Chapter 12

0Shares

சிந்துகின்ற மழைத்துளியில்

சிந்தி சிதறியது

எந்தன் நெஞ்சம்..

அவனும்தான் இதே வைசாலி அபார்ட்மெண்டில் இருக்கிறான்.. அவனுக்குத் தெரியாதது.. ப்ரீதிக்கு மட்டும் எப்படித் தெரிந்தது என்று புரியாமல் திகைத்தான் பிரதாப்..

“ரொம்பவும் மண்டையைப் போட்டு உடைச்சுக்காதே நியூ இயர்என்ட் கணக்கில பிஸியா இருந்த.. காலையில சேவல் கூவுறதுக்கு முன்னால பேங்குக்கு ஓடிட்டு.. நடுராத்தியில மோகினிப் பேய்க கூட டூயட் பாடிட்டு வந்து சேர்ந்த.. அதனால உனக்குத் தெரிஞ்சிருக்காது…”

“அஞ்சனா இதுக்குச் சம்மதிச்சுட்டாளா..?”

“யாருக்குத் தெரியும்..?”

ஆழமான பார்வையுடன் ஆழமான குரலில் கேட்டாள்.. ப்ரீதி, பிரதாப்பிற்கு சாப்பிட முடியவில்லை.. அப்போதும் கனவு கலையாமல் நின்று கொண்டிருந்த அன்னையை ஓர் பார்வை பார்த்துவிட்டு தட்டை சமையல் மேடையில் வைத்துவிட்டு வெளியேறினான்.. பால்கனியில் நின்று கொண்டு.. சாலையை வெறித்தவனுக்கு பக்கத்து வீட்டிலிருந்த மலர்த்தோட்டம் மனதில் பதியவில்லை.. எப்போதுமே அந்த மலர்வளைவில் அவன் மனம் குளிர்ந்து விடும். இன்று அவனது மனவெம்மையை அந்த மலர் கூட்டங்களால் கூட தணிக்க முடியவில்லை..

“எப்படிப் பார்ப்பா..” அவன் மனம் குமுறியது..

அஞ்சனாவின் படபடக்கும் இமைகளுக்கிடையே உயரும் வெட்கம் படர்ந்த விழிகளில் தெரியும் காதல் பார்வையில் அவன் மனம் உழன்றது..

‘என்னை மட்டும்தானே அப்படி பார்ப்பா.. நாளைக்கு சாயங்காலம் இன்னொருத்தன் அவளைப் பெண் பார்க்க வந்தா.. அவனையும் அதே பார்வை பார்ப்பாளா..?’

அவன் உன்மத்தம் பிடித்தவனைப் போலானான்..

“அண்ணா…”

மயிலிறகால் மனம் வருடுவதைப் போல மென்மையாக அழைத்தபடி ப்ரீதி அவனருகில் வந்து நின்றாள்.. அவன் பேசவில்லை…

“அஞ்சனா இதுக்கு சம்மதிச்சுட்டாளான்னு நீ கேட்ட.. யாருக்குத் தெரியும்னு நான் சொன்னேன்.. நீ அதைப் பத்திக் கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா..?”

ப்ரீதியின் கேள்விகள் அவனது புருவங்கள் முடிச்சிட்டன.. அவளது பேச்சில் ஏதோ ஒரு மறைபொருள் ஒளிந்திருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது..

“ப்ரீதி..” 

“அஞ்சனாவுக்கு இதில பிடித்தமா.. பிடித்த மில்லையான்னு யாருக்குமே தெரியாது.. உனக்கும் கூடவா தெரியாது..”

“ப்ரீதி..”

பிரதாப்பிற்கு ஏதோ புரிவதைபோல இருந்தது.. அவளின் தங்கை புத்திசாலி.. காரணமில்லாமல் இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டாள்..

“மத்தவங்க வேற.. நீ வேற அண்ணா.. உனக்கு இது புரியலைன்னா நீ காதலிப்பதே சுத்த வேஸ்ட்..”

“நீ என்ன சொல்ற..?” பிரதாப் தடுமாறினான்..

ப்ரீதி ஊடுருவும் பார்வையொன்றை பார்த்து வைத்தாள்..

“நீ அவளைக் காதலிக்கறது எனக்குத் தெரியும்ன்னு சொல்றேன்..”

“ப்ரீதி நான் வந்து சும்மாதான்..” பிரதாப் உளறிக் கொட்டி கிளறி மூடினான்..

“எதுக்கு இப்படித் தந்தியடிக்கிற..? எனக்கு எல்லாம் தெரியும்.. நீ எனக்குத் தெரியாம அவளை சைட்டடிக் கிறதாய் நினைச்சுக்கிட்டு இருக்க.. எனக்கா அதைக் கண்டுபிடிக்க முடியாது..?”

“அதைசொல்லு.. யாரு நீ..?”

“உன் தொங்கச்சி.. அந்த நினைப்பிருக்கா இல்லையா..?”

