Chapter 12

‘பார்க்காதே..’

மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் திவ்யா.. கட்டுக் கடங்காத மனது.. அவள் சொல்லுக்கு அடங்கவில்லை.. அது சொல் பேச்சுக் கேட்பேனா என்று அவன் இருக்கும் திசையையே பார்த்து வைத்தது.. அவளது பார்வையை எதிர் பார்த்துக் காத்திருக்கும் அவன் பார்வை அவள் பார்வையைக் கவ்விக் கொள்ளும் போது திவ்யாவின் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போல பரபரப்பு ஏற்பட்டுத் தொலைத்தது..

‘என்னடா இது..’

அவள் கலவரமாகிப் போனாள்.. அவனுக்கும் அவளுக்குமான உணர்வலைகள் அந்த இடத்தை நிறைத்திருப்பதைப் போல அவள் உணர்ந்து வைத்ததில் அவளது கலவரம் அதிகரித்தது.. அதை உணர்ந்ததைப் போல ரம்யா மர்மப் புன் முறுவல் செய்தாள்..

“ஆக.. உன்னைத்தான் இவன் ரதின்னு சொல்லியிருக்கான்..”

“சும்மாயிருடி..”

வெளியே அதட்டினாலும் திவ்யாவின் மனது சில்லென்று ஆகிப் போனது..

“இவன எங்க புடிச்ச..?”

கேட்டுவிட்டு திவ்யாவிடம் மொத்து வாங்கினாள் ரம்யா..

“வாயிலயே போட்டிருவேன்.. இவன் பெரிய இவன்.. வலைவீசி இவனைப் பிடிச்சேன்.. போவியா..”

“நிஜமாவே இவனை நீ பாத்ததே இல்லையா..?”

ரம்யா மடக்கி விட்டாள்.. திவ்யாவுக்கு பொய் சொல்ல வாய் வரவில்லை.. அவள் உதட்டைக் கடித்தபடி..

“பாத்திருக்கேன்..” என்றாள்..

“அப்படிப் போடு அருவாளை..! எங்கே பாத்த..? என்னத்தப் பேசிக்கிட்டிங்க..?” ரம்யா ஆர்வமானாள்..

“இதையெல்லாம் உணக்கையா கேக்க ஆரம்பிச்சிருவியே.. கற்பணை குதிரையை ரொம்பத்தான் பறக்க விடாதே.. விசயத்தக் கேட்டா சப்புன்னு இருக்கும்ப..”

“நீ சொல்லு.. அது சப்புன்னு இருக்குதா.. இல்ல உப்பு, புளிக்காரத்தோட இருக்குதான்னு நான் முடிவு பண்ணிக்கறேன்..”

“ஏண்டி நீ வேற.. இந்த திமிர்பிடிச்சவன்.. நம்ம காலேஜ் வாசல்ல ஒரு நா பார்த்தேன்..”

“சொல்லவே இல்ல..”

“சொல்லிட்டாலும்.. கழுதையில..”

“நம்ம காலேஜீக்கு இவன் ஏன் வந்தான்..?”

“இத.. அந்தா உட்காந்திருக்கானே.. அவன்கிட்டப் போயிக் கேளு.. விலாவாரியா விளக்கம் சொல்வான்..”

“லேடிஸ் காலேஜில இவனுக்கு என்னடி வேலை..! சைட்டடிக்க வந்திருப்பானோ..?”

“யாருக்குத் தெரியும்..? டூ வீலர்ல வந்திருந்தான்.. ஸ்டாண்ப் போட்டவன்.. அதை எடுக்காம வண்டிய ஸ்டார்ட் பண்ணப் போனான்.. எங்கையாச்சும் கவுந்திரப் போறானேன்னு ஹலோன்னு கூப்பிட்டுத் தொலைச்சேண்டி.. அதுக்கு இவன் என்ன மாதிரி பாத்து வைச்சான் தெரியுமா..?”

“என்ன.. உன்னத் திங்கிறதைப் போல இப்பப் பாத்துக்கிட்டு இருக்கானே.. இப்புடிப் பாத்து வைச்சானா..?”

வயிற்றெரிச்சலுடன் கேட்டாள் ரம்யா.. இல்லை யென்று சொல்லி அவள் வயிற்றில் பால் வார்த்து 

அந்த எரிச்சலைத் தணித்து வைத்தாள் திவ்யா..

“நீ வேற.. என்னவோ இவன கணக்குப் பண்ண நான் கூப்பிட்டதைப் போல முகரையை வைச்சுக்கிட்டு.. ‘என்ன’ன்னு முறைச்சான்..”

“நீ சும்மாவா விட்ட..?”

“அதெப்படி சும்மா விடுவேன்.. பிடிபிடின்னு பிடிச்சுட் டேன்ல்ல..”

