Chapter 10
“கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்..
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்..
பொன்னழகு மேனியென்றான்..
பூச்சரங்கள் சூடத் தந்தான்..”
கோகுலக் கண்ணனின் முதுகின் மேல் முதுகை சாய்த்து அமர்ந்து… எதிர்புறமாகத் திரும்பி பாடிக் கொண்டிருந்தாள் தான்ய லட்சுமி..
அந்தி நேரத்து சூரியனின் சிவந்த கதிர்கள்.. அலையடிக்கும் நீலக்கடலின் மேல் புறத்தில் படிந்து.. பிரதிபலித்தன…
மாலை நேரத்தின் கடற்கரைக்கான கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.. “தேங்காய்.. மாங்காய்.. பட்டாணி.. சுண்டல்..” விற்கும் சிறுவர்கள் இங்கு மங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.. யாரும்.. யாரையும் கவனிக்காமல் பிரிந்து அமர்ந்து தங்களுக்குள் ஓர் உலகை சிருஷ்டித்துக் கொண்டு.. சிரித்துப் பேசியபடி இருந்தார்கள்..
தான்ய லட்சுமியின் முதுகின் மேல் தன் முதுகை சாய்த்து எதிர் திசையில் திரும்பி அமர்ந்திருந்த அவனது அசைவுக்கு ஏற்ப தான்ய லட்சுமியும்.. அசைந்து கொண்டிருந்தாள்..
“ஸ்வீட் வாய்ஸுடி உனக்கு..”
“தேங்க்ஸ்..”
“இதுக்கொரு தேங்க்ஸா..? அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன்..”
“ஹப்பா.. ரௌடியைக் காதலிச்சா இந்தக்கதிதான்..”
“நான் ரௌடியா..?”
“பின்னே.. இல்லையா..?”
“ஆமாண்டி.. நான் ரௌடிதான்.. இந்த ரௌடி இப்ப உன்னை ஸ்வாஹா பண்ணப் போறான்..”
உட்கார்ந்த வாக்கிலேயே.. கைகளை பின்னுக்கு கொடுத்து.. தான்ய லட்சுமியை முன்னால் இழுத்து.. மடியில் சாய்த்துக் கொண்ட கோகுலக் கண்ணன்.. அவள் முகம் நோக்கிக் குனிந்தான்..
“என்ன இது..?”
பதறிப் போய் தான்யா எழுந்து கொள்வதற்கு முன்னால் அவள் இதழில் முத்தம் பதித்து விட்டான் கோகுலக் கண்ணன்..
“ரௌடியாமில்ல.. நான் காதல் ரௌடிடீ..”
விலகி அமர்ந்த தான்ய லட்சுமியின் முகம் மாறிவிட்டதை வெகு நேரம் சென்றுதான் அவன் கவனித்தான்..
“என்ன..?”
“வீட்டுக்குப் போகனும்..”
அவன் முகம் பார்க்காமல் பதில் கூறிய அவளது குரலில் தெரிந்த விலகலைக் கவனித்தவனுக்கு கோபம் கிளர்ந்தது..
“ஏன்..?” அழுத்தமான குரலில் வினவினான்..
“ஏன் அப்படிச் செஞ்ச..?” குற்றம் சாட்டும் தொணியில் கேள்வி கேட்டான் கோகுலக் கண்ணன்..
எப்படியென்று அவள் சொல்லுவாள்..? பொறுக்க முடியாமல் அவள் எழுந்து விட.. அவள் கையை இறுக்கிப் பிடித்து முரட்டுத்தனமாக உட்கார வைத்தான் அவன்..
“நீ ஒன்னை புரிஞ்சிக்கனும்.. சரக்குன்னா.. எனக்கு டாட்டா காண்பிக்கிறது போல பேசி வைக்கிறதை விட்டுவிடு.. எனக்குப் பிடிக்காது..”
“எனக்கும் இது பிடிக்காது..”
“எது..?”
“பித்ச்சு.. இது பேச்சிலை…”
“நீ பேசறதுதான் பேச்சில்லை.. கண்ணுக்கு முன்னாலே காதலி இருந்தா.. அவளைத் தொடாம கையைக் கட்டிக்கிட்டு எந்த மடையனாவது இருப்பானா..?”
“ஸோ.. நீங்க இதுக்குத்தான் ஆசைப்படறீங்க…”
முகம் சுளித்தபடி அவள் பேசிய விதத்தில் அவன் தீர்க்கமான பார்வை யொன்றை பார்த்தான்.. எதுவும் பேசாமல் அமைதியாய் எழுந்து நின்று.. பேன்டில் ஒட்டியிருந்த மணல் துகள்களைத் தட்டிவிட்டான்..
“கிளம்பு..” என்றான்..
தான்யலட்சுமி எதையோ பேச வாயெடுக்க.. கையமர்த்தி அதைத்தடுத்தான்..
