Chapter 14
அன்பே..! நான் உன்னடிமை..
நீயின்றி நானில்லை..
“தனா..”
“என்னடா..”
“சாருலதா இன்றைக்கும் ஆஃபீஸ் வரவில்லை..”
தனஞ்ஜெயனுக்கும் அது தெரியும்.. அவன் மனதிற்குள் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.. இருந்த போதும் கிருஷ்ணனிடம் அலட்சியமான முகபாவனையுடன் பதில் சொன்னான்..
“அவளுக்கு லீவு நிறைய இருந்திருக்கும்… லீவு போட்டிருப்பாள்.. அதைப்பற்றி உனக்கும்.. எனக்கும் என்னடா வந்தது..?”
“எனக்கொன்றும் வரவேண்டிய அவசியமில்லை.. ஆனால் உனக்கு ஏன் கவலை வரவில்லை..?”
“இதில் கவலைப்பட என்ன இருக்கிறது..?”
“எதுவுமே இல்லையா..? தனா.. அவள் மெடிகல் லீவு போட்டிருக்கிறாள்.. முழுதாக ஒருமாதம்.. இது உனக்குத் தெரியுமா.. இல்லை.. தெரியாதா..?”
தனஞ்ஜெயனுக்கு அது தெரியாது.. அவன் மனம் தவித்தது.. முழுதாக ஒரு மாதம் அவள் வரமாட்டாளா..? அவளில்லாமல்.. அவள் குரலைக் கேட்காமல்.. அவள் முகத்தைப் பார்க்காமல்.. அவனால் இருக்க முடியுமா..?
“என்னடா பேசாமல் இருக்கிறாய்..?”
“என்னை என்ன செய்யச் சொல்கிறாய் கிருஷ்..”
“பேசடா.. அவளோடு பேசு.. என்ன ஆனதென்று கேளு.. அது உன் கடமைடா..”
“ஏன்.. அவள் பேச மாட்டாளா..?”
“இது ஈகோ பார்க்கும் நேரமாடா..?”
“இது ஈகோ இல்லை கிருஷ்.. நான்பாட்டுக்கு நிம்மதியாய்.. ஜாலியாய் இருந்தேன்.. அவள் வந்து காதல் சொன்னாள்.. என் நிம்மதியே போச்சு.. காதல் சொன்னவளுக்கு.. அந்தக் காதலைக் காப்பாற்றணும்கிற பொறுப்பு இருக்கணுமா.. இல்லையா..?”
“அவள் வீட்டில் உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறாளேடா.. உன்னைப் பெண் கேட்டு வரச் சொன்னதும் அவள்தானேடா..?”
“அதுதான் அவள் செய்த பெரிய தப்பு.. அவளுடைய வீட்டு ஆண்களின் குணம் தெரிந்த பின்னாலும்.. அவர்களைச் சமாளிக்காமல்.. அவசரமாய் என்னை வரச்சொல்லி விட்டாள்..”
“அவள் அப்பாவைப் பற்றி உன்னிடம் சொல்லியிருக்கிறாள் தனா… நீ.. ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’னு.. வாக்குக் கொடுத்திருக்கிறாய்.. இதை உன் வாயாலேயே என்னிடம் சொன்னாய்..”
“அந்த மனுசன் இப்படி மட்டம் தட்டுவான்னு யார்டா நினைத்துப் பார்த்தது..?”
“அவர் செய்த தவறுக்கு சாருவைப் பொறுப்பாக்கி நீ திட்டி விட்டு வந்தது உன் தப்புடா தனா..”
“நான்தான் கோபத்தில் திட்டினேன்.. அவள் எப்போதும் போல் ஆஃபீஸ் வந்து.. என்னிடம் வந்து பேசி சமாதானப் படுத்தியிருக்கலாமில்லையா..? அதை விட்டு விட்டு.. லீவைப் போட்டு.. வீட்டுக்குள் அடைந்து கொண்டால் என்ன அர்த்தம்..?”
சாருலதா வீட்டிற்குள் அடைந்து கொள்ளவில்லை என்பது.. ரமணனும்.. கங்காதரனும்.. அலுவலகத்திற்குள் வந்து தனஞ்ஜெயனின் முன்னால் நின்று விசாரித்த போதுதான் அவனுக்குத் தெரிந்தது..
“சாருலதா எங்கே..?” கங்காதரன் கண்கள் சிவக்க கேட்டார்..
“இது என்னங்க.. அபத்தமாய் கேட்கறீங்க.. உங்க மகள் எங்கேன்னு உங்களுக்குத்தானே தெரியும்.. எங்களுக்கென்ன தெரியும்..?” கிருஷ்ணன் தனஞ்ஜெயனுக்கு பதில்.. அவனே பேசினான்.