அந்தப் பிடிதான் இறுக்கமான பிடியாக இறுகிப் போயிருக் கிறது போல என்று நினைத்துக் கொண்டாள் ரம்யா..

மோதலில் இருந்து காதல் உருவாகிறதற்கான தாத்பர்யம்தான் என்ன என்று அவளுக்கு யோசனையாக இருந்தது..

‘ரெண்டுக்கும் படே கெமிஸ்ட்ரிப்பா.. அப்புடியே பத்திக்கிதுல்ல..’ 

சுரேஷைப் பார்த்தாள்.. அவன் ரம்யா என்ற ஒருத்தி அங்கே இல்லாததைப் போன்ற பாவனையுடன் திவ்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அதில் ரம்யாவுக்கு மெலிதான பொறாமை வந்தது..

“என்னடி சொன்ன..?”

“நீ பெரிய மன்மதன்னு மனசுக்குள்ள நினைப்பா..? உன்னத் தேடிக்கிட்டு எந்த ரதியும் இங்க நிக்கலை.. ஆளைப் பாருன்னு மூக்கை உடைச்சுப் புட்டேனில்ல..”

“அதான் ஆளைப் பாக்கச் சொன்னியேன்னு உன்னையே பாக்கிறானா..? பட்டம்மா பாட்டி கேட்டதுக்கு மன்மதன்னு பேரைச் சொல்லிக் கிட்டானா..?”

ரம்யா மீண்டும் சுரேஷ் உட்கார்ந்திருந்த திசையில் பார்த்து வைத்தாள்.. அவனது தோரணையில் மனதிற்குள் ரசனை வந்தாலும் அதை ரப்பர் கொண்டு அழித்து விட்டு திவ்யாவிடம் சொன்னாள்..

“என்னைக்கோ நீ சொன்னத நினைப்பு வைச்சுக்கிட்டு உன்னையே ரதின்னு நினைக்கறேன்னு பாட்டுப் பாடறான்னா.. இவன்கிட்ட கொஞ்சூண்டு உண்மை இருக்கலாம்ன்னுதான் எனக்குத் தோணுதுடி..”

“தோணும்.. தோணும்.. ஏன் தோணாது..? வில்லங்கம் உனக்கா வந்திருக்கு..? எனக்குத்தான வந்திருக்கு..? உனக்குத் தோணத்தான் செய்யும்..”

“இங்க பாரு.. இவன் வில்லங்கமா..? இவ்வளவு சடைச்சுக் கிறவளா இருந்தா நீ ஒதுங்கிக்க..”

“எதில இருந்து..?”

“இவன் வழியில இருந்து..”

“அடிச்சேன்னா பாரு.. வாயில இருக்க அத்தன பல்லும் உதிர்ந்திரும்..”

“பாருடா.. இம்புட்டுக் காசலை இருக்கிறவ.. இவன்மேல அக்கறையில்லாததைப் போலப் பிலிம் காட்டக் கூடாது..”

“யாருடி பிலிம் காட்டினது..?”

“நீதான்.. இவன் வழிய விட்டு ஒதுங்கச் சொன்னா உனக்கு எதுக்கு இம்புட்டுக் கோபம் வரனும்..?”

“நீ உதை திங்காம அடங்க மாட்ட.. எவடி இவன் வழிய அடைச்சுக்கிட்டு நிக்கிறது..? கொஞ்சமாவது அக்காகிட்டப் பேசறோமேங்கிற பயமில்லாம சும்மா எவனோ ஒருத்தனைப் பத்திப் பேசறியேன்னு கோபப்பட்டா அதுக்குக் காசலைன்னு பேரு வைக்கக் கூடாது..”

திவ்யாவின் படபடப்பை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்த ரம்யாவின் இதோழரம் இருந்த குறுஞ்சிரிப்பு உன்னை நம்ப மாட்டேன் என்றது..

‘ச்சை..!’

எரிச்சலுடன் பார்வையைத் திருப்பினால்.. அவளை பல மார்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷின் பார்வை அவளை பலகாரமாக்கிப் பிய்த்துப் பிய்த்துத் தின்றது.. அவசரமாக அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. 

‘எல்லாம் இவனால வந்தது..’

அந்த இடத்தில் உட்கார முடியாமல் சட்டென்று எழுந்து உள்ளே போகப்போன திவ்யா.. அவளைப் 

பின் தொடராமல் அங்கேயே சட்டமாக உட்கார்ந்து சுரேஷை நோட்டமிட்டுக் கொண்டிருந்த ரம்யாவை அதட்டினாள்..

“வாடி..”

“எங்கே..?”

“வீட்டுக்குள்ள போகலாம்.. இந்நேரத்துக்கு நலங்கு முடிஞ்சிருக்கும்..”

