Chapter 23

0Shares

நிவேதாவின் தாய்க்கு பழைய பாடல்களின் மீது தீராத காதல் உண்டு.. எப்போது பார்த்தாலும்.. அவள் பழைய பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருப்பாள்.. நிவேதாவையும் கேட்க வைப்பாள்..

அந்தப் பாடல்களில் ஒன்று நிவேதாவின் மனதினில் ஒலித்தது..

“எல்லோரும் நலம் வாழ…

நான் பாடுவேன்…

நான் வாழ.. யார் பாடுவார்..?

  என்பாடல் நான் பாட…

பலர் ஆடுவார்…. இனி.. 

  என்னோடு.. யாராடுவார்..?’

கல்யாணி குதூகலத்துடன் படியிறங்கிப் போய் விட்டாள்.. நிவேதா இயந்திரம் போல படிகளில்… இறங்கினாள்.. சிதம்பரநாதனுடன் பேசிவிட்டு திரும்பிவந்த கார்த்திகேயன் விழிகளில் நெருப்பு உமிழ அவளைப் பார்த்தான்..

“துரோகி..’ அவனது பார்வை சாடியது..

“உன் பார்வை என்னென்று தெரிகின்றது…

      உன் கேள்வி என்னென்று புரிகின்றது..

நான் இப்போது ஊமை…

மொழியில்லாத பேதை…

என்றேனும் ஒரு நாளில்..

  நான் பேசலாம்…’

அவள் மௌனமாக அவனைப் பார்த்து விட்டு அவளைக் கடந்து நடந்தாள்.. அவனது வெறுப்புப் பார்வை அவளது முதுகில் படிவதை அவளால் உணர முடிந்தது.. கடைசியில் அவளுடைய கார்த்திகேயன் அவளை வெறுத்து விட்டானே.. எந்த அன்பும் அவளுக்கு நிலைக்வே நிலைக்காதா..? இப்படிப்பட்ட சாபத்தை வாங்கி ஏன் அவள் பிறந்தாள்..? இது தெரிந்திருந்தால் கருவிலேயே அவள் கலைந்திருப்பாளே.. 

அவளது கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.. துக்கத்துடன் அவள் அறைக் கதவில் சாய்ந்து நின்றாள்..

    “கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்..?

    அது கடலாக வந்தாலும் திரை போடுவேன்..

    நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்..

    நான் யாரென்று அப்போது… நீ காணலாம்…’

கண்ணீரை துடைத்துக் கொண்டு.. அவள் கண் மூடி படுத்தாள்.. தூக்கமுமில்லாமல்.. விழிப்பும் இல்லாமல் அவள் போராடிக் கொண்டிருந்த போது.. அவளது முகத்தை ஒரு மலர் கரம் ஸ்பரிசித்தது..

‘அம்மா..” தூக்கத்திலேயே அவள் முணுமுணுத்தாள்..

‘அழாதே மகளே..” காற்றோடு கலந்து வந்த வார்த்தைகள்.. கனவினில் அவளுக்கு ஒலித்தன..

‘தாங்கமுடியவில்லையே அம்மா..”

நிவேதா அரற்றியபடி தாயின் மடியில் புரண்டு படுத்தாள்.. கண் விழித்து அவள் முகம் பார்த்தாள்.. அந்த முகம்..! அந்த முகம்..!

கல்யாணியின் முகமாக இருந்தது..

‘அம்மா..” என்று அவள் அழைக்கையிலேயே.. கனவு கலைந்து போனது..

‘அம்மா..”

நிவேதா பதறி எழுந்து விளக்கைப் போட்டாள்.. அறையில் யாருமில்லை.. அவளைத் தாங்கிய தாயின் மடியாக.. தலையணை இருந்தது..

கார்த்திகேயன் நிவேதாவை முற்றிலுமாக புறக்கணித்து விட்டான்.. அவனது புறக்கணிப்பை நினைத்து கவலைப்பட முடியாமல் கல்யாணியைப் பற்றிய கவலை நிவேதாவின் கண் முன்னால் நின்றது..

நிவேதாவிற்கு வேறு வழி இருக்கவில்லை.. கல்யாணியே சொன்னதைப் போல.. நிரஞ்சனும் அவளுக்கும் திருமணம் ஆக வாய்ப்பே இல்லாமல் வழி அடைக்கப்பட்டு விட்டது…

பெரிய பண்ணையாரின் மகளுக்கும்.. சின்னப் பண்ணையாரின் மகளுக்கும் .. அடுத்து வரும் முகூர்த்த தேதிகளில் அடுத்தடுத்து திருமணம் நடைபெறப் போவதாக ஊர் முழுவதும் பேச்சு பரவி விட்டது..

