Chapter 21

0Shares

அனுராதாவின் முகம் இறுகியது… எதிரில் உட்கார்ந்திருந்த இருவரின் பார்வையும் அவளை அளவிடுவதை உணர்ந்தும் உணராதவளைப் போல அவள் லேப்டாப்பில் கவனமானாள்..

“இந்த பிளானை அப்ரூவ் பண்ணிருபேபி..” பீம்சிங் வலியுறுத்தினார்..

கரணின் கையில் இருந்த பென்-டிரைவ்வை அனுராதா வாங்கவில்லை.. கரண் நீட்டிய தன் கையை இழுத்துக் கொள்ளவும் இல்லை.. பென் டிரைவை வாங்கிக் கொள்ளச் சொல்லி அவளை வற்புறுத்தவும் இல்லை.. ஆனால் அவனது பார்வை மட்டும் அவளைத் துளைத்தது.. பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை.. அனுராதாவை அது மிகவும் பாதித்தது.. மூச்சு முட்டுவதைப் போல உணர்ந்தாள்..

கரணின் அருகிலிருக்கும்போது அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.. மூச்சு முட்டுகிறது.. அது ஏன் என்று அவனைச் சந்தித்த நாள் முதல் இன்றுவரை யோசித்து யோசித்து மண்டை காய்கிறாள்.. விடைதான் கிடைக்கவில்லை..

கரண் நல்லவன்தான்.. அதில் அனுராதாவுக்குச் சந்தேக மில்லை.. அவளிடம் அவன் எல்லை கடந்து பேச முயன்றதில்லை.. அதே சமயம் அவளது சுதந்திரத்தை வரையறுத்தான்.. அது அனுராதாவுக்குப் பிடிக்கவில்லை.. தீப்தியின் தம்பியிடம் உன்னதமான அருங்குணங்கள் இருக்கும் என்று நம்பும் அளவிற்கு அவள் ஒன்றும் வடிகட்டின முட்டாளில்லை.. கரணின் கண்டிப்பான துளைக்கும் பார்வையும்.. கட்டளையிடும் தோரணையும்.. கல்போன்ற கடினமான முகபாவமும்.. சிரிக்க மறுக்கும் இதழ்களும் அனுராதாவின் சுயமரியாதையை சீண்டி விட்டன.. மனதுக்குள் அவள் வெகுண்டாள்..

கரண் நேரடியாக அவளைக் கட்டுப்படுத்தவில்லை.. அப்படிச் செய்தால் ‘போடா’ என்று அவள் தூக்கியெறிந்து பேசி விடுவாள்.. அவன் பீம்சிங் மூலமாக அவளைக் கட்டுப் படுத்தினான்.. கட்டளையிடுவது தந்தையாக இருந்தால் அனுராதா மனக்கிலேசம் இல்லாமல் கீழ்படிந்திருப்பாள்.. சூத்திரதாரி கரண் தான் என்பதை அவள் நன்று அறிந்து வைத்திருந்ததினால் பணிய மனம் மறுத்தது..

“டாட்.. நீங்க எனக்கு என்ன பிராமிஸ் பண்ணினீங்க..?” லேப்டாப்பை மூடி வைத்து விட்டு நிதானமாகக் கேட்டாள் அவள்.

“எத்தனையோ பிராமிஸ் பண்ணியிருக்கேன்.. அதில் எந்த பிராமிஸை நீ கேட்கிற பேபி..?” பீம்சிங் வினவினார்..

“இந்த அனுராக் கண்ஸ்ட்ரக்சன் கம்பெனி உனக்கானது பேபி.. உன் கனவு புராஜெக்ட்களை உன் விருப்பப்படி கட்டலாம்ன்னு சொன்னீங்களா இல்லையா..? ஆர் யு ஃபர்கெட் இட்..?”

“நோ பேபி.. ஐ’ம் நாட் பர்கெட் இட்.. பட்.. என் பிராமிஸை மீறி நான் எதுவும் செய்யவில்லையே..”

“இந்த புராஜெக்ட்டுக்கான பிளான் நேற்றே அப்ரூவல் ஆகியாச்சு டாடி.. இன்றைக்கு வேறு ஒரு பிளானைக் கொண்டு வந்து கொடுத்து அப்ரூவல் பண்ணுன்னு சொன்னா என்ன அர்த்தம்..?”

“அந்த பிளான் வொர்க் அவுட் ஆகாதுன்னு அர்த்தம்..”

“எதனால் டாடி..? அதைப் பிளான் பண்ணினது நந்தகுமார் என்பதினாலா..?” அனுராதா நேரடியாக தாக்கி விட்டாள்..

