Chapter 15

0Shares

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி.. அசையாமல் நின்று விட்டார்கள்… நீண்ட நெடுங்காலமாக பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் எப்படி உணர்வார்களோ.. அதே போன்ற உணர்வை அவர்கள் உணர்ந்தார்கள்..

அவளைப் பார்த்தவாறே உள்ளே வந்தான் கார்த்திகேயன்.. 

“என்ன மாதிரியான பார்வை இது..’ நிவேதா உடல் சிலிர்த்தாள்.. அள்ளிப் பருகும் பார்வை அது.. அவளின் மனதை ஊடுறுவும் பார்வை அது.. அவளை வென்றுவிட்ட பார்வை அது..

அவனது பார்வை அவளை ஈர்க்க.. பேச்சு வராமல் அவள் தவித்தாள்.. யதேச்சையாக திரும்பிய மீனாட்சி அவளைக் கண்டதும் ஆச்சரியப்பட்டாள்..

‘நிவேதா.. என்னம்மா..?”

அவள் என்னவென்று சொல்வாள்..? ஆண்டாண்டு காலமாக பிரிந்திருந்த காதலனை சந்திக்க ஓடிவந்ததைப் போல.. ஓடி வந்தவள் அந்த காதலனைக் கண்டு விட்டதில் பரபரப்பான ஒரு மனநிலையுடன் பேச்சிழந்து நின்று விட்ட நிலையை அவளால் வார்த்தைகளில் சொல்ல இயலுமா..?

அவனைத் திரும்பவும் சந்தித்து விட்ட மகிழ்வில் திக்கு முக்காடி  போனவளுக்கு அழ வேண்டும் போல் இருந்தது..

“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது..

அழுதால் கொஞ்சம் நிம்மதி..

பேச மறந்து சிலையாய் நின்றால்..

அதுதான் தெய்வத்தின் சன்னதி..’

அவர்கள் சிலையாகத்தான் நின்றார்கள்..

அவளைத் தொட்டு.. பின் விட்டுச் சென்றவன்.. இரவு முழுவதும் மன அமைதியின்றி ஊர் சுற்றி விட்டு அவளது வார்த்தைகளில் மன அமைதி பெற்று திரும்பி வந்திருக்கிறான்..

அவன் தொட்டவுடன் குழைந்து.. பின் அவனை வார்த்தைகளால் சுட்டவள்.. அவன் விட்டுச் சென்றதும் துடித்து.. அவனது வரவைக் காண ஓடி வந்திருக்கிறாள்..

இதில் மீனாட்சி என்னவென்று கேட்டால்..அவள் என்ன பதிலைச் சொல்வாள்..?

‘ஒன்னுமில்லை ஆண்ட்டி..”

‘தூங்கலையா..”

‘இல்லை ஆண்ட்டி.. தண்ணீர் தாகமாயிருந்தது வந்தேன்..”

‘ஏம்மா.. உன் ரூமில் தண்ணியில்லையா..?”

‘தீர்ந்து விட்டது ஆண்ட்டி..”

‘சரி.. வா.. தண்ணி குடி..”

மீனாட்சி தண்ணீர் தம்பளரை அவள் பக்கம் நீட்டியபடி மகனைப் பார்த்தாள்..

‘எங்கேடா போயிருந்த..?”

‘ஒரு முக்கியமான வேலை வந்திருச்சும்மா..”

‘அதுக்காக ஒரு வார்த்தை கூட வீட்டில் சொல்லிக்காம போவியா..? போன் பண்ணினா.. போனையும் ஆஃப் பண்ணி வச்சிருந்தயாம்.. என்னடா கார்த்தி.. இது என்ன புதுப்பழக்கம்..?”

‘உடனே வந்துடலாமுன்னுதான் போனேம்மா.. வர முடியலை.. போனில் சார்ஜ் இல்லை.. அதனால் ஸ்விட்ச் ஆஃப் ஆகிருச்சு..”

மீனாட்சி அலுத்துக் கொண்டபடி.. அவனுக்கு தட்டை எடுத்து வைத்து பரிமாற ஆரம்பித்தாள்.. அவனோ.. அவளுக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்து.. விட்டு அவள் தோள் பற்றி அமரச் செய்தான்..

‘நீயும் சாப்பிடும்மா.. உன்னை யாரு எனக்காக பட்டினி கிடக்கச் சொன்னது..? நாள் பூராவும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்கிற.. வேலை செய்ய தெம்பு வேண்டாமா..?”

மகனின் அக்கறையில் மனம் நெகிழ்ந்து  போன மீனாட்சிக்கு கண் கலங்கி விட்டது..

‘போதும்டா.. இந்தக் கரிசனத்தை காலாகாலத்தில் வீட்டுக்கு வருவதில ;காட்டு.. உன் அப்பாகிட்ட பேச்சு வாங்க முடியலை..”

