Chapter 31

0Shares

பேசியது போதும் என்று நினைத்தவனைப் போல ரமணன் எழுந்து கொண்டான்.. கூட வந்த மாளவிகாவிடம் எதையும் பேசாமல் கார் கதவை அவளுக்காக திறந்துவிட்டான்.. அவனுடன் வெளியே வரும்போது அவன் காரிலேயே வருவதை வழக்கமாக வைத்திருந்த மாளவிகாவும்.. எந்தவித நினைவுமில்லாமல் இயந்திரத்தைப் போலக் காரில் ஏறி உட்கார்ந்தாள்.. காரைக் கிளப்பிய ரமணன் வேகம் கூட்டினான்.. கார் பறந்தது.. ரமணனின் பேச்சினால் துயரம் கொண்டிருந்த மாளவிகா மௌனமாக சாலையை வெறித்தபடி இருந்தாள்.. அப்போதுதான் அது நிகழ்ந்தது…

தனித்தனியாக.. பிரம்மாண்டமான பங்களாக்கள் அணி வகுத்திருந்த அமைதியான அந்தச் சாலையின் முனையிலிருந்த பூமரத்தின் அடியில் கார் நின்றது.. ரமணன் அவள் பக்கம் திரும்பினான்.. என்ன நிகழப் போகிறது என்று அவள் அனுமானிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்து அவள் உதடுகளில் முத்தத்தை பதித்து விட்டான்..

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவனின் இறுக்கமான அணைப்பையும்.. அழுத்தமான முத்தத்தையும் உணரவைத்தவன் நெருக்கத்தை அதிகப் படுத்த.. மாளவிகா அவனுக்குள் புதைந்து போனாள்…

அதற்கு முன்னால் அப்படிப்பட்ட பேரலைக்குள் அவள் அமிழ்ந்ததில்லை.. விடுபட முடியாத சுழலில் சிக்கிக் கொண்டவள்.. கண் செறுக.. கிறங்கிப் போனாள்.. ஆண்மை ததும்பிய அவனின் தொடுகையை உணர்ந்தவளுக்கு.. அவனது பிரத்யோக வாசனையில் மனம் மயங்கிப் போனது..

அதுவரை கண்ணியமான இடைவெளி விட்டுப் பழகிய ரமணன்.. அந்த இடைவெளியை அழித்து முன்னேறுவான்.. அவளைக் கைப்பற்றுவான் என்று கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத மாளவிகா தொய்ந்து போனாள்…

நீண்ட முத்தத்திற்குப் பின்னால்.. அவள் உதடுகளிலிருந்து விலகிய ரமணனின் முகம்.. அவளது காதோரமாக கிசுகிசுத்தது…

“இந்த நிமிசத்தை உன் ஆயுளுக்கும் நீ மறப்பியா மாளவிகா..?”

‘முடியாது..’ என்று நினைத்தவளால் அதை வாய் திறந்து சொல்ல முடியவில்லை…

“இந்த சந்தோசத்தை உன்னால மறக்க முடியாது.. ஆனாலும் நீ என்கூட வாழ வரமாட்ட.. அப்படித்தானே..?”

அப்படித்தான் என்ற துயரத்துடன் மாளவிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.. அதை உணர்ந்தவனின் மனம் இளகவில்லை.. மாறாக இரும்பாக இறுகியது…

“உன்னைத் தொட்ட இந்தக் கையால் என்னால வேறொருத்தியைத் தொட முடியாதுடி.. ஆனா.. என்னைத் தொட்ட உன்னால வேற ஒருத்தனோட வாழ முடியும்.. அப்படித்தானே…?”

“ரமணன்..” மாளவிகா விசும்பினாள்.. அவனிடம் கண்ணீர் மல்கும் குரலில் இறைஞ்சினாள்…

“நான் என்ன செய்யட்டும்..? என்னைச் சுத்தியிருக் கிறவங்க கேள்வி கேட்பாங்களே.. என் குடும்பம் என்னை ஒதுக்கி வைச்சிருமே…”

“ஓ.. என்கூட வாழ வந்தா.. என்னை உன் புருசனா ஏத்துக்கிட்டா.. உன்னைச் சுத்தியிருக்கிறவங்க கேள்வி கேட்பாங்க.. உன் குடும்பம் உன்னை ஒதுக்கி வைச்சிரும். அதனால.. நீ இன்னொருத்தன் கூட வாழப் போவ.. அப்படித்தானே..?” ரமணனின் கேள்வி தீயாக அவளைச் சுட்டது..

