Chapter 07

0Shares

முட்டுக்காடு ‘வா’ வென்று அழைக்க… ஒருநாள் அவர்கள் இருவரும் அரை நாள் லீவ் சொல்லிவிட்டு… முட்டுக்காட்டை சுற்றிப்பார்க்கப் போனார்கள்.

ஏரியில் சுற்றி வரும் போது… ஷாலினியின் முகத்தில் ரகசியப் புன்னகை மலர… அனுபவஸ்தனான அரவிந்தனுக்கு ‘ஜிவ்’வென்று உடல் சூடேறியது… 

‘என்னத்தையோ சொல்லி உசுப்பேத்தி விடப் போறா…’

“என்னதான் தைரியசாலிபோல பில்ட் அப் கொடுத்தாலும் இன்னும் உங்களுக்கு ‘தில்’ வரவில்லை…”

“இன்னைக்கு இந்த சவால் காத்திருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா உன்னை முட்டுக்காட்டிற்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்க மாட்டேனே…”

“பின்னே… எங்கே கடத்திக்கிட்டு போயிருப்பீங்க…?”

“கடத்திக்கிட்டு ஏன் போகணும்..? நான் கண்ணடிச்சா நீ என் பின்னாடியே வந்திருக்க மாட்டியா…?”

“எங்கே வந்திருப்பேன்…?”

“ஈ.ஸி.ஆர். ரோட்டில வண்டிய விட்டா… எக்கச்சக்கமாய் ரிஸார்ட் இருக்கு…”

“அங்கே போய் என்ன செய்யறதாக உத்தேசம்…”

“எதிர்காலத் திட்டத்தைப் போடற உத்தேசமில்லை…”

“அதான் தெரியுமே…”

“முதல் பகலை கொண்டாடிலாமுன்னு உத்தேசம்…”

“முதல் பகலா…?”

“ஆமாம்டி… ராத்திரியில் உன்னைத் தொட்டால் அது முதல் ராத்திரி… பகலில் தொட்டால் அதுதானே முதல் பகல்?”

“எவ்வளவு தெனாவெட்டு இருந்தா… இதைச் சொல்வீங்க… படவா ராஸ்கல்…”

கையிலிருந்த ஹேண்ட் பேக்கால் அரவிந்தனை அடித்தாள் ஷாலினி… சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டான் அரவிந்தன்…

“அந்த இடத்துக்கெல்லாம் நீங்க கூப்பிட்டா பின்னாடியே வந்து விடுவேனா…? இப்படி எத்தனை பேரை கூப்பிட்டுக்கிட்டு போயிருப்பீங்க…?”

“இதுவரை எவளும் எனக்கு ‘தில்’லிருக்கான்னு கேட்டதில்லையே…” ஷாலினி உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு நகர்ந்து அமர்ந்தாள். அரவிந்தன் அவளைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினான். ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்ட பின்பு…

“வாய் வலிக்குதுடி…” என்று பரிதாபமாக சொன்னான்…

அவன் நிலையைக் கண்டு மனமிரங்கியவள் போனால் போகிறது என்ற மலை இறங்கினாள்.

“உம்முன்னு இருக்காதேடி… சிரி…”

“நீங்க பேசின பேச்சுக்கு நான் அழுதிருக்கணும்…”

“நீயும்தான் எதையும் விளங்கச் சொல்ல வேணாமா…?”

“அதுக்காக… ஒண்ணும் ஒண்ணும் இரண்டுன்னு கணக்குப் போட்டிருவீங்களா…?”

“நீ வேற… உன் ஒருத்தியோட விசயத்திலதான் ஒழுங்கா கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கேன்… இதுவே வேற ஒருத்தியா இருந்தா… என் கணக்கே வேற மாதிரி இருக்கும்…”

“நீங்க திருந்தவே மாட்டிங்க…”

“நீ எதுக்கு இருக்க…? என் தாலியை கழுத்தில் வாங்கிக்கிட்டு என்னைத் திருத்து…”

அதைக் கேட்டவளின் முகம் மென்மையானது… அதுதான் சாக்கென்று அவன் இடைவெளியைக் 

குறைத்து அவளோடு ஈஷிக் கொண்டான்… அவனது கைவிரல்களோடு.. அவள் கைவிரல்களைப் பிணைத்துக் கொண்டான்…

“ஷாலினி…”

“ம்ம்ம்…”

“இன்னைக்கு எதைச் சொல்லி உசுப்பேத்தி விடலாமுன்னு இருந்த…?”

“இத்தனை செய்கிறவருக்கு ‘ஐ லவ் யு’ன்னு சொல்ல தைரியம் வரலையான்னு கேட்கலாமுன்னு இருந்தேன்…”

ஏரிக்கரையின் இதமான சீதோஷ்ண நிலையில்… ஈரக்காற்று உடல் வருட… அந்த இன்பமான மனநிலையில்.. அவள் முகம் பார்த்து…

“ஐ லவ் யு…” என்றான் அரவிந்தன்..

“ஆக ஒட்டி உறவாடி… எல்லா வேலைகளையும் பண்ணிவிட்டு கடைசியில் ‘ஐ லவ் யு’ன்னு சொல்லியிருக்கே…” என்றான் கார்த்திக் 

“அது என் தப்பில்லை… அவளோட தப்பு…”

“இதென்னடா புது லாஜிக்கா இருக்கு..”

