Chapter 18

0Shares

‘வைதேகியின் சாவுக்கு நியாயம் கிடைக்கும்.. அதே சமயம் அவள் எங்களைப் பெத்தவா கிட்டயே மறைக்க நினைத்த அந்தரங்கங்கள் வெளிப்படும்.. அது வேண்டாம்ன்னு நினைத்தேன்..” ஆழ்ந்த குரலில் சொன்னாள் கௌசல்யா..

‘உங்களைப் போலவே எல்லோரும் நினைத்தால் உண்மை எப்படி வெளியே வரும்..?” சங்கர் விடாப்பிடியாய் கேட்டான்.. 

‘வெளிவரக் கூடாத உண்மைகள் சில உண்டு சங்கர்..”

‘நாம மீடியாவில் இருக்கிறவங்க கௌசல்யா.. தொண்டைக் குழிக்குள் புதைக்க்பட்ட உண்மையைக் கூட தோண்டி வெளியே எடுத்து உலகத்திற்கு சொல்லக் கடமைப் பட்டவங்க.. அதுதான் நம்ம பத்திரிக்கை தர்மமும் கூட..”

‘இது இதயத்துக்குள் புதைந்திருக்கும் உண்மை.. இனிமே இது வெளியே வருவதால் யாருக்கு என்ன லாபம்..? நான் உங்களையொன்று கேட்கலாமா..?”

‘கேளுங்க..”

‘இந்த உண்மைகளை நீங்க ஏன் அப்பவே மீடியாவில் எழுதலை..? எதற்காக ரகசியமா செயல்பட்டீங்க..?”

‘நீங்க கேட்டுக்கிட்டீங்களே கௌசல்யா..”

‘வெறும் வாய் வார்த்தையால் நான் கேட்டுக் கொண்டதற்கு நீங்க கட்டுப்பட்டிங்களே.. வைதேகி என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறா.. அதற்கு நான் கட்டுப்பட வேண்டாமா..?”

சங்கர் அமைதியாகி விட்டான்.. சற்று நேரம் இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.. கௌசல்யாவின் முன்னாலிருந்த காபியில் ஏடு படுந்திருந்தது..

‘காபி குடிக்கலையா..?”

‘த்சு..”

‘வேஸ்டாப் போச்சு..”

‘வைதேகியே போயிட்டா.. இந்தக் காபி போனால் என்ன..?”

‘சொல்லுங்க.. இப்ப நான் என்ன செய்யனும்..?”

‘எனக்கு உதவி செய்யனும்..”

‘கட்டாயம் செய்கிறேன்..”

‘வைதேகிக்கு பெண்குழந்தையிருக்கு.. மூணுமாசக் குழந்தை..”

‘பாவி..”

‘வைதேகியைத் திட்டறேளா..?”

‘சேச்சே.. அந்த ராஸ்கலைத் திட்டறேன்..”

‘அவ குழந்தை எங்களுக்கு வேணும்.. அவன்கிட்டயே இருந்தால் நிச்சயம் குழந்தையை கொன்று விடுவான்.. அதுக்கும் ஒரு காரணத்தை தயாரா வைத்திருப்பான்..”

‘தாயில்லைங்கிற காரணம் ஒன்னே போதுமே.. மூணுமாசக் குழந்தை தாயை நினைத்து ஏங்கிச் செத்திருச்சுன்னு கதை சொல்ல எவ்வளவு நேரமாகும்..?”;

அவ்வளவுதான்.. அதைக் கேட்டுக் கொண்டிருந்த கௌசல்யா நடுங்கிப் போனாள்..

‘சொல்லாதீங்க..” காதுகளைப் பொத்திக் கொண்டாள்..

‘நெருப்புன்னு சொன்னா வாய் வெந்து விடாது கௌசல்யா..” அவன் கனிவோடு அவளைப் பார்த்தான்..

‘எனக்கு என் வைதேகியின் குழந்தை வேண்டும்..”

