Chapter 17

0Shares

அறையில் ஊதுபத்தியின் இதமான நறுமணம் சூழ்ந்திருந்தது… கட்டிலில் மல்லிகை மலர்கள் பரவி… ஊதுபத்தியின் நறுமணத்தோடு தங்களின் நறுமணத்தையும் இணைத்து வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தன.

உள்ளே வந்த அரவிந்தன்… மனதிற்குள் மிகவும் இதமாக உணர்ந்தான்.

என்னதான் பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டாலும் மனதின் ஓரத்தில் ஒரு சஞ்சலம் இருக்கத்தான் செய்தது…

வெள்ளிமலையும்… விசாலாட்சியும் கிளம்பி வந்து அந்த சஞ்சலத்தை போக்கி விட்டார்கள்.

‘அப்பாம்மா வரலைன்னா… இந்த நைட்டுக்கான ஏற்பாடு இப்படியா இருந்திருக்கும்…?’

அரவிந்தன் நிறைவாக உணர்ந்தான்.

வெள்ளிமலையும் விசாலாட்சியும் வந்திருக்கா விட்டாலும் அவனுக்கும் ஷாலினிக்குமான முதலிரவு அன்று நடந்துதானிருக்கும்.

ஆனால்… அது காதலுடன் சேர்ந்த கிளர்ச்சி கலந்த கலப்பாக இருந்திருக்குமே தவிர… இதைப் போன்ற சுகந்தமான இனிமையுடன் அமைதியைத் தரும் கலப்பாக இருந்திருக்காது…

கார்த்திக்கை அதே வீட்டில் வைத்துக் கொண்டு அரவிந்தனுடன் தனிமையில் சுகித்திருக்க… ஷாலினி தயங்கியிருப்பாள்.

இப்போது அப்படியில்லாமல் போய்விட்டது.

விசாலாட்சியின் சமையலை ஒரு பிடி பிடித்து விட்டு… வெள்ளிமலையுடன் உலக அரசியலை அலசிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அவர்கள் இருவரும்… முன்பக்க வராண்டாவில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்க… விசாலாட்சி… அரவிந்தனின் படுக்கையறையை ஒழுங்கு பண்ணிவிட்டு… ஷாலினிக்கு தலைவாரிப் பின்னிவிட்டு மெலிதான ஒப்பனைகளை செய்து விட்டாள்.

“பால் தம்ளரை எடுத்துக்கிட்டு தூங்கப் போம்மா…” என்று சொல்லிவிட்டு அவளும் அரட்டையில் சங்கமிக்க வாசல்பக்கம் சென்று விட… ஷாலினி ஒரு வகையான விடுதலை உணர்வை அனுபவித்தாள்.

எந்தவித சங்கடமும் இல்லாமல் அவள் அரவிந்தனின் அறைக்குள் நுழைந்த போது… காத்திருந்த அரவிந்தன் கதவைத் தாழிட்டு விட்டு அவளை நெருங்கினான்…

“இதிலெல்லாம் செம விவரம்…”

ஷாலினி… அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்… தள்ளிய கையை இறுகப் பற்றிக் கொண்டவன்.

“எதைச் சொல்கிறாய்…?” என்று கண் சிமிட்டினான்…

“உங்களுக்கா தெரியாது…?” அவள் முகம் சிவக்க பின்வாங்கினாள்.

“உனக்குத் தெரியாதா…?” அவன் புருவங்களை உயர்த்தியவாறு… முன்னேறினான்…

கட்டிலில் மோதி நின்ற ஷாலினி… அதற்கு மேல் நகர முடியாமல் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டாள்.

வெற்றிகரமாக அவளைத் தன் கைக்குள் கொண்டு வந்து விட்ட அரவிந்தன்… அவளது விரல்களைப் பிரித்து அவள் முகம் பார்த்தான்.

“ஷாலினி…”

“ம்ம்ம்…”

“எப்பவும் கேட்கிற கேள்வியை இப்ப ஏண்டி மறந்திட்ட?”

“எதைச் சொல்கிறீங்க…?”

