Chapter 09
கடலோரமாக மிருணாளினியுடன் இணைந்து நடந்தான் முகிலன்.. கடலோரக்காற்று அவன் உடலைத் தொட்டுச் சென்றது.. அந்த ஸ்பரிசம் கொடுத்த இன்பத்தை விட.. அதிகமான இன்பத்தை மிருணாளினியின் சேலை முந்தானை அவன் முகத்தில் படிந்து ஸ்பரிசம் கொடுத்தது..
மெதுவாக அவள் முகம் பார்த்தான்.. பனியில் குளித்த மலரின் அழகு அவள் முகத்தில் தெரிந்தது…
அவன் பார்வையை உணர்ந்த அவள் முகம் சிவக்க.. அந்த முகச் சிகப்பில் அவன் மயங்கினான்..
அவளிடம் தெரியும் அந்த அறியாமை கலந்த அழகு எப்போதும் போல இப்போதும் அவனை வசீகரித்தது..
ஜென்ம.. ஜென்மங்களாய் அறிந்ததைப் போன்ற ஓர் உணர்வையும் சொந்தத்தையும் ஒரு பெண்ணால் தர முடியுமென்று முதன் முதலாக அவனுக்கு உணர்த்தியவள் மிருணாளினிதான்..
தேக சுகத்தையும் தாண்டிய ஒரு நிறைவை அவளது காதல் அவனுக்குத் தந்தது..
அந்தி வானத்தின் இளம் மஞ்சள் வெளிச்சத்தில் அவள் அற்புதமான அழகோடு ஒரு தேவதையைப் போலத் தெரிந்தாள்…
“எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலையோரம்…
வருவதென்ன மாய மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…”
முகிலன் வாய் விட்டுப் பாடினான்.. அவள் விழிகள் வியப்பைக் காட்டின.. அவனது ஆர்வமான பார்வையைப் கண்டதும் கண்மூடி படகில் சாய்ந்து நின்றாள் மிருணாளினி..
“இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்…
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்…
ஆண் மனதை அடிக்கும் அந்த சாபம்…
அறிவை மயக்கும் மாயதாகம்…”
அவளது கன்னச்சிவப்பு அதிகரிக்க முகிலன் நெருங்கி நின்றான்..
அவளது மனம் படபடத்ததை உணராதவனாய் முத்தமிட்டான்..
“இவளைப் பார்த்த இன்பம் போதும்…
வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்…”
மிருணாளினியின் இமைகள் படபடக்க… அவன் மார்பில் முகம் புதைத்தாள் அவளது தோள் வளைவில் முகம் பதித்தவன்.. அவளது காதோரமாக பாடினான்…
“கனவுகளில் வாழ்ந்த நாளை…
கண்ணெதிரே பார்க்கிறேன்…
கதைகளிலே கேட்ட பெண்ணா…?
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்…”
தேவதை கதைகளில் வந்த தேவதையொருத்தியைப் பார்ப்பதைப் போல அவள் முகத்தை கையில் ஏந்திப் பார்த்தான் முகிலன்…
“அங்கும் இங்கும் போகும் கால்கள்…
அசைய மறுத்து தேங்குதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க…
இதயம் கூட ஏங்குதே…
என்னானதோ.. ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது…”
அவளது இடுப்பில் கை கொடுத்து அவன் தூக்கிக் கொள்ள பூ மாலை போல் அவனது கையில் கிடந்தாள் மிருணாளினி..
“கவிதையொன்று பார்க்கப் போக…
கண்கள் கலங்கி நானும் ஏங்க…
அழகின் சாயல் என்னைத்தாக்க…
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க…”
அவனது கழுத்தில் கைகளை மாலையாக்கி அவன் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டவளின் மனம் சந்தோசித்தது…
இந்த நிமிடம் நகராமல் உறைந்து போக வேண்டுமென்று அவர்கள் இருவருமே மனதிற்குள் வேண்டிக் கொண்டனர்…
“மிருணா….”
“ம்ம்ம்….”
“இத்தனை நாளாய் எங்கேடி இருந்த…?”
“என் வீட்டில்…”
“நீ இல்லாத வாழ்வை நான் வாழ்ந்திருக்கிறேன்னு நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமா இருக்குடி…”
“ஏனாம்….?”