‘என்ன செய்யலாம்..?”

‘அவனிடம் ஒழுங்காக குழந்தையைக் கேட்டால் கொடுக்க மாட்டான்..”

‘அதுதான் தெரியுமே.. மயிலே.. மயிலேன்னா இறகு போடாது.. தடாலடியாய் நாம் குதிக்கனும்..”

‘நானும் அதைத்தான் நினைத்தேன்..”

‘எப்ப போகலாம்..?”

‘இப்பவே..”

‘வாங்க…”

சங்கர் உடனே எழுந்துக் கொண்டான். அவனது அந்த ஒத்துழைப்பு கௌசல்யாவிற்கு யானை பலத்தைக் கொடுத்தது..

மனோஜின் வீட்டு வாசலில் அவர்கள் தடுக்கப்பட்டனர்.. 

‘எதிர்பார்த்ததுதான்..” என்றாள் கௌசல்யா..

‘அவன் எதிர்பார்க்காததை செய்துவிட்டாப் போச்சு.. அவன் போன் நம்பர் இருக்கா..?” சங்கர் செல் போனை கையில் எடுத்தான்..

”லோ.. நான் யாரா..? என்பெயர் சங்கருங்க.. தின ஒலி பேப்பரில் நிருபருங்க.. எனக்கு உங்களிடம் என்ன வேலையா..? அது ஏகப்பட்டது இருக்குங்க.. அதையெல்லாம் போனில் சொன்னா வேலைக்காகாது மச்சி.. நேரில்தான் சொல்லனும்.. முடியாதா..? எனக்கும் உன் முகரையைப் பார்க்க பிடிக்கலைதான்.. பேசாமல் உன செத்துப் போன பெண்டாட்டி எழுதிய கடிதங்களை பேப்பரில் பப்ளிஷ் பண்ணி.. உன் முகத்திரையை கிழித்து விடனும்கிற வேகம்தான்.. ஆனா பாருங்க.. என்கூட வேலை பார்க்கிற கோயம்புத்தூர் அம்மணி.. அதுதான் உன் கொழுந்தியா.. அதைச் செய்யவே வேணாம்ன்னு தடை போட்டுட்டாங்க.. என்ன.. என் கொழுந்தியாளும் கூட இருக்கிறாங்களான்னு விசாரிக்கிறியா.. இதைப் பாருடா.. சார்.. எனக்காக கதவைத் திறக்க மாட்டாராம்.. அதுவே.. அழகான கொழுந்தியா கூட இருக்கிறாங்கன்னு தெரிஞ்சா கதவைத் திறப்பானாம். ஏய்ய்.. கதவைத் திறடா..”

மனோஜின் வீட்டுக் கதவுகள் திறந்தன…

”ப்பா.. ஒரு வழியாய் நரக வாசல் திறந்திருச்சு..” என்றான் சங்கர்..

கௌசல்யா புரியாமல் பார்க்க..

‘பின்னே.. இதென்ன சொர்க்க வாசலா..?” என்று புருவம் உயர்த்தினான் சங்கர்..

அவர்கள் உள்ளே பிரவேசித்த போது.. அந்தக் குடும்பமே யுhலில் குழுமியிருந்தது..

‘என்ன மிரட்டுகிறாயா..? நான் யாருன்னு தெரியுமா..?” மனோஜ் முறைத்தான்..

‘எல்லாம் தெரியும்டா.. ஒன்னும் தெரியாத அப்பாவிப் பொண்ணுக்கு தாலிகட்டி கொலை செய்து விட்ட கொலைகாரப் பாவிதானே நீ..” சங்கர் அவனுக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

‘உட்காருங்க கௌசல்யா..”  என்று அவளை உபசரிக்க வேறு செய்தான்..

‘யாருடைய வீட்டில் வந்து யாருக்கு உபசரனை செய்கிற..” மனோஜின் தாய் எகிறினாள்..

மனோஜின் கூர்மையான பார்வை அவர்களை அளந்தது..

