Chapter 14

0Shares

கடற்கரை மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தாள் ஆர்த்தி.. அருகே அலட்சிய நடையுடன் கபிலன்..

“அப்புறம்..?” என்றாள் ஆர்த்தி..

“அப்புறம் என்ன.. கண்ணால் கண்ட சாட்சிக்கு கண்ணில் கோளாறு இருக்குன்னு புரூவ் பண்ணினேன்.. கேஸை ஜெயிச்சாச்சு..” என்று சாதாரணமாகச் சொன்hனன் கபிலன்..

ஆர்த்திக்கு அவனைப் பார்க்கையில் பெருமையாக இருந்தது.. குறுகிய காலத்திற்குள் நிறைய வெற்றிகளை சம்பாதித்து இருந்தான்.. இந்தக் கடற்கரையில் வைத்துத்தான் அவன் ஜூனியராக வேலைக்கு சேர்ந்திருப்பதைப் பற்றி ஆர்த்தியிடம் சொன்னேன்..

“உனக்கு அட்வகேட் துரைசாமியைத் தெரியு மில்லையா ஆர்த்தி..?”

“தெரியாதே..”

“மக்கு.. நீயெல்லாம் ‘லா’ படிக்கிறேன்னு வெளியில் சொல்லிக் கொள்ளாதே..”

“ஏனாம்..?”

“பின்னே என்ன.. துரைசாமி சார் எவ்வளவு பெரிய அட்வகேட் தெரியுமா..? சீனியர் வக்கீல்.. ரொம்ப ஃபேமஸானவர்.. அவரைத் தெரியாதுன்னு சொல்கிறாயே.. ஒரு பீல்டில் இருக்கிறவர் அதிலிருக்கிற ஃபேமஸான ஆட்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா..?”

“அப்பா சொல்லவில்லையே..”

“ம்ம்.. இதைச் சொல்லு.. உனக்கு உன் அப்பா சொன்னால்தானே எதுவும் தெரியும்..? ஆமாம் ஆர்த்தி.. எனக்கு உன் அப்பாவையும் தெரியாது.. உன் அப்பாவிற்கும் என்னைத் தெரியாது.. அப்புறம் எப்படி நீ என்னைத் தெரிந்து கொண்டாய்..?”

கபிலனை முழுமையாகத் தெரிந்து கொண்ட அந்த நிமிடங்கள் நினைவுக்கு வர, ஆர்த்தி உடல் சூடானாள்.. முகம் சிவக்க.. கடல் நீரில் நனைப்பது போல் தலை குனிந்து கொண்டாள்..

அவளின் அந்த முகச் சிவப்பும்.. நாணமும்.. நடந்ததை அசை போடும் விழியோர மயக்கமும் கபிலனுக்கு மிகவும் பிடிக்கும்.. அன்று கடந்த எல்லைகளை அவர்கள் மீண்டும் கடக்கவில்லை.. ஆனால் அவளைச் சந்திக்கும் தருணங்களில் அந்தத் தருணத்தை நினைவூட்ட கபிலன் மறப்பதில்லை.. அவன் நினைவு படுத்தியதும், அவளுடைய முகத்தில் தோன்றும் நவரசத்தையும் அவன் ரசிப்பான்..

“என்ன.. அம்மிணிக்கு அந்த காலை நேரத்து மயக்கம் நினைவுக்கு வந்து விட்டதாக்கும்..?”

“வேறு பேசலாமே..”

“பேசிவிட்டால் போச்சு.. இப்போது துரைசாமி சாரைப் பற்றி ஏன் சொன்னேன் தெரியுமா..?”

“ஏன்..?”

“இதைக் கேட்க இவ்வளவு நேரமா..?”

“நீங்கதான் வேறு பேச்சை பேசி விட்டீங்களே..”

“என்ன பேச்சைப் பேசினேன்..?”