“அதான்.. நீ பேச வேண்டியதை பேசிட்டயே.. இனியும் என்ன பாக்கியிருக்கு.. போயிட்டு வா..”
“நான் என்ன சொல்ல வர்றேன்னா..”
“நீ எதையும் சொல்ல வேணாம்.. உனக்காக உன் டிரைவர் ரொம்ப நேரமா காத்திருக்கான்.. போ..”
அவன் குரலில் தெரிந்த கோபத்தில் அவள் வாய் பேசாமல் காரை நோக்கி நடந்தாள்.. அவளுக்காக காத்திருந்த மாணிக்கம் கார் கதவை திறந்து விட்டான்.. ஏறி அமர்ந்தாள்.. மனதில் வெறுமை சூழ்ந்திருந்தது..
அடுத்து வந்த நாள்களில்.. கோகுலக்கண்ணன் அவள் கண்ணில் படவேயில்லை.. தான்யலட்சுமி தவித்துப் போய்விட்டாள்.. யாமினியிடம் விசாரித்தாள்…
“அவன் காலேஜூக்கு வந்திருந்தான்தானே.. இன்னைக்கு காலையிலே கூட அவனை நான் பார்த்தேன்ப்பா.. நீ பார்க்கலையா..?”
“இல்லையே…”
ஏக்கத்துடன் கை விரித்த தான்யலட்சுமியை பார்வையில் யாமினிக்குள் இரக்கம் சுரந்தது..
“எவ்வளவு பெரிய கோடிஸ்வரரின் மகள் இவள்.. ஒரு மிடில்கிளாஸ் காரனுக்காக இந்த ஏக்கம் ஏங்குகிறாளே.. காதல் வந்தா இப்படித்தான் ஆகி விடுவாங்களா..”
“ம்த்சு.. அதுக்குத்தான் இந்த கருமம் பிடிச்ச காதலை நான் நினைச்சே பார்க்கிறதில்லைன்னு வெச்சிருக்கேன்.. மனுஷியை உருக்குலைச்சு.. ஓடாத்தேய வைக்குமே அது.”
“நீ ரொம்பத்தான் கண்ட..”
“இது ஒன்னை சொல்லிரு.. அதான் உன்னை கண்டுக்கிட்டு இருக்கிறேனே இது பத்தாதா..?”
“யாமினி.. ப்ளீஸ்.. எனக்கு அவனை பார்க்கனும்..”
“அவன் கிளாஸில் போய் பார்க்க வேண்டியதுதானே..”
“போனேனே..”
“அதானே.. நீயாவது.. அவனைத் தேடி அங்கே போகாமலிருப்பதாவது.. யாரு நீ..?”
“அவனைக் கிளாஸில் காணோம்டி..”
“அவன் கிளாஸ்மேட்டிடம் கேட்க வேண்டியதுதானே..”
“கேட்டேனே..”
“அதையும் செய்துட்டயே.. என்ன பொண்ணுடி நீ..”
“ப்ளீஸ்.. யாமினி.. ஹெல்ப்.. மீ..”
“சரி.. சரி.. பார்க்கலாம்.. அவன் கிளாஸில் என்ன சொல்றாங்க..?”
“இப்பத்தான் இங்கே இருந்தான்.. எங்கே போனான்னு தெரியலைங்கறாங்க..”
“உன் தலையைக் கண்டதும் எஸ்கேப் ஆகிடறான்னு நினைக்கிறேன்…”
தான்யாவுக்கும் அதே நினைவுதான்.. அதை யாமினியின் முன்னால் ஒப்புக்கொள்ள மனமின்றி மௌனமாக இருந்தாள்..
அவள் முகத்தையே கூர்ந்து பார்த்த யாமினிக்கு இரக்கம் அதிகமானது..
“என்னடி..? உங்களுக்குள்ள எதுவும் சண்டையா..?”
“அப்படியெல்லாம் எதுவுமில்லை..”
“இருந்தாலும்.. நீ சொல்ல மாட்டியே.. என்னவோ.. ஹஸ்பெண்ட் அன்ட் வெய்ப் விவகாரம் போல மூடி மறைப்பியே.. இவ்வளவு சின்ஸியர் சிகாமணியா நீ காதல் பண்ணக் கூடாதுடி தான்யா..”
“உன் யோசனையை கன்ஸிடர் பண்ணலாமாமன்னு நான் யோசிக்கிறேன்.. போதுமா.. இப்ப எனக்கு ஒரு வழியைச் சொல்லு..”
“அவன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை.. ஆள் மாத்தி என் கிட்ட கேட்டு வைக்கிறயே.. இதுதான் மாத்தி யோசிக்கிறதா..?”
வம்பிழுத்தாலும்.. யாமினி கோகுலக் கண்ணனிடம்.. தான்யாவுக்காக தூது போனாள்..
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.