கரணின் விழிகள் மின்னின.. அவனது பார்வை கூர்மையானது.. வேட்டைக்குக் காத்திருக்கும் வேங்கையின் பார்வை அது.. அனுராதாவின் உடல் சிலிர்த்தது.. மனம் நடுங்கியது.. கரணுக்குப் பிடிக்காத பேச்சை அனுராதா பேசி விட்டால் இப்படித்தான் பார்த்து வைக்கிறான்.. அனுராதா பேசும் எந்தப் பேச்சும் அவனுக்குப் பிடிப்பதில்லை என்பது வேறு விசயம்.. அவள் வாயைத் திறந்தாலே அவனுக்கு ஆகாது.. அதுவும் பீம்சிங்கிடம் அவள் உரிமை எடுத்துக் கொண்டு பேசினால் உறுத்துப் பார்க்க ஆரம்பித்து விடுவான்..

‘டாடியை மேரேஜ் பண்ணியிருக்கிறது இவனோட அக்காதானே.. இவன் இல்லையே.. என்னவோ இவன்தான் என்னோட டாடிக்குத் தாலி கட்டின பெண்டாட்டி போல எப்பப் பார்த்தாலும் முறைக்கிறான்.. டாடி என்னிடம் அன்பாப் பேசினா இவனுக்கு ஏன் எரியுது..?’ அனுராதா மனதுக்குள் குமைவாள்..

“இந்தக் கன்ஸ்ட்ரக்சன் பிஸினெஸ்க்கு நீ புதிது பேபி..”

“ஸோ.. வாட்..?”

“கரண் இதில் எக்ஸ்பெர்ட்..”

“வாட் ஃபார்..?”

“நீ கரணின் கைட்னெஸ்ஸோடு கம்பெனியை ரன் பண்ணுவதுதான் ஸேஃப் பேபி..”

“யாருக்கு ஸேஃப் டாட்..? எனக்கா.. இல்லை உங்களுக்கா..?”

“இதைத்தான் குழந்தைத்தனம்ன்னு சொல்கிறேன்.. கரண் மெச்சூர்டு பெர்சன்..”

அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல் அனுராதா சீட்டை விட்டு எழுந்து விட்டாள்.. பீம்சிங்கின் புருவங்கள் நெரிய.. கரண் அசைவின்றி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

“வாட் ஹேப்பன் அனு..?”

“எனக்கு இந்தக் கம்பெனி வேண்டாம் டாட்..”

“வொய்..? நீதானே இந்த ஃபீல்டில் அசீவ் பண்ணனும்னு ஆசைப்பட்டாய்..”

“யெஸ்.. நான்தான் ஆசைப்பட்டேன்.. சுதந்திரமாக செயல்பட்டு இந்த ஃபீல்டில் சாதித்துக் காட்டனும்னு ஆசைப்பட்டேன்.. நீங்க எனக்குக் கால் விலங்கு போடறிங்க டாடி.. அடியெடுத்து வைக்க முடியாம அடிமைப் படுத்த நினைக்கறிங்க.. நான் உங்க மகள் டாடி..”

கடைசி வார்த்தைகளைக் கரணைப் பார்த்தபடி சொன்னாள்.. அவள் எதிர்பார்த்தபடி அவனது விழிகள் தீக்கங்குகளாய் ஜொலித்தன..

‘சுடுதா..? நீ எங்கப்பாவுக்கு மைத்துனன்.. நான் அவர் பெற்ற மகள்.. மனதில் வை..’ அனுராதா உதட்டைச் சுழித்தாள்..

“மத்தவங்களை டிபண்ட் பண்ணி இருப்பதைப் போல நீங்க என்னை வளர்க்கலை டாட்.. உங்க மகள் அவள் காலில்தான் நிற்கனும்.. மத்தவங்களை அவள்தான் கைட் பண்ணனும்.. மத்தவங்க அவளை கைட் பண்ணக்கூடாது..”

‘எத்தனை நாளைக்கு..?’ கரணுக்கு வெறியேறியது..

‘எனக்கு லீகலா நீ மனைவியாகிற வரைக்கும்தான் இந்த ஆட்டம்.. அதற்குப் பின்னால் பார்.. உன் காலை ஒடித்து என் காலடியில் போடுகிறேன்.. என்றைக்குமே நீ எழுந்து நிற்க முடியாமல் முடக்கிப் போட்டுக் காட்டுகிறேன்.. நான் ‘கரண்’ டி..’

அனுராதாவின் கோபத்தை ரசித்தார் பீம்சிங்.. அவரது மகள் எப்படியிருக்க வேண்டுமோ.. அப்படி அவள் இருக்கிறாள் என்று சிலாகித்தார்.. ஆனாலும் அவள் கரண் போட்டுக் கொண்டு வந்திருக்கும் பிளானையும் ஓர்முறை பார்க்க வேண்டும் என்று சொன்னார்..

“ஃபைனல் டிசிசன் இஸ் யுவர்’ஸ் அனு.. உன்னை நான் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.. பட்.. பிளானைப் பார்க்காமலே என் மகள் அதை ரிஜக்ட் பண்ணக் கூடாது பேபி..”