‘அவருக்கென்னம்மா.. அவர் பேச்சை விட்டுத் தள்ளு.. நான் சொல்லாம ;போனதும் தப்புத்தான்.. ராத்திரி வராம இருந்ததும் தப்புத்தான்.. இனிமே இப்படி நடக்காது..”

அந்த தாய் மகனின் பாசப் பிணைப்பில் மனம் நெகிழ்ந்து விட்டாள் நிவேதா..

“என்னால்தானே..’ அவளுக்கு குற்ற உணர்வு வந்தது…  அவளையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் அவளது மனநிலையை கணித்து விட்டான்..

‘த்சு..” என்று சொல்லியபடி விழிகளில் அவளை அதட்டினான்…

‘என்னடா..? ” மீனாட்சி புரியாமல் விழித்தாள்..

‘ஒன்னுமில்லைம்மா.. நீ சாப்பிடு..”

மீனாட்சியை சமாதானப் படுத்தும் விதத்தில் பேசியபடி.. விழிகளால் நிவேதாவையும் சமாதானப் பபடுத்திக் கொண்டிருந்தான் அவன்..

இருவரையும் ஒரே நேரத்தில் சமாதானப் படுத்திய அவனது அந்தத் தன்மை அவளை மிகவும் கவர்ந்தது..

“இவன்.. அருமையான மகன்..’ அவள் மனம் கனிந்தாள்..

“அதே சமயம்.. அருமையான காதலனும் கூட..’ முகம் சிவந்தாள்..

மீனாட்சி சாப்பாட்டு  மேஜையை ஒழுங்கு பண்ணிவிட்டு. மகன் வந்து விட்ட நிம்மதியுடன் உறங்கப் போனாள்…

‘நீயும் படுக்கப் போம்மா.. பாவம்.. என்னால் உன் தூக்கம் கெட்டுருச்சு..”

நிவேதாவால்தான் தன் தூக்கம் கெட்டு விட்டது என்பதை அறியாதவளாக மீனாட்சி சொல்லியபோது நிவேதாவிற்கு மனம் வலித்தது..

அவள் மாடியேறினாள்.. மெதுவாக.. கடைசிப் படியைத்தாண்டி மாடி யுhÈ௴ அவள் கால் வைத்த போது.. புயல் போல அவள் பின்னால் வந்து.. முன்னால் நின்றான் கார்த்திகேயன்..

அவளுக்குத் தெரியும்.. அவன் பின்னாலேயே வந்து விடுவான் என்று..

‘தேங்க்ஸ்..” சன்னக்குரலில் முணுமுணுத்தாள்..

‘எதுக்குடி.. ;”அவன் அதே குரலில் வினவினான்..

‘என் வார்த்தையை மதித்து வந்து விட்டதற்கு..”

‘உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வந்திருக்கேன்னு சொல்லு.. என்னை கட்டிப் போட உன்னால் மட்டும்தான் முடியும்..”

‘ஆண்ட்டியின் வார்த்தைகள் கட்டிக் போடாதா..?”

‘போட்டி போடுகிறாயா..?”

‘கேட்டதுக்கு பதிலைச் சொல்லுங்க..”

‘அவங்க வார்த்தை என்னைக் கட்டுப்படுத்தும் வயதை நான் தாண்டி விட்டேன் நிவி.. இனி காலம் முழுவதும் உன் வார்த்தை மட்டுமே என்னைக் கட்டுப் படுத்தும்..”

“நிவி’ என்ற அவனது அழைப்பில் தெரிந்த நெருக்கத்தில் கிளர்ந்தாள் நிவேதா..

‘நிவியா..? என் பெயர் நிவேதா..”

‘என் பெயர் கூடத்தான் கார்த்திகேயன்.. அம்மணி எதக்காக கார்த்திக்.. கார்த்திக்குன்னு கூப்பிடுகிறாய்..?”

‘அது.. அது.. அது அப்படித்தான்..”

‘இதுவும் இப்படித்தான்..”

‘உங்க ரூமுக்கு போங்க..”

‘போகலைன்னா..”

‘ஸ்ஸ்ஸ்.. யாராவது பார்த்து விடப் போறாங்க..”

‘யாரும் பார்க்க மாட்டாங்க.. அப்பா ரூம் கீழே இருக்கு.. கல்யாணி இந்நேரம் எட்டு தூக்கம் தூங்கியிருப்பா.. இப்பப் போயி உன்னையும் என்னையும் யார் பார்ப்பாங்க.. சொல்லு..”

‘பார்க்க மாட்டாங்களா..?”

பயம் விலகியவளாக அவள் கேட்க..