“உன்னோடு காலம் காலமாய் வாழ்ந்ததைப் போல ஒரு ஃபீலிங் மிருணா…”
“உங்க ஃபீலிங்தான் இந்த ஊருக்கே தெரியுதே.. எவ்வளவு நேரம்தான் என்னைத் தூக்கிச் சுமந்துக்கிட்டு இருப்பீங்க…? இறக்கி விடுங்களேன்…”
“கொஞ்ச நேரம் கையிலேயே இரு மிருணா…”
“கை வலிக்காதா…?”
“வலிக்காது…”
“நான் கனக்கலையா…?”
“பூ எங்கேயாவது கனக்குமா…?”
மிருணாளினி இதைக் கேட்டதும்… ‘களுக்’கென்று சிரித்தாள்.. அவன் கைகளிலிருந்து திமிறி இறங்கியவள்..
“ஆர்டிபிஷியலா பேசுகிறிங்க…” என்றாள்..
“எது ஆர்ட்டிபிஷியல்…? என் காதலா..?”
“ஊஹூம்.. உங்க பேச்சு…”
“காதல் வந்தால் பேச்சு இப்படித்தான் வரும்..”
“எனக்கு வரலையே…”
“எது…? காதலா…?”
“ஊஹூம்.. இந்தப் பேச்சு…”
“உனக்கு என்னளவு காதல் இல்லை…”
‘அப்படியா…?’ என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டாள் மிருணாளினி..
முகிலன் அவளைக் காதலிக்கும் அளவிற்கு… அவள்.. அவனைக் காதலிக்கவில்லையா…?
‘இல்லை…’ என்றது அவள் மனது…
‘நீ கோபக்காரியாய் இருக்கலாம்.. அவன் மேல் கோபம் கொண்டு மாதக்கணக்கில் அவனோடு பேசாமல் இருக்கலாம்.. ஆனால் உன் ஆழ்மனதில் அவன் மேல் வற்றாத காதலுண்டு.. அவனில்லாத வாழ்வை நீ நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாய்…’
“என்னடி… பேசாமல் இருக்க…?” என்றான் முகிலன்.. அவனது விரலோடு.. விரல் பிணைத்துக் கொண்ட மிருணாளினி…
“ஐ லவ் யு…” என்றாள்..
“நிஜமாகவா…?” அவன் நம்பாதவனைப் போலக் கேட்டான். அவளுக்கு கோபம் வந்து விட்டது… சட்டென்று கையை உருவிக் கொண்டு…
“இல்லை… பொய்…” என்றாள்..
“அதுக்கு.. எதுக்கு கையை உருவனும்…?” அவன் விசமமாக சிரித்தான்..
“நானே உங்களைக் காதலிக்கலை.. அப்புறம் எதுக்கு உங்க கையோடு… கை பிணைக்கனும்…”
“சும்மாத்தான்…”
அவன் சும்மாயிருக்காமல் கண் சிமிட்டி வைக்க.. அவள் அருகிலிருந்த ஹேண்ட் பேகை எடுத்து.. அவன் முதுகில் ஒரு போடு போட்டாள்..
“ஹப்பா.. என்ன ஒரு கோபம்…”
அவன் சிரித்துக் கொண்டே அவள் தோள் மீது கை போட.. அவளது கோபம் பறந்து விட்டது.. அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டவள்…
“முகில்…” என்றாள்..
“சொல்லு…”
“ஐ ஆம் ஸாரி…”
“உனக்கு வேற வேலையே இல்லைடி.. ஒரு நாள் சிரிப்பது.. அடுத்த நாள் முறைப்பது.. மூணாம் நாள் ‘முகில்.. ஐ ஆம் ஸாரி’ன்னு கொஞ்சுவது.. இதுவே உனக்கு வேலையாய் போச்சு…”
“நான்தான் ஸாரி சொல்லிட்டேனே…”
“ஸாரி சொன்னா.. எல்லாம் சரியாப் போயிடுமா..?”
“வேற என்ன செய்யணும்.. சொல்லுங்க.. செய்கிறேன்..”
“ம்ம்.. என் கன்னத்தில் ஒரு ‘உம்மா’ கொடுக்கணும்..”
“ம்ம்.. ஆசை.. தோசை.. அப்பளம்.. வடை…”
“எனக்கு அதெல்லாம் வேணாம்டி.. உன் ‘உம்மா’ தான் வேணும்…”
அவள் போக்குக் காட்டினாலும்.. கடைசியில் அவன் கேட்பதை கொடுத்து விட்டுத்தான் கிளம்பினாள்..
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.