“தங்கச்சிங்கறது நினைப்பிருக்க.. இந்த தொங்கச்சி தான் யாருன்னு தெரியல..”

“தெரியவே வேணாம்.. நீ உன் மேட்டருக்கு வா..”

“என்னை.. என்னதான் செய்யச்சொல்ற..?”

“அதை நான் எதுக்காகச் சொல்லணும்..?”

நிதானமாக.. கைகளை முன்னால் கட்டியபடி கேட்டாள் ப்ரீதி.. பிரதாப்புக்குள் எரிச்சல் மண்டியது..

‘இவ முன்னாடியும் போகவிடமாட்டா.. பின்னாடியும் போகவிட மாட்டா…’

“இப்ப என்னதான் சொல்ல வர்ற..?”

“இது உன்னோட பிரச்னை நீதான் இதைசால்வ் பண்ணனும்.. என்னை எதுக்காக கேட்கிற..? என்னைக் கேட்டா காதலிச்ச..?”

“தப்புத்தான்.. ஆளை விடு..”

“நான் உன்னை பிடிச்சி வச்சிருக்கல.. உன்னால அவளை பிடிச்சு வைச்சுக்க முடியுமான்னு பாரு..”

“இந்தப் பிடிச்சு வைச்சுக்கிற ஜோலியெல்லாம் எனக்கு ஆகாது.. அப்பன் பார்க்கிற மாப்பிள்ளை முன்னாடி போய் நிக்கனும்னு அவ நினைச்சா.. நின்னுட்டுப் போறா.. எனக்கென்ன வந்துச்சு..?”

“ஓஹோ.. உனக்கு ஒண்ணுமே வரலையா..? அப்புறம் எதுக்கு பாதிச் சாப்பாட்டில கையைக் கழுவுன..?”

“பசியில்லை..”

“இயர் என்ட் கணக்கு இருக்கிற சமயத்தில பேங்குக்கு கிளம்பிப் போகாம.. பால்கனியில நின்னுக்கிட்டு என்ன பண்ற..?”

“ஜஸ்ட் ரிலாக்ஸ்…”

“இதோ பார்.. உனக்கு கிளாஸ் எடுக்கிற வேலை யெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. எனக்கிருக்கு ஆயிரம் வேலை.. அவளை முறைச்சு முறைச்சுப் பார்த்தியே.. ஒரு நாளாவது.. உன் மனசில என்ன இருக்குன்னு அவகிட்ட சொல்லியிருக்கயா..?”

ப்ரீதியின் கேள்வியில் பிரதாப்புக்கு ‘சுரீர்’ என்று இருந்தது.. 

“அதில்ல ப்ரீதி.. நம்ம வீட்டில ஒரே இனம் அது இதுன்னு ஆயிரம் சொல்வாங்க..”

“அதுக்கு..?”

“உனக்கு கல்யாணம் ஆக வேணாமா..?”

“இதையெல்லாம் யோசிக்கறவன் அவளை யார் பெண்பார்க்க வந்தா என்னன்னு பேசாம இருக்கணும். அதை விட்டுவிட்டு என்னைத் தவிர இன்னொருத்தன் முன்னாடி போய் அவ எப்படி நிக்கலாம்ன்னு பொருமக்கூடாது..”

“இங்கே யார் பொருமினது..?”

“நீ பொருமலைன்னு என் முகத்தைப் பார்த்துச் சொல்லு..”

ப்ரீதியின் முகம் பார்க்காமல் ஆகாயத்தைப் பார்த்தான் பிரதாப். அவன் முகத்தில் கடுமை சூழ்ந்திருந்தது..

“இந்தக் கோபத்தை முகத்தில் மட்டும் காட்டாம அவகிட்ட பேச்சிலையும் காட்டு..”

“நான் காதல் கீதல்ன்னு போனா.. உன் கல்யாணப் பேச்சில் சிக்கல் வரும் ப்ரீதி..”

“இதை அவகிட்டச் சொல்லு..”

“ப்ரீதி..”

பிரதாப் ஆச்சரியத்துடன் தங்கையைப் பார்த்தான்..

“சேருகிறதும்.. பிரிகிறதும்.. உங்க ரெண்டு பேருடைய முடிவா இருக்கணும்.. அதை விட்டுட்டு வீணாய் மனசைப் போட்டு உழப்பிக்கிட்டு இருக்கக்கூடாது..”

ப்ரீதி போய்விட்டாள்.. தங்கையை நெகிழ்வுடன் பார்த்த பிரதாப் தன்னை அர்ஜூனனைப் போல உணர்ந்தான். ப்ரீதியை கிருஷ்ணபரமாத்வாக உணர்ந்தான்.. காதல் குருஷேத்திரத்தில் அவன் கைபிடித்து அவள் பாதை காட்டி விட்டதை அவன் புரிந்து கொண்டான்..

0Shares

Reviews – Minalaga Vanthavale / மின்னலாக வந்தவளே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link