” ‘தில்’லைத்தான் சொல்கிறேன்…”

“காதலித்த காலத்திலேயே அதை புரூவ் பண்ணிட்டீங்க… அதனால… வேற பேசலாமே…”

“காதலனா புரூவ் பண்ணியிருக்கேன்… ஹஸ்பெண்டா புரூவ் பண்ணலையேடி…”

“ப்ளீஸ் அரவிந்த்…”

அந்த பிடிவாதக்காரன் அவளது கெஞ்சுதலை காதில் போட்டுக் கொள்ளாமல் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்… எல்லை மீறியவனின் கைகளில் விருப்பத்துடன் சிக்கிக் கொண்ட ஷாலினி… கிறக்கத்துடன் விழி மூடிக் கொண்டாள்…

கூடிக் களைத்து… விலகிப் படுத்தபோது.. அவன் மார்பில் தலை வைத்து…

“அத்தை-மாமா வராமல் இருந்திருந்தா எனக்கு என்னவோ போல இருந்திருக்கும்…” என்றாள் ஷாலினி…

அவள் சொல்ல வந்ததை அரவிந்தன் புரிந்து கொண்டான். அவளது கூந்தலை வருடியபடி… இதமாக புன்னகைத்தான்.

“நானும் எதிர்பார்க்கலைதான்…”

“நிஜமாகவே அவங்க கிரேட்…”

“ஷ்யூர்…”

“அவங்க மட்டும் வரலைன்னு வையுங்க…”

“இந்த நைட்டில்… நீ இப்படி என்கூடத் தூங்கியிருக்கமாட்டே… அதுதானே…?”

“ம்ம்… கார்த்திக் அண்ணா இருக்கார்…”

“ஒருவேளை அவனே.. இதை நினைத்துத்தான் அவங்களை வர வைத்தானோ என்னவோ…”

“நீங்க லக்கி…”

“அதனாலதான் நீ என் வொய்ஃபா கிடைச்சிருக்கே…”

“உங்களுக்கு கார்த்திக் அண்ணனைப் போல ஒரு ஃபிரண்டு கிடைச்சிருக்காரே… அதைச் சொன்னேன்…”

“அவன் நீ கிடைச்சது என் அதிர்ஷ்டம்ன்னு சொல்றான்…”

அவளது மேனியிலிருந்து வந்த பிரத்யேக வாசனையை நுகர்ந்த அரவிந்தன்.. அவளது முகத்தோடு முகம் வைத்து வினவினான்…

“ஏண்டி என்னை சவாலுக்கு இழுத்த..? அப்படி என்னிடம் என்னதான் இருக்கு…?”

இதைக் கேட்டவனின் வசீகரத்தால் வசீகரிக்கப்-பட்டாள் ஷாலினி. மெலிதாக புரண்டு படுத்து… அவனது காதோரமாக பாடினாள்…

“வசீகரா… என் நெஞ்சினிக்க…

உன் பொன்மடியில்

தூங்கினால் போதும்…

அதே கணம்… என் கண்ணுறங்க…

முன் ஜென்மங்களின் 

ஏக்கங்கள் தீரும்…

நான்… நேசிப்பதும்… சுவாசிப்பதும்… 

உன் தயவால்தானே…

ஏங்குகிறேன்… தேங்குகிறேன்..

உன் நினைவால்… நானே…”

அவனோடான வாழ்வின் எதிர்பார்ப்புகளை பாடல் வரிகளில் கூற ஆரம்பித்தாள்.

“அடை மழை வரும்…

அதில் நனைவோமே…

குளிர் காய்ச்சலோடு சேர

ஒரு போர்வைக்குள் சிறுதூக்கம்.

குளுகுளு பொய்கள் சொல்லி

என்னை வெல்வாய்…

அது தெரிந்தும்கூட அன்பே…

மனம்… அதையேதான் எதிர்பார்க்கும்.

எங்கேயும்… போகாமல் தினம்…

வீட்டிலேயே நீ வேண்டும்…

சிலசமயம் விளையாட்டாய்…

உன் ஆடைக்குள்ளே நான்வேண்டும்..”

அரவிந்தனுக்கு இது புதிது. அவனுக்கான அவளது தேடலை அவன் அறிவான். ஆனால்… இந்த அளவுக்கு அவள் தேடுவாள் என்பதை அப்போதுதான் அவன் அறிந்தான்.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link