Chapter 11

0Shares

“டேய்.. அடங்குடா..”

மரத்தடி கும்பலில் இருந்த நண்பர்களின் ஒருவனை அடக்கிக் கொண்டிருந்த கோகுலக் கண்ணன் அவளைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினான்..

“இவ எதுக்காக வந்திருக்கா..?”

அதற்குள் சதானந்தன் யாமினி வருவதைக் கவனித்து விட்டான்..

“மச்சான்.. பட்சி உன்னைத் தேடித்தான் வருது போல..” என்று ஜொள்ளினான்..

பதிலுக்கு அனல் வீசும் பார்வையொன்றை அவன் மீது வீசினான் கோகுலக் கண்ணன்..

“கொழுப்பாடா..? அந்தப் பொண்ணு அதுபாட்டுக்கு தேமேன்னு வந்துக்கிட்டு இருக்குது.. அது என்னைத் தேடித்தான் வருதுன்னு எதை வெச்சு சொல்ற…?”

கோகுலக் கண்ணனின் பேச்சுக்கு.. நம்பாத சிரிப்பை வெளிப்படுத்தினார்கள்.. அவனது நண்பர்கள்…

“ஆ.. ஆ.. இதை எங்களை நம்பச் சொல்றியா.. டேய்.. உனக்கும்.. அந்தப் பொண்ணுக்கும் இடையில் ரொம்ப நாளா.. ஃபிலீம் ஓடிக்கிட்டு இருக்குன்னு எங்களுக்கும் தெரியும்..”

“அடிச்சேன்னு வை.. ஒரு அடியில வாய் வெத்தலை பாக்கை போட்டிரும்.. ஏண்டா.. இந்த யாமினிப் பொண்ணுக்கும்.. எனக்கும் இடையில் என்னடா ஓடப் போகுது..”

“இதைப்பாருடா.. நம்ம மச்சான்.. பெயரையெல்லாம் தெளிவா தெரிஞ்சி வெச்சிருக்கிறதை.. அவளே ப்ர்ஸ்ட் இயர் பொண்ணு.. அவ பெயரை இத்தனை தெளிவாச் சொல்லி வைக்கிற.. இதில உனக்கும்.. அவளுக்குமிடையே.. ஒன்னுமே இல்லையாக்கும்..?”

“அப்படி என்னத்தைடா கண்டு பிடிச்சு வெச்சிருக்கீங்க..? திரும்பத் திரும்ப.. அவளுக்கும் எனக்கும் இடையிலே நண்டு ஓடுது.. நரி ஓடுதுன்னு கதை சொன்னீங்கன்னு வையுங்க.. எனக்கு கொலை வெறி வந்திரும்..”

“அவளுக்கும் உனக்குமிடையிலே.. ஒன்னும் ஓடலைடா மச்சான்.. அவ பிரண்டு.. அது யாருடா சம்பத்து..?”

“தான்யலட்சுமிடா மச்சான்..”

நண்பனின் கேள்விக்கு.. அந்த சம்பத்தாகப்பட்டவன் ரசித்துப்பதில் சொல்லிய விதத்தில்.. உண்மையிலேயே.. கோகுலக் கண்ணனுக்குள் கொலைவெறி கிளர்ந்தது..

“ஆ.. தான்ய.. லட்சுமி. அந்த தான்ய லட்சுமிக்கும்.. உனக்கும் இடையில் எதுவும் ஓடலையாடா மச்சான்..?”

சதானந்தனின் கேள்விக்கு இல்லையென்ற பதிலைச் சொல்ல கோகுலக் கண்ணனால் முடியவில்லை..

அருகில் வந்துவிட்ட யாமினியிடம் அவன் புருவங்களை உயர்த்த.. அவள் அவனைச் சுற்றியிருந்த நண்பர்களை விரோதமாகப் பார்த்தபடி..

“உங்ககிட்டப் பேசனும்..” என்றாள்..

“பேசும்மா.. நீ பேசறதைக் கேட்கத்தானே நாங்க காத்திருக்கோம்.. இல்லையாடா மச்சி..” சம்பத் ஆவலாக யாமினியைப் பார்த்தான்..

பதிலுக்கு பார்த்த யாமினியின் பார்வையில் கடுகளவு கூட சிநேகிதமில்லை..

கோகுலக்கண்ணனோ.. “இல்லையாடா மச்சி..?” என்ற சம்பத்தின் கேள்விக்கு..

“இல்லை..” என்ற பதிலைச் சொன்னான்..

சொன்னதோடு மட்டுமல்லாமல் அவன் அமர்ந்திருந்த மேடையிலிருந்து குதித்து இறங்கி.. யாமினியுடன் விலகி நடந்தான்..

“துரோகி..” என்றது சம்பத்தின் பார்வை..

அதை கண்டுகொண்ட சதானந்தன்.. அவன் தோளில் கை போட்டான்..

“விடுடா மச்சான்..”

“நாம என்ன.. அவனோட ஆளையா சைட் அடிக்க நினைச்சோம்..? அவ பிரண்டைக் கூட பார்வையிடக் கூடாதுன்னா.. இது அராஜகமில்லையாடா மச்சான்..?”

“அராஜகம்தான்.. அது உனக்கும் தெரியுது… எனக்கும் தெரியுது.. அவனுக்குத் தெரியலையே.. என்ன செய்வோம்..? என்ன செய்வோம்..? லொக்.. லொக்..”