“ஆமாண்டா கார்த்தி… ‘உனக்கு அதுக்கு தைரியம் பத்தாது’… ‘உனக்கு இதுக்கு தைரியம் பத்தாது’ன்னு சொல்லி உசுப்பேத்தி விட்டவ… இதைக் கடைசியில் சொல்லித்தானே உசுப்பேத்தி விட்டா…?”

“நீயாச் சொல்வேன்னு எதிர்பார்த்திருப்பா.. அவ சொன்னதைப் போலவே… நீ தைரியம் பத்தாம இருந்தேன்னு அவளுக்கு எப்படிடா தெரியும்…?”

“அவளுக்குத்தான் என் தைரியத்தின் அளவைப் பத்திக் தெரியாது. உனக்குமாடா கார்த்தி தெரியாது…?”

“அது தெரிஞ்சதாலதான் யோசிக்கிறேன்…”

“என்ன யோசிக்கறே…?”

“ஊருக்கே ‘ஐ லவ் யு’ சொன்ன ஆளு நீ… உன்கிட்டப் போயி ‘ஐ லவ் யு’ சொல்லச் சொல்லி… கேட்டு வாங்கியிருக்கா பாரு… ஐயோ பாவம்…”

“இதை உண்மையா அவ ஒருத்திகிட்ட மட்டும் தாண்டா சொன்னேன்…”

இதை உண்மையாக மனதிலிருந்துதான் அரவிந்தன் சொன்னான்… அது கார்த்திக்கிற்கும் தெரியும்…

வேறு எந்தப் பெண்ணுக்கும் – ஷாலினிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அரவிந்தன் கொடுத்ததில்லை…

வேறு எந்தப் பெண்ணிடம் பேசினாலும்… அது மணிக்கணக்கில் நடந்த பேச்சாக இருந்தாலும்… உடனே மறந்து விடுவான்… அதுவே ஷாலினியுடன் பேசிய பேச்சாக இருந்தால்… ‘ம்’ என்ற ஒரு எழுத்தைக் கூட மறக்காமல் நினைவில் வைத்திருப்பான்…

மற்ற பெண்களிடமிருந்து தள்ளியே நின்றவன் ஷாலினியை மட்டும் விடாமல் பின் தொடர்ந்தான்…

அவளுக்கென்று தன் மனதைப் பூராவும் அரவிந்தன் கொடுத்து விட்டதை கார்த்திக்கால் புரிந்து கொள்ள முடிந்தது…

“எனக்கு இந்த சைக்காலஜியும் பிடிபட மாட்டேங்குடா மச்சான்…”

“இப்ப எந்த சைக்காலஜியை ஆராய்ச்சி பண்ற…?” அரவிந்தன் சந்தேகத்துடன் கேட்டான்…

“இந்த பருத்தி வீரனுங்க எல்லாம் எப்படிடா.. ஒரு பெண்ணோட கண்ணசைவில் சிறை பட்டு விடறாங்க..?”

அரவிந்தன் உதடுகளை வளைத்து பெருமையாக சிரித்துக் கொண்டான்…

“இதுக்கு இம்புட்டு பெருமையாடா மச்சான்…?”

“பின்னே..? இருக்காதா…?”

“என்னவோ போடா மச்சான்… நான் பார்த்தாலும் பார்த்தேன்… உன் ஆளைப் போல ஒருத்தியை பார்த்ததேயில்ல…”

“இனியும் பார்க்காதே…”

“நான் எதுக்குடா மச்சான் அந்த வேலையைப் பார்க்கப் போறேன்…? அது என் தங்கச்சிடா…”

“அஃது… அப்படியே அண்ணன்.. தங்கச்சி ரிலேஷன்ஷிப்பை டெவலெட் பண்ணு…”

“பாசமலரையே வளர்த்து விடறேன்.. நீ கவலையே படாதே…”

“நான் எதுக்குடா கவலைப்படணும்…? கல்யாண வயசில கை.. கால்… முறியாம பத்திரமா இருக்கணுமுன்னு நீதான் கவலைப்படணும்…”

“எத்தனை வருச பிரண்ட் ஷிப்புடா நம்ம பிரண்ட் ஷிப்?”

“அது கழுத… காலேஜ் காலத்தில் இருந்தே கூட வருதே.”

“அப்பேர்பட்ட மூழ்காத ஷிப்பை… ஒரு பெண்ணுக்காக கடலில் தூக்கிப் போட்டு மூழ்கடிக்கப் பார்க்கறியேடா மச்சான்…”

“அது பிரண்ட்ஷிப்… இது லவ்…”

“ம்ஹூம்.. உனக்கு ‘தில்’லிருந்தா.. இதைச் செய்… உனக்கு ‘தில்’லிருந்தா அதைக் செய்ன்னு… உசுப்பேத்தி விட்டே உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாளேடா அந்த மகராசி…”

“அதில உனக்கெதுக்குடா இம்புட்டு காண்டு…?”

“எங்கிருந்தாலும் வாழ்ந்துக்கடா மச்சான்… எனக்கெதுக்கு உன் மேல காண்டு…?”

கார்த்திக் வாழ்த்தி வைத்தான்…

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link