“ஹலோ.. நீங்க யாருங்க..?” ரமணன் முஷ்டியை மடக்கினான்..
“மிஸ்டர்.. இது எங்கள் ஆஃபீஸ்.. இங்கே வந்து உதார் விட்டிங்கன்னா.. வீட்டுக்கு ஒழுங்காய் போய் சேர மாட்டிங்க..” கிருஷ்ணன் தன் சட்டையின் கையை மடக்கி விட்டுக் கொண்டான்..
“கிருஷ்ணா.. பொறுடா.. மிஸ்டர் ரமணன்.. உங்கள் தங்கை எங்கேன்னு ஏன் என்னிடம் வந்து கேட்கறீங்க..? அவள் இரண்டு நாளாய் லீவு போட்டிருக்கிறாள்.. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்.. வேறு எதுவும் தெரியாது..” தனஞ்ஜெயன் கிருஷ்ணனை ஒதுக்கி விட்டு.. முன்னால் வந்து நின்றான்..
“அவள் லெட்டர் எழுதி வைத்து விட்டு.. வீட்டை விட்டுப் போய் விட்டாள்.. உங்களிடம் வராமல், வேறு எங்கே அவள் போயிருக்க முடியும்..?” ரமணன் முறைத்தான்..
“வாட்..?” தனஞ்ஜெயன் அதிர்ந்து விட்டான்..
“சாருலதா வீட்டில் இல்லையா..? அவள் எங்கே போனாள்..? சொல்லி விடு.. இல்லாவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன்..” பாய்ந்து ரமணனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து விட்டான் தனஞ்ஜெயன்..
“டேய்.. என் தங்கையை எங்கேயோ ஒளித்து வைத்து விட்டு என்னிடம் டிராமா போடுகிறாயா..? எங்கேடா என் தங்கை..?” பதிலுக்குக் கத்தியபடி அவனுடன் கட்டிப் புரண்டான் ரமணன்..
அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் வந்து பிரித்து விட.. இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் நின்று கத்திக் கொண்டிருந்த போது.. தனஞ்ஜெயனின் செல்ஃபேன் ஒலித்தது..
எடுத்துப் பேசியவனின் ஆவேசம் அடங்கி விட்டது.. அவன் முகத்தின் ஒளிர்வைக் கண்ட கிருஷ்ணன் ஆவல் தாங்க மாட்டாமல்..
“என்னடா தனா..?” என்று கேட்டான்..
அவனுக்கு பதில் சொல்லாமல் ரமணனின் பக்கம் திரும்பிய தனஞ்ஜெயன்.. சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்..
“ஏய்ய்.. இப்பக் கேட்டுக்கடா.. உன் தங்கை எங்கே இருக்கிறாள் என்பதை..”
“என்னது.. என்தங்கை இருக்குமிடம் உனக்குத் தெரியுமா..? எங்கேடா அவள்..?”
“அவன் என் வீட்டில் இருக்கிறாள்..”
“உன் வீட்டிலா..? அங்கே போய்ப் பார்த்து விட்டுத்தானே இங்கே வருகிறோம்.. உன் வீடுதான் பூட்டியிருந்ததே..”
“இது நான் குடியிருக்கும் வாடகை வீடு.. அது என் கிராமத்தில் இருக்கும் என் சொந்த வீடு..”
“என்ன..? சாருலதா.. உன் கிராமத்திற்குப் போய் விட்டாளா..?”
“ஆமாம்.. அவள் போக வேண்டிய இடத்திற்குப் போய்விட்டாள்.. தைரியமிருந்தால்.. உன் ஆள்படை.. அம்பை என் கிராமத்துப் பக்கம் அனுப்பிப்பார்.. பஞ்சு பஞ்சாகப் பறக்கவிட்டு விடுவாங்க.. இனி அவள் உன் தங்கையில்லை.. என் பெண்டாட்டி..”
தனஞ்ஜெயனின் முகத்தில் வெற்றிப் பெருமிதம் இருந்தது.. தன்னை நேசித்தவளின் துணிவைக் கண்ட கர்வம் இருந்தது.. தனக்காக அவள் வீட்டைத் துறந்து
தன் வீட்டுப் படியில் ஏறிவிட்டாள் என்ற திமிர் இருந்தது.. இத்தனைக்கும் மேலாக.. தன் காதலி.. என்றுமே.. தன்னைவிட்டுப் போக மாட்டாள்.. தன்னையும் அவளை விட்டுப் போக விடமாட்டாள் என்ற தன்னம்பிக்கை இருந்தது..
Reviews – Nee Indry Nan Illai / நீயின்றி நானில்லை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.