‘பார்க்க மாட்டாங்க..” என்றபடி மாடிப்படிகளின் அடியிலிருந்த மறைவுப் பகுதிக்கு அவளை இழுத்துக் கொண்டான் கார்த்திகேயன்..

முதல் நாள் மாலையின் கருக்கல் வேளையில்.. அவளை கட்டியணைத்த நினைவுடன் உடல் சூடேற அவளை தாபத்துடன் தழுவிக் கொண்டான்..

இப்போது நிவேதாவின் மனதில் எந்தவித தடைகளுமில்லை.. அவள் தடை சொல்லவுமில்லை.. அவன் இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுத்தவளாக அவனிடம் தன்னை ஒப்படைத்து விட்டாள் அவள்..

“என் தனிமையை பயன்படுத்திக் கொண்டாய்..’ என்று குற்றம் சாட்டியவள்.. அவன் தனிமையை உருவாக்கி அருகில் அழைத்த போது மறுக்காமல் அவன் கைகளில் புகுந்தாள்..

“என் பெயரைச் சுருக்கிச் சொல்லக் கூட உனக்கு உரிமையில்லை’ என்று சொல்லியவள்.. அவனது கைகள் உரிமையுடன் அவள் தோள் தொட்டு.. முதுகில் பரவிய போது.. ஏதும் சொல்லாமல்.. அவனுடைய உரிமையாகி நின்றாள்..

கார்த்திகேயன் தடை செய்யப்பட்ட சுதந்திரத்தை திரும்பப் பெற்று விட்ட போர் வீரனாக.. வெறியுடன் அவளை ஆக்ரமித்தான்.. அவளது முடிமீது படிந்த அவனது கரங்கள் அவளது கூந்தலை இறுக்கிப் பிடித்து.. முகத்தின் அருகே இழுக்க.. இன்பமான வலியை உணர்ந்தாள் நிவேதா..

‘நிவி.. என் நிவி..”

வேட்கையுடன் அவளது இதழ்களை அவனது இதழ்கள் தேடி பதிந்தன.. அவனது இதழோடு.. இதழ் பதித்த நிவேதா.. அவனது முதுகில் கரங்களை படற விட்டு விலகாமல் நின்றாள்..

நீண்ட நேரம் கழித்துதான் அவளை விடுவித்தான் கார்த்திகேயன்.. எதற்காக அவன் மீது.. அவள் கோபம் கொண்டாளோ.. அதையே.. அவள் மனமுவந்து தர வைத்துவிட்டான் அந்த பிடிவாதக்காரன்..

‘ஜெயிச்சுட்டிங்கள்ல..” அவனது தோள் வளைவில் முகம் புதைத்து.. காதருகே.. கிசுகிசுத்தாள் நிவேதா..

‘தோற்றுப் போனதில் உனக்கொன்னும் வருத்தமிருப்பதைப் போல எனக்குத் தெரியலையே.. ” அவன் உல்லாசமாக நகைத்தான்..

‘உங்களுக்கு ஆம்பளைத் திமிர் கார்த்திக்..”

‘;நீதான் அதை அடக்கேன்..”

‘உங்களைத்தானே.. நீங்க அடங்கி விட்டுத்தானே வேற வேலை பார்ப்பீங்க.. அடங்காத ஆண்மகனில்லையா.. நீங்க..”

‘உன்கிட்ட அடங்குவேண்டி..”

அவன் அவள் கைகளுக்குள் அடங்கித்தான் போயிருந்தான்.. தொட்டது தவறு என்ற சொல்லியவளே.. தொட்டுத் தழுவியதில் அவனது கோபம் அடங்கியவனாக நின்றிருந்தான்..

அழகான ஒரு நிகழ்வு.. அரை குறையாக நின்றதில் எரிச்சல் கொண்டிருந்தவன்.. மாடிப்படிகளின் அடியில்.. அந்த நிகழ்வு மீண்டும் தொடங்கி முற்றுப் பெற்றதில்.. அந்த எரிச்சல் அடங்கியவனாக மனம் குளிர்ந்திருந்தான்..

பால்கனியின் வெளியே.. மெலிதான வெளிச்சம் பரவத் தொடங்க.. 

‘விடியப் போகிறது கார்த்திக்..” என்று எச்சரித்தாள் நிவேதா..

‘ம்ம்ம்..” என்றவன்.. அப்போதும் அவளை விடாமல் இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டுத்தான் விடுவித்தான்..

‘இப்பப் போ..”

‘ஹப்பா.. இப்பவாவது விட்டீங்களே.. அதுக்கு கோடி தேங்க்ஸ்..”

‘அடேங்கப்பா.. விடாமல் நான் இறுக்கிப் பிடிச்சதில் அம்மணிக்கு ரொம்பத்தான் வருத்தம் போல.. யாருகிட்ட கதை விடற..”

