீண்டும் இமை கொட்டினாள் மரகதம்..
‘எதுக்கும்மா இவ்வளவு கோபப்படற..? ஆயிரம்தான் இருந்தாலும் அது உன் கூடப் பிறந்த பிறப்பு.. உன் முன்னாலே நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்..” கோசலை பேசப்பேச.. மரகதம் மயக்க நிலைக்கே போய் விட்டாள்..
அத்தனை ஆண்டு கால திருமண வாழ்வில் இத்தனை இதமாக கோசலை பேசி மரகதம் கேட்டதே இல்லை.. அந்த அதிசயத்தை நடத்தி விட்டதற்காகவே.. தன் கையால் விருந்து சமைத்து.. நிவேதாவுக்கு பரிமாறி சாப்பிட வைத்துத்தான் அனுப்பினாள் மரகதம்..
Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.