“நீ போ.. நான் வரலை.. என்னவோ.. ஏஸி ஹாலில நலங்கு நடக்கிறதைப் போல பில்ட் அப் பண்ணாத.. கிராமத்து வீடு.. ஓட்டை பேன் ஒன்னு இப்பவோ.. அப்பவோன்னு சுத்திக்கிட்டு இருக்குது.. வீட்டுக்குள்ள வந்து வேக்காட்டில வேக நான் தயாரா இல்ல..”

“அப்ப..?”

“இங்கனயே காத்தாட உக்காந்திருக்கப் போறேன்..”

ரம்யாவின் காலாட்டலில் திவ்யாவிற்கு உக்கிரம் வந்தது.. ஓரக் கண்ணால் பார்த்தாள்.. அவளுடைய உக்கிரத்தை படு சுவராஸ்யமாக சுரேஷ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததும் அவளது உக்கிரம் தண்ணீர் பட்ட கொதிபாலாக அடங்கிப் போனது..

‘இவனுக்கு முன்னால சீன் காட்டக்கூடாது..’ தீர் மானித்தவள்

“எக்கேடோ கெட்டுப் போ..” என்று தங்கைக்கு தண்ணீர் தெளித்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டாள்..

உள்ளே போனால் நலங்கு முடியாமல் நடந்து கொண்டிருந்தது.. பெண்ணுக்கு சந்தனம் தீற்ற காத்திருந்த வரிசையைக் கண்ட திவ்யாவிற்கு கண்ணைக் கட்டியது.. புழுக்கத்தில் வியர்த்தது.. வியர்வையில் குளித்தவள் பேசாமல் வாசலிலேயே காற்றாட உட்கார்ந்திருக்கலாமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்..

“திவ்யா.. ரம்யா எங்கேடி..?” அம்புஜம் கேட்டாள்..

“வாசலில உட்கார்ந்திருக்காம்மா.. காத்து வாங்கறாளாம்..”

“நீயும் அங்கேயே இருக்க வேண்டியதுதான..? உனக்கு இங்கன என்ன வேலையிருக்கு..? நலங்கா வைக்கப் போற..?”

அம்புஜத்தின் கேள்வியில் பட்டம்மாள் பாட்டி சிரித்து வைத்ததில் திவ்யாவின் முகம் சிவந்து விட்டது..

‘இந்த அம்மாவுக்கு எங்கே.. என்ன பேசனும்னு தெரியவே தெரியாது..’

நகத்தைக் கடித்துத் துப்ப ஆரம்பித்தாள்.. அம்புஜம் அதற்கும் அதட்டியதில் அவளுக்கு ஏன்தான் வீட்டுக்குள் வந்தோமோ என்று ஆகிவிட்டது..

“வேர்வையில குளிச்சுக்கிட்டு இங்க நிக்காம வாசலுக்குப் போ..” அம்புஜம் விரட்டினாள்..

‘எனக்கு மட்டும் வேர்வையில நீச்சடிக்கனும்னு நேர்த்திக் கடனா இருக்கு..? வாசலில ஒருத்தன் நீதான் ரதின்னு சொல்லிக்கிட்டு சட்டமாக உக்காந்திருக்கான்ம்மா..’

அம்புஜத்திடம் சொல்ல முடியாமல் எரிச்சலுடன் வாசலுக்குப் போனாள் திவ்யா.. அங்கே பார்த்த காட்சியில் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது..

ரம்யாவும், சுரேஷிம் என்னவோ காலம், காலமாய் பழகியவர்களைப் போல.. நாற்காலிகளை பக்கத்தில் பக்கத்தில் போட்டுக் கொண்டு ஆழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.. ரம்யாவின் அதிசயிக்கத்தக்க அந்த முன்னேற்றத்தில் திவ்யாவிற்குப் பேச்சே வரவில்லை..

‘இதுக்குத்தான் ஒதுங்கிக்கச் சொன்னாளா..?’

சுரேஷ் எதையோ சொல்லக் கை கொட்டிச் சிரித்தபடி திரும்பிய ரம்யா திவ்யாவைப் பார்த்ததுமே..

“நினைச்சேன்..” என்றாள்..

“என்னத்த நினைச்ச..?” சுரேஷைப் பார்வையால் எரித்தபடி கேட்டாள் திவ்யா..

சுரேஷ் அர்த்த புஷ்டியுடன் பழனியைப் பார்க்க.. சிடியில் பாடல் மாறியது..

“நான் உன்ன நினைச்சேன்..

நீ என்ன நினைச்சே..

கண்ணாலே.. நெஞ்சம் ஒன்னாச்சு..”

“கடவுளே..!” தலையைப் பிடித்தாள் திவ்யா..

0

Subtotal