கரணின் கைவிரல்கள் மடங்கி அவன் மூச்சை இழுத்து விட்டதில் அவனது கோபத்தின் பரிணாமம் வெளிப்பட்டது.. பீம்சிங் இருப்பதினால் அவன் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறானாம்.. அவர் பக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய் என்று கேட்க வாய் வரை வந்த கேள்வியை அப்படியே திருப்பி அனுப்பி வைத்தாள் அனுராதா.. தந்தையின் முகத்துக்காக அவளும் பொறுத்துப் போக வேண்டியிருக்கிறதே..

கரணும் பீம்சிங்கும் போய் விட்டார்கள்.. செல்வதற்கு முன்னால் கரண் வெறுப்புடன் எறிந்து விட்டுப் போன பென் டிரைவ்வை எடுத்துப் பார்க்க அனுராதா துளியும் விரும்பவில்லை.. தந்தை சொல்லி விட்டாரே என்று வேண்டாவெறுப்பாக அதை எடுத்து லேப்-டாப்பில் பொருத்திப் போட்டுப் பார்த்தாள்.. திரையில் வரைபடம் ஒளிர்ந்த நேரத்தில் மிகச்சரியாக கதவை இரு விரல்கள் தட்டின.. நிமிர்ந்து பார்க்காமல்..

“யெஸ் கமின்..” என்றாள்..

உள்ளே வந்த நந்தகுமாரின் பார்வை லேப்டாப்பின் மீது படிந்தது.. அதன் திரையில் தெரிந்த வரைபடத்தைப் பார்த்தவனின் விழிகள் இடுங்கின.. அனுராதா குற்ற உணர்வுடன் உதட்டைக் கடித்தாள்.. அவன் அவளை முறைத்தான்..

“இது யாரோட பிளான்..?”

“கரண் ஸ்கெட் பண்ணின பிளான்..”

“அவன்தான் வேணும்னா என்னை ஏன் வைத்திருக்க..?”

‘அடேய்..’ என்றிருந்தது அவளுக்கு..

ஊட்டி கான்வெண்டில் படித்து வளர்ந்தவள் என்றாலும் இதுபோன்ற இடக்குப் பேச்சுக்கள் புரியாமல் போகுமா..? அதுவும் நந்தகுமாருக்கு கோபம் வந்தால் எப்படியெல்லாம் பேசுவான் என்பது அவளுக்கு அத்துபடி..

“இங்கே யாரும் அவன் பிளான்தான் வேணும்னு சொல்லலை..”

“பின்னே எதுக்காக அவன் பிளானை உன் லேப்டாப்பில் பார்த்துக்கிட்டு இருக்க..?”

என்னவோ கரணின் புகைப்படத்தை அவள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அவன் அதட்டியதில் அவளுக்குச் சிரிப்பு வந்தாலும் மறைத்துக் கொண்டாள்..

“மிஸ்டர் நந்தகுமார்..”

“அட.. மரியாதையெல்லாம் தூள் பரப்புது..”

“இது கம்பெனி.. இங்கே நான் எம்.டி. நீங்க சீஃப் என்ஜினியர்..”

“அதுக்கு..?”

“மரியாதை கொடுக்கனும்..?”

“யாருக்கு..? உன் அப்பனுக்கா..? இல்லை அந்த வில்லனுக்கா..?”

“எனக்கு..”

“அப்படிங்களா மேடம்.. ஆகட்டும் மேடம்.. சரிங்க மேடம்..”

அவன் கன்னத்தில் போட்டுக் கொள்ள அவள் உதட்டைச் சுழித்தாள்.. அவன் மயங்கிப் போய் அவளையே பார்த்தான்.. அனுராதாவின் முகம் சிவந்தது.. கனவு போல தோன்றிய காதல் காலம் அவளுள் இறக்கை விரித்து எழுந்தது.. வாழ்க்கை அவளை ‘வாழ… வா’ என்று அழைத்தது.. விதி அவளுக்கு நல்வழி காட்டியதைப் போல இருந்தது..

“டிராமா பண்ணாதீங்க..”

“நீதான்டி டிராமா பண்ற..? டில்லிக்கு நீ ராணியாக இருந்தாலும் இந்த நந்தகுமாரனுக்கு நீ ராதைதான்.. உன்னைக் கண்டாக் கட்டிப் புடிச்சு முத்தம் கொடுக்கத்தான் தோணுது.. கன்னத்தில் போட்டுக்கத் தோணலையேடி தங்கம்..”

நந்தகுமார் கண்சிமிட்டினான்.. அனுராதாவின் உடலில் ‘ஜிவ்’ வென்று உணர்வுகள் பொங்கி எழுந்தன.. அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வெட்கம் கவிய வேறு திசையில் பார்த்தாள்.. அவன் எதையோ சொல்ல வருவதைப் போலக் குனிந்து அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்..

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link