இனி அதை மாற்றுவது கடினம்.. தவிரவும்.. இரண்டு வீடுகளிலும் திருமணம் சம்பந்தமான ஏற்பாடுகளில் மும்மரமாக இறங்கி விட்டார்கள்..

பழைய நகைகளை அழித்து புதிய நகைகளை செய்வது.. இன்னும் சில நகைகளை புதிதாக வாங்குவது உறவினர் வட்டாரங்களுக்கும்.. வீட்டில் உள்ளவர்களுக்கும் ஜவுளி எடுப்பது என்று வீட்டில் உள்ளவர்கள் பரபரப்;பாக இயங்க ஆரம்பித்தார்கள்..

‘கல்யாண மண்டபம் புக் பண்ணிட்டியா கார்த்தி..”

சிதம்பரநாதன் வினவிய போது.. கார்த்திகேயன் தயங்கி நின்றான்..

‘அப்பா..”

‘நீ என்ன சொல்ல வருகிறேன்னு எனக்கும் புரியுதுடா.. நமம் பூர்வீக வீடே.. பத்து கல்யாண மண்டப அளவில் பெரிசா இருக்கே.. இதைவிட்டுட்டு டவுனில் போய் மண்டபம் பிடிக்கனுமான்னு நீ நினைக்கிற..?”

‘ஆமாம்ப்பா..”

‘வேணாம்டா காhத்தி.. அந்த வீட்டில ஒரு தடவை வாழைமரம் கட்டி.. பந்தல் போட்டு.. ஊரைக் கூட்டி.. நாங்க பண்ண நினைச்ச கல்யாணம் நின்னு போன அவமானம் ஒன்னே போதும்.. திரும்பவும் அதே வாழைமரம்.. பந்தல்ன்னு போட்டு.. பழசை நினைச்சுப் பார்த்து விக்கி விறைச்சுப் போக.. நானும் .. என் தம்பியும் தயாரா இல்லை.. அதனால அந்த வீட்டில் கல்யாணம் நடத்த வேணாம்..”

‘ஒரு தடவை அப்படி நடந்தா.. எப்பவுமே அப்படியா இருக்கும்..?”

‘அது கல்யாண ராசியில்லாத வீடுடா.. அந்தப் பேச்சை விடு..”

சிதம்பரநாதனின் எதிரே நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயனுக்கும்.. மறைவாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த நிவேதாவிற்கும் ஒன்று சொன்னதைப் போல.. கண்களில் நீர் திரையிட்டு.. மனம் வலித்தது..

‘நம்ம கல்யாணம் எங்கே நடக்கனும் தெரியுமா கார்த்திக்..?”

‘எங்கே..? டவுனிலேயே.. பெரிய மண்டபத்தை காட்டவா..?”

‘ஊஹும்.. உங்க பூர்வீக வீட்டில்தான் நடக்கனும்..”

இந்த வார்த்தைகளை கார்த்திகேயனிடம் சொன்னவள்தான் … நிரஞ்சனைக் காட்டி.. “அவர் என்னைப் பார்க்க வந்தார்..’ என்றும்; சொன்னாள்..

அந்த நினைவில் கார்த்திகேயனின் மனதில் அனல் மூண்டது..

“அப்பா சொன்னதைப் போல.. அந்த வீட்டுக்கு கல்யாண ராசி இல்லையோ..’

அவன் மௌனமாக போய் விட்டான்.. அவனது முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளை மறைவிடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா..

“அந்த வீட்டுக்கா கல்யாண ராசி இல்லை..?’

அந்த அவப் பெயரை அழித்து விட அவள் மனம் துடித்தது.. ஆனால் அதற்குத்தான் இப்போது யாதொரு வழியும் இல்லாமல் போய் விட்டதே..

கல்யாணி வீட்டை விட்டு ஓடிப் போன பின்னால் பெரிதாக மாறுதல் எதுவும் நடந்துவிடப் போவதில்லை…

நிரஞ்சனுடன் பேசியது நிவேதா அல்ல என்று தெரிந்தாலும்.. நிரஞ்சனுக்கும்.. கல்யாணிக்கும் இடையேயிருந்த காதலை மறைத்து.. அவளை வீட்டை விட்டு ஓடிப் போக வைத்த குற்றத்திற்காக எப்படியும் கார்த்திகேயன் அவளை வெறுக்கத்தான் போகிறான்..

“கிட்டாதாயின் வெட்டென மற..’ என்று சொன்னவர்கள்.. கிடைக்காது என்று தெரிந்த பின்னாலும் மறக்க முடியாமல் தவிக்கும் மனதை அமைதிபடுத்த யாதொரு வழியும் சொல்லவில்லையே..