சதானந்தன் நடிகர் திலகமாக மாற.. கோகுலக் கண்ணனின் கொலைவெறி.. சம்பத்துக்கு வந்தது..

“வேணாம்டா.. நான் ஏற்கனவே கடுப்பில் இருக்கேன்..”

“உனக்கெதுக்குடா இம்புட்டு கடுப்பு..?”

“பாரேன்.. நாம எல்லாம்.. செக்கச் செவேல்ன்னு.. தலயப் போல அட்டகாசமா இருந்து வைக்கிறோம்.. அவன் அட்டைக்கருப்பு.. அவனுக்குப் போயி அம்சமான ஃபிகர் மாட்டியிருக்கே…”

“மச்சம்தாண்டா.. வேற என்ன..?”

“அவதான் கிடைக்க மாட்டா.. அவ பிரண்டையாவது கணக்குப் பண்ணலாமுன்னு பார்த்தா.. இவன் தோழி அதோட குஞ்சை அடை காக்கிறதைப் போல.. இவளையும் அடைக்காத்து அணைவா அழைச்சுக்கிட்டுப் போயிட்டானே..”

“உன் புத்தியைத் தெரிஞ்சுதான் அடைகாக்கிறான்.. ஆயிரம்தான் இருந்தாலும் யாமினி.. தான்யாவோட பிரண்டாச்சே…”

“அதுக்கு..?”

“தங்கைக்கொரு கீதம் பாடி… பாச மலரை வளர்க்கிறான் போதுமா..?”

இன்னும் கொஞ்சம் வேண்டுமென்று கேட்க.. சம்பத் என்ன முட்டாளா..?

இன்னும் கொஞ்சம் கோபத்தை புரிந்து கொண்டவனாக.. சதானந்தன் பலமாகச் சிரித்தான்..

“டேய் மச்சி.. இந்தக் கணக்கு.. ஜியாக்கிரபியை எல்லாம் கண்ணன் போட மாட்டாண்டா.. அந்தப் பொண்ணைக் குறிவைச்சு அவகூடப் பழகியிருக்க மாட்டான்.. நானும் அவளைப் பார்த்திருக்கேன்.. கண்ணனைக் கண்டதும் அவ முகத்தில் பல்ப் எரியுதுடா.. அந்த பல்பை.. உன்னைக் கண்டதும் எந்தப் பெண் முகத்திலயாவது எரிய வை.. அப்ப கண்ணன் அதுக்கு குறுக்கே நிற்கமாட்டான்..”

“பழகாம எப்படிடா.. பல்ப் எரியவைக்க முடியும்..?”

“நீ எந்த லட்சணத்தில் பழகிவைப்பேன்னு எனக்கும் தெரியும்.. அவனுக்கும் தெரியும்.. ஏன்.. இந்த ஊர்.. உலகத்துக்கே தெரியும்.. அதனால..”

“அதனால..?”

“அடங்கு..”

சதானந்தம் ஒற்றைச் சொல்லை உதிர்த்து விட்டு.. வேறு பேச்சுக்கு தாவிட.. அப்போதைக்கு சம்பத்.. அடங்கிப் போனான்..

மரத்தடியில் கிடந்த சருகுகளை மிதித்தபடி.. மௌனமாக நடந்து வந்து கொண்டிருந்த கோகுலக் கண்ணனை வியப்புடன் பார்த்தாள் யாமினி..

இப்படி.. யார் கூப்பிட்டாலும்.. அமைதியாக கூட வருகின்ற ஆளில்லை அவன்..

“பிரின்ஸி கூப்பிடுகிறாராம்டா..” என்று சொன்னாலே

“வர்றேன்.. பொறு..” என்று இருந்த இடத்தை விட்டு நகராமல் கூறுகிற பிரகிருதி..

அப்படிப்பட்டவன்.. யாமினி அழைத்ததும்.. கூட வந்ததில் இருந்தே.. தான்ய லட்சுமிக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவை உணர்ந்து கொண்டாள் அவள்..

மற்றவர்களின் செவிகளுக்கு அவர்களின் பேச்சு.. எட்டாத தூரத்திற்கு வந்ததும் யாமினி நின்றாள்..

“தான்யா அனுப்பி வெச்சா..”

“என்னவாம்..?”

“உங்களைப் பார்க்க முடியலையாம்.. பேச முடியலையாம்.. ரொம்பக் கஷ்டப் படறா..”

“அது எதுக்காம்..? காலேஜூக்கு படிக்கத்தான வர்றா..? வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போகச் சொல்லு…”

மரத்தை அண்ணாந்து பார்த்து.. அதில் எதுவும்.. சிட்டுக்குருவிகள் அமர்ந்திருக்கும் தடயம் கிடைக்கிறதா என்று பார்வையில் துழாவிக் கொண்டிருக்கிறவனைப் போலத் தென்பட்டவனை.. மெலிதான கோபத்துடன் பார்த்தாள் யாமினி..

“உங்களை நியாயவாதின்னு நினைச்சேன்..”

கோகுலக்கண்ணன் சிட்டுக்குருவிகளைத் தேடுவதை விட்டுவிட்டு.. யாமினியின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.. அவனது புருவங்கள் முடிச்சிட்டிருந்தன.. அந்த இறுகின முகபாவத்தை பார்த்த யாமினியின் புருவங்களோ சுருங்கின..

‘என்னதான் நடந்திருக்கும்..?’

0Shares

Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link