Chapter 12
கணவன்.. மனைவிக்கிடையே உள்ள உறவு மட்டும் அந்தரங்கமானது அல்ல.. காதலர்களுக்கிடையே இருக்கும் உறவும் அந்தரங்கமானதுதான்.. அதை மற்றவர்கள்
அறிய பகிரங்கப் படுத்த முடியாது.. பகிரங்கப்படுத்தவும் கூடாது..
கோகுலக்கண்ணனுக்கும்.. தான்யலட்சுமிக்கும் இடையே நிலவி வந்த ஆழ்ந்த காதலை அறிந்தவள் யாமினி.. தான்யலட்சுமியின் காதலில் ஓர் சாத்வீகம் இருப்பதை அவள் அறிவாள்.. அப்படிப்பட்ட காதலைப் பெற்ற கோகுலக் கண்ணன்.. அதற்கான பிரதிபலிப்பை பிரதிபலிக்காமல் இருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது.. அதை அவளது குற்றம் சாட்டும் வார்த்தைகளும் உணர்த்திவிட்டன..
கோகுலக்கண்ணனின்.. கல் போன்ற கடினமான முகபாவத்தின் பிண்ணனியில் உறைந்திருக்கும் உண்மை என்னவென்று யாமினியால் கண்டு பிடிக்க முடிய
வில்லை.
“நான் நியாயவாதிதான்.. அதில் உனக்குச் சந்தேகம் வேணாம்.. உன் பிரண்டுக்குத்தான் அதில் சந்தேகம்..”
“குட் ஜோக்.. உங்களுக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்..?” யாமினி படபடத்தாள்..
இதைக் கேட்டவனின் முகத்தில் லேசான மாறுதல் ஏற்பட்டது..
“அப்புறமும் எதுக்கு என்னைத் தேடி வந்த..?”
அப்போதுதான் தன் கேள்வியை உணர்ந்தாள் யாமினி..
அவனுடைய காதலியைப் பற்றி.. காதலனான அவனுக்குத் தெரியாததா.. தோழியான அவளுக்குத் தெரிந்திருக்கப் போகிறது..? அவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்..
“ஸாரி.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை..”
“இட்ஸ் ஆல்ரைட்.. என்னன்னு சொல்லு..”
“உங்களைப் பற்றித் தவறான ஒரு சொல்லை.. அவள் முன்னால் யாரும் சொல்லிர முடியாது.. பிடிபிடின்னு பிடித்து விடுவாள்..”
“நானும் அப்படித்தான், என்ன ஒன்னு.. நான் கொலையே பண்ணிடுவேன்..”
அலட்டிக் கொள்ளாமல் பேசியவனைப் பார்த்த போது.. அவனை ரௌத்திரன்.. என்று கண்களில் காதல் மின்ன.. தான்யலட்சுமி சொன்னதற்கான அர்த்தம் பரிபூரணமாக அவளுக்கு விளங்கியது..
“இவ்வளவு காதலை அவள் மேல் வெச்சிக்கிட்டு.. ஏன் அவளைத் தவிக்க விடறீங்க..? அவளால இதைத் தாங்கிக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா..?”
“எனக்குத் தெரியுமா.. தெரியாதாங்கிறது பிரச்சனை யில்லை.. இந்த விலகல் அவசியமானது.. அதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும்..”
“அவ பாவம்.. மென்மையானவ.. உங்க மேல உயிரையே வைத்திருக்கா.. நீங்க இல்லைன்னா அவளுக்கு எதுவுமே இல்லை..”
தான்யலட்சுமியின் மனதை உணர்த்திவிடும் வேகத்தில் பேசியவளின் பேச்சைக் கேட்டவனின் முகமும் கடினத்திலிருந்து மீண்டு மென்மை கொண்டது..
“யாமினி.. சிலதைத்தான் பிரண்ட்ஸிடம் பகிர்ந்துக்க முடியும்..”
“எனக்கும் அது புரியுது.. உங்களோட பெர்ஸனலில் ஒரு அளவுக்கு மேல் என்னாலும் தலையிட முடியாது..”
“நான் அதுக்காக சொல்லலை.. இப்ப… எனக்கும் அவளுக்கும் இடையில் ஓடிக்கிட்டு இருக்கிற பிரச்சனை ரொம்ப அந்தரங்கமானது..”