‘நிவேதா..”

‘சொல்லு கல்யாணி..”

‘அத்தானை பார்த்துட்டு வாயேன்..”

‘ஏன்..?”

‘அவர் உன்னிடம் திட்டம் போட்டு கொடுக்கப் போகிறாராம்..”

நிரஞ்சன் கல்யாணிக்காக ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்திருந்தான்.. அதில் யாருக்கும் தெரியாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..

‘அதை உன்னிடமே அவர் சொல்லலாமே..”

‘என்னன்னு தெரியலை.. அவர் உன்னைத்தான் வரச் சொல்கிறார்..”

‘என் செல் நம்பரைக் கொடு.. போனில் பேசட்டும்.. இல்லைன்னா.. அவர் நம்பரை எனக்குக் கொடு நான் பேசுகிறேன்..”

கல்யாணி கொடுத்தாள்… நிவேதா நிரஞ்சனுடன் செல் போனில் பேசினாள்

‘அவ வீட்டை விட்டு வரும் போது.. நான் வாங்கிக் கொடுத்த சேலை நகைகளில் மட்டும் வரட்டும் நிவேதா..”

‘இவ்வளவு தூரம் வைராக்கியம் வைக்கனுமா..? அவள் உங்க தாய் மாமாவின் மகள்தானே..?”

‘நானும் கல்யாணியும் கிளம்பிப் போனதுக்கப்புறம்.. யார் யார் எப்படியெப்படி பேசுவாங்கன்னு தெரியலை… அதனால முன் கூட்டியே ஜாக்கிரதையாய் இருக்கனும்ன்னு நினைக்கிறேன்.. அவ நான் வாங்கிக் கொடுக்கிற சேலையைக் கட்டிக்கிட்டு என் பின்னால் வந்தால் போதும்.. வேறு எதுவும் எனக்கு வேணாம்..”

“இப்போது இப்படித்தான் சொல்வாய்..’ என்று நினைத்துக் கொண்டாள் நிவேதா.. 

“ஒரு நாள் உனக்குத் தோன்றும்.. இந்த மண்.. இந்த ஊர்.. இந்த மலைக்கோவில்.. இந்த ஆறு.. இந்த மனிதர்கள்ன்னு.. உன் மனம் பித்துப் பிடித்து இதைச் சுற்றி சுற்றி வரும்.. அப்போது நீ விட்டு விட்டுப் போகும் இந்த உறவுகளை ஒரு தரம் திரும்பிப் பார்க்க முடியுமான்னு ஏங்கும்.. அதற்கு உனக்கு கொடுத்து வைக்கனும்.. ‘

அதற்கு  கொடுத்து வைக்காத ஓர் ஆத்மாவை நினைத்து மனம் கனத்தாள் நிவேதா..

‘நிவேதா..”

‘ம்ம்ம்..”

‘என்னம்மா.. பேச்சைக் காணோம்..?”

‘நத்திங்.. சொல்லுங்க..”

இந்த ஊருக்கு வந்த பின்பு அடிக்கடி இந்த வார்த்தையை பிரயோகிக்க வேண்டியிருக்கிறது.. என்று நினைத்துக் கொண்டாள் நிவேதா..

‘நத்திங்குன்னு நீ சொன்னாத்தான்.. மெனிதிங்க் அதிலிருக்குதுன்னு அர்த்தம்..” நிவேதாவின் அப்பா சிரிப்பார்..

ஆனால்.. நிரஞ்சன் அதைப்  போல சிரிக்கவில்லை.. மாறாக.. அவனும் கல்யாணியும் வெளியேறப் போகும் திட்டத்தில் நிவேதாவின் பங்கிருக்குமா என்பதை கவனத்துடன் கேட்டு.. உறுதிபடுத்திக் கொண்டான்..

‘கல்யாணிக்கு தனியாய் எதைiயும் செய்யத் தெரியாது நிவேதா.. மாட்டிக்குவா.. நீதான் ஹெல்ப் பண்ணனும்..”

‘கட்டாயம் செய்கிறேன்.. இட்ஸ் மை டியுட்டி..”

அன்றைய இரவு.. அவர்கள் வெளியேறுவதாக இருந்ததால்.. என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை நிவேதாவிடம் தெளிவாக விவரித்தான் நிரஞ்சன்.. அவளும் கவனமாக கேட்டுக் கொண்டாள்..

‘டேக் கேர்..” நிரஞ்சன் போனை வைத்து விட்டான்..

“யாரை கவனமாக பார்த்துக்கனும்..? என்னையா..? இல்லை.. உன் காதலியையா..?’ என்ற யோசனையுடன் நிரஞ்சனைப் பார்க்கப் போனாள் நிவேதா..