‘அம்மா.. பொறு..” அவன் தாயை அடக்கினான்.

‘இவனை எப்போ பிடிச்சே..?” என்று கௌசலயாவிடம் விசாரிக்க வேறு செய்தான்..

‘மைண்ட் யுவர் வேர்ட்ஸ்..”கௌசல்யா சீறினாள்..

‘ம்ம்.. அழகாயிருக்க இல்ல.. நீ துணைக்கு கூப்பிட்டா எல்லா ஆம்பளைக்கும் ஓடி வரத்தான் செய்வாங்க.. ஆமாம்.. உங்க அக்காதான் போய் சேர்ந்துட்டாளே.. அப்புறமும் எதுக்கு என்னைத் தேடி வர்ற..? என்னைப் பார்க்கணும்கிற ஆசையா..?” அவன் விழிகளில் பழைய துச்சாதத்தனம் வந்திருந்தது..

‘ச்சே..” கௌசல்யாவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது.. 

‘உன் புத்தி இப்படித்தான் இருக்கும்.. என் வைதேகியின் குழந்தையைக் கொடு.. அதை தூக்கிக் கொண்டு போகத்தான் நான் வந்தேன்..”

‘ஓ” மனோஜின் கண்கள் பளபளத்தன..

‘உன் அக்கா குழந்தை மேல அவ்வளவு பாசமா? அந்த அளவுக்கு பாசம் இருந்தா.. தாயில்லாத என் குழந்தைக்கு தாயாகி விடேன்..”

அவன் எங்கே வருகிறான் என்பது சங்கருக்கு புரிந்து விட்டது.. கௌசல்யா அதைப் புரிந்து கொள்ளதவளாக.. படபடத்தாள்..

‘நீ சொன்னாலும்.. சொல்லாட்டியும் நான் அதற்கு தாய்தான்..”

‘எப்ப வச்சுக்கலாம்..?” மனோஜ் ஓர் விதச் சிரிப்புடன் கேட்டான்..

‘எதை..?”  கௌசல்யா குழம்பினாள்..

‘கல்யாணத்தை..”

‘யாருக்கு கல்யாணம்..?”

‘உனக்கும்.. எனக்கும்தான்..”

‘என்னது..?”

‘பின்னே.. எனக்கு நீ பொண்டாட்டியானாத் தானே.. என் குழந்தைக்கு அம்மாவாக முடியும்..?”

மனோஜிடம் வேட்டை நாயின் பார்வை தெரிந்தது..

கௌசல்யா இதைக் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.. குழந்தையைக் கொடுக்க மறுப்பான்.. போராட வேண்டும் என்ற நினைவுடன் சங்கரின் துணையை நாடியவள்.. நல்ல வேளையாக அவன் துணையோடு வந்தோம் என்று நினைத்துக் கொண்டாள்..

‘அது என் வைதேகியின் குழந்தைடா..”

‘நான்தானே அந்தக் குழந்தைக்கு அப்பா.. அதை இல்லைன்னு சொல்ல முடியுமா..?”

எப்படி முடியும்..? அவன் செய்த இரக்கமற்ற கொடுமைகளை வெளியே சொல்லக்கூட கூசிய வைதேகிக்கு அவன் கணவனில்லை என்று கூற முடியுமா..? இல்லை.. அவள் பெற்ற குழந்தைக்கு அவன் தகப்பனில்லை என்று கூறமுடியுமா..?

இரண்டுமே வைதேகியின் மரியாதையை பாதிக்கும் வார்த்தைகள் அல்லவா..?

அதைக் காப்பாற்றத்தானே.. அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவன் செய்த கொடுமைகளை வெளிப்படுத்தாமல் உயிரை விட்டாள்..?

அந்தச் செயலை கௌசல்யா செய்வதா..?

‘முடிவா என்னதான் சொல்கிற..?”

