Chapter 33

0Shares

வாசவி பயத்தில் அலறப் போனாள்.. அவள் வாய் பொத்தித் தடுத்தவன்..

“ஸ்ஸ்.. பயப்படாதே வாசவி.. நான்தான்..” என்றான்.

“இப்படியா பயமுறுத்துவீங்க..? சரி.. ஏன் வரச் சொன்னீங்க.. சொல்லுங்க.. நான் சீக்கிரம் போகணும்..”

“என்ன அவசரம்..?”

“சரிதான்.. கேள்வியைப் பார்.. இப்படித் திருட்டுத் தனமாய் இருட்டுக்குள் சந்தித்தால்.. யாராவது பார்த்து விட்டால்.. என்ன நினைப்பார்கள்..?”

“மற்றவர்கள் நினைப்பைப் பற்றிய கவலையை விட்டு விட்டு.. முதலில் என் நினைப்பைப் பற்றிக் கவலைப்படு..”

“உங்கள் நினைப்பிற்கு என்ன..? மஞ்சள் தாவணி முதல்.. பச்சைச் சுடிதார் வரை.. ஊரிலிருக்கிற பெண்களை யெல்லாம் நினைக்கின்ற நினைப்புத்தானே.. உங்கள் நினைப்பு..”

“ஏய்ய்.. விளையாட்டுக்கு ஒன்று சொன்னால்.. அதையே பிடித்துக் கொண்டு தொங்குவதா..?”

“விளையாட்டா..? எது விளையாட்டு..?”

வாசவியின் குரல் மீண்டும் கம்ம.. அவன் அவளை அணைத்துக் கொண்டு.. அதட்டினான்..

“ச்சு.. சும்மா.. விளையாட்டுக்குச் சொன்னேன்டி.. அதைப் போய்ப் பெரிதாய் நினைத்துக் கொண்டு வருத்தப் படலாமா…?”

“என்னது ‘டீ’ யா..?”

“ஆமாம்டி.. உன்னைத்தானே ‘டீ’ போட்டேன்.. அந்த மஞ்சள் தாவணியையா.. ‘டீ’ போட்டேன்.. நீயும்.. மற்றவர்களும் எனக்கு ஒன்றா..? நீ என் காதலி வாசவி.. என் வருங்காலப் பெண்டாட்டி.. என் உயிர்.. என் வாழ்க்கை.. என் மூச்சு.. இன்னும் வேறென்ன நான் சொல்ல..?”

வாசவியின் முகம் மலர்ந்தது.. அவள் அவன் மார்பில் சாய்ந்து.. சட்டைப் பொத்தான்களைத் திருக ஆரம்பித்தாள்.. அவள் இயல்பாகி விட்டதை உணர்ந்த சந்தோஷின் மனம் லேசாகியது..

“என்னடி செய்கிறாய்..?”

“அடேங்கப்பா.. வாடி.. போடின்னு அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிறதே..”

“அப்படித்தான் அதிகாரம் பண்ணுவேன்.. அதுக்கு என்னங்கிற இப்ப..?”

“ரௌடி…”

“ரௌடியா..? யார் நானா..?”

“வேறு யார்..? நீங்கள்தான்..”

“இதைப் பாருடா.. எல்லோரும் என்னைப் பக்கா ஜென்டில்மேன்னு சொல்கிறாங்க..”

“பக்கா ஜென்டில்மேனா..? யார், நீங்களா..? சரியான பாக்தாத் திருடன்.. எப்போது பார்த்தாலும் கண்ணடித்துக் கொண்டு.. உவ்வே..”

“அப்படிக் குமட்டுகிறதாக்கும்.. நீ என்னைப் பார்த்துக் கண்ணடித்தபோது எனக்குக் குமட்டவில்லையே..”

வாசவி வெட்கத்துடன் அவனைக் கிள்ளினாள்..

“ராஸ்கல்..”

“ஆ.. வலிக்குதுடி..”

“வலிக்கட்டும்.. வாய்க் கொழுப்பு அதிகம் உங்களுக்கு..”

அவனை விட்டு விலகி அவள் செல்ல முனைய, அவன் அவளைப் போக விடாமல் தடுத்தான்.

“ஏன் பறக்கிற..?”

“வேண்டாம் சந்தோஷ்.. இந்நேரத்தில்.. நாம் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பது தவறு..”

“நீ என்னுடையவள்தானே.. என்னிடம் நீ பேசிக் கொண்டிருந்தால் தவறொன்றும் இல்லை..”

“சந்தோஷ்..”

வாசவி.. அவன் எதிர்பாராத போது அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டு விட்டு.. சிட்டாய்ப் பறந்து விட்டாள்..

அவளது இதழ் தொட்ட இடத்தைப் பற்றியபடி.. அசையாமல் நின்று கொண்டிருந்தான் சந்தோஷ்.. அவனுடைய மனம் இனித்தது.. மெதுவாகச் செடி மறைவிலிருந்து வெளியே வந்து மண்டபத்திற்குள் போனான்..

“அம்மா.. கிளம்பலாமா..”

ராமகிருஷ்ணனும்.. ஜானகியும் எழுந்து அவன் பின்னால் வந்தார்கள்.. அருகிலிருந்த ஹோட்டலில் அவர்களுக்கு ஒரு அறையைக் கொடுத்துவிட்டு.. தன்னுடைய அறைக் கதவைத் திறந்து.. உள்ளே சென்றான் சந்தோஷ்.. குளித்து முடித்து.. கைலியுடன்.. கட்டிலில் விழுந்து கண்மூடிய போது.. வெகு நாள்களுக்குப் பின்னால் அவனுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது..

அதிகாலையில் செல்போன் அலற விழித்துக் கொண்டான்.. அவனுடைய ஹோட்டலில் இருந்து பேசினார்கள்.. அவர்களுக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு.. ரூம் சர்வீஸை அழைத்துக் காபி கொண்டு வரச் சொல்லிவிட்டு.. ராமகிருஷ்ணனின் அறைக்குப் போனான்.. அவர்களும் எழுந்து கொண்டார்கள்.. காபி வந்ததும் குடித்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள்..

காலை நேரத்தின் புத்துணர்வோடு.. காரில் ஏறிய சந்தோஷ்.. மண்டப வாசலில் காரை நிறுத்தி இறங்கினான். ராமகிருஷ்ணனும்.. ஜானகியும் வாசலில் நின்றிருந்த உறவினர்களை வரவேற்றுப் பேச ஆரம்பித்துவிட.. அவன் மட்டும் வரவேற்பில் நின்று கொண்டிருந்த வாசவியைப் பார்த்தபடி படியேறினான்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link