ஆர்த்தி.. மீண்டும் முகம் சிவந்தாள்.. கபிலன் லேசாக சிரித்துக் கொண்டே கடற்கரை மணலில் அமர்ந்தான்.. அவனருகே பின்னலை முன்னால் விட்டபடி.. ஆர்த்தி அமர்ந்ததும் விரலால் மணலில் ‘ஆர்த்தி கபிலன்..’ என்று எழுதினாள்..

கபிலனின் மனம் இதமானது..

“வெறுமனே மணலில் எழுதினால் போதுமா..? காலாகாலத்தில் மிஸஸ் கபிலன் ஆக வேண்டாமா..?” என்று கேட்டான்..

“இப்போதுதான் ஆஷாவை பெண் பார்க்க வந்திருக்கிறாங்க.. அடுத்து அனிதா.. பார்க்கலாம்.. என் முறை எப்போது வருகிறதுன்னு..”

“வரும்போது நான் பெண் கேட்டு வருகிறேன்.. இப்போது துரைசாமி சாரிடம் ஜூனியராக சேர்ந்து தொழிலை ஆரம்பிக்கப் பார்க்கிறேன்.. நீயும் ஒழுங்காய் படி..”

அடுத்த ஆறுமாதங்களிலேயே அவன் தனியாக ஒரு கேஸில் வாதாடி ஜெயித்ததைச் சொன்னபோது.. ஆர்த்திக்கு ஆச்சரியமான ஆச்சர்யம்..

“ஈஸிட்..? என்னால் நம்பவே முடியவில்லையே..”

“எதை நம்பமுடியவில்லை..? நான் திறமைசாலி என்பததையா..?” கபிலன் கிண்டலாக கேட்டான்..

“நான் அப்படியா சொன்னேன்..?” ஆர்த்தி சிணுங்கினாள்..

“சீனியருக்கு அவசர வேலையாம்.. டில்லிக்கு பறந்து விட்டார்.. போவதற்கு முன்னால் என்னிடம் இந்த கேஸ் கட்டைக் கொடுத்து ‘வாதாடு’ன்னு சொல்லி 

விட்டுப் போனார்.. நைட் கண் விழித்துப் படிச்சுப் பார்த்தேன்.. எங்கே, எதை, எப்படி உடைக்கணும்னு.. அக்கு வேறு ஆணிவேறாக விளங்கி விட்டது.. விடிந்ததும் கோர்ட்டுக்குப் போனேன்.. கேஸை உடைத்தேன்.. தீர்ப்பு என்பக்கம் சாதகமாக வந்து விட்டது..”

“வெரிகுட்.. எனக்கு என்ன தரப்போறீங்க..?”

“உனக்குத்தான் என்னையே தந்து விட்டேனே..!”

ஆர்த்தியை முகம் சிவக்க வைத்தான்.. இரண்டு மாதங்கள் கழித்து வேறு ஒரு வெற்றியுடன் தேடிவந்தான்..

“ஸ்வீட் எடுத்துக்க ஆர்த்தி.. இன்றைக்கு ஒரு கேஸை ஜெயித்திருக்கிறேன்..”

“நீங்களும் இந்த இன்விடேஷனை வாங்கிக்கங்க..”

“அடிப்பாவி.. உன் கல்யாண இன்விடேசனா இது..?”

“அடி வாங்கப் போறீங்க.. ஆஷாவின் கல்யாண இன்விடேஷன்.. மாப்பிள்ளை அமெரிக்காவில் டாக்டர்..”

“அப்பா.. ரூட்டில் இருந்த ஸ்பீட் பிரேக்கரில் ஒன்றைத் தாண்டி விட்டோம்..”

கபிலன் ஆஷாவின் திருமணத்திற்கு வந்தான்.. ஆர்த்தி அவனை வரவேற்று, கனகவேலிடமும், வேதவள்ளியிடமும் அறிமுகப்படுத்தி வைத்தாள்..

“செம ஹேண்ட்சம்.. யாரு.. உன் காலேஜ் மேட்டா..?” என்றாள் அனிதா.. மாலை வரை இருந்து விட்டுத்தான் போனான் அவன்..

0Shares

Reviews – Poovum Puyalum / பூவும் புயலும்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link