Chapter 22
மிருணாளினி தவித்தாள்.. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.. அதைத் தடுக்கும் வழி தெரியாமல் துடித்தாள்.
முகிலனிடம் வீராப்பாய் பேசியவளால் அவனை மறந்து வேறொருவனை மணக்க முடியவில்லை…
‘என்ன செய்வது…?’
செத்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்த நிலையில் தான் அவளது அலுவலகத்திலிருந்து அவளுக்கு போன் வந்தது…
அவளுடைய கம்பெனியின் எம்டி பேசினார்…
“இது ஆடிட் டைம் மிருணா.. அக்கவுண்ட்ஸ் செக்சனில் நீ இருக்கிறாய்.. ஆபிஸுக்கு வந்து சேர்…”
மிருணாளினிக்கு வேறு வழி இருக்கவில்லை.. அவளாக உருவாக்கிக் கொண்ட வீட்டுச் சிறையிலிருந்து அவளே விடுபட்டாள்.. வெளியே வந்தாள்..
முகிலனுக்கு ஆடிட் சம்பந்தமாக அவளிடம் மட்டுமே கேட்பதற்கு நிறைய விவரங்கள் இருந்தன.
அவனது பார்வையைத் தவிர்த்து குனிந்த தலை நிமிராமல் அவள் பதில் சொல்ல.. அவனது பார்வை அவளையே மொய்த்தது..
“மிருணா…”
“யெஸ் சார்…”
“என்னைப் பாருடி..”
“மரியாதை குறைகிறது சார்…”
“ஏய்ய்.. நான் உன் முகிலன்டி..”
“கடந்த காலத்தின் பொய்களைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம்..”
முகிலன் பொறுமையிழந்தான்.. அவன் கண்களில் கனல் வீசியது.
“எது பொய்…? நானா…?”
“இதைத்தான் ஆடிட்டில் கேட்கிறாங்களா…?”
“ஐ லவ் யு…”
மிருணாளினியின் மனம் அசைந்தது.. அவளது இதழ்கள் துடித்தன.. அவள் கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்டு வேறு திக்கில் பார்த்தாள்..
“ஆள் மாற்றிச் சொல்கிறீர்களே சார்…”
“இதை ஆயிரம் தடவை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்..”
“இனி நிஷாவிடம் மட்டும் இதைச் சொல்லுங்க..”
மிருணாளினி வெளியே போகத் திரும்ப.. முகிலன் அவளை வழி மறித்தாள்..
“கன்ட்ரோல் யுவர் ஷெல்ப்.. இது ஆபிஸ்…”
“அப்போ ஈவினிங் என்னைப் பார்க்க வா…”
“ஏன்..? கம்பெனி கொடுக்க நிஷா இல்லையா…?”
“த்சு.. புரியாமல் பேசாதே மிருணா.. அவள் என் அக்காவின் ஒன்றுவிட்ட நாத்தனார். என் மாமாவே போன் பண்ணி அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்னு கேட்டுக்கிட்டார். இரண்டு மாத புரொஜெக்ட் வொர்க்.. அவளை பத்திரமாய் கவனித்து அனுப்ப வேண்டியது என் பொறுப்பில்லையா..?”
“அதுதான் தெரியுமே.. எவ்வளவு பொறுப்பாக மஹாபலிபுரத்துக்கும்.. மங்காத்தா படத்துக்கும் கூப்பிட்டுக் கிட்டு போனீங்க.. அடடா.. காணக் கண் கோடி வேணும்..”
“நீ கண்டாயா…?” அவன் நிதானமாக வினவினான்..
“அது வேற உங்களுக்கு குறையா…?” எரிப்பதைப் போலப் பார்த்தாள் மிருணாளினி.
“முட்டாள்.. அவளுடன் நான் ஆபிஸுக்குத்தான் சேர்ந்து வந்திருக்கிறேன்.. அவுட்டிங் போனதில்லை…” முகிலனின் குரலில் உண்மையிருந்தது..