‘போதுமே..”

நிவேதா.. மாடிப்படிகளின் அடியிலிருந்த மறைவிலிருந்து வெளிப்பட்டு அவளது அறைக்கு விரைந்து விட்டாள்..

அவள் சென்று விட்டதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்ட கார்த்திகேயனின் உடலிலும்.. மனதிலும் உற்சாகம் நிறைந்திருந்தது..

“ஆயிரம் நினைவு..

  ஆயிரம் நிழ்கவு…

ஆயிரம் உணர்வு..

ஓயுNயுh..

பெண்ணைத் தொட்டபோது..

விண்ணைத் தொட்ட இன்பம்..

எங்கே அந்த சொர்க்கம்..?’

முதல் நாள் காலையில் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் அவன் பார்த்த பழைய பாடலின் வரிகள் அவன் மனதில் ஓடின..

அவன் சன்னமாக விசிலடித்தபடி.. அவனது அறையை நோக்கிச் சென்றான்..

நிவேதா.. தனியாக செல்போன்.. டேப் ரிகார்டர் சகிதம் வெளியே கிளம்பிய போது.. மீனாட்சி கவலையுடன் தடுத்தாள்..

‘கார்த்தி வரட்டும்மா.. அவன் கூடப் போ.. தனியா போகாதே..”

‘நான் வயல் பக்கம் போகலை ஆண்ட்டி.. இங்கேதான்.. ஊருக்குள் இருக்கிற பெரியவங்ககிட்ட பேட்டி போல எடுக்கப் போகிறேன்..”

‘மல்லிகாவையாவது கூப்பிட்டுக்கிட்டுப் போ..”

‘ஏன் ஆண்ட்டி.. அவ இந்த வீட்டில் வேலை செய்யறது உங்களுக்கு பிடிக்கiலா..?”

‘ஏன் அப்படிக் கேட்கறே..?”

‘அவ வேலைக்கு உலை வைக்கப் பார்க்கறீங்களே.. அதனால்தான் கேட்டேன்..”

‘ஏம்மா அப்படிச் சொல்ற…?” 

‘என்ன சொல்ல ஆண்ட்டி.. உங்க வீட்டில வேலை செய்கிறவங்க உங்களுக்கு ஆகாதவங்க வீட்டில் வேலை செய்கிறவங்களோட பேசினாலே அங்கிளுக்கு பிடிக்காது.. நான் பொதுவான ஆள்.. பேட்டி எடுக்கப் போகிற இடத்தில் எல்லோரோடும் பேச வேண்டியிருக்கும்.. அப்ப மல்லிகா கூட இருந்தா.. அங்கிள் அவ வேலைக்கு சீட்டு கிழித்து விட மாட்டாரா..?”

அதைக் கேட்ட மல்லிகா பயத்துடன்..

‘ஆத்தாடி..” என்று அலறினாள்..

‘நல்ல காரியம் செஞ்சீங்கம்மா.. நான் பிள்ளை குட்டிக்காரி.. இந்த வேலையை வைச்சுத்தான் என் குடும்பம் ஓடுது.. இது தெரியாம நான் உங்க கூட வந்திருந்தா.. என் கதி.. என்ன..?”

‘அதோகதிதான் வேறென்ன..”

நிவேதா புளியைக் கரைத்து மல்லிகாவின் வயிற்றில் இன்னும் கொஞ்சம் ஊற்ற ஆரம்பிக்க.. மீனாட்சி.. அவள் கன்னத்தை செல்லமாக தட்டினாள்..

‘போக்கிரி.. அவளை பயமுறுத்தறியா..”

‘இல்லை ஆண்ட்டி.. நான் சொல்வெதெல்லாம் உண்மை..”

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தலைப்பைச் சொல்வதைப் போல அவள் இழுத்துச் சொன்ன விதத்தில் மீனாட்சி.. இன்னமும் சிரித்தாள்..

‘சரி.. நீயே போய்விட்டு வா.. பார்த்து.. பத்திரம்.. உன் அங்கிளுக்கு நான்தான் பதில் சொல்லனும்.. நினைப்பிருக்கில்ல..”

‘மறக்க முடியுமா..?”

அப்போதுதான் அங்கே வந்து நின்ற கல்யாணியைப் பார்த்தபடி இந்த வார்த்தைகளைச் சொல்லிய நிவேதா அவளைப் பார்த்து கண் சிமிட்டினாள்..

தாயின் பின்னால்.. அவளுக்கு கண் மறைவாக நின்று கொண்டு ஒற்றை விரலை உயர்த்தி நிவேதாவிடம் காட்டி..”பத்திரம்..’ என்று சைகை செய்தாள். – கல்யாணி..

0Shares

Reviews – Puthiya Poovithu Puthathu / புதிய பூவிது பூத்தது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link