‘உனக்கு குழந்தை வேணும்னா.. எனக்கு நீ வேணும்..” கௌசல்யா உடல் கூச விழி மூடிக் கொண்டாள்.. எப்படிப் பட்ட பேரம் இது..? வைதேகி இறந்து இருவாரம் கூட ஆகவில்லை.. அவள் பெற்ற குழந்தையை பணயமாக்கி.. கௌசல்யாவை அடைய நினைக்கிறானே.. இவனெல்லாம் ஒரு மனிதனா..?

‘இல்லேன்னா..”

‘குழந்தையை நீ மறந்துட வேண்டியதுதான்..”

‘தாயில்லாத குழந்தையை வளர்க்கிற கஷ்டம் உனக்கெதுக்கு..?”

‘அதை நான் வளர்ப்பேனோ.. என்ன செய்வேனோ.. அது என் பிரச்சினை.. உனக்கு அது தேவையில்லாதது..”

மனோஜின் வார்த்தைகளில் அப்பட்டமான மிரட்டல்  வெளிப்பட்டது..

‘அது நீ பெற்ற குழந்தைடா பாவி .. உன் ரத்தம்..”

‘அதைத்தான் நானும் சொல்கிNள்ன..  அதை என்ன வேணும்னாலும் செய்ய எனக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கு..?”

கௌசல்யா கை நடுங்க.. ஆதரவு தேடி சங்கரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்..

‘இவனிடமெல்லாம் பேச்சு வார்த்தையே நடத்தக் கூடாதுன்னு நான் சொன்னால் கேட்கறீங்களா..? வாங்க போகலாம் இவனை பார்க்கிற விதத்தில் பார்த்துக்கலாம்..” சங்கர் கோபத்துடன் மனோஜை முறைத்தான்..

‘என்னடா செய்வ..?” மனோஜ் கண்கள் இடுங்க கேட்டான்..

‘என்ன செய்யப் போகிறேனா..? உன் பெண்டாட்டி உயிரோடு இருந்த போது நீ செய்த கொடுமைகளை விலாவாரியாய் எழுதி கௌசல்யாவிற்கு போஸ்டில் அனுப்பியிருக்கிறாங்க.. அது போஸ்டாபீஸ் தேதி முத்திரையோட எங்ககிட்ட பத்திரமா இருக்கு.. பைன்ட் பண்ணினா.. புத்தகமா போடலாம்.. அவ்வளவும் கண்ணீர் கதைகள்…. “

மனோஜின் கண்களில் யோசனை வந்ததை சங்கரும் கௌசல்யாவும் கவனித்தனர்.. சங்கா தொடர்ந்தான்..

‘போதாக்குறைக்கு உன்னை வேவு பார்த்து விவரம் சொல்லச் சொல்லி.. மூனு வருசத்துக்கு முன்னாடியே கௌசல்யா கேட்டுக்கிட்டாங்க.. அதுக்காக நான் ரெடி பண்ணிய புராஜக்ட் ரிப்போர்ட் என்கிட்ட பத்திரமா இருக்கு.. உன்கூட வாழ்ந்த சொப்பன சுந்தரிகளைப் பத்தி.. வாரம் ஒரு கவர் ஸ்டோரி போடற அளவுக்கு என்கிட்ட மேட்டர் இருக்கு.. எப்படி வசதி..? போட்டிரலாமா..? மனோஜின் மன்மத அம்புகளும்.. அதனால் வந்த வம்புகளும்.. டைட்டில் நல்லாயிருக்கா..? கொஞ்சம் நீளமான டைட்டில்.. மத்தபடி சூப்பர் டைட்டிலில்ல..?”

அடுத்த பதினைந்து நிமிடங்களிலில் வைதேகியின் குழந்தை கௌசலயாவின் கைக்கு வந்தது.. தன் கரங்களில் விழுந்த வைதேகியின் குழந்தையை உடலெல்லாம் சிலிர்க்க மார்போடு அணைத்துக் கொண்டாள் கௌசல்யா..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link