“அன்றைக்கு நான் கூப்பிட்டபோது நீங்க வரலையே..”
“அம்மாவுக்கு உடம்புக்கு முடியலைடி.. டைபாயிடு ஜுரம்.. ஹாஸ்பிடல் போக வேண்டியிருந்தது…”
“அப்புறம் எதுக்கு நிஷா அப்படிச் சொன்னாள்..?”
தன்னையறியாமல் மிருணாளினி வாய் விட்டுவிட.. முகிலனின் பார்வை கூர்மையானது..
“ஓ.. அவள்தான்.. உன்னைக் கிளப்பி விட்டாளா..? இது எனக்குத் தெரியாமல் போச்சே…”
“தெரிந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க…?”
“எங்க கம்பெனியில் புரொஜெக்ட் வொர்க் பண்ண வசதியில்லை.. டெல்லியிலேயே அதை முடித்துக்கன்னு சொல்லி அனுப்பியிருப்பேன்…”
மிருணாளினி விழித்தாள்.. அவன் மேலான அவளது கோபத்தின் அடிப்படை தகர்ந்து போனபோது.. அவளது கண்முன்னே நடந்து கொண்டிருக்கும் திருமண ஏற்பாடுகளைப் பற்றிய நினைவு பூதாகரமாய் எழுந்து அவளை அச்சுறுத்தியது…
முகிலன் அவளையே பார்த்தான்.. அவனது பார்வை அவளைக் குற்றம் சாட்டியது.
“உனக்கும் ஒரு அக்கா இருக்கிறாங்க.. உனக்கு அந்தப் பொறுப்பு புரியும்.. நம் வீட்டில் பிறந்த பெண்ணை இன்னொரு வீட்டுக்கு வாழ அனுப்பியிருக்கிறோம். அவளைச் சேர்ந்தவங்களுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தில்தான்.. நம் வீட்டுப் பெண்ணுக்கு அவங்களும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.. இந்த அடிப்படையில் தான் நான் என் அக்காவின் வீட்டுப் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.. வேறு எந்த வித உணர்வும் எனக்கு அவள்மேல் இல்லை…”
“அவள் முன்னால் என் மேல் எரிந்து விழுந்தீங்களே.”
“நீ அவளுடன் போட்டி போடுகிறாய்ன்னு நினைத்தேன்.. அவளை உபசரிப்பது உன் கடமை.. அதை மறந்துவிட்டு அவளை எதிரிபோலப் பார்க்கிறாய்ன்னு கோபப்பட்டேன்..”
மிருணாளினியின் எல்லாக் கேள்விகளுக்கும்.. முகிலனிடம் பதில்கள் இருந்தன..
பின்வாங்க முடியாத திருமண ஏற்பாடுகளில் சிக்கி விட்ட மிருணாளினி மனம் கலங்கினாள்..
முகிலனை துரோகியென்று நினைத்த போதே அவனை மறக்க முடியாமல் சாகத் துணிந்தவளுக்கு.. அவன் குற்றமற்றவன் என்பதைத் தெரிந்து கொண்டபின்னால் மனம் நிலை கொள்ளவில்லை..
“கோபம் வந்தால் என்னோடு பேசாமல் கொன்று புதைப்பாய்.. அதுதானே உன் வழக்கம்..? என்னை விட்டுவிட்டு இன்னொருவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள எப்படி மனம் துணிந்தாய் மிருணா..? இது நீ செய்யும் வேலையில்லைடி.. இதை உன்னிடம் நான் எதிர்பார்க்கலை…”
முகிலன் முகம் இறுகக் கூறிய வார்த்தைகள் அவளது இதயத்தை சல்லடையாக்கின..
அவள் தன்னை மறந்து அவன் கைகளில் புகுந்து அவன் மார்பில் புதைந்து கொண்டாள்..
அவளது கண்ணீர் அவன் மார்பை நனைத்தபோது.. அவளின் காதலின் துயரம் அறிந்தவனாக முகிலன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைத்தான்.
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.