“சும்மா.. அப்படித்தானே.. அப்படித்தானேன்னு பேசினா எப்படி ரமணன்..? நீங்க வந்து என் வீட்டில பெண் கேட்க முடியுமா..? இல்லை.. நான் தான் வீட்டை விட்டு உங்ககூட ஓடி வர முடியுமா..?” மாளவிகா சுள்ளென்று பேசிவிட்டாள்…

“முடியாதில்ல..? நீ சொன்ன எதையும் செய்ய உன்னால முடியாதில்ல..? ஆனா.. என்னால எதுவும் முடியும்…”

பேசியபடியே காரிலிருந்த சிறிய ஷெல்பைத் திறந்த ரமணன் சிறிய அளவிலிருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்தான்.. மாளவிகாவின் மனதில் அது பதியவில்லை.. அவள் ரமணனை மறுக்க நேரிடும் துயரத்தில் இருந்தாள்.. ரமணன் அவள் மூக்கருகே கை வைத்தபோது.. அவனின் விரலின் தொடுகையில் கண்மூடி உதட்டைக் கடித்தவளுக்கு மயக்கம் வந்தது.. இவன் தொட்டாலே மயங்கிப் போகிறேனே.. என்ற நினைவோடு மயங்கி ரமணனின் தோள்மீது சரிந்தாள்…

பூமாலையாய் அவன் மீது விழுந்தவளை பிரியத்துடன் முடி கோதி.. அவள் நெற்றியில் முத்தமிட்டான் ரமணன்…

“நீதானேடி உன் வீட்டை விட்டுட்டு என்கூட ஓடி வர மாட்ட..? நான் உன்னைத் தூக்கிக்கிட்டு போகலாமில்ல..” மயங்கிச் சரிந்திருந்தவளிடம் கேட்டான்…

மாளவிகாவிடமிருந்து பதில் வரவில்லை.. சீரான சுவாசத்துடன் கண்மூடிக் கிடந்தாள் அவள்.. அவளின் கன்னம் தொட்டு முத்தம் பதித்தவன்.. அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு.. கையிலிருந்த மயக்க மருந்து ஸ்பிரேயரை ஷெல்பில் வைத்து மூடியவன்.. காரைக் கிளப்பினான்.. அது பறந்தது…

மாளவிகா கண் விழித்த போது.. புதிய இடத்தின் சூழலை உணர்ந்தாள்.. திறந்திருந்த ஜன்னலின் வழியாக.. சிலுசிலுவென்ற குளிர் காற்று.. ஈரப் பசையுடன் வந்து அவள் உடலைத் தழுவியது.. பூக்களின் இதமான நறுமனம் அறையெங்கும் நிரம்பியிருந்தது.. அதை நுகர்ந்தவள்.. மயக்க மருந்தை நுகர்ந்த நினைவில் தடுமாறிப் போனாள்..

‘என்ன ஆச்சு..? காருக்குள்ளே உட்கார்ந்திருந்nன்.. ரமணன் என்னைத் தொட்டாரு…’

அந்த நிலைமையிலும்.. அவன் நினைவில் கன்னம் சிவந்தாள் அவள்.. அவனின் விரல் தொட்ட அந்த நிமிசத்தில் நிலைத்திருந்தவளுக்கு.. அது கார் இல்லை.. வீடு என்பது அறிவில் பதிந்தது…

‘இங்கே எப்படி வந்தேன்..’ திகைத்தாள்…

‘ரமணன் என்னைத் தொட்டாரு.. அப்புறம்..?’

திரும்பத் திரும்ப அந்த நினைவு மட்டும்தான் அவள் மனதில் சுழன்றது.. எப்படி அங்கு வந்தாள் என்ற விவரம் மட்டும் தெரியவில்லை.. கண்மூடிக் கிறங்கியிருந்த வளுக்கு ரமணன் மயக்க மருந்தைப் பீய்ச்சியதோ.. அவள் அதை நுகர்ந்து மயங்கிச் சரிந்ததோ தெரியாமல் போனது…

‘என்ன ஆச்சு..? காரில் உட்கார்ந்திருந்தேன்.. ரமணன் என்னைத் தொட்டாரு..’

கட்டிலில் அமர்ந்து.. காற்றில் கோலம் போட்டுப் போட்டு யோசித்தவளுக்கு விடை கிடைக்கவேயில்லை.. தலையை மட்டும் வலித்து வைத்தது..

‘இது என்ன இடம்.. எங்கேயிருக்கோம்ன்னாவது பார்த்து வைப்போம்..’ தள்ளாடியபடி எழுந்தவள்.. ஜன்னல் பக்கமாக சென்று வெளியே பார்த்தாள்.. பிரமித்தாள்…

அவள்கண்ணுக்கு முன்னால்.. காட்டாறு ஓடிக் கொண்டிருந்தது.. அதன் கரையோரமாக செழித்து வளர்ந்திருந்த மலர்ச்செடிகள் கண்ணுக்கு குளுமையாக இருந்தன.. 

‘அற்புதமான அழகு…’

மாளவிகாவிற்கு எல்லாம் மறந்து போனது.. அது எந்த இடம் என்ற ஆராய மறந்து.. அதன் அழகில் மயங்கி நின்றாள்…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link