“அப்ப அதைப்பற்றி.. அவளிடமே பேசி சரி பண்ணிக்கலாமே..” மீண்டும் பரபரத்தாள் யாமினி..
“இது எனக்குத் தெரியாதா..?” என்ற ரீதியில் மென்மையாகச் சிரித்தான் கோகுலக்கண்ணன்..
தான்ய லட்சுமியுடன் எப்படியாவது அவனைச் சமாதானமாகப் போய்விடச் செய்துவிட வேண்டுமென்று அவள் துடிக்கும் துடிப்பை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..
இவ்வளவு அருமையான நட்பை.. அவனுடையவளின் மேல் வைத்திருக்கும் யாமினியின் மீது.. அவனுக்குள் வாத்சல்யம் பெருகியது..
“இதைப் பேசி சரி பண்ண முடியாதும்மா..” கனிவாக அவன் சொன்னான்..
“ஏன்..?” யாமினி ஏமாற்றமடைந்தாள்..
“இதை அவ மனசாலே உணரனும்.. பணக்காரியில்ல.. பணத்தை கொட்டி விட்டா அள்ளிக் கிறதைப் போல.. வார்த்தைகளையும் கொட்டி விட்டா.. அள்ளிர முடியும்னு நினைச்சிட்டா போல..”
யாமினி சொன்னதைக் கேட்ட.. தான்ய லட்சுமியின் முகம் கூம்பி விட்டது.. அவன் எதைச் சொல்லி விட்டிருக் கிறான்.. எந்த வார்த்தைகளை அள்ள முடியாது.. என்று அவளுக்கு உணர்த்துகிறான் என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது..
“அந்த ஒன்றிலேயே நிற்கிறானா..?” அவள் துயரம் கொண்டாள்..
அப்படி என்ன அவள் சொல்லி விட்டாள்..? திடீரென்ற அந்த நிகழ்வில் அவள் அதிர்ச்சியடைய மாட்டாளா..? சும்மாவே.. அவன் விரல் லேசாக அவள் மீது பட்டு விட்டால் கூட அவள் விலகித்தான் அமர்வாள்.. அவனது முறைப்பிற்கு பயந்துதான் அவனோடு ஒட்டி உட்காருவது.. தொட்டுப் பேசுவது என்ற எல்லாமே…
“ஏய்ய்.. நான் மழை.. நீ வெல்லக் கட்டியாடி..? நான் தொட்டால் அப்படியே நீ உருகிக் கரைஞ்சு போயிருவியா..?”
அவன் உல்லாசமாக நகைக்கும் போது.. “ஆமாம் அப்படித்தான்..” என்பதை சொல்ல முடியாமல் தவித்துப் போவாள் தான்யலட்சுமி..
அவன் தொட்டல் உருகிக் கரையாமல் இருக்க.. அவள் ஒன்றும் இயந்திர மில்லையே.. அவன் தொட்டவுடன்.. உருகி விடுகிறாள்.. அவன் கையில் கரைந்து விடுகிறாள்..
“அது எங்கே போய் முடியக்கூடும்..?”
இதுதான் தான்யலட்சுமியின் அச்சமாக இருந்தது..
“என்னைப் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டானாடி..?” தான்யாவின் குரலில் ஏக்கம் அப்பிக்கிடந்தது..
அவளைப் பார்க்க யாமினிக்கு இரக்கமாகத்தான் இருந்தது.. ஆனாலும்.. அவளால் என்ன செய்ய முடியும்..?
இது காதலர்களுக்கு இடையில் நடக்கும் அந்தரங்கப் போராட்டம்.. இதில் தலையிட அவளால் முடியாதே..
“அப்படித்தான் சொன்னான்டி..”
“இனிமே என் கூடப் பேசமாட்டானா..?”
“ஆமாம்..” என்று சொல்ல வாய் வராமல் தலையை மட்டும் அசைத்தாள் யாமினி.. தான்யலட்சுமியின் கண்களில் அதைக் கேட்டதும் தோன்றிய பரிதவிப்பைக் காண அவளுக்கு சகிக்கவில்லை…
“காதல் என்பது.. இவ்வளவு கொடுமையான நோயா..?”
Reviews – Ponmakal Vanthal / பொன்மகள் வந்தாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.