மரகதத்தின் வீட்டில்.. மாடியில் நிரஞ்சனுடன் அவள் பேசிவிட்டு.. அவன் கொடுத்த பையை வாங்கிக் கொண்டு கீழே இறங்கியபோது.. யுhலில் அமர்ந்து கேசவமூர்த்தியுடன் உறவு கொண்டாடி பேசிக் கொண்டிருந்த சிதம்பரநாதனின் கண்களில் அவள் பட்டு விட்டாள்..

‘யாரது நிவேதாமா..?” அவரது புருவங்கள் ஏறின..

‘யெஸ் அங்கிள்..” நிவேதா சமாளித்துக் கொண்டு புன்னகை செய்தாள்..

‘என்னம்மா அது  கையிலே..?” அவர் விசாரித்தார்..

‘நத்திங் அங்கிள்..” சொல்லும்போதே.. இன்னும் இந்த வார்த்தையை .. எத்தனை தரம்தான் சொல்லுவது என்று சலிப்பாக உணர்ந்தாள் நிவேதா..

‘நிவேதா மேல.. நிரஞ்சனுக்கு கூட பிறந்த பிறப்பிடம் இருப்பதைப் போல அத்தனை பாசம்.. ,” கோசலை மனதார இதைச் சொன்னாள்..

அதைக் கேட்டதும்.. சிதம்பரநாதனின் முகத்தில் பழைய புன்னகை மீண்டது.. 

‘அது சரி.. இந்தப் பொண்ணு மேல யாராவது பாசம் காட்டாம இருந்ததாத்தான் ஆச்சரியம்..,” அவரும் மனமார இதைச் சொன்னார்;..

மறுநாள் பொழுது விடியும் போது.. இதே வார்த்தைகளை அவர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.. நினைத்து கொள்ளவாவது செய்வாரா.. என்றிருந்தது நிவேதாவுக்கு..

நிரஞ்சன் கொடுத்த துணிகளையும்.. நகைகளையும் வாங்கிக் கொண்டபோது.. கல்யாணியின் முகத்தில் மென்மை பரவியது..

அது.. அவளது காதலன்.. அவளுக்காக வாங்கிக் கொடுத்திருக்கும் முதல் பரிசு.. 

வீடே உறங்கிக் கொண்டிருந்த போது.. நிரஞ்சன் கொடுத்த சேலையை உடுத்தி.. நகைகளைப் போட்டுக் கொண்டு தயாரானாள் கல்யாணி..

‘வா.. போகலாம்..” நிவேதா அவளது கரம் பற்றினாள்..

‘பயமாயிருக்கு..,” கடைசி நேரத்தில் அவள் பயந்து பின் வாங்கினாள்..

‘அப்ப.. நீ வரலைன்னு நிரஞ்சனிடம் சொல்லி விடவா..?”

‘ஐயையோ.. வேண்டவே.. வேண்டாம்..”

கல்யாணியும்.. நிவேதாவும்.. பூனை போல வாசலுக்கு போன போது.. யுhலில் அமாந்து.. சிதம்பரநாதனும்.. மீனாட்சியும் பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவர்கள் அன்யோன்யமாக சிரித்துப் பேசிக் கொள்வதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று நிவேதாவுக்கு தோன்றியது..

ஆனால்.. நின்று பார்க்க நேரமில்லாமல் கல்யாணி அவளது முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்று விரலால் சுரண்டினாள்..

அப்படியே  பின் வாங்கி.. தோட்டத்துப் பக்கமாக போன போது.. எதிரே தோட்ட வேலை செய்யும் காத்தான் வந்தான்.. கல்யாணி மரத்தின் பின்னால் பதுங்கிக் கொள்ள.. நிவேதா மட்டும் அவன் பார்வையில் பட்டாள்..

‘என்னம்மா..” என்று விசாரிக்கும் போதே.. மரத்தின் பின்னால் கல்யாணி அசைவதை அவன் பார்த்து விட்டான்..

‘அங்கே யாரோ இருக்கிறாங்க போல இருக்கே..” அவன் சந்தேகமாய் கேட்ட போது..

‘யாருமில்லை.. நான்தான் உன் கண் முன்னால நிக்கறேன்.., ” என்று பதில் கொடுத்து அவனை அனுப்பி விட்டாள் நிவேதா..

இப்படி வழியில் எதிர் படுபவர்களிடமெல்லாம்.. கல்யாணியை மறைத்து பதில் சொல்லி காப்பாற்றி அழைத்துச் சென்று.. ஒரு வழியாக ஊருக்கு வெளியே இருந்த நிரஞ்சனின் கையில் ஒப்படைத்து விட